ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார்

2 posters

Go down

மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Empty மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார்

Post by நிசாந்தன் Fri Aug 13, 2010 10:20 am

ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியிலும், ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான தமிழீழ விடுதலைக்கும் எனது கட்சி பாடுபடும்.

பேராசிரியர் P.இராமசாமி

துணை முதல்வர், பினாங்கு மாநிலம், மலேசியா

மலேசியாவின் ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் P.இராமசாமியும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.குலசேகரன் அவர்களும் உள்ளடங்கிய பிரத்தியேக குழு இலங்கைத் தீவில், இலங்கை இராணுவத்தினால், மே மாதம், 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என பேராசிரியர் ராமசாமி அவர்கள் இன்று கோலலம்பூரில் தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தார். அப்போது அவருடன் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் ஈழத்தமிழின அழிப்பிற்கெதிராக குரல் கொடுத்து வரும் .சீனுவாசராவ் மற்றும் இரா.ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில், குழந்தைகளும் பெண்களும் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் எண்ணற்றோர் காயமடைந்தனர். தமிழர்களின் பகுதிகளில், இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும் வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர்
.

படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்.கீ.மூன் அவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் மர்சூகி தரூஸ்மன் அவர்களின் தலைமையில் ஒரு தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
.

இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது. சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது. அந்த குழுவின் விசாரனையில் தமிழர்களுக்கு நீதிகிட்டாது என்பதே கடந்தகால அனுபவம்
.

இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும் போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கைத் தீவின் இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்
.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது
.

இலங்கையில் தழினத்திற்கெதிராக நடைபெற்ற படுபாதகமான மனித உரிமை மீறலையும் அதன்வாயிலாக இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தமான நடவடிக்கையையும் கருத்திற்கொண்டு, DAP (Democratic Action Party) சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினர்களையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த ஒரு பிரத்தியேகக் குழு ஒன்றை அமைத்து, இலங்கைக்கெதிரான போர்க்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட .நா.குழுவிற்கு ஆதரவாக நிற்கும். இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்
.

இராஜபக்சேவை போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மலேசியாவில் வாழும் ஒருசில யாழ்ப்பாணத் தொழிலதிபர்கள் இலங்கையில் வளர்ச்சிப்பணி என்றப் போர்வையில் முதலீடு செய்ய செல்வதென்பது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு வெகுமதி தருவது போன்ற இனத்துரோகச் செயலாகும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்
.

எனது கட்சியின் தேசியத் தலைவர்களை உள்ளடக்கிய இந்தச் சிறப்புக் குழு இலங்கைத் தீவில் மனித உரிமையை மீட்டெடுக்கப் பாடுபடுவது மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய ஈழவிடுதலைக் கோரிக்கைக்கு முக்கியத் தீர்வொன்றையும் காண்பதற்கு வழிவகுக்க பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
.

எங்களது கட்சியின் மூலமாக, இலங்கைத் தீவின் போர்க்குற்றத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவைகளோடும் மற்றும் அமெரிக்காவில் இயங்கி வரும் வுயுபு TAG (Tamils Against Genocide) அமைப்போடும் மற்றும் ASEAN பிராந்தியத்தில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடும்
.

அத்துடன் நான் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் பினாங்கு மாநிலத்தில் இலங்கைத் தீவில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்றவியல் நீதி விசாரணைக் கோரும் தீர்மானமொன்றை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளோம்
.

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசினால் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும் குறிப்பாகக் கலாநிதிமாறனின் தயாரிப்பில் தற்போது வெளிவரவுள்ளஎந்திரன்படத்தையும் புறக்கணிக்க மலேசியா முழுவதும் நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம். இனமானமுள்ள ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மற்றும் உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் மற்றைய தமிழின உறவுகளும் இப்போராட்டத்தில் பங்குபெற வேண்டுகிறேன்
.

ஆப்பாவியான ஈழத்தமிழ் மக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசுக்கு துணை போனவர்களின் குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு உலகில் இனமான உணச்சியுள்ள எந்தத் தமிழரும் துணைப்போகக்கூடாது என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இப்போராட்டத்தின் வெற்றி என்பது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் உணர்வுக் காணிக்கையாகும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Empty Re: மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார்

Post by gunashan Fri Aug 13, 2010 10:44 am

அய்யா,,நிசாந்து.....மலேசிய அராசாங்கதிலேயே...அவருக்கு மதிப்பு இல்ல...அவரு ஊக்கங்கொடுத்து என்னாவப் போவுது...சீமான் மாதிரி ஜெயிலுக்குப் போகமுடியுமா அவரால.....தமிழ்நாட்டுத் தாத்தா ஊக்கங்கொடுத்தாத்தான் எல்லாம் நடக்கும்..... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum