ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பமாகும் காலத்தை அறிவது எப்படி?

Go down

கர்ப்பமாகும் காலத்தை அறிவது எப்படி? Empty கர்ப்பமாகும் காலத்தை அறிவது எப்படி?

Post by சிவா Sat Jul 04, 2009 9:35 am

ஒரு பெண்ணுக்கு முட்டை வெளியான பிறகு கருத்தரிக்க அதிக வாய்ப்பிருக் கிறது. கருமுட்டையானது சினைப்பையிலிருந்து வெளியான 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். நீங்கள் கருத்தரிக்க வேண்டுமானால் இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவுடன் சேர்ந்து விட வேண்டும். அவ்வாறே உயிரணுவா னது 48 முதல் 72 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். ஆகவே, முட்டை வெளியாகும் இந்த நேரத்தில் உறவு ஏற்பட்டால் உயிரணுவானது பெல்லோபியன் குழாய்க்கும் பயணம் செய்து முட்டையை சந்திக்க வழியிருக்கிறது.

முட்டை வெளியாவதை எப்படி கண்டுபிடிப்பது?

முட்டை வெளியாவதை கண்டுபிடிக்க சில முறைகள் உள்ளன. அவற்றுள் காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச்சுரப்பு முறை ஆகியவை மிக முக்கியமானவை.

1. மாதாந்திர சுழற்சி ஒழுங்காக (28 நாட்களுக்கு ஒரு முறை) இருந்தால், அடுத்த மாத விலக்கு எப்போது வரப் போகிறது என்பதைக் கணக்கிடுங்கள். இதே வழியில் முட்டை எப்போது வெளியாகும் என்பதை நிர்ணயம் செய்யலாம். முதலாவது நீங்கள் உங்களுடைய மாதாந்திரப் போக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் விலக்கைப் பற்றி தெரிந்துகொள்ள பதிவேடு ஒன்றைப் பயன்படுத்தி அதில் குறித்துக்கொள்ளுங்கள். மாதந்தோறும், விலக்காகும் முதல் நாளை அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பல மாதங்களுக்குத் தொடர்ந்து குறித்துவர வேண்டும்.

இப்போது ஒரு மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து, அடுத்த விலக்கின் முதல் நாள் வரை உங்கள் மாதாந்திரப் போக்கின் கால அளவு எவ்வாறு இருக்கிறது என்பதை பதிவேட்டிலிருந்து நாட்களை எண்ணிப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு ஒழுங்கான மாத விலக்கானால், ஒவ்வொரு விலக்குக்கும் இடையேயான நாட்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் தேதி மாறிவந்தால் மாதப்போக்கில் ஒழுங்கற்ற நிலை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் வேறு முறைகளான வெப்ப நிலையைக் கணக்கிடுதல் அல்லது சளிப் பரிசோதனை போன்றவற்றை கையாண்டு முட்டை வெளியாகும் நாளைக் கண்டு பிடிக்கலாம்.

பெரும்பாலான பெண்களிடையே மாதாந்திரச் சுழற்சிக் காலத்தின் அளவு வேறுபடுகிறது. இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு அடுத்த மாதவிலக்கா வதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்பு முட்டை வெளியாகிறது. அடுத்த மாதம் மாதவிலக்காகும்போது முதல் நாளிலிருந்து பதினான்கு நாட்களையும் எண்ணிக்கொள்ளலாம், அல்லது மாத விலக்கானதற்கு முன்புள்ள பதினான்கு நாட்களை எண்ணிப்பாருங்கள். அந்த சமயத்தில் முட்டை உருவாகியிருக்கும் என்பதை அடுத்த மாதம் குறித்துக் கொள்ளுங்கள்.

வெப்ப முறை

உங்களுக்கு முட்டை வெளியான பிறகு, உங்களுடைய உடல் வெப்பம் சற்று குறைந்து, மீண்டும் அதிகரிக்கும். எனவே, உங்கள் உடல் வெப்பநிலையை பதிவுசெய்து வைத்துக்கொள்வது கூட, எப்போது முட்டை வெளியாகிறது என் பதை தெரிந்துகொள்ளும் இன்னொரு வழியாகும்.

நீங்கள் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்பட்டால், வெப்ப நிலையை அறிவதற்கான சார்ட் பயன்படுத்தலாம். இதன் மூலம் முட்டை எப்போது வெளியானது என்பதை அறிந்துகொள்ள இயலுவ தோடு, முட்டை வெளியாகியிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதவிலக்கான முதல் நாளில் முதல் வேளையாக காலையிலேயே உங்கள் உடல் வெப்பநிலையை குறித்துக் கொள்ளலாம். இதற்காக பிரத்யேகமாக உள்ள கருவாக்க தெர்மா மீட்டரை வாங்கிப் பயன்படுத்தலாம். இதை வாயில் ஓரிரு நிமிடங்கள் வரை வைத்திருந்து உங்கள் உடல் வெப்பத்தை அறியலாம். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மருத்துவர் கற்பிப்பார்.

2. வரைபட வடிவத்தில் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உடல் வெப்ப நிலை அளவீட்டை குறித்து வாருங்கள். அடுத்த மாதவிலக்கு காலத்தின் முதல் நாளில்; புதிய வரைபடத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் மாதவிலக்கு தொடங்கிய பதினான்கு நாட்களுக்கு முன்பே இதை கவனித்து வாருங்கள். உங்களுடைய வெப்பநிலை கொஞ்சம் குறைந்து பிறகு கூடியிருப்பது பதிவாகியிருக்கும். உங்களுடைய வெப்பநிலை உயர்ந்த பொழுது, நீங்கள் ஏற்கனவே முட்டையை வெளியிட்டிருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ளலாம்.

முட்டையானது பெல்லோபியன் குழாயில் 24 மணி நேரம் வரை உயிர் வாழும் என்பதால் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் நீங்கள் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறது.

சளிச்சுரப்பு முறை

முட்டை வெளியாவதற்கு சற்று முன்பு, கருப்பை வாயைச் சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே, இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்ல முடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையப் பகுதியில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியாவதற்கான அடையாளங்களாகும். கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள்.

முட்டை வெளியாகும் நாளில் உங்களுக்கு அதிகமாக சளிச்சுரப்பு ஏற்படு வதையும், அதிகமாக ஈரமாவதையும் உணர்வீர்கள். துவக்கத்தில் இந்த மாற்றங்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். நீங்கள் அதிக சிரத்தையுடன் கவனித்து வந்தால், இதைப் பின்பற்றுவது எளிதாக இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்பமாகும் காலத்தை அறிவது எப்படி? Empty Re: கர்ப்பமாகும் காலத்தை அறிவது எப்படி?

Post by Guest Sun Sep 06, 2009 1:30 pm

ரொம்ப நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum