ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கண் திறக்க ஊனம் ஒரு தடையில்லை : கால்கள் செயலிந்தும் மனம்தளராத இளம்பெண்

Go down

கல்விக்கண் திறக்க ஊனம் ஒரு தடையில்லை : கால்கள் செயலிந்தும் மனம்தளராத இளம்பெண் Empty கல்விக்கண் திறக்க ஊனம் ஒரு தடையில்லை : கால்கள் செயலிந்தும் மனம்தளராத இளம்பெண்

Post by நவீன் Thu Aug 12, 2010 5:56 am

கல்விக்கண் திறக்க ஊனம் ஒரு தடையில்லை : கால்கள் செயலிந்தும் மனம்தளராத இளம்பெண் Large59998

முசிறி:

கால்கள் செயல் இழந்த நிலையில், படிப்பின் மேல் கொண்ட ஆர்வம்
காரணமாக தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்து வரும்
தொட்டியம் மாணவி அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம், சுண்ணாம்புக்கார தெருவில் வசிப்பவர்
கூலித்தொழிலாளி வெங்கடாஜலம். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு திருமணமாகி
பத்து ஆண்டுக்கு பிறகு பிறந்த மகள் திவ்யா(20). இவர் தொட்டியம் அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது ப்ளஸ் ஒன் வகுப்பு படிக்கிறார்.
மாணவி திவ்யா எட்டாம் வகுப்பு படித்து வந்தபோது தான் அவர் வாழ்வில் சோகம்
ஏற்பட்டது. அரையாண்டு தேர்வின்போது கை, கால் தடுமாற்றம் ஏற்பட்டு, உடல்
நிலை சரியில்லாமல் போனது. இதனால் அந்தாண்டு படிப்பை தொடர முடியவில்லை.
விடா முயற்சியுடன் மீண்டும் எட்டாம் வகுப்பில் சேர்ந்து படித்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வின்போது மீண்டும் உடல் நிலை சரியில்லாமல்
போனது. அப்போது நரம்பு கோளாறு காரணமாக அவரது இரு கால்களும் செயல்இழந்தது.
கண்பார்வையும் சரிவர தெரியாமல் போய்விட்டது. திவ்யா சென்னை அரசு
மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் மீண்டும்
கண்பார்வை பெற்று கால் ஊனமான நிலையில் திரும்பி வந்துள்ளார். தற்போது எந்த
ஒரு துணையும் இன்றி நிற்கவோ, உட்காரவோ முடியாத நிலையில், வாக்கர் கருவி
கொண்டு நடந்து வருகிறார்.
இத்தகைய தொடர் சோகத்தின் விளைவாக மாணவி திவ்யா பள்ளியில் தொடர்ந்து
படிப்பை தொடர முடியவில்லை. இருப்பினும் உடல் ஊனத்தைப் பார்க்காமல்
படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக கடந்த ஏப்ரல் எஸ்.எஸ்.எல்.ஸி.,
தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இதனால் அவருக்கு மேலும் படிக்க
வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. தற்போது தனது வீட்டிலிருந்து ஒரு
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1
படிக்கிறார். மாணவி திவ்யாவுக்கு தமிழக அரசின் திட்டமான மாற்றுத்திறனாளி
நிதியிலிருந்து உதவி தொகையாக மாதம் ரூபாய் 400 கிடைக்கிறது. படிப்பின்
மீது ஆர்வம் கொண்ட திவ்யா மூன்று சக்கர மோட்டார் வாகனம் வாங்க கூடிய வசதி
அவர் குடும்பத்தினரிடம் இல்லாததால் தினந்தோறும் பள்ளிக்கு ஆட்டோவில்
சென்று வருகிறார். ஆட்டோ வாடகை மாதம் 300 ரூபாய்க்கு மேல்
தரவேண்டியுள்ளதால், மூன்று சக்கர மோட்டார் வாகனமும் வாங்க முடியாத
நிலையில் உள்ளார். தற்போது மாணவி திவ்யாவுக்கு இரண்டு கால்களும் செயல்
இழந்த நிலையில் பள்ளியில் தொடர்ந்து 10 நிமிடத்திற்கு மேல் எழுதவும்
முடியாது.
விடாமுயற்சியுடன் படித்துவரும் மாணவி திவ்யா கூறியதாவது:

பள்ளிக்கு செல்ல வேண்டிய ஆர்வம் இருந்தாலும், நடந்து செல்ல முடியாத
நிலையில் உள்ள நான் ஆட்டோவை நம்பியே பள்ளிக்கு சென்று வருகிறேன். ஆட்டோ
வராத நாளில் பள்ளி செல்ல முடியாது. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது
எனது கனவு. அது நிறைவேறாத போது, படித்து ஆசிரியர் பணியாவது பெற்று மாணவ,
மாணவிக்கு தன்னால் இயன்ற பணி செய்ய வேண்டும். தமிழக அரசோ, தொண்டு
நிறுவனங்களோ 95976 56061 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, மருத்துவ வசதியும்,
மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கினால், தனது படிப்பைத் தொடர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். பெண் உரிமை, கல்வியறிவு, சமூக விழிப்புணர்வு
குறித்து அக்கறை கொள்ளும் அரசும், தொண்டு நிறுவனங்களும் இம்மாணவியின்
எதிர்கால நலனை கருதி உதவ வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum