ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

2 posters

Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 1:26 pm

இரவு பகலாகக் கண் விழித்து பொறியியலிலோ விஞ்ஞானத் துறையிலோ ஒரு பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது நாம் விரும்பியபடி படிப்புக்கேற்ற வேலை கிடைக்குமா என்ற கேள்விதான்.

எத்தனையோ நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை பணியமர்த்த விண்ணப்பங்கள் கோருகின்றன. ஒரு பணியிடத்திற்கு பல விண்ணப்பங்கள் வந்து குவியும். உங்களுக்கும் பணியமர்த்த நினைக்கும் நிறுவனத்திற்கும் உள்ள முதல் தொடர்பு நீங்கள் அனுப்பும் resume/ CV என்றும் அழைக்கப்படும் உங்களது தகுதி, அனுபவம் பற்றிய விண்ணப்பங்கள்தான்.

இந்த விண்ணப்பத்தை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்துச் செல்லும். அடுத்தபடி.. ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றாக இருக்கும் உங்கள் விண்ணப்பம் தனித்து நின்று பணியமர்த்துபவர்களைக் கவரவேண்டும்-சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுற்றி வளைத்து வளவளவென்று சொன்னால் அது சரியாகப் படிக்கப்படாமலே குப்பைக் கூடைக்குச் சென்றுவிடக்கூடும். நான் படித்த சில வழிமுறைகளை இங்கே சொல்லுகிறேன்.

பல நேரங்களில் நாம் அனுப்பும் விண்ணப்பங்கள் கிணற்றில் விழுந்த கல்லாக நிறுவனத்திடமிருந்த எந்தவிதமான பதிலும் கிடைக்காதபோது நமக்கு இவர்கள் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 'எவ்வளவோ தடவை நாம் நமக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறோம். விண்ணப்பம் கோரிய உடனேயே தாமதமின்றி அனுப்பியிருக்கிறோம்! ஆனாலும் நிறுவனத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லையே,' என்று சோகமாகக்கூட இருந்திருப்போம்.

நீங்கள் உங்களது கல்வித் தகுதிகளை விவரித்து அனுப்பும் பல விண்ணப்பங்களுக்கு பதில் வராமலிருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பம் அனுப்பு முன்னமேயே நிறுவனம் சரியானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது உங்கள் தகுதி அவர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருவது ஒரு அதிர்ஷ்டம்தான். இதில் நாம் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்று மனம் தளர்ந்து போகவேண்டாம்.

ஒருவேலைக்கு அந்த நிர்வாகத்தினர் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது அவர்களுக்குத் தோன்றக் கூடிய கேள்விகள் என்ன என்று அவர்கள் மனநிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்து உங்களது விண்ணப்பத்தைத் தயார் செய்து அனுப்பி வைத்தால் உங்களது விண்ணப்பம் நிறுவனத்தின் மனதைக் கவரும்.


நேசமுடன் ஹாசிம்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 1:27 pm

வேலைக்குப் பொருத்தமானவரா?

நிர்வாகத்தினர் ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்போது அவர்களது முதல் கேள்வியே.. 'இவர் நம் நிறுவனத்தின் இந்த வேலைக்குச் சரியாகப் பொருந்துவாரா?' என்பதுதான்.

இது தெரிந்ததுதான். ஒரு கம்பெனி தனக்கு ப்ரொக்ராமர் பதவிக்கு ஆள் வேண்டுமென்றால் மனித வளர்ச்சித் துறையில் பயிற்சி பெற்றவரைப் பணிக்கு அமர்த்த நினைக்காது. வேறு துறையில் பல வருஷங்கள் அனுபவம் இருக்கிறது என்பது தகுதியாகாது. நிறுவனம் குறிப்பிட்ட வேலைக்கு பொருந்துபவரைத்தான் எதிர்பார்க்கும்.


Last edited by ஹாசிம் on Thu Jun 03, 2010 1:29 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 1:27 pm

மாத்தி யோசி!

நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறு உங்கள் CV-ஐ திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும். அதனால் எல்லாக் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி CV அனுப்பக் கூடாது. அவர்கள் கேட்டிருக்கும் பணிகளுக்கும் தகுதிகளுக்கும் உகந்த மாதிரி உங்கள் CV இருக்க வேண்டும். அதற்காகப் பொய் சொல்லவேண்டும் என்று பொருளில்லை. நமக்குப் பொருத்தமான தகுதிகள் இருந்தாலும் அதனை எப்படி விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

இதனால் அதிக நேரமாகலாம். ஆனாலும் அந்த நேரத்தைச் செலவழிப்பது வீணில்லை.உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறும்போது கவனமாக இருங்கள். ஒரு நல்ல வழி. உங்கள் சாதனைகளை எண்ணில் வடிப்பது. உதாரணமாக உங்களது யோசனையால் 5000 ஆர்டர்கள் அதிகமாகப் பெற முடிந்தது என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுச் சொன்னால் அது நிர்வாகத்தினரைக் கவர வழியுண்டு- வெறும் எழுத்துக்களாலேயே விண்ணப்பத்தை நிரப்புவதைவிட எண்களில் சாதனைகளைப் பட்டியலிட்டுக் கூறினால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.

வேலைக்கு வேண்டிய தகுதிகள் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை ஒரு முறைக்குப் பல முறை படியுங்கள். இது அந்தப் பணிக்குத் தகுந்தபடி உங்கள் தகுதிகளைக் குறிப்பிட வசதியாய் இருக்கும்


Last edited by ஹாசிம் on Thu Jun 03, 2010 1:28 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 1:28 pm

வேலையில் நீடிப்பாரா?

நிறுவனத்திற்கு எழும் அடுத்த கேள்வி இவரை வேலைக்கு அமர்த்தினால் உடனே வேலையை விடாமல் நீடிப்பரா..?

வேலைக்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பது நிறுவனத்தைப் பொறுத்தவரை நீண்ட அதிகச் செலவு பிடிக்கும் ஒரு கஷ்டமான விஷயம். அப்படி அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுப்போவதை நிர்வாகம் விரும்பாது.

எனவே உங்கள் விண்ணப்பத்தைப் படிக்கும்போது ஏதாவது வேலையில் நிலையாக இருந்திருக்கிறாரா? அல்லது அடிக்கடி வேலை மாறுபவரா என்பதையும் பார்ப்பார்கள்..

மேலும் நீங்கள் உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவரா என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் பார்க்கும் வேலையில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க சான்று இருந்தால் அதைக் கட்டாயம் இணையுங்கள்.

அடுத்தது விண்ணப்பம் அனுப்புபவர் எடுத்த காரியத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவரா என்று அறிய விரும்புவார்கள். நீங்கள் யாரிடமாவது ஒரு பொருளை அது பற்றிய விவரங்களை மட்டும் சொல்லி விற்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாங்குபவர் நிச்சயமாக நீங்கள் சொல்லும் விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வாங்கமாட்டார். அது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவும் ஆசைப்படுவார்.

அது போலத்தான் உங்களை பணியில் அமர்த்துபவர்களும் நீங்கள் அனுப்பும் CV.யின் சில பக்கங்களை வைத்துத்தான் நீங்கள் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பீர்களா., இதற்கான தகுதிகள் முழுமையும் உங்களிடம் இருக்கிறதா.., நினைத்ததை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறதா.., என்பதைத் தீர்மானிப்பார்கள். அதனால் உங்கள் CV தவறில்லாமலும் படிக்கும்போதே நன்றாக விளங்கும்படியும் இருக்க வேண்டும்.

பணியமர்த்துபவர்க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனுபவத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர் உங்களை நேரில் கூப்பிட முடியாது. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இரு முறை உங்கள் விண்ணப்பத்தைச் சரி பாருங்கள். நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் விண்ணப்பம் மனதில் பதியும்படி இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்று அறிந்து கொள்ளுங்கள்.

நிர்வாகத்தினர் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வேண்டுமானால் நிச்சயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அனுப்பும் CV கூட்டத்தோடு கூட்டமாக 'கோவிந்தா' ஆகாமலிருக்க கவனமாக இருங்கள்.


நேசமுடன் ஹாசிம்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 1:46 pm

:idea:


நேசமுடன் ஹாசிம்
வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 1:50 pm

பயனுள்ள தகவல் ஹசீம் நன்றி தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க Empty Re: வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum