ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள்

2 posters

Go down

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள் Empty ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள்

Post by நவீன் Thu Aug 05, 2010 1:37 pm

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கென அறிவிக்கப்பட்ட 7 புதிய விரைவு ரயில்களின் சேவையை தொடங்குவதில் தேக்கநிலை நீடிக்கிறது. இந்த
ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் (2010-11) சென்னை சென்ட்ரல் - கோவை
இடையேயான துரந்தோ விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்களின் சேவை தொடங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை
புதிய ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே
துரந்தோ விரைவு ரயில் சேவை 21.9.2009-ல் தொடங்கி வைக்கப்பட்டது. கூடுதல்
படுக்கை (பெர்த்) வசதிகளுடன் கூடிய எவர்சில்வர் (ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்)
தகடுகளால் வேயப்பட்ட இந்த துரந்தோ அதிவிரைவு ரயில்கள் இரு முக்கிய
நகரங்களுக்கு இடையே நிறுத்தம் இல்லாமல் (பாய்ண்ட் டூ பாய்ண்ட்)
இயக்கப்படுகின்றன. பல்வேறு வசதிகள் கொண்ட இந்த துரந்தோ ரயில்
(2243, 2244) சென்னை சென்ட்ரல் - கோவை இடையே செவ்வாய்க்கிழமை தவிர
வாரத்தின் இதர 6 நாள்களில் இரு மார்க்கத்திலும் இயக்கத் திட்டமிடப்பட்டன. சென்னை
சென்ட்ரலில் இருந்து இந்த ரயில் தினமும் காலை 6.50-க்குப் புறப்பட்டு,
பிற்பகல் 1.30 மணிக்கு கோவை சென்று சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரயில்
தினமும் கோவையில் இருந்து பிற்பகல் 3.05-க்குப் புறப்பட்டு, இரவு
9.50-மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. கோவையில்
நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு இந்த ரயில் சேவை
அறிமுகப்படுத்தப்படும் என்று பயணிகளிடையே மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்டது. துரந்தோ ரயிலுக்கான பெட்டிகள் கபூர்தலா
மற்றும் பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைகளில்
தயாரிக்கப்படுகின்றன. பயணிகளின் சொகுசான பயணத்துக்காக ஏர்-ஸ்பிரிங்குகள்
பொருத்தப்பட்டு, சாதாரண ரயில் பெட்டிகளை விட 1.5 டன் எடை குறைவாகவும்
பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. எனினும்,
இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், சென்னை - கோவை இடையேயான துரந்தோ
விரைவு ரயில் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,
சென்னை - கோவை இடையே மட்டும் இந்த ரயில் பாய்ண்ட் டூ பாய்ண்ட் சேவையாக
இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பிரதான வணிக கேந்திரங்களான
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களில் இந்த ரயில் நிறுத்தப்படாது. இதனால்,
தங்களது பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக வணிகர்கள், கல்வி நிறுவனங்கள்
மற்றும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை ரயில்வே துறைக்கு தொடர்ந்து
தெரிவித்து வருகின்றனர். இந்நிலையால் சென்னை - கோவை துரந்தோ ரயில்
சேவையைத் தொடங்குவதில் தேக்கநிலை தொடர்கிறது. இதேபோல கோவை -
திருப்பதி (சேலம், காட்பாடி, பாகலா வழியாக) இன்டர்சிட்டி வாரம் மும்முறை
விரைவு ரயில் (2757, 2758), மதுரை - திருப்பதி இடையே (மயிலாடுதுறை,
விழுப்புரம், வேலூர், காட்பாடி வழியாக) வாரம் இருமுறை விரைவு ரயில் (2762,
2761), திருச்சி-மங்களூர் (போத்தனூர் வழியாக) வாராந்திர விரைவு ரயில்
(2653, 2654), நாகர்கோவில் - பெங்களூர் வாராந்திர விரைவு ரயில் (6537,
6538), சென்னை சென்ட்ரல்- ஹால்தியா வாராந்திர விரைவு ரயில் (2755, 2756),
சென்னை சென்ட்ரல் - நியூ ஜல்பைகுரி வாராந்திர விரைவு ரயில் (2753, 2754)
ஆகிய ரயில்களின் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன. இதில் மதுரை -
திருப்பதி விரைவு ரயில் சேவை, விழுப்புரம்- வேலூர் அகலப்பாதைப் பணிகள்
நிறைவடைந்த பின்னர் தொடங்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது. ரயில்
பெட்டிகள் பற்றாக்குறை காரணமா: சென்னை-திருப்பதி, திருப்பதி-நெல்லூர்,
சேலம்-காட்பாடி, கோவை-ஈரோடு இடையே வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என்று
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்ட தூர புறநகர் மின் ரயில் சேவையும்
ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது.இதே போல நெல்லை-திருச்செந்தூர்,
மயிலாடுதுறை-தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில்களும் இதுவரை சிறப்பு ரயில்களாக
மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகள் பற்றாக்குறையே
இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. எனினும், அடுத்த சில
மாதங்களில் தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்ட பின் அடுத்தடுத்து
புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டாவாறு தொடங்கி வைக்கப்படும் என்று
தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள் Empty Re: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் அறிமுகம் செய்யப்படாத புதிய ரயில்கள்

Post by megastar Thu Aug 05, 2010 1:43 pm

வரும்! ஆனா வராது 1 அதிர்ச்சி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
» பயணிகள், சரக்கு கட்டண உயர்வு இல்லை : மம்தாவின் ரயில்வே பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum