ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்

3 posters

Go down

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   Empty மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்

Post by masthan Thu Aug 05, 2010 5:27 pm

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்
புதன், 28 ஜூலை 2010( 17:22 IST )

நடிகை அசின் இலங்கை சென்றது ஈழ அரசியலை எதிர்பாராத திசைகளுக்கு இழுத்து சென்றுள்ளது.


FILE
அசின் படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார் என்றதும் தமிழ் அமைப்புகளும், திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். பாசிஸ ராஜபக்சே அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் கறாரான முடிவுகள் எடுத்திருக்கும் இந்தச் சூழலில், இந்திய திரை நட்சத்திரங்கள் இலங்கை செல்வதும், இலங்கை அரசை புகழ்ந்து பேட்டியளிப்பதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தவும், நீர்த்துப் போகச் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அசினின் இலங்கை பயணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர்.

இந்தக் குரலுக்குப் பின்னால் இருந்த அரசியல் தேவையை அசின் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தோ, அவர்களின் போராட்டம் குறித்தோ எந்த‌ப் பு‌ரிதலும் இல்லாத அசின் இந்த அரசியல் தேவையை கண்டு கொள்ளவில்லை என்பதைவிட அவரால் கண்டுகொள்ள முடியாது என்பதே பொருத்தமாக இருக்கும். லண்டன் ட்‌‌ரீம்ஸ் தோல்விக்குப் பிறகு இந்திப் படவுலகால் புறந்தள்ளப்பட்ட அவருக்கு ரெடி படம் பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தவனுக்கு கிடைத்த பற்றுக்கொடி. இலங்கை என்றில்லை, இழவு வீட்டின் நடுவில் டூயட் பாட வேண்டும் என்று சொல்லியிருந்தாலும் இதே ஆர்வத்துடன் செய்திருப்பார்.

ஒரு நடிகை என்ற அளவில் அசினின் இலங்கைப் பணயம் ஈழத் தமிழர்பால் நேர்மையான அக்கறை கொண்ட ஒருவரும் பொருட்படுத்தக் கூடியதல்ல. அதேநேரம் அசினை பகடைக்காயாக வைத்து அரங்கேற்றப்பட்ட அரசியலும், அந்த அரசியல் இன்று தமிழகத்தில் உருவாக்கியிருக்கும் கருணையின் மாயத் தோற்றங்களும் முக்கியமானவை. ஈழத் தமிழ‌ரின் நலனுக்கு எதிரானதும், இனப்படுகொலை அரசியலுக்கு வலுவூட்டுவதுமான இந்த மாயத் தோற்றங்களை கலைப்பதும், இந்த தோற்றங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சதியின், சந்தர்ப்பவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதும் ஈழ அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியமானது.

இந்த இடத்தில் சல்மான் கான் குறித்தும் அவரது ரெடி திரைப்படம் குறித்தும் குறிப்பிடுவது அவசியம்.

ஐஃபா திரைப்பட ‌விருது விழா தூதர் பொறுப்பிலிருந்து அமிதாப்பச்சன் விலகியதுடன் அவரது குடும்பமே - அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் - விழாவை புறக்கணித்தது. இதையடுத்து தூதர் பொறுப்பை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இதனை எதேச்சையாக நடந்த ஒன்றாக கருத இயலாது. இவர்கள் இருவருமே ஐஸ்வர்யாராயால் காதலிக்கப்பட்டு கை கழுவப்பட்டவர்கள். அமிதாப்பச்சன் குடும்பம் புறக்கணிக்கும் ஒன்றை அங்கீக‌ரிப்பற்கும், கொண்டாடுவதற்குமான நியாயமும், மனோநிலையும் இவர்கள் இருவருக்குமே உள்ளது. ஐஃபா விழாவை வெற்றிபெற வைக்க இவர்கள் காட்டிய அதிகபடியான முனைப்புக்கு இந்த மனோநிலை ஒரு சிறப்புக் காரணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.


FILE
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளினால் எழுந்த இந்த உத்வேகத்தால் விழாவை வெற்றி பெறவைக்க முடியவில்லை. விழா பெருத்த தோல்வியடைகிறது. இதன் பிறகே மொ‌‌ரீஷியஸ் தீவில் நடக்கவிருந்த ரெடி படத்தின் படப்பிடிப்பை வம்படியாக இலங்கைக்கு மாற்றுகிறார் சல்மான்கான். என்னை தோற்கடித்தவர்களை நான் தோற்கடிக்க வேண்டும் என்ற சல்மான்கானின் ஈகோ மொ‌‌ரீஷியஸ் படப்பிடிப்பை இலங்கைக்கு இழுத்து வருகிறது.

சல்மான்கானின் ஈகோவும், அசினின் பிழைப்புவாதமுமே அவர்களை இலங்கைக்கு வரச்செய்ததே அன்றி ஈழத் தமிழர்பால் உள்ள கனிவோ, மனித நேயமோ அல்ல.

படப்பிடிப்புக்காக அசின் இலங்கை சென்றது உறுதியானதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் திரையுலகில் கேட்கத் தொடங்கின. பிரச்சனை பெ‌ரிதாவது அறிந்ததும் அசின் விளக்கமளித்தார். திரைப்பட கூட்டமைப்பு தடை போடுவதற்கு முன்பே ரெடி படத்தில் நான் கமிட்டாகிவிட்டேன். படப்பிடிப்பை எங்கு நடத்துவது என்று முடிவு செய்வது தயா‌ரிப்பாளரும், இயக்குனரும்தான். வெறும் நடிகையான என்னால் என்ன செய்ய முடியும்?

ப‌ரிதாபத்தை கோரும் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அசின் கேள்வி ஒன்றையும் ஊடகங்கள் வாயிலாக தன்னை எதிர்ப்பவர்களைப் பார்த்து கேட்டார். வியாபாரத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும், கி‌ரிக்கெட் விளையாடவும் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை செல்கிறார்கள். அப்படியிருக்க என்னை மட்டும் குறி வைத்து பிரச்சனை கிளப்புவது ஏன்?

முன்பு குறிப்பிட்டது போல் ஒரு நடிகையாக அசின் இலங்கை சென்றதும், படப்பிடிப்பில் கலந்து கொண்டதும் பொருட்படுத்தக் கூடிய ஒன்றல்ல. ஆனால் ஒரு கொலைகாரனின் துரோக அரசியலுக்கு பகடைக்காயாக அவர் தன்னை கையளித்துக் கொண்டதுதான் நடிகையான அவரை ஒரு முக்கிய நபராகக் கருதி விமர்சிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தை தமிழ் உணர்வாளர்களுக்கு அளித்திருக்கிறதே அன்றி, அசின் எனும் நடிகைக்கும் ஈழ அரசியலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   Empty Re: மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்

Post by ரபீக் Thu Aug 05, 2010 5:29 pm

அசின் -மலபார் சீமாட்டி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   Empty Re: மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்

Post by நவீன் Thu Aug 05, 2010 5:31 pm

ரபீக் wrote:அசின் -மலபார் சீமாட்டி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667 மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்   Empty Re: மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபா‌ரிகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum