ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸஹர் செய்வதன் சிறப்புகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:52 am

1. ஸஹர் செய்வதன் சிறப்பு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்
இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும் போது நபித்தோழர்
ஒருவர் வந்தார், 'ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருளாகும்.
அதை விட்டு விடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: நஸயீ 2164)

'நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே
வித்தியாசமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூற்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி
643)

'ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது, எனவே அதை விட்டு விடாதீர்கள்,
ஒரு மிடரு தண்ணீரையாவது குடியுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள்
மீது அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை
செய்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;. (அறிவிப்பவர்:
அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: அஹ்மது)

ஸஹரின் சிறப்புகள்: 1.பரக்கத் 2.ஸஹர் நமக்கு மட்டும் உரியது
3.அல்லாஹ்வின் அருள் 4.வானவர்களின் துஆ.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:52 am

2. ஸஹர் நேரம்:

'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு
தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187)

'வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை
நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின்
பொருளாவது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்:
புகாரி 1916, நஸயீ 2171)

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்
(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று
நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்
2002, திர்மிதி 699)

நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர்
செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின்
ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது.
ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:53 am

3. ஸஹர் உணவு:

'நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத்இருக்கின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ
2166, திர்மிதி 642)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் நேரத்தில், 'அனஸே! நான் நோன்பு இருப்பதற்குஏதேனும் கொடுங்கள்' என்று கேட்டார்கள். பிலால் (ரலி) அவர்களின்பாங்குக்குப் பிறகு நான் பேரீத்தம்பழங்களையும் ஒரு பாத்திரத்தில்தண்ணீரும் அவர்களுக்கு கொடுத்தேன். 'அனஸே! என்னோடு உணவு அருந்தயாரையேனும் பாருங்களேன்;' என்று நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்.
நான் ஜைது பின் தாபித் (ரலி) அவர்களை கூப்பிட்டேன், அவரும் வந்தார், நான்
ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியைக் குடித்து விட்டேன், அதைக் கொண்டேநோன்பிருந்து கொள்கிறேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நானும்நோன்பிருந்து கொள்கிறேன்' என்றார்கள். எங்களோடு ஸஹர் செய்த பிறகு இரண்டுரக்அத் தொழுதார்கள், பிறகு தொழுகைக்கு சென்று விட்டார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் (ரலி), நூல்: நஸயீ 2169)



அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக்கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்துநிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:54 am

4. ஸஹருக்கான அறிவிப்பு:

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்(ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி)அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார்.

இது பஜ்ர்தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன்பின்னர் பஜ்ர் நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொருபாங்கு சொல்வார். இது பஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும்.

பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. ஏனெனில்அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர்விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு
மஸ்வூது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 1994, அபூதாவூது, நஸயீ 2172)

பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது
வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்! நபிமொழி. (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா
(ரலி), இப்னு உமர் (ரலி) நூற்கள்: புகாரி 1918, முஸ்லிம், நஸயீ)

பல ஊர்களில் ஸஹருக்காக மக்களை எழுப்புவதற்காக 'தப்ஸ்' எனும் கொட்டுஅடித்துக் கொண்டு ஒருவர் வருவது வழக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் நாய்கடிக்கு அவர் ஆளாக நேர்வதையும் அதனால் அந்த பகுதிக்கு அவர் வருவதை
தவிர்ப்பதையும் நாம் அறிவோம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைபின்பற்றினால் இந்த சிக்கலில் இருந்து தவிர்ந்து கொள்ள இயலும். ஒருநபிவழியை பின்பற்றிய நன்மையும் நமக்கு உண்டு. இரண்டு முஅத்தின்களை
நியமியத்து இரண்டு பாங்கு சொல்ல வைக்க வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:54 am

5. விடி ஸஹர்:

விடி ஸஹரில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோன்பு நோற்க வேண்டும் என்றஎண்ணத்திலும், ஸஹர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் படுக்கைக்குச்செல்வோர் நேரத்தை தவற விட்டு விட்டு ஸஹர் நேரம் முடிந்த பிறகுஎழுந்திருப்பர். வர்கள் எதுவும் சாப்பிடாமல் நோன்பைத் தொடர்வர்.இப்படிப்பட்ட விடி ஸஹர் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்களிடம்உள்ளது.

இவர்களது நோன்பு கூடி விடும், ஆனால் இவர்கள் ஸஹரின் பாக்கியத்தைஇழந்து விட்டார்கள்.

மற்றொன்று ஸஹர் நேரம் முடிந்த பிறகு எழுந்து சாப்பிட்டு விட்டுநோன்பு இருப்பார்கள். இப்படிப்பட்ட விடி ஸஹர் இன்னும் ஒரு குறிப்பிட்டபகுதிகளில் இருப்பவர்களிடம் உள்ளது.

இவர்களது நோன்பு, நோன்பு ஆகாது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:55 am

6. ஸஹரை தாமதிப்பது:

'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பின்னர்(அவர்களுடன்) சுப்ஹு தொழ ஆயத்தமாவோம்' என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹர் முடிந்து சுப்ஹுவரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்றுநான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று
பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி, திர்மிதி
699)

சுப்ஹ்க்குரிய பாங்குக்கு நெருக்கத்தில் சுமார் பத்து நிமிடங்களுக்குமுன்பிலிருந்து ஸஹர் செய்வது நபிவழி என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கமுடிகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:55 am

7. ஸஹரை வரவேற்பது:

ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், 'அருள் நிறைந்த ஸஹ்ரே வருக!
வருக!' என்று வரவேற்பார்கள். (அறிவிப்பவர்: அல்இர்பால் பின் சாரியா
(ரலி), நூல்: நஸயீ 2165)

8. பிரத்தியேக ஸஹர்:

ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்கவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே! என்றுதோழர்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல.

எனக்கு குடிக்கவும்,உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும்சில அறிவிப்பில், 'எனது இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும்
புகட்டுகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1922,
முஸ்லிம் 2010)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:56 am

9.சந்தேகமான பஜ்ர்:

'உங்களில் ஒருவர் ஸஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு ஏமாற்றி(தடுத்து) விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாக) தென்படும் இந்தவெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும் வரை அதுவும் உங்களை ஏமாற்றி
(தடுத்து) விட வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), முஸ்லிம் 1996)

நபி (ஸல்) அவர்கள், தமது கையை கீழே தாழ்த்தி பின்னர் மேலே உயர்த்திக்காட்டி, இவ்வாறு (கீழ் மேலாகச் செங்குத்தாக தெரியும் வெளிச்சம் ஃபஜ்ர்)
அல்ல என்று கூறிவிட்டு, பிறகு தம் கை விரல்களை விரித்துக் காட்டி இவ்வாறு(அடிவானத்தில் நாலாபக்கமும் பரவலாகத் தெரியும் வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்)
என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி),
முஸ்லிம் 1994)

செங்குத்தான கதிர்கள் அடிவானில் இருப்பது பஜ்ரின் அடையாளம் அல்லஎன்பதும் பஜ்ரின் நேரம் வெளிச்சம் பரவலாக தெரிய வேண்டும் என்பதும் நபி(ஸல்) அவர்கள் பஜ்ர் நேரத்தை அறிந்து கொள்ள கற்றுத் தந்த முறையாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by சபீர் Thu Aug 19, 2010 11:56 am

10. ஸஹரில் நிய்யத்:

பஜ்ர் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்கப் போவதை முடிவு செய்து விடவேண்டும்.

'பஜ்ருக்கு முன்பு யார் (நோன்பிருக்க) முடிவு செய்யவில்லையோ அதுநோன்பு அல்ல' (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலி), நூற்கள்: அபூதாவூது, அஹ்மது,
நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

சுன்னத்தான நோன்புகளுக்கு இந்த நிபந்தனை இல்லை என்பதையும், விடிந்தபிறகும் கூட நோன்பு இருக்கப் போவதாக நபி (ஸல்) அவர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

முடிவுரை:

ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச்செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும்
இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைநாம் விளங்கிக் கொள்வோமாக!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by kalaimoon70 Thu Aug 19, 2010 3:53 pm

சஹார் பற்றி உங்கள் விளக்கம் தெளிவா இருந்தது ..நன்றி தோழரே .உங்கள் பகிர்வுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஸஹர் செய்வதன் சிறப்புகள் Empty Re: ஸஹர் செய்வதன் சிறப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum