ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

+3
கார்த்திக்
பிளேடு பக்கிரி
Halfmoon
7 posters

Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by Halfmoon Sun Aug 29, 2010 1:56 pm



என் வேலையைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்யவே முடியவில்லை.

நண்பர்களோடு பேசவோ, ஒரு சினிமாவுக்குப் போகவோகூட முடியாது. 24 மணி நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கிறேன். இப்படி நிறையப் பேர் சொல்வது உண்டு.

இன்றைக்கு, அநேகமாக எல்லோருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?

குறைந்தபட்சத் தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்போது எதையாவது கூடுதலாகச் செய்யவேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் போகிற ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு டியூஷன் வகுப்பு இருக்கும். வேலையில் இருப்பவர் என்றால், என்றைக்காவது ஒரு சனிக்கிழமை, அரை நாள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால், இன்றைய நிலையே வேறு.

ஆக, எல்லோருமே சொல்கிறபடி காலம் ரொம்ப மாறிப்போச்சு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சாவகாசமாக சைக்கிள் துடைத்து, ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரம் உறிஞ்சிக் குடித்து, சாயந்திரம் அத்தை வீட்டுக்குப் போய் அரட்டை அடித்துப் பொழுதுபோக்குகிற வியப்புஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று - சனி, ஞாயிறுகளைக்கூட வாரம் முழுதும் தேக்கிவைத்திருந்த வேலைகளைச் செய்வதற்குச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால், ஓய்வு எடுத்தல் என்பதும் இன்னொரு வேலை மாதிரி தோன்றுகிறது.

இதற்கு மத்தியில் எங்கே இருந்து இயற்கையை ரசிப்பது, ஜன்னல் ஓரக் காற்று வாங்குவது, ஓவியம் வரைவது, கவிதை வாசிப்பது, நாய்க் குட்டியைக் கொஞ்சுவது, குழந்தையின் குறும்புத்தனங்களை அனுபவிப்பது எல்லாம் நடக்கும்?

அதற்கென்று ஒரு நேரம் வேண்டும். மனசு லேசாக இருக்க வேண்டும் என்று இனிமேலும் பழைய தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சரி, வேலை வேலை என்று சதா சர்வகாலமும் அதே வேலையைச் செய்துகொண்டு இருப்பதால் சந்தோஷம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடிவது இல்லை.

உண்மையில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குதல் என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியங்கள் குறைவான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப சித்தாந்தங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேலை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கொடைக்கானலோ, குலுமணாலியோ போய் நிம்மதியாக இருந்துவிட்டு வர வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படியே காலையில் லேட்டா எந்திரிச்சு, மிதமான குளிர்ல ஒரு வாக்கிங் போய்ட்டு ரோட்டு ஓரக் கடையில சூடா டீ குடிச்சுக்கிட்டே இயற்கையை ரசிக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை நாம் திட்டம் போட்டு இருக்கலாம்.

திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போனாலும் மனசு நிம்மதியாக இருக்கிறதா? கொரியர் அனுப்பச் சொன்னேனே... அனுப்பி இருப்பானா, இல்லையான்னு தெரியலையே? நான் பாட்டுக்கு கொடைக்கானலுக்கு வந்துட்டேன். அந்த ரமேஷ் பய இந்த ரெண்டு நாள்ல மாங்கு மாங்குனு மனப்பாடம் பண்ணிடுவானா என்று மனசு பலவாறாக மேயும்.

விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'. மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்.

ஒருவர், நேரம் காலம் தெரியாமல் வேலை செய்கிற பேர்வழி. வாழ்வின் எந்த அழகியலையும் அனுபவிக்க அவரால் முடியவில்லை. என்னடா வாழ்க்கை இது என்று விரக்தி அடைந்த அவர், சந்தோஷமாக இருப் பது எப்படி என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதற்காக ஒரு ஞானியைச் சந்திக்கக் கடும் தடை களைத் தாண்டி அவரது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந் தார். இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலையில், அரண் மனை போன்ற ஒரு மாளிகையில் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்.

வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், மிக அழகான ஓவியங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப் பட்ட கலைப்பொருட்கள் என அந்த மாளிகை ரொம்பவே வசீகரமாக இருந்தது. ஞானியைச் சந்திக்கப் பெரிய கூட்டம் காத்திருந்ததால் மூன்று மணி நேரம் பொறுமையாக இருந்து ஞானியிடம் பேசினார் சந்தோ ஷத்தின் ரகசியத்தைத் தேடியவர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா. பிறகு, பதில் சொல்கிறேன்" என்றார்.

"இதோ கிளம்பிவிட்டேன்" என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், "ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்... அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் சுற்றிப் பார்."

மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம், "என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஓவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?" என்று கேட்டார்.

"மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை" என்றார் அந்த மனிதர்.

"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்? நூலக ஜன்னல் வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?"

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்... "மன்னியுங்கள், நான் அதைக் கவனிக்கவில்லை."

"இரண்டு மணி நேரம் என்னதான் செய்தீர்கள்?" என்றார் ஞானி.

"இதோ இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்" என்றார் அந்த மனிதர்.

"போகட்டும்... இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லா வற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்" என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்.

இந்த முறை ஞானியிடம் வந்த அவர், சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார். "அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?" என்றார் ஞானி. "மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது" என்றார் அந்த மனிதர்.

"எண்ணெயும் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோஷத்தின் ரகசியம்" என்றார் ஞானி.

இது கதைக்கு வேண்டுமானால் சாத்தியம், யதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் நடக்காது என்று மறுபடியும் சண்டைக்கு வராதீர்கள். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காகப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

பணிச் சுமைகளுக்கு மத்தியில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுவதற்கு முன்னதாக, வேலையும் கெடாமல் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை... வேலைப்பளு, வாழ்க்கையை அனுபவித்தல் இந்த இரண்டு விஷயங்களைச் சமன் செய்து கொள்வது குறித்த அறிவைத் தரும்.

சந்தோஷமாக இருப்பது எப்படி என்று தனியாக ஒரு பட்டியல் போட முடியாது. ஞாயிற்றுக்கிழமை வரும் வரை காத்திருக்கவும் வேண்டியது இல்லை. இந்த நாள், இந்த நிமிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்கிறோம்.

எல்லா வேலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒருநாள் ஒய்யாரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிற அந்த நாள் வரப்போவது இல்லை. வாழ்க்கை மாறிவிட்டது. பணி முறைகள், பொறுப்புகள், நடைமுறைகள் மாறிவிட்டன. நாமும் மாறிக்கொள்வோம்.

இவ்வளவு சொல்லிவிட்டீர்கள்... எண்ணெயும் சிந்தாமல், மாளிகையின் அழகையும் ரசிப்பதற்கான உத்தி என்னவென்றும் சொல்லிவிடுங்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். உங்களிடமே கேளுங்கள். உங்களைப்பற்றியும் உங்கள் சூழ் நிலைகள்பற்றியும் உங்களைவிட யாருக்கும் அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்!
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 2:05 pm

அருமையான பதிவு... கதையுடன் விளக்கம் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by கார்த்திக் Sun Aug 29, 2010 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by அருண் Sun Aug 29, 2010 2:31 pm

நல்ல கட்டுரை கொடுத்த ரபிக் கு நன்றி,,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by gunashan Sun Aug 29, 2010 2:39 pm

சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'

இதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்தால் வாழ்க்கை சுவையாக இருக்கும்... சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by kalaimoon70 Sun Aug 29, 2010 2:43 pm

நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்! மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by gunashan Sun Aug 29, 2010 2:48 pm

kalaimoon70 wrote:நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்! மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி

யேஸ் கலை. யூ ஆ கிரேட்...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by tdrajeswaran Mon Aug 30, 2010 12:38 pm

மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை மிக சிறப்பாக ஒரு பொருத்தமான கதையோடு சொல்லியிருந்த பாங்கு மிகவும் பாராட்டுக்குறியது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

வாழ்க்கையை அனுபவியுங்கள்!!! Empty Re: வாழ்க்கையை அனுபவியுங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum