ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

3 posters

Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by சிவா Mon Jul 20, 2009 2:55 pm

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் இந்த வரி நமது உடம்பி லிருக்கும், கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புச் சத்திற்கும் பொருத்தமான தாகும். நமது உடம்பைப் பொறுத்தவரை கொழுப்புச் சத்தானது கூடினாலும் நல்லதல்ல குறைந்தாலும் நல்ல தல்ல. சரியான விகிதத்தில் நடுநிலையோடு இருப்பதே உடம்பின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

கொலஸ்ட்ரால் தேவையா?

கொழுப்புச் சத்து என்பது உடம்பிற்குத் தேவையான பொருள் தான். ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். நமது உணவில், எண்ணெய், வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல் மற்றும் கிட்னியில் கொழுப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. இதை அதிகமாகச் சாப்பிட்டால் உணவு தவிர ரத்தத்தில் கொழுப்புகள் சேரும். நம் உடம்பிலிருக்கும் ஈரலும் தன் பங்கிற்கு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. உடம்பின் ஹார்மோன் உற்பத்திக்கும், செல்லைச் சுற்றியிருக்கும் மெல்லிய சுவரின் வளர்ச்சிக்கும் கொழுப்புச்சத்து ரொம்ப அவசியம்.

கொலஸ்ட்ரால் சரியான அளவு ரத்தத்தில் கலந்திருப்பது மிகவும் நல்லது. அதன் அளவு கூடும்பொழுதுதான் பிரச்சினை உருவாகிறது. உடம்பிலிருக்கும் கொழுப்புச் சக்திகள் பல வகைகளாகப் பிரிக்கப்படும். HDL கொலஸ்ட்ரால் (நல்ல கொலஸ் ட்ரால்), TGL கொலஸ்ட்ரால் (கெட்ட கொலஸ்ட்ரால்), HDL கொலஸ்ட்ரால் (Masty) (தொந்தரவு கொலஸ்ட்ரால்) என்று பொதுவாகப் பிரிக்கப்படும். உடம்பிற்குத் தேவையான அளவிற்குரிய HDL கொலஸ்ட் ரால் இருந்தால் நல்லது. இது குறைந்தால் தீமை. தேவைக்கு மீறிய அதிகப் படியாக LDL கொலஸ்ட்ரால். அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கு மானால் தொந்தரவுகள் வரும்.

கூடுதலாக சேர்ந்த LDL கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களின், உள்பகுதியில் படிப்படியாக சேர்ந்து துவாரத்தை அடைக்கிறது. இந்த அடைப்பினால் இரத்தம் இதயத்திற்கு பரவுவது குறைகிறது, தடைபடுகிறது. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக "ஹார்ட் அட்டாக்" ஏற்படுகின்ற அபாயத்தைக் கூட உண்டுபண்ணுகிறது.

HDL கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய் தடிப்பாவதையும், அடைப்படுவதை யும் தடுக்கிறது. அதன்மூலம் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. குறிப்பாக, உடம்பில் தேவைக்கு அதிகமான கொழுப்பை சேர விடாமல் உணவுக் கட்டுப்பாடோடு இருத்தல் அவசியம்.

பெரிய தொப்பையா?

நாம் தேவைக்கு மேல் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பெருத்து விடுகிறது. ஒருவருக்கு தொப்பை பெரிதானால் பெரும்பாலும் அவருடைய ரத்தத்தில் TGL கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும். இந்த TGL என்பது தொந்தரவு கொலஸ்ட்ராலாகும். கெட்ட சகவாசம் நல்லவனையும் கெடுக்கின்றதைப் போல இந்த TGL நல்ல கொலஸ்ட்ரால் HDL லின் தன்மையையும் கெடுக்கிறது. HDL லின் பலம் குறைந்து கெட்ட கொலஸ்ட்ராலின் ஆதிக்கம் அதிக மாகின்றபோது முன் சொன்ன மாதிரி ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கப்படுகிறது.

தொப்பை பெரிதாக உருவானால், TGL கொலஸ்ட்ரால் கூடுதலாகிறது என அர்த்தம். அது உடம்பை கெடுக்கும் என்பது உறுதி. அப்படியான நேரத்தில் உடற் பயிற்சியின் மூலமும், உறுதியான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் தொப்பையை குறைப்பது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by செரின் Mon Jul 20, 2009 3:00 pm

அண்ணா ஒரு சந்தேகம் உடற் பருமன் அதிகாிப்பதற்கு.. கொழுப்புணவுகள் காரணமா..? இல்லலை காபோவைதறேற்ற உணவுகள் காரணமா?
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by சிவா Mon Jul 20, 2009 3:27 pm

கொலஸ்ட்ராலைக் குறைக்க...

டாக்டரின் ஆலோசனைப்படி முதலில் உடம்பிலிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதற்கான மருந்துகளைச் சாப்பிட லாம். கொலஸ்ட்ராலை குறைக்க பல நல்ல மருந்துகள் வரத் துவங்கியுள்ளன. காலம் கடந்து சிகிச்சை செய்யாமல் காலத்தே சரி செய்தால் பல நன்மைக ளைப் பெறலாம்.


புகை பிடிப்பவர்களுக்கு...


புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது உண்மை. புகையிலுள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனோக்ஸைடு, உடம்பில் சேர்ந்து ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின் றன. குறிப்பாக இதய ரத்தக் குழாய், மூளைக்கான ரத்தக் குழாய் மற்றும் கால்களுக் குரிய ரத்தக் குழாய்களை அதிகப்படியாக பாதிக்கின்றன. நிகோடின் ரத்தத்தை உறையச் செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது. புகையால் நுரையீரலில் கேன்சரும் உருவாகிறது. வயிற்றில் புண்கள் ஏற்படுவதோடு பிரான்கைடிஸ்சும் உண்டாகிறது.


உடற்பயிற்சியின் அவசியம்:


நமது இன்றைய சராசரி வாழ்க்கையில் உடலுழைப்பு என்பது குறைவானதாகி விட்டது. அதனால் உடற்பயிற்சி என்பது தேவையான ஒன்றாகிறது. அவரவர் உடம்பின் நிலையை உணர்ந்து, அல்லது டாக்டரின் ஆலோசனை ப்படி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

அரைமணி நேரம் நடப்பது என்பதே நல்ல உடற்பயிற்சிதான். வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற செயல்கள் சிறப்பான உடற்பயிற்சிக்கான வழிகள். உடற்பயிற்சியால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. ரத்தக் குழாய் உறுதியடையும் தன்மையும் சற்று குறைகிறது. ரத்தக்கொதிப்பை அதிகரிக்காமலும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க உடற் பயிற்சி ரொம்ப அவசியமாகிறது. உடம்பின் எடை குறைவதோடு, மனதில் நல்ல உற்சாகத்தையும், உடம்பில் நல்ல தெம்பையும், உறுதியையும் பெற உடற்பயிற்சி வழி வகுக்கிறது.

தூங்கும்போதே மரணம்:

இதயக் கோளாறினால் திடீர் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இருதயம் இடை வெளியில்லாமல் வேலை செய்யும் ஒரு உறுப்பாகும். இதுதான் உடம்பின் சகல பகுதிகளுக்கும் ரத்தத்தை செலுத்தி உறுப்புகளை செயல்பட வைக்கிறது. தவிர தனக்குத் தேவையான ரத்தத்தையும் இதயத்தின் கொரனரி தமனிகளின் வழியாகப் பெறுகிறது. இதயத்தின் ஒரு சில முக்கியமான பகுதி களுக்கு ரத்தம் சரியாக பரவவில்லை என்றால் பிரச்சினை உருவாகிறது. இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்படுகின்றது. துடிப்பு சில சமயங்களில் குறைந்து நின்று போகும் போது மரணம் நிகழ்கின்றது.

பொதுவாக ரத்த ஓட்டம் சரியாக சென்றடையாதபோது இதயம் வேக மாகத் துடிக்கத் துவங்குகிறது. இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிளின் துடிப்பு அதிகமாகிறது. இந்த வெண்ட்ரிக்கிளின் அதி வேகத் துடிப்பு மேலும் மோசமடைந்து மரணத்தில் முடிகிறது. இந்த செயல்களெல்லாம், ஒரு சில நொடிகளில் நடந்தேறும். அதனால்தான் சட்டென்று மரணம் சம்பவிக்கின்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by சிவா Mon Jul 20, 2009 3:27 pm

உடம்பின் பருமனையும், எடையையும் குறைக்க.!

இன்றைய சூழலில் உடம்பின் எடை யைக் குறைக்க மருந்துகள் எதுவு மில்லை. மருந்துண்டு என்று யாராவது சொன்னால் கதை விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். நடைமுறையில் ஸ்வீட்ஸ், முட்டை, மட்டன் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுப் பொருட்களையும், எண்ணெய் பதார்த்தங்களை யும் தவிர்க்க வேண்டும். மேலும் பாதாம்-முந்திரிப் பருப்புகள், ஐஸ்கிரிம் களை சாப்பிடக் கூடாது. இப்படி கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சியும் உடம்பின் எடையைக் குறைக்க உதவும்.

அதிகமாக காபி ஆபத்தானதா?

காபி அருந்துவதால் இதயத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்படுமா? என்ற கேள்வி. இன்னும் சர்ச்சையிலுள்ளது. காபியிலுள்ள "காஃபின்" என்ற பொருளால் இதயம் சம்மந்தப்பட்ட நோய் வரலாம் என்பது ஒரு சிலரின் வாதம். ஆனால் இன்னும் தீர்மானமாகவில்லை. இந்த காஃபின் மூளையின் செயல் பாட்டை தூண்டிவிட்டு, சுறுசுறுப்படைய செய்வதால் பலரும் விரும்பி அருந்துகின்றனர். காபி, டீ, சாக்லேட், பேண்ட்டா, டொரினோ போன்ற பானங்களில் காஃபின் உள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப் காபி என்பது பாதுகாப்பானது. அதற்கு மேலாக அதிகமான காபி சாப்பிடுவது உடம்பிற்கு கெடுதலாக அமையும். கொலஸ்ட்ராலை குறைத்து உடம்பிற்குள் நோய் வராமல் தடுப்போம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by ரூபன் Mon Jul 20, 2009 3:31 pm

இந்தக்கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது ஆனான் எனக்கு தொப்பை என்று இல்லை சற்று உடம்புதான் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by சிவா Mon Jul 20, 2009 3:39 pm

எங்களுக்கு இருக்குதுல, அதனாலதான் அனுபவிச்சு எழுதியுருக்கோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by ரூபன் Mon Jul 20, 2009 3:44 pm

வைத்தியருக்குமா அப்பா நாம நெஞ்சை நிமித்திக்கலாம் சிரி சிரி குதூகலம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும் Empty Re: அதிகமான கொழுப்பும் உடல் நோய்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum