ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

4 posters

Go down

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Empty உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

Post by அப்புகுட்டி Tue Aug 03, 2010 3:35 am

சென்றவாரம் "விக்கி லீக்ஸ்" என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியிருக்கும் ஆவணங்கள் அமெரிக்க சரித்திரத்தில் மாத்திரமல்ல, உலக சரித்திரத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய இராணுவ இரகசியங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) படைகள் நடத்திவருகின்ற போர் பற்றிய சுமார் 92 ஆயிரம் செய்திக் குறிப்புகளும் இரகசியச் செய்திப் பரிமாற்றங்களும் புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன. இவை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அமெரிக்காவும் பிரிட்டனும் அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் அவற்றின் பிரதி

பலிப்புகளை வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இணையத் தளத்தில் வெளியான ஆவணங்களை அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ், பிரிட்டனின் கார்டியன், ஜேர்மனியின் டெர் ஸ்பீகெல் பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருக்கின்றன.

இராணுவ இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் அமெரிக்காவினதும் அதன் நேச அணிகளினதும் துருப்புகளுக்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை கவலை தெரிவித்திருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்திருக்கிறார். இதேபோன்ற அபிப்பிராயத்தையே பிரிட்டனும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகளின் நடவடிக்கைகளினால் ஆப்கானிஸ்தானில் குடிமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் மறைத்தமைக்காக வருத்தம் தெரிவித்து வாஷிங்டனோ லண்டனோ ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. பதிலாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சரியான தந்திரோபாயத்தையே கையாளுகிறது என்றும் அதே தந்திரோபாயத்தைத் தொடரப் போவதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்ட மறுநாள் இந்தியப் பத்திரிகையொன்றில் தீட்டப்பட்டிருந்த ஆசிரிய தலையங்கத்தில் "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா அல்லது அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டிமன்றமே நடத்தி விவாதித்தாலும் கூட முடிவுகாண முடியாது%27 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விக்கி லீக்ஸ் இணையத்தளம் அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் இரட்டை வேடத்தைக் கலைத்து விட்டிருக்கிறது. நேட்டோ அமைப்பின் சர்வதேசப் படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்திவரும் போரில் அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தனது புலனாய்வு அதிகாரிகளை இரகசிய இடங்களில் தலிபான் தீவிரவாதிகளைச் சந்திக்க அனுமதித்திருப்பதாக ஆவணங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதுவரை அந்த விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்துடன் பிரச்சினை கிளப்புவதற்கு முன்வரவில்லை. இது ஆப்கானிஸ்தான் நெருக்கடியைப் பொறுத்தவரை வாஷிங்டன் எதிர்நோக்குகின்ற திரிசங்கு நிலையைப் பிரகாசமாக வெளிக்காட்டுகிறது.

இராணுவ இரகசியங்கள் அம்பலமான விவகாரத்தை ஒபாமா நிருவாகம் அமெரிக்க உள்நாட்டுச் சட்டமீறலாகக் குறுக்கிப் பார்ப்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக நோக்குகையில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பிரசன்னம் அந்த நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதுடன் தலிபான்களையும் பலமடையச் செய்து கொண்டிருக்கிறதே தவிர, வேறு எதையுமே சாதிக்கவில்லை. இந்த நிலைவரம் தொடர்பிலான சர்வதேச விசனம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், அமெரிக்கா அதை அலட்சியம் செய்து கொண்டேயிருக்கிறது. கடந்த 8 வருடகாலத்தில் ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா 30,000 கோடி டொலர்களைச் செலவு செய்துவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், போர்த்திசை தடுமாறிக்கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் படுமோசமான மனிதஉரிமை மீறல்களையும் போர் தொடர்பான சர்வதேச சட்ட விதி மீறல்களையும் மூடிமறைப்பதற்கான வசதியான போர்வையாக மாத்திரமே இருந்து வருகிறது என்பதை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் அம்பலப்படுத்தி நிற்கின்றன!


 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Empty Re: உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

Post by நிசாந்தன் Tue Aug 03, 2010 10:11 am

வியட்னாமிற்கு பின் அமெரிக்க சந்திக்க போகும் மிக மோசமான தோழ்வியாக இந்த ஆப்கன் போர் அமையும். ஆனால் தாலிபான்கள் ஒழிக்கப்படாவிட்டால், ஆப்கன் மக்கள் மீண்டும் கற்காலத்திற்கு சென்றுவிடுவார்கள்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Empty Re: உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

Post by நவீன் Tue Aug 03, 2010 8:22 pm

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Empty Re: உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Aug 03, 2010 9:25 pm

ஏண்டா ராசாக்கள் அம்பலம் எண்டு எண்ட பேர போட்டனீங்கள் ..
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

 உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம் Empty Re: உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum