ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவே மருந்து

+2
பெரியராஜா
சிவா
6 posters

Go down

உணவே மருந்து Empty உணவே மருந்து

Post by சிவா Fri Jul 10, 2009 3:09 am

பிறவிப் பிணியை ஒழிக்க விரும்பிய புலவர் ஒருவர் வீட்டுச் சரக்குகளின் பெயர்களைக் கொண்டு ஓர் அழகிய பாடலைப் பாடியுள்ளார். பாடல் வருமாறு

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே.

திருவேரகம் என்னும் சுவாமி மலை (குமரி மாவட்டத்துத் தக்கலை என்னும் ஊர் அருகிலுள்ள குமாரர் கோயில் என்பாருமுளர்) யில் வீற்றிருக்கும் வள்ளித் திருமணத்திற்காக வளையல் செட்டியாராக வந்த முருகப் பெருமானே*

கொடிய காயம் (உடல்) விரதங்களிருப்பதால் வற்றி எலும்பானால் (சுக்கானால்) கொடிய விதியினால் (வெந்தயம்) என்ன செய்ய இயலும்? இவ்வுடலாகிய சரக்கினை இவ்வுலகில் சுமக்க மாட்டேன். செம்மையான மனதைக் (சீர்+அகம்) கொடுத்தீரானால் பெரிய உடலினை (பெரும்+காயம்) இனி எடுக்க மாட்டேன் என்கிறார்.

இப்பாடலின் சிலேடை நயம் போற்றுதற்குரியது. இப்பாடலில் காணப் பெறும் மருந்துப் பொருட்களாவன, வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம். இச்சரக்குகளின் பயன்கள் இனிவரும் மலர்களில் மணம் பரப்பும்.

உணவையே மருந்தாக உட்கொண்டனர் முன்னோர். உணவு மிகினும், குறையினும் நோய் செய்யும் என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.

இழி(வு)அறிந்(து) உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.

-என்பது திருக்குறள். அளவு அறிந்து உண்பவனை மனிதன் என்கிறார். உண்பான் என மரியாதையாக அழைக்கிறார். குழிபேர் இரையான் என மிகுதியாக உண்பவனை அழைக்கிறார். இரை ஆடு மாடுகளுக்குப் போடுவது. அதிகமாக உண்பவனை விலங்குகளோடு சேர்த்து இரையான் என இழிவுபடுத்துகிறார்.

இதனால் தான் ஒரு பொழுது உண்பவனை யோகி என்றும், இருபொழுது உண்பவனை போகி என்றும், மூன்று வேளை உண்பவனை ரோகி (நோய் பீடீத்தவன்) என்றும் கூறுவர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் திருவாக்கு. நல்ல உடலில் தான் நன்கு ஆன்மா ஒளிவிடும். உணவு உயிர்ச் சத்துக்களைக் கொண்டதாக அமைய வேண்டும். மாதவச் சிவனான முனிவரிடம் சமையல் செய்பவன், இன்று என்ன கறி சமைக்கலாம்? ஐயா என்றான். அவரோ ஒரு வெண்பாவாவில்,

சற்றே துவையலரை தம்பிஓர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை-குற்றமிலை
காயமிட்டடுக் கீரை கடை_கம் மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

என்றார். சிவஞான முனிவர் சமையலுக்கு எடுத்துக் கொண்ட கறி வகைகளாவன, துவையல். பச்சடி, வற்றல், காயமிட்ட கீரை, மிளகுக் காய்கறி.

துவையல் என்பது அம்மியில் வைத்து அரைக்கப்படுவது. வறுகடலைத் துவையல் சத்துமிக்கது. இஞ்சித் துவையல் பித்தம் போக்கும். பிரண்டைச் செடியையும் வறுத்து இஞ்சியுடன் சேர்த்துத் துவையல் செய்வர். காணத் துவையல் (கொள்ளு) சத்துமிக்கது. வறுத்து அரைப்பர்.

அடுத்தது பச்சடி. வெண்டைக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அத்துடன் மிளகாய், வெங்காயம் அரைத்துச் சேர்த்துச் செய்வது வெண்டைக்காய்ப் பச்சடி. மாங்காயைத் துண்டுகளாக்கிச் செய்தால் மாங்காய்ப் பச்சடி. சித்திரை மாதம் வேப்பம்பூ தாராளமாக கிடைக்கும். அதைப் பச்சடியில் சேர்த்து உண்பதால் கல்லீரல் நோய்கள் அகலும். மலமிளக்கியாகவும், குடலைத் தூய்மை செய்வதாகவும் அமையும். இப்படியே தக்காளிப் பச்சடி, வெங்காயப் பச்சடி எனப் பலவகைகள் உண்டு.

நாள்தோறும் நம் முன்னோர் தயிர்ப்பச்சடி உண்டு வந்தனர். அதில் சேர்க்கப்படும் பொருள் உயிர்ச்சத்து - சி - நிறைந்த நெல்லிக்காய்த் துண்டுகள். நெல்லிக்காய்த்துண்டுகள். நெல்லிக்காய் நீண்ட நாள் வாழ வைப்பது. இதனால் தான் வள்ளல் அதியமான் புலவர் ஒளவையார் நீண்ட நாள் வாழ வேண்டுமெனத் தான் அரிதில் பெற்ற கருநெல்லிக்கனியை அவ்வையாருக்குக் கொடுத்தான்.

நெல்லிக்காய் தாராளமாக கிடைக்கும் மாதங்களில் அவற்றை ஆட்டுரலில் இட்டு அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை இட்டுக் காயவைத்து கயிற்றில் கோத்துக் கொடிகளில் தொங்க விட்டிருப்பர். தினமும் ஓர் அடையை எடுத்துத் தயிரில் போட்டுப் பிசைந்து பச்சடி செய்வர். அன்றாடம் தேவையான சி உயிர்ச் சத்து வில்லைகளை விழுங்குவதை விட இதை உண்பது மேல் அல்லவா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by சிவா Fri Jul 10, 2009 3:09 am

அடுத்தது வற்றல். பொதுவாக அரிசியை அரைத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற்றி தீ எரிகையில் கூழாகக் காய்ச்சி அதில் மிளகாய், சீரகம், வெங்காயத் துண்டுகள் போட்டுப் பதமாக இறக்கி துணிகளை வெயில் விழும் மேடையில் விரித்து வட்ட வட்டமாகக்கையினால் எடுத்து ஊற்றி வெயிலில் காய வைத்து, காய்ந்த பின் எடுத்து எண்ணெயில் பொரித்து உண்பர். இதைக் கூழ் வற்றல் என்பர். இதைப் போலவே, கத்தரி, மிளகாய் (தயிரில் ஊற வைத்து), மணித் தக்காளி, சுண்டைக்காய் முதலியவற்றையும் தாராளமாகக் கிடைக்கும்,

காலங்களில் வெயிலில் காய வைத்து வற்றலாக இடுவர். இதில் மணித்தக்காளி வற்றல் வாய்ப்புண் வயிற்றுப்புண் போக்கும். சுண்டைக்காய் வற்றலில் இரும்புச் சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு, சோகை தடுப்புக்குப் பயன்படும். ஏதாவது ஒருவகை வற்றலைச் சேர்ப்பது நல்லது.

அடுத்தது கீரை. இதில் உயிர்ச்சத்து பி12 உள்ளது. இரத்த விருத்திக்கு இன்றியமையாதது. கீரையில் பலவகைகள் உண்டு. அகத்திக் கீரை. அதை அவசியம் வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். இதை சோறு வடித்த கங்சி நீரில் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சத்துமிகுதி. கூறுத்து வெல்லம் சிறிது இட்டு வதக்கி உண்பதும் உண்டு. முருங்கைக் கீரைக்கு வாயுவைக் கண்டிக்கும் தன்மை உண்டு. இதையும் வறுத்து உண்ணலாம். மணித் தக்காளிக் கீரையை அவித்து உண்பதால் வாய்ப்புண் குணமாகும்.

ஆனால் நம் முனிவரோ, காயமிட்டுக் கீரை கடை என்கிறார். இது நாள்தோறும் நாம் சேர்க்க வேண்டிய அரைக்கீரை. இதைப்பற்றிச் சுவையான செய்தி உண்டு. கம்பர் ஒளவையாரிடம் விடுகதை போட்டார். ஓரு காலடி நாலிலைப் பந்தலடி அடி என அவ்வையாரை அழைத்தார். அவ்வையார் பதிலுக்கு ஆரையடா சொன்னாய் அது என்றார். அரைக் கீரை பற்றிய இலக்கியச் செய்தி இது. அடா எனப் பதிலில் உரைத்தது நயம்.

அரைக் கீரையில் சிறிது சுண்ணம் சேர்த்து அவித்துப் பெருங்காயப் பொடி சேர்த்துக் கடைந்து உண்பதால் பி உயிர்ச்சத்து நாள்தோறும் கிடைத்து வரும். அடுத்தது, மிளகுக் காய்கறி. மிளகாய் தமிழ் நாட்டுக்கு வருமுன் தமிழ் நாட்டினர் மிளகையே பயன்படுத்தினர். மிளகுபோல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான மிளகாய் காரமாக இருந்ததால் மிளகுக் காய் என்றனர். அது மருவி மிளகாய் ஆகி விட்டது. இவற்றுள் மிளகை கேரளத்தில் நல்ல மிளகு என்பர். மிளகு திரிகடுகத்தில் (சுக்கு, மிளகு, திப்பிலி) ஒன்று. பகைவன் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றால் பத்து மிளகைக் கொண்டு போ என்பது ஒரு பழமொழி. ஊணவிலுள்ள நச்சுப் பொருட்களை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. தமிழ் நாட்டிலே வாழ்ந்த ஆங்கிலேயர் மிளகு தண்ணீர் (இரசம்) குடித்து அதன் பெருமையை உணர்ந்து தம் அகராதியிலே அச்சொல்லை அப்படியே மிளகு தண்ணி என எழுதியுள்ளனர்.

நாம் முன்பே கூறியவாறு சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து தண்ணீரில் இட்டுக் காய்ச்சி ஆக்குவது தான் மிளகுக்காய்கறி. வட மொழியில் ரசம் என்பர். தமிழர் மிளகுச் சாறு என்பர். நாள்தோறும் ஒரு துவையல், ஒரு பச்சடி, ஒரு வகை வற்றல், கீரை, மிளகு சாறு சேர்த்து வந்தால் நோய் விட்டுப் போகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by பெரியராஜா Fri Jul 17, 2009 9:33 am

மிகவும் அருமையான பயனுள்ள குறிப்புகள் அன்பு மலர்
பெரியராஜா
பெரியராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by ரூபன் Fri Jul 17, 2009 5:05 pm

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by சபீர் Thu Sep 23, 2010 9:13 pm

மிக அருமையான பகிர்வு அண்ணா மிக்க நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by gunashan Thu Sep 23, 2010 9:15 pm

சபீர் wrote:மிக அருமையான பகிர்வு அண்ணா மிக்க நன்றி

ஐ சப்போர்ட் யூ கண்ணு....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by அருண் Thu Sep 23, 2010 9:16 pm

பயனுள்ள நல்ல கட்டுரை அண்ணா பகிர்தமைக்கு மிக்க நன்றி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by அருண் Thu Sep 23, 2010 9:17 pm

gunashan wrote:
சபீர் wrote:மிக அருமையான பகிர்வு அண்ணா மிக்க நன்றி

ஐ சப்போர்ட் யூ கண்ணு....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ் தமிழ் ல பேசுங்க.......குணா... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உணவே மருந்து Empty Re: உணவே மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum