ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

Go down

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம் Empty உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

Post by azeezm Sat May 15, 2010 12:34 pm

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்!

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது?’ எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இந்த
நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார்’ என்று கூறினார்கள்.” நூல்: முஸ்லீம் 4640.]

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், ‘நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?’ என்று நாம் சொன்னால், ‘அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு!’ என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை
பார்க்கிறோம்.


நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.” (நூல்: புகாரி, எண் 6237)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்’ என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் உறவின் இலக்கணம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்
வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது? என வினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லீம் 4640.)


மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1.
செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!

நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி
பாரீர்! ”தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.” (நூல்: புகாரி, எண் 5985)


உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசு!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.

நான் என் (கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள
அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும்
என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது
ஸதாகாவாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக்
கூறினேன்.

அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் ரளியல்லாஹு
அன்ஹு, ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.
(நூல்: புகாரி, எண் 1466)


இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!

இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.” (நூல்: அபூதாவூத்)

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும். ”ஒரு
மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள்” என வினவ, அதற்கு நபியவர்கள், *அல்லாஹ்வை வனங்கு. அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு. உறவினரை சேர்த்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.” (நூல்: புகாரி, எண் 5984)


ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது
‘உறவு’ பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!




நன்றி:- நீடுர் இன்போ
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum