ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தா பற்றிய விளக்கம்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 6:49 pm

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் இத்தாஇருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் இத்தாகுறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.


இத்தா” – பொருள்:


அத்தஎன்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;
எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும்.
(2:185)




இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்குஇத்ததுன்என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் இத்தாஎன்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 6:54 pm

இத்தாவின் கால அளவு:

ஒரு பெண் எதற்காக இத்தா இருக்கிறாள்? எந்த நிலையில் இருக்கின்றாள்? பெண்ணின் நிலை என்ன? என்ற அடிப்படையில் பெண்ணின் இத்தாக் காலம் மாறுபடும். இதனைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.


(1) கர்ப்பிணிப் பெண்:




இத்தா இருக்கும் பெண் கர்ப்பிணியாயின் அவள் குழந்தை யைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கணவன் தலாக்விட்டதற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி அல்லது கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி இதில் விதிவிலக்கில்லை.
ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன் மரணிக்கின்றான். கணவன் மரணித்து ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு மணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது ஓரிரு நிமிடங்களின் பின்னரோ அவள் குழந்தையைப் பெற்று விட்டால் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 6:55 pm

இதே போன்று ஒரு பெண் கர்ப்பமுறும் போது கணவன் மரணிக்கின்றான். அவள் அதன் பின் 9 மாதங்கள் தாண்டிய பின்னர்தான் குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்றாலும் அவள் அதுவரை இத்தா இருந்தேயாக வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;

கர்ப்பிணிகளின் (இத்தாக்)காலம் அவர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுப் பிரசவிக்கும் வரையிலாகும்..” (65:3)

இங்கே அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வார்த்தை அவர்கள் பெற்ற குழந்தை உயிருடன் பிறந்தாலும் அல்லது இறந்து பிறந்தாலும், நிறைவாகப் பிறந்தாலும் அல்லது குறைப்பிரசவமாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் என்பதை உணர்த்துமுகமாக உள்ளது.

ஸபீஆதுல் அஸ்லமீ என்ற பெண்மணி ஸஃத் பின் கவ்லாவின் மனைவியாவார். இவர் பத்ரில் பங்குகொண்ட ஸஹாபியாவார். இவர் ஹஜ்ஜதுல் விதாவில் மரணமானார். அப்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இவர் மரணித்ததும் அவர்கள் பிரசவித்தார்கள். இந்தப் பெண்மணி தனது பிரசவத்தீட்டு முடிந்ததும் திருமணம் பேசுவோர் தன்னைத் திருமணம் பேசுவதற்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்கள். அப்போது அபுஸ் ஸனாபில் என்ற நபித்தோழர் இவர்களைப் பார்த்து உன்னை நீ அலங்கரித்திருக்கக் காண்கின்றேனே! நீ திருமணம் செய்ய விரும்புகின்றாயா?” எனக் கேட்ட அவர், “நீ 4 மாதங்கள் – 10 நாள் கழியும் வரை திருமணம் செய்ய முடியாது!எனக் கூறினார்.

இவர் அப்படிக் கூறியதன் பின், நடந்ததை ஸபீஆ(ரலி) அவர்கள் கூறும் போது;

நான் எனது ஆடைகளை உடுத்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்ட போது நீ பிரசவித்த போதே உனக்குத் திருமணம் ஆகுமாகி விட்டது!என்று கூறியதோடு, “நீ விரும்பினால் திருமணம் செய்துகொள்!என எனக்கு ஏவினார்கள்என்று கூறுகின்றார்கள்.

(
புகாரி 5318, 5319, முஸ்லிம் 1485, திர்மிதி, நஸஈ, அஹ்மத்)
எனவே, கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றதும் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 6:55 pm

(2) கர்ப்பிணி அல்லாத கணவன் மரணித்த பெண்களின் இத்தா:

கணவன்
மரணித்த பெண்கள் கர்ப்பிணிகள் அல்ல என்றால் 4 மாதங்களும், 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் பிறைக் கணக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். ஆங்கிலக் கணக்கின்படி பார்க்கக் கூடாது. ஆங்கில மாதத்தில் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியில் முடிகின்றது. பிறைக் கணக்கின்படி மாதம் 28 இல் முடியவே முடியாது. ஆங்கிலக் கணக்கில் பல மாதங்கள் 31 ஆம் திகதியில் முடிவடைகின்றன. பிறைக் கணக்கில் மாதம் 29 அல்லது 30 இல் முடிவடையும். 31 ஆம் நாள் என்பது பிறைக் கணக்கில் வரவே வராது. எனவே 4 மாதம் – 10 நாள் என்பது பிறைமாதக் கணக்கின்படி பார்க்கப்பட வேண்டும்.

கணவன் மரணித்த பெண்கள், கணவனுடன் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி! நீண்ட நாட்களாக ஈடுபடாவிட்டாலும் சரி! இத்தாவை இருந்தேயாக வேண்டும். 4 வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்துகொண்டிருந்த கணவர் அங்கேயே மரணித்து விடுகின்றார். இவர் தனது மனைவியுடன் நீண்டகாலம் இல்லறத்தில் ஈடுபடவில்லை என்றாலும் இறந்த கணவனுக்காகத் தனது துக்கத்தை வெளியிடு முகமாகவும், “இத்தாஎன்ற வணக்கத்தை நிறைவேற்று முகமாகவும் அந்தப் பெண் 4 மாதம் – 10 நாள் இத்தா இருந்தேயாக வேண்டும்.

திருமண உடன்படிக்கை நிறைவேறிக் கணவன், மனைவியைச் சந்திப்பதற்குள் கணவன் மரணித்து விட்டாலும் திருமண ஒப்பந்தம் நிறைவேறி விட்ட காரணத்தால் அந்தப் பெண்ணும் 4 மாதங்கள் 10 நாட்கள் மரணத்திற்கான இத்தா இருந்தாக வேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by kalaimoon70 Sat May 15, 2010 6:57 pm

இத்தா பற்றிய விளக்கம் 678642 இத்தா பற்றிய விளக்கம் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by ரமீஸ் Sat May 15, 2010 7:01 pm

அருமையான விளக்கம் ரொம்ப நன்றி நண்பா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 8:09 pm

இந்த இத்தாக் குறித்துக் குர்ஆன் பேசும் போது;


 


உங்களில் எவரேனும் மனைவியர்களை விட்ட நிலையில் மரணித்து விட்டால், அவர்கள் தமக்காக நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (இத்தாவழிபாட்டில்) காத்திருக்க வேண்டும். அவர்கள் தமது காத்திருக்கும் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் தமது விடயத்தில் தாமாக நல்ல முறையில் அவர்கள் நடந்துகொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.” (2:234)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 8:10 pm

இத்தாவுக்கான தனியான சட்டங்கள்:


கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தா துக்கம் கலந்த இத்தாவாகும். தலாக் விடப்பட்ட பெண் மேற்கொள்ளும் இத்தாவுக்கும், இதற்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

(1) திருமணம் பேசுதல்:
பொதுவாக எந்தப் பெண்ணும் இத்தாஇருக்கும் போது திருமணம் பேசலாகாது. இது தலாக்”, மரணம் இரண்டு இத்தாக்களுக்கும் பொருத்தமானதாகும். தலாக்விடப்பட்ட பெண்ணைப் பொருத்தவரையில் அவள் இத்தாவில் இருக்கும் போதும் தலாக்விட்ட கணவனின் மனைவி என்ற அந்தஸ்த்திலேயே இருக்கின்றாள். எனவே அவளிடம் திருமணம் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசமுடியாது. இதேவேளை, கணவன் மரணித்ததற்காக இத்தாஇருக்கும் பெண்ணிடம் நேரடியாகத் திருமணம் பேசுவது தடுக்கப்பட்டதாகும். எனினும் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டும் விதமாக மறைமுகமான வார்த்தைகள் மூலம் திருமணம் செய்யும் உணர்வை வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 8:11 pm

பின்வரும் வசனம் இது குறித்துத் தெளிவாகப் பேசுகின்றது;

“(இத்தாவில் இருக்கும் பெண்களிடம்) நீங்கள் திருமணஞ் செய்துகொள்ளும் விருப்பத்தை மறைமுகமாய்த் தெரிவிப்பதிலோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். (திருமணம் பற்றி) நல்ல வார்த்தைகளை நீங்கள் கூறுவதைத் தவிர இரகசியமாக அவர்களிடம் வாக்குறுதி அளிக்காதீர்கள்! (இத்தாவுடைய) காலக்கெடு, அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தைத் தீர்மானிக்காதீர்கள்! நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகிப்புத் தன்மைமிக்கவனுமாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:235)

(2) கணவன் இறந்ததற்காக இத்தாஇருக்கும் பெண்கள்
அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கவர்ச்சியான சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிவது, வாசனை-எண்ணைத் திரவியங்கள் பாவிப்பது, கண்ணுக்குச் சுர்மா இடுவது, மருதானி பூசுவது, நகைகள் அணிவது அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

கணவனின் மரணத்தைத் தவிர வேறு எவரின் மரணத்திற்காகவும் 3 நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவது எமக்குத் தடுக்கப்பட்டுள்ளது. கணவனுக்காக 4 மாதங்களும், 10 நாட்களும் அவள் துக்கம் அனுஷ்டிப்பாள். அவ்வேளையில் நாம் கண்ணுக்குச் சுர்மா இடலாகாது; வாசனை பூசலாகாது. நெய்வதற்கு முன்னர் சாயல் இடப்படாத வர்ணம் தீட்டப்பட்ட ஆடைகளை அணியலாகாது..என உம்மு அதிய்பா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(
புகாரி 5341, 5342, 5343)

ஒரு பெண்மணி தனது மகளின் கணவன் மரணித்து விட்டதாகவும், இத்தாவில் இருக்கும் தனது மகளுக்குக் கண்ணில் நோவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குச் சுர்மா இடலாமா? எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் வேண்டாம்!என மறுத்தார்கள்.
(
புகாரி 5336, 5337, முஸ்லிம்)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by சபீர் Sat May 15, 2010 8:12 pm

எனவே, மரணத்திற்காக இத்தாஇருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்த இத்தாகுறித்து அதிக மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தன.
- வயது போன பெண்கள் 40 நாட்கள் இத்தாஇருந்தால் போதும்.
- அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.
- ஆண்பிள்ளைகள்-சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ, எவருடனும் பேசவோ கூடாது.
- கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஆண்பிள்ளை இருக்கலாம் என்பதால் கர்ப்பிணிகளும் அவர்களைப் பார்க்கக் கூடாது.

என ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் இருந்தன. இவை இன்று மங்கி-மறைந்து விட்டன. இருப்பினும் இவர்கள் தேவைகளுக்காக வெளியில் செல்வது குறித்து மக்கள் மத்தியில் இன்னும் ஐயங்கள் உள்ளன.

தலாக்விடப்பட்ட பெண்ணைப் பொருத்த வரையில் கணவனின் இல்லத்தில்தான் இத்தாஇருப்பாள். கணவன் மரணித்த பெண் இத்தாஇருக்கும் போதும் நிர்ப்பந்தம் ஏதும் இல்லாவிட்டால் கணவனின் இல்லத்தில்தான் இத்தாஇருக்க வேண்டும். தலாக்விடப்பட்ட பெண் கணவனின் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாது. அப்படிச் செல்வது கணவன்-மனைவிக்கிடையே விரிசலை விரிவாக்குவதுடன் இணக்கப்பாட்டுக்கான வாயில்களையும் இது அடைத்து விடும். கணவனின் மரணத்திற்காக இத்தாஇருக்கும் பெண்ணைப் பொருத்தவரையில் தேவையிருந்தால் பகலில் வெளியில் செல்ல அனுமதியுண்டு. அத்தியாவசியமோ, நிர்ப்பந்த நிலையோ இருந்தாலேயன்றி இரவில் வெளியே செல்லக் கூடாது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இத்தா பற்றிய விளக்கம் Empty Re: இத்தா பற்றிய விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum