ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Go down

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Empty மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Post by சிவா Tue Aug 04, 2009 10:10 pm

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Utusan


“இப்போது சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் பாஸ் கட்சியினருக்கும் தேவைப்படுவது எல்லாம் கூடுதல் நிர்வாக அரசியல் அதிகாரங்கள் ஆகும். நீதி ஜனநாயகம் மட்டும் அல்ல.”

“அதனால் சுதந்திரம் பெற்றது முதல் அம்னோ வைத்துள்ள மலாய் அரசியல் அதிகாரம் அழிக்கப்பட வேண்டும். டிஏபியை பாஸ் கட்சியும் அன்வாரும் ஆதரிக்கும் போது அதனைச் சாதித்து விட முடியும்.”


மேலே கூறப்பட்ட வாசகம் அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் காணப்படுகிறது.

அந்த நாளேட்டின் விரிவான பத்தாவது பக்கத்தில் இடம் பெற்றுள்ள அந்தக் கட்டுரையை நூர் அஸாம் என்பவர் எழுதியுள்ளார். அந்த கட்டுரையின் தலைப்பு “மிலாயு ஜாங்கான் ஜாடி பாச்சுல்’ (’மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்”) என்பதாகும்.

இதர பல விஷயங்களுடன் மலாய்க்காரர்களின் கரங்களில் இருக்கக் கூடிய எந்த அதிகாரத்தின் மீதும் “சினத்தையும் வெறுப்பையும்” மூட்டி விடுவதற்கு சில தரப்புக்கள் எவ்வாறு இனவாத பிரச்னைகளை தூண்டி விடுகின்றனர் என்பதையும் அந்த கட்டுரையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Empty Re: மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Post by சிவா Tue Aug 04, 2009 10:11 pm

“முழுமையான சதி நாச வேலை”

அந்தக் கட்டுரை ஜீரணிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருப்பதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா சுலோகத்திற்கு எதிரான முழுமையான சதி நாச வேலையை உத்துசானும் அம்னோவுக்குச் சொந்தமான இன்னொரு பத்திரிக்கையான பெரித்தா ஹரியானும் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

“இனவாதம், தூண்டிவிடுதல், தேச நிந்தனை ஆகியவற்றைக் கொண்ட கட்டுரையை உத்துசான் வெளியிட்டுள்ளது.”

“மசீச, மஇகா, பாரிசான் நேசனலில் அங்கம் பெற்றுள்ள சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் அமைச்சர்கள் உத்துசானில் வெளிவந்த அந்தக் கட்டுரையையும் பெரித்தா ஹரியானையும் அமைச்சரவை விவாதத்தில் முதலாவது அங்கமா சேர்க்கும் துணிச்சல் உண்டா?” என்று அவர் இன்று ஒர் அறிக்கையில் வினவினார்.

சீன அல்லது தமிழ் மொழிப் பத்திரிக்கைகள் சீன, தமிழ் இனவாதத்தை முன் வைத்து அதே பாணியில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என்று லிம் குறிப்பிட்டார்.

“அதன் கட்டுரையாளர் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதோடு இனவாதத்தைத் தூண்டி விட்டதாகவும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருக்கும். அத்துடன் அந்த பத்திரிக்கையும் உடனடியாகத் தடை செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.”

“பாரிசான் நேசனல் அரசாங்கம் உத்துசான், பெரித்தா ஹரியான் ஆகியவற்றுக்கு ஒரு சட்டமும் சீன தமிழ் மொழிப் பத்திரிக்கைகளுக்கு இன்னொரு சட்டமும் வைத்திருக்கிறதா?” என்று அவர் வினவினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Empty Re: மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Post by சிவா Tue Aug 04, 2009 10:13 pm

அமைச்சரவைக் கூட்டத்தில் அந்தப் பிரச்னையை எழுப்புங்கள்

நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்னோ அல்லாத அமைச்சர்கள் அந்த விஷயத்தை எழுப்ப வேண்டும் என்று ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.

கேபிஐ என்ற முக்கிய அடைவு நிலை குறியீட்டு அமைச்சர் கோ சூ கூன் ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு தெளிவான குறியீடுகளை நிர்ணயிக்குமாறு அமைச்சரவையை கேட்டுக் கொள்வதோடு எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இன வாதத்தையும் சமூகவாதத்தையும் தூண்டி விடும் ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும் என லிம் கூறினார்.

“இல்லை என்றால் முக்கிய அடைவு நிலைக் குறியீடுகளை வைத்திருப்பதால் என்ன பயன்?”, என்றார் அவர்.

பெரித்தா ஹரியானின் ஞாயிறு பதிப்பான பெரித்தா மிங்குவில் இரண்டு வாரங்களுக்கு வெளியான ஜைனுல் அரிபின் எழுதிய கட்டுரையையும் லிம் குறிப்பிட்டார்.

தியோ பெங் ஹாக் மரணத்தின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற மலாய்க் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதாக டிஏபி மீதும் பக்காத்தான் ராக்யாட் மீதும் ” பொறுப்பற்ற, அருவறுக்கத்தக்க, ஆதாரமற்ற பழியை” அந்தக் கட்டுரை சுமத்தியுள்ளது.

“ஒரு மலாய்க்காரரான சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது சொந்த இனத்தை சேர்ந்தவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வதில் ஏன் ஐயப்பாடு கொள்ள வேண்டும்? என்று ஜைனுல் மிகவும் பொறுப்பற்ற முறையில் இனவாதத்தை அப்பட்டமாக நாடியிருப்பதாக” லிம் மேலும் சொன்னார்.

“நஜிப்பின் ஒரே மலேசியா சித்தாந்தத்தை நிர்மூலமாக்கக் கூடிய கலப்பற்ற இனவாத விஷத்தைக் கக்கிய ஜைனுலை ஒரு அம்னோ தலைவர் கூட கண்டிக்கவில்லை.”


“அதே போன்று மசீச, மஇகா, கெரக்கான், பாரிசான் நேசனலில் அங்கம் பெற்றுள்ள சபா, சரவாக் கட்சிகள் ஆகியவற்றின் ஓர் அமைச்சர் கூட அந்த விஷயத்தை அமைச்சரவையில் எழுப்பும் துணிச்சல் இல்லை என்பது அதை விட துரதிர்ஷ்டமாகும்”, என்றார் அவர்.

ஒரே மலேசியா கோட்பாட்டை அம்னோவுக்கு சொந்தமான நாளேடுகளே இவ்வாறு வெளிப்படையாக மீறும் போது அந்தக் கோட்பாட்டின் மீது தமது அமைச்சரவையும் நிர்வாகமும் கடப்பாடு கொண்டிருப்பதாக பிரதமர் எவ்வாறு மலேசியர்களை நம்ப வைக்கப் போகிறார் என்றும் லிம் வினவினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Empty Re: மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Post by சிவா Tue Aug 04, 2009 10:15 pm

உத்துசானை தற்காக்கிறார் முகைதின்

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Dyph

துணைப் பிரதமர் முகைதின் யாசின் அக்கட்டுரையை வெளியிட்டதற்காக உத்துசானை தற்காத்து பேசினார். பலர் மலாய்க்காரர்கள் மற்றும் ஆட்சியாளர் ஆகியோரின் சிறப்பு உரிமைகளுக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் சவால் விடுகின்றனர்.

“இது போன்ற விசயங்களை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடாது. இது ஓர் ஆபத்தான சூழ்நிலை. உத்துசான் செய்திருப்பது இச்சூழ்நிலைக்கு உகந்த பதிலாகலாம்.

எழுப்பியிருக்கக்கூடாத சில பிரச்னைகளை எழுப்புகிறவர்கள் இருக்கலாம்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேவையற்ற சம்பவங்கள் தோன்றுவதைத் தவிர்க்க விரும்புவதை வலியுறுத்திய அவர், மக்கள் இனவாத கருத்துகளை தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

“மிக முக்கியமாக, அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் எந்த ஓர் இனத்தின் உரிமைகளுக்கும் சவால் விடக்கூடாது”, என்றாரவர்.

தான் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ள விரும்பவில்லை ஏனென்றால் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது முக்கியமானது என்பதோடு எல்லா இனங்களும் ஒன்றுக்கொன்று மரியாதை காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

“ஆனால் இப்போது, அரசியல் கோட்பாடுகளுக்காக தூண்டிவிடப்பட்ட குழுக்கள் தோன்றியுள்ளதை நாம் காண்கின்றோம். அவை இந்த அடிப்படை உரிமைகள் பற்றி கேள்விகள் எழுப்புகின்றன”, என்று அவர் மேலும் கூறினார்.

அப்பேர்பட்டவர்களை “பொறுப்பற்றவர்கள்” என்று வர்ணித்த அவர், சில தரப்பினர் மக்களை தூண்டி விடுவதற்காக இனத் துவேச அறிக்கைகளை வெளியிடுகின்றனர்”, என்றார் துணைப் பிரதமர் முகைதின்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான் Empty Re: மலேசியா: “மலாய்க்காரர்களே, கோழைகளாக இருக்க வேண்டாம்: உத்துசான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை
» பேஸ்புக் வராமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..!
» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
» மலேசியாஇன்று: உத்துசான் ஏன் ஆழ்ந்த மௌனம் காக்கிறது?”
» லிம்: நஜிப், உத்துசான் ஆசிரியர்களை மாற்றுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum