ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
Dr.S.Soundarapandian
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
heezulia
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 
i6appar
பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_m10பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!

Go down

பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Empty பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!

Post by நவீன் Thu Aug 05, 2010 3:23 pm

கோவையில் போலீஸ் துவக்கிய, முதியோர் முறையீட்டு மையத்தில் ஒரே
வாரத்தில் 52 புகார்கள் குவிந்தன. பெரும்பாலான புகார்கள், பிள்ளைகள்
மீதானவை. "மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கவனிப்பதில்லை; உணவு,
மருத்துவ தேவைக்கு தவிக்க விடுகின்றனர்' என, பலரும் முறையீட்டு மைய
அதிகாரிகளிடம் போனில் அழுது புலம்பினர். துரித நடவடிக்கையில் இறங் கிய
போலீசார், முதியோரின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு ஆறுதல்
தெரிவித்தனர்.
பிரச்னைகளுக்கு தீர்வுகோரி, தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,
அலுவலகத்தில் முறையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக
முதியோரும், அதிகளவில் வந்து புகார் மனு அளிக்கின்றனர். பிள்ளைகள்
கைவிட்டுவிட்டனர்; சொத்து கேட்டு துன்புறுத்துகின்றனர்; உணவு மற்றும்
மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில்லை; வீட்டிலிருந்து வெளியேற்றி
விட்டனர், என்பது போன்ற புகார்களை கூறி கண் ணீர் மல்க அழுது
புலம்புகின்றனர். ஏழ்மை நிலையில் இருப் போர் தான் பிரச்னைகளுக்கு
உள்ளாகின்றனர் என்றில்லை; மகன், மகள்களை நன்கு படிக்க வைத்து
வெளியிடங்களுக்கு வேலைக்கு அனுப்பிய வசதிபடைத்த முதிய பெற்றோரும் புகார்
கூறி வருகின்றனர். இவர்களது பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும்
வகையில் மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் "முதியோர் முறையீட்டு மையம்'
கடந்த மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது. "அவசர உதவி தேவைப்படும் முதியோர்
போலீஸ் ஸ்டேஷனுக்கோ அல் லது உயரதிகாரிகளின் அலுவலகங்களுக்கோ செல்ல வேண்
டாம்; 99440 95555 என்ற எண் ணுக்கு அழைத்தால் போதும்' என்ற அறிவிப்பை
ஐ.ஜி., அலுவலகம் வெளியிட்டது. இதையடுத்து, முதியோர் முறையீட்டு மையத்தில்
போன் மூலமான புகார்கள் குவியத்துவங்கின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52
புகார்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதியோர் தெரிவித்து நிவாரணம்
பெற்றுள்ளனர்.
நடவடிக்கை எப்படி?: முதியோர் முறையீட்டு மையத்துக்கு வரும் போன்
அழைப்புகளின் புகார்களை பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள், முறையீட்
டாளரின் முகவரி மற்றும் போன் எண்களை சேகரித்து, சம்பந்தப் பட்ட மாவட்ட
எஸ்.பி.,- சப்-டிவிஷன் டி.எஸ்.பி., - போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு
தெரிவிக்கின்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் முறையீட்டாளரின் முகவரிக்குச்
செல்லும் போலீசார், பிரச்னைகளை கேட்டு உடனடித் தீர்வு காணுகின்றனர்.
அதன்பின், போலீசாரால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை குறித்த விபரம், ஐ.ஜி.,
அலுவலகத்துக்கு 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் முறையீட்டு மையம் தீர்வு கண்ட பிரச்னைகள்:
மூதாட் டிக்கு பணம் டிபாசிட்: தர்மபுரி, பாரதிபுரம், மாரியம்மன்
கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்தியவதி(70). இவரது மகன், சென்னையில்
பணியாற்றுகிறார். முதுமையிலிருக்கும் தான், உணவுக்கு வழியின்றி தவிப்பதாக
போனில் புகார் அளித்தார். இவரிடம் நேரடியாக விசாரணை நடத் திய தர்மபுரி
போலீசார், சென்னையிலிருக்கும் அவரது மகனை போனில் தொடர்பு கொண்டு
அறிவுறுத்தினர். இதையடுத்து அவர், தாயின் பராமரிப்பு செலவாக வங்கியில்
இரண்டு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதன் வட்டித்தொகையை பெற்று
உணவுக்கு ஏற்பாடு செய்துகொள்ளுமாறு சத்தியவதிக்கு போலீசார் ஆலோசனை
தெரிவித்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்! Empty Re: பரிதவித்த முதியோரை அரவணைத்த போலீஸ்!

Post by நவீன் Thu Aug 05, 2010 3:23 pm

தந்தைக்கு பராமரிப்புச் செலவு: உடுமலை, தளி பகுதியைச்
சேர்ந்தவர் வேலுச்சாமி(85). இவரது இரு மகன்கள் திருமணமாகி வெளியூரில்
வசிக்கின் றனர். வேலுச்சாமி, மகள்வழி பேரன் வீட்டில் தங்கியுள்ளார். உணவு
மற்றும் மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதால், மகன்களிடம் பராமரிப்புச்
செலவு பெற் றுத்தருமாறு முறையிட்டார். போனில் மகன்களுடன் பேசிய போலீசார்,
மாதம் தோறும் 1,000 ரூபாய் பராமரிப்புச் செலவை தந்தையின் பெயரில் வங்கி
கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர். மேலும், மகன்களின் செலவில்,
வேலுச்சாமியை கவனித்துக்கொள்ள உதவியாளரையும் நியமிக்க நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்.


தந்தையை ஏமாற்றிய மகன்: உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தைச்
சேர்ந்தவர் வேலுச் சாமி (70). இவரது நிலத்தை மகன் குத்தகைக்கு எடுத்து ஆண்
டுக்கு 5,000 ரூபாய் கொடுத்து வந்தார். இத்தொகையை தரமறுத்ததால், வேலுச்
சாமி போலீசிடம் முறையிட் டார். விசாரணை நடத்திய போலீசார், மகனை எச்சரித்து
குத்தகை தொகையை பெற்றுக்கொடுத்தனர். மேலும், மாதா மாதம் தவறாமல் தொகையை
செலுத்த வேண் டும் என்றும், இல்லாவிடில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் எச்சரித்தனர்.


குடிகார மகன் கைது: பொள்ளாச்சி, சீனிவாசபுரத்தைச் சேர்ந்த
முகமது (70) என்பவர், தனது மகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தினமும்
துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய பொள் ளாச்சி
மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், மகன் ஜாகீர் உசேன் மீது வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். இது போன்று 52 புகார்களின் மீது உடன் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக, முதியோர் முறையீட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்நடவடிக்கை குறித்து, ஐ.ஜி., சிவனாண்டி கூறியதாவது:
பெரும்பாலான வயோதிக பெற்றோர், பிள்ளைகளால் தான் அதிக மனவேதனைக்கு
உள்ளாகின்றனர். தள்ளாத வயதில் தட்டுத்தடுமாறி வந்து பிள்ளைகள் மீதே புகார்
கூறி அழுகின்றனர். "சட்டப்படியான நடவடிக்கை எதுவும் வேண்டாம், எங் களை
பராமரிக்க ஏற்பாடு செய் தாலே போதும்' என, மன்றாடுகின்றனர். இவர்களை போன்று
பரிதவிப்போர், சமூகத்தில் அதிகமிருப்பதாலும், யாரிடம் போய் முறையிட்டால்
தீர்வு கிடைக்கும் என பலருக்கும் தெரியாததாலும், முதியோர் முறையீட்டு
மையம் துவக்கினோம். ஒரு வாரத்தில் வந்த 52 புகார்களின் அடிப்படையில்
விசாரணை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். இந்நடவடிக்கை போலீசின்
அணுகுமுறையை வித்தியாசப்படுத்திக் காட் டவோ, விளம்பரப்படுத்தவோ
மேற்கொள்ளப்படவில்லை. போலீசின் அன்றாட நடவடிக் கையின் ஒரு பகுதியே.
ஆதரவற்ற பெற்றோர், திடீரென மனம்வெறுத்து தற்கொலை செய்துகொள்ளும்
சம்பவங்களும் நிகழுகின்றன. அவ்வாறு நிகழ்ந்தால், போலீசார் வழக்குப் பதிவு
செய்து விசாரணை நடத்த அன்றைய பொழுதையே செலவிட வேண்டிய நிலை உள்ளது.


உயிர்போன பிறகு ஓடிச்சென்று சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு
பதிலாக, அவர்கள் வாழும் போதே, வாழ்க் கைக்கான சிறிய உதவிகளை செய்தால்,
தற்கொலையை தடுக்க முடியும். முதுமை என் பது, அனைவருக்கும் வரக்கூடிய
ஒன்று. இன்றைய இளைஞர்கள், நாளைய முதியவர்கள். "இன்று, பெற்றோருக்கு எதை
செய்கிறோமோ, அதுவே நமக் கும் நாளை கிடைக்கும்' என் பதை பிள்ளைகள்
உணர்ந்தால், முதுமையின் பரிதவிப்பு முற்றுப் பெறும். இவ்வாறு, ஐ.ஜி.,
சிவனாண்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
» 9 ஆண்டுகளாக நுரையீரலில் கிடந்த பேனா: பரிதவித்த இளம்பெண்!
» பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது
» வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண் டாக்டர்களின் அலட்சியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum