ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா

2 posters

Go down

முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா Empty முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா

Post by nandaa Sat Aug 14, 2010 8:09 pm

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் எள்ளு தாத்தா, கி.பி., 1857ல் நடந்த முதல் இந்திய விடுதலை போரில் பங்கேற்று, எண்ணற்ற இந்திய வீரர்களை கொன்றுள்ளார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வில்லியம் மவுன்ட் மற்றும் எலிசபெத் லெவலின் ஆகியோர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் தாய்வழி தாத்தா, பாட்டி. வில்லியம் மவுன்ட்டின் தாத்தா வில்லியம் லோ, கி.பி., 1857ல் இந்தியாவில் நடந்த முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டிஷ் குதிரை படையில் இருந்தவர்.அவர் போரில் ஒரு கையையும், ஒரு காதையும் இழந்தவர். அப்போரில் எண்ணற்ற இந்திய வீரர்களை இரக்கமற்ற முறையில் கொன்றவர்.

இது குறித்து தன் தந்தை ஜான் லோவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "புரட்சி படை வீரர்கள் ஒன்று திரண்டாலும், அவர்களை நாங்கள் அடித்து விரட்டி விட்டோம். அவர்கள் பக்கம் 100 பேர் பலியாயினர். நம் பக்கம் ஒன்பது பேரும் இரண்டு குதிரைகளும் பலியாயினர். ஏழு பேர் காயமடைந்தனர்.சிதறி போனவர்கள், தங்கள் நகரங்களுக்கு சென்று விட்டனர். ஆனால், போர் நடந்த இடத்தில் அவர்கள் விட்டு சென்ற குதிரைகளை வைத்து எத்தனை பேர் தப்பி போயிருப்பர் என்று கணக்கு போட்டு, அவர்களை துப்பாக்கி கத்தி முனையில் மீண்டும் இழுத்து வந்து தூக்கில் போட்டோம்' என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் வில்லியம் லோ.

லோவின் கடிதங்கள், பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டு, "சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. பி.பி.சி.,செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் நிக் பராட் என்பவர், டேவிட் கேமரூனின் குடும்ப பரம்பரையை கண்டுபிடித்து, அவரது எள்ளு தாத்தாவின் அட்டூழியம் பற்றி "ஹூ டூ யு திங்க் யு ஆர்?' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியாகவே வழங்கி விட்டார்.

இச்செய்திகள் அனைத்தும் "தி டெலிகிராப்' பத்திரிகையில் வெளி வந்தவுடன், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கேமரூன் தன் முன்னோர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதை முன்பே கூறியுள்ளார்' என்று மட்டும் விளக்கம் அளித்திருந்தது.ஆனால், எள்ளு தாத்தா, இந்திய வீரர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் குறித்து மவுனம் சாதித்தது. கேமரூன் இந்தியாவுக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு தான் இச்செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் அவருக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் என்று பத்திரிகைகள் கூறியிருந்தன.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா Empty Re: முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா

Post by சரவணன் Sat Aug 14, 2010 8:31 pm

வெள்ளக் கார நாய்களுக்கு முன்னாடி துணிச்சலா எதிர்த்து நின்னு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரை நீத்த அந்த மாவீர்களுக்கு என் வீர வணக்கங்கள்!

ஜெ ஹிந்த்!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum