ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தமிழ் மாநாடுகள்

4 posters

Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty உலக தமிழ் மாநாடுகள்

Post by கோவை ராம் Thu Jun 24, 2010 4:35 pm

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் செம்மொழி மாநாடு, இதற்கு முன் நடந்த மாநாட்டின் தொடர்ச்சி அல்ல. தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் முதல் மாநாடு. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது. மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.
நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.
ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இந்த மாநாட்டில்தான் முத்தமிழ் தவிர அறிவியல் தமிழ் ஒன்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துவக்கத்தில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள்தான் முடிவு செய்தனர். அப்போது அரசு வாயிலாக துவங்கப்படவில்லை. காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு உதவியின்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே இம்மாநாடு நடத்துவது கடினமாகிவிட்டது. ஆகவே, தமிழக அரசின் நிதி உதவியை சார்ந்தே இம்மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றன.
எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.
நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார். மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.
இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்.
ஆறாவது உலக தமிழ் மாநாடுமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. உலகில் தமிழர்கள் அதிக எண்ணிக்கை வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா இருப்பதால் இங்கு ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. முதல் உலகத்தமிழ் மாநாடும் கோலாலம்பூரில் தான் நடைபெற்றது.1987ம் ஆண்டு நவ. 15ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் மகாகிர் முகமது தொடங்கி வைத்தார். இதில் 14 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் பங்கேற்றனர்.
இதில் மகாதிர் முகமது பேசியது: கடந்த கால நினைவுச்சின்னங்களை கண்டுபிடித்து, அடையாளம் காட்டுவதுடன் மட்டும் திருப்தி பட்டுவிடக்கூடாது. சமூகம்,மொழி, கலாசாரம், மதம், கலை போன்றவற்றில் பழங்கால சிறப்புக்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று அறிஞர்களும் கண்டுபிடிக்கின்றனர். அவற்றை தற்போதைய காலத்துக்கு பொருத்தமானதாக மாற்றக்கூடியவர்களாகவும் அவர்கள் விளங்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. உலகின் மிகச்சிறந்த இனிமையான மொழி என நிபுணர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். புராதன காலம் முதல் இன்றுவரை பல வல்லுனர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்களால் தமிழ் மொழி வளர்க்கப்பட்டு இந்த பெயரை பெற்றுள்ளது.இப்போது தமிழ்மொழி, தமிழகத்தில் மட்டுமல்லாது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, பர்மா, பிஜி, இந்தோனேசியா, இலங்கை, டிரினிடாட், மலேசியா நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சிறப்பான இந்த மொழி மேலும் வளர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்து மலேசிய அமைச்சரும், மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவருமான சாமிவேலு பேசினார். அவர் பேசியது: தமிழ்மொழியை சர்வதேச மொழியாக மாற்ற வேண்டும். தமிழை உலகம் முழுவதும் பரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதப்போகிறேன். தமிழகத்தில் உள்ள முக்கியமான தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சாமிவேலு பேசினர். இந்த மாநாட்டில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மொரிஷியஸ், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கோலாலம்பூருக்கு வந்தனர்.இவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கு சிறப்புரை ஆகியவையும் நடந்தது. மாநாட்டை ஒட்டி தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர்களின் கலை, கலாசாரம் குறித்த கண்காட்சியும் துவக்கப்பட்டது.
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by சரவணன் Thu Jun 24, 2010 4:38 pm

நீங்க ஒன்னு தெரிஞ்சுக்கணும், இது உலகத் தமிழ் மாநாடு அல்ல.
உலக செம்மொழி மாநாடு (அதாவது கலைஞர் அவரா ஏற்ப்படுத்தும் விழா அவ்ளோதான்)
இது வழமையாக நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு அல்ல......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by sathyan Thu Jun 24, 2010 4:42 pm

முன்பு நடந்தது அனைத்தும் உலக தமிழ் மாநாடு .இப்பொது நடப்பது மானாட மயிலாட மாநாடு
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 4:48 pm

sathyan wrote:முன்பு நடந்தது அனைத்தும் உலக தமிழ் மாநாடு .இப்பொது நடப்பது மானாட மயிலாட மாநாடு

கலைஞரே விழாவை ஏற்பாடு செய்து தன்னை தானே பாராட்டி கொள்ளும் மாநாடு....
இது போன்ற கேவலமான செயல்களை செய்யும் ஒரே அரசியல்வாதி கலைஞர் தான்



உலக தமிழ் மாநாடுகள்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by sathyan Thu Jun 24, 2010 5:03 pm

பிளேடு பக்கிரி wrote:
sathyan wrote:முன்பு நடந்தது அனைத்தும் உலக தமிழ் மாநாடு .இப்பொது நடப்பது மானாட மயிலாட மாநாடு

கலைஞரே விழாவை ஏற்பாடு செய்து தன்னை தானே பாராட்டி கொள்ளும் மாநாடு....
இது போன்ற கேவலமான செயல்களை செய்யும் ஒரே அரசியல்வாதி கலைஞர் தான்

திருத்தம் அரசியல்வாதி அல்ல அரசியல்வியாதி தான் இந்த கருணாநிதி
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by sathyan Thu Jun 24, 2010 5:31 pm

கரண்ட் பிரச்சனையை மறைக்க ஒரு ரூபாய்க்கு அரிசி ,விலைவாசி உயர்வை மறைக்க 50 ரூபாய்க்கு மளிகை , சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்க பாராட்டு விழாக்களும் ,பொருளாதார வளர்ச்சி இல்லை என்ற பிரச்சனையை மறைக்க மானாட மயிலாட,ஈழ துரோகத்தை மறைக்க உலக செம்மொழி மாநாடு , வாழ்க தமிழ் , வளர்க தமிழினம் ...

நன்றி
சிவா chennai,
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:36 pm

sathyan wrote:கரண்ட் பிரச்சனையை மறைக்க ஒரு ரூபாய்க்கு அரிசி ,விலைவாசி உயர்வை மறைக்க 50 ரூபாய்க்கு மளிகை , சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்க பாராட்டு விழாக்களும் ,பொருளாதார வளர்ச்சி இல்லை என்ற பிரச்சனையை மறைக்க மானாட மயிலாட,ஈழ துரோகத்தை மறைக்க உலக செம்மொழி மாநாடு , வாழ்க தமிழ் , வளர்க தமிழினம் ...

நன்றி
சிவா chennai,

ஆமாம் நண்பா அதற்கு தான் இந்த மாநாடு



உலக தமிழ் மாநாடுகள்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக தமிழ் மாநாடுகள்   Empty Re: உலக தமிழ் மாநாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக தமிழ் மாநாடுகள்
» உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum