ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 5:56 pm

என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்) நோயின் அடிப்படை



என்புத்தேய்வு (ஒஸ்டியோ பொரோஸிஸ்)



இது என்பின் திணிவு குறைதல், என்பின் நுண்ணிய கட்டமைப்பு சிதைதல், என்பு பலவீனமடைதல், அதிக என்பு முறிவு ஆபத்து ஆகியவற்றை உள்ளடக்கும் நோயாகும். இதன் போது என்பில் கனியுப்புக்கள் சரியான அளவில் உள்ள போதும் என்பானது அளவு, தரம், கட்டமைப்பு, உறுதிப்பாடு ஆகியவர்றில் சிதைவைக் காட்டுகிறது. இந்த நோயானது சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 5:57 pm

நோயின் அடிப்படை



30 வயதின் பின்னர் என்பின் திணிவானது குறையத் தொடங்கும். இது ஆண்களில் நிகழும். பெண்களில் மாதவிடாய் நிறுத்தப்பட்ட பின்னர் என்பின் திணிவானது குறையத்தொடங்கும். மரபணுக்களும் இதன் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும். இதன் போது கொலாஜன், விற்றமின் D வாங்கி, ஈஸ்திரஜன் வாங்கி போன்றவற்றுக்கு பொறுப்பான மரபணுக்களின் மாற்றங்களாலும் இது ஏற்படலாம். போசணைக் காரணிகள், இலிங்க ஹார்மோன் மட்டங்கள், உடற் செயற்பாடுகள் ஆகியன காரணமாக அடையப்படும் என்பின் உச்சத் திணிவானது பாதிக்கப்படும்.



இந்த நோயை உருவாக்கும் ஆபத்துக் காரணிகள் பல உள்ளன. இவற்றுள் மாற்றமுடியாத காரணிகளுள் பெண்பால், இனம், அதிகரிக்கும் வயது, என்பு முறிவு, பரம்பரை ஆகியன அடங்கும். மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகளுள் இலிங்க ஹர்மோன் குறைபாடு, ஸ்டீரொயிட் சிகிச்சை, முன்பு இருந்த என்பு முறிவு, புகைத்தல், உடற்பயிற்சியின்மை, அதிக மதுபானம், விற்றமின் டி, கல்சியம் குறைபாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.



அதிக பராதைரொயிட் ஹார்மோன் சுரப்பு, தைரொயிட் சுரப்பு அதிகரிப்பு, குடலின் அழற்சி, மூட்டு வாதம், நீண்டகால ஈரல் பாதிப்பு, சிறுநீரக நோய், ஆகியனவும் இது உருவாகும் ஆபத்தை அதிகரிக்கும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 5:59 pm

என்புத்தேய்வு நோய் அறிகுறிகள்



ஒஸ்டியோ பொரோஸிஸ் நோய் அறிகுறிகள்



சுற்றாடல் காரணிகளுள் குறைந்தளவு ஒளி, சமச்சீரற்ற தரை, நரம்பு, தசையின் நோய்கள், இருதய நோய், மருந்துகள் ஆகியன வயதானோரில் என்பு முறியும் வாய்ப்பை அதிகரிக்கும்.



ஈஸ்திரஜன் ஹார்மோன் குறைவதனால் என்பை உறிஞ்சி அகற்றும் கலங்களின் அழிவு வீதம் குறைகிறது. இதனால் அதிகளவு என்பு உறிஞ்சப்படும். இது என்பின் உருவாக்க வீதத்தை விட அதிக வேகமாக நிகழும். இதே மாற்றம் அதிக பராதைரொயிட், தைரொயிட் ஹார்மோன் சுரப்பாலும் ஏற்படும். வயதானோரில் என்பின் உருவாக்க குறைவானது என்பு உறிஞ்சலை விடக் குறையும். ஸ்டீரொயிட் மருந்துகள் ஆரம்பத்தில் என்பின் உருவாக்கத்தை அதிகரித்தாலும் நீண்ட காலப் பாவனையுடன் இது குறைவடையும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:00 pm

நோய் அறிகுறிகள்



என்பு முறிவு மட்டுமே ஒஸ்டியோ பொரோஸிஸ் நோயில் ஏற்படும் அறிகுறியாகும். திடீரென ஆரம்பிக்கும் தீவிரமான முள்ளந்தண்டு வலியானது 6 வாரங்களில் குறைதலானது முள்ளந்தண்டின் முறிவை சுட்டிக்காட்டும். எனினும் முன்றில் ஒரு வீத முள்ளந்தண்டு முறிவுகளே அறிகுறியை ஏற்படுத்தும்.



வலி, கூன் விழுதல், உயரம் குறைதல், வயிறானது முன்னால் தள்ளப்படல் போன்றனவும் ஏற்படலாம். கைகளை ஊன்றிக் கொண்டு விழுவதனால் கையின் என்பின் முறிவு பொதுவாக நிகழும். அத்துடன் வயதானோரில் பக்கவாட்டில் விழுபவர்களில் தொடை என்பின் கழுத்தானது முறியும். எனினும் புற்றுநோய் போன்ற என்பு முறிவை ஏற்படுத்தும் ஏனைய காரணிகள் இல்லை என உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.



புதிய முள்ளந்தண்டு முறிவுகளுக்கு 1-2 வாரங்கள் ஓய்வு வழங்கப்படும். அத்துடன் சிறந்த வலி நிவாரணியும் வழங்கப்பட வேண்டும். ஏனைய முறிவுகள் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கல்சிற்றோனின், பலிண்டோரோனேற், டையசிபாம் ஆகியன வலி நிவாரண மருந்துகளாக பயன்படும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:01 pm

என்புத்தேய்வு (ஒஸ்டியோபொரோஸிஸ்) பரிசோதனைகள்



என்பு முறிவானது சந்தேகிக்கப்படின் எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கப்படும். இது பழைய, புதிய முறிவுகளை காட்டலாம். இது எந்த மாற்றத்தையும் காட்டாவிடில் என்பின் விசேட சமதானிப் பரிசோதனை மூலம் என்பின் தடிப்பு புற்றுநோய் இன்மை ஆகியன உறுதிப்படுத்தப்படலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:04 pm

என்பின் அடர்த்தி


 


DXA ஸ்கான் ஆனது இதற்குப் பயன்படும். இது சிகிச்சை வழங்குவதற்கான தேவையையும் உறுதிப்படுத்தும். இவற்றுடன் நோயாளிகளில் ஏனைய நோய்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:06 pm

நோய்த்தடுப்பும் சிகிச்சையும்



முதலில் இதற்கு இட்டுச்செல்லும் வாழ்க்கை முறையின் அம்சங்கள் கண்டறியப்படல் வேண்டும். உணவில் ஆகக் குறைந்தது 1 கிராம் கல்சியம் நாளாந்தம் உண்ண வேண்டும். மாதவிடாய் ஏற்பட்டு நிறுத்தப்பட்ட பின்னை 1500 மி.கி கல்சியம் பெண்களால் பயன்படுத்தப்படல் வேண்டும்.



உடற்பயிற்சியானது ஒரு வாரத்தில் ஆகக் குறைந்தது 3 நாட்கள் மேற்கொள்ளப்படல் என்பிற்கு நன்மை அளிக்கும். புகைப்பிடித்தலானது நிறுத்தப்படல் முக்கியம். இது என்பின் அழிவை அதிகரிப்பதுடன், ஈஸ்திரஜன் சிகிச்சையால் என்பிற்கு கிடைக்கும் நன்மையையும் இல்லாமல் செய்கிறது. இவற்றுடன் மிக முக்கியமாக விழுவதைத் தடுக்க வேண்டும். இதன் போது வாழும் சூழலின் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படுவதுடன் ஊன்றுகோல்கள் போன்றனவும் வயதானோருக்கு வழங்கப்படலாம்.



6 மாத காலத்திற்கு மேல் ஸ்டீரொயிட் மருந்து பயன்படுத்துவோரில் ஆபத்துக் காரணிகள் அளவிடப்பட்டு இதனை தடுப்பதற்கான பிஸ்பொஸ்போனேற் மருந்தானது வழங்கப்பட வேண்டும்.



பிஸ்போனேற்றுக்கள் சாதாரண என்பில் காணப்படும் பைரோபொஸ்பேற்றுக்களின் கட்டமைப்பை ஒத்தவை. இவை இடுப்பு மற்றும் முள்ளந்தண்டில் என்பின் திணிவை அதிகரிப்பதுடன் இந்த இடங்களில் ஏற்படும் என்பு முறிவுகளின் அளவையும் குறைக்கும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:08 pm

ஒஸ்டியோபொரோஸிஸ் சிகிச்சை



ஹார்மோன்களை மீள வழங்கும் சிகிச்சை



இது என்பின் திணிவை அதிகரிப்பதுடன் என்பின் அழிவைத்தடுத்து, முள்ளந்தண்டு, இடுப்பு, முன்கை, ஆகியவற்றில் என்பு முறிவு ஏற்படும் ஆபத்தையும் குறைக்கின்றன. பெண்களில் மாதவிடாய் நின்ற பின் ஹார்ன்மோன்களால் மார்பகம், கருப்பை, ஆகியவற்றில் புற்றுநோய், நாளங்களில் குருதி உறைதல் ஆகியவற்றை ஏற்படுத்துவதால் இவை கவனமாக தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.



ரலொக்சிபன் மருந்தானது ஒரு குறிப்பிட்ட ஈஸ்திரஜன் வாங்கியை மாத்திரம் ஊக்குவிப்பதனால் இது கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தாது. எனினும் என்பிலுள்ள ஈஸ்திரஜன் வாங்கிகளைத் தூண்டுவதால் என்பின் உருவாக்கத்தை கூட்டும். இது பெண்களில் முள்ளந்தண்டு, இடுப்பில் என்பின் தேய்வைக் குறைக்கும். அத்துடன் முதுகில் ஏற்படும் என்பு முறிவின் ஆபத்தைக் குறைக்கும். அத்துடன் இது மார்பக புற்றுநோய் உருவாகும் ஆபத்தையும் 90% இனால் குறைக்கின்றது.



கால்களின் தசைகள் இறுக்குதல், நாலங்களினுள் குருதி கட்டிபடுதல் ஆகியன இந்த மருந்துகளுடனும் ஏற்படலாம்.



ஆண் ஹார்மோன்கள் இலிங்க உறுப்புச் செயற்பாட்டுக் குறைவுள்ள ஆண்களுக்கு வழங்கப்படலாம். வயதானோருக்கு விற்றமின் டி, கல்சியம் ஆகிய இரண்டும் இணைத்து வழங்கப்படல் வேண்டும்.



இவற்றை விட கல்சிட்ரையோல் ஆனது என்பின் திணிவை அதிகரிப்பதுடன் முறிவுகளையும் குறைக்கும். கல்சிற்றோனின் ஹார்மோன் முள்ளந்தண்டு முறிவை குறைக்கும். புளோரைட்டானது என்பின் அடர்த்தியைக் கூட்டும். எனினும் புளோரைட் சிகிச்சையின் பின்னர் உருவாகும் என்பானது தரத்தில் குறைந்ததாக இருப்பதனால் இது தற்போது வழங்கப்படுவதில்லை.



பராதைரொயிட் ஹார்மோனின் சிகிச்சை வழங்க உத்தேசிக்கப்பட்டு வருகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:18 pm

பஜெட் நோய் (Paget disease)



இது என்புகளைப் பாதிக்கின்ற ஒரு நோயாகும். இதன்போது என்புகள் விரிவடைந்து விகாரமான உருவத்தைப் பெறும். இந்நோயானது என்பில் அதிகளவு என்புச்சிதைவை உருவாக்கி அதேவேளை அதிகளவு என்பு உருவாக்கத்தையும் ஏற்படுத்தும். இதனால் என்பானது பலவீனம் அடைவதுடன் என்பில் வலி, மூட்டுவாதம், என்பு விகாரம், என்பு முறிவுகள் ஆகியன ஏற்படும்.



இந்நோயானது பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டோரிலேயே அறியப்படும். பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயானது குடும்பங்களில் பலரைப் பாதிக்கலாம். இவர்களில் நோயானது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சையானது ஆரம்பிக்கப்படல் வேண்டும். இதனால் இக்குடும்ப அங்கத்தவர்களில் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அல்கலைன் பொஸ்பரேஸ் நொதியமானது பரிசோதிக்கப்பட வேண்டும். இது 2-3 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நொதியத்தின் அளவானது சாதாரண மட்டத்தை விட அதிகமாக காணப்படின் ஏனைய என்பு ஸ்கான், எக்ஸ் கதிர்ப்படம் ஆகியன தேவைப்படும்.



இந்நோயானது மெதுவான வைரஸ்நோய்த் தொற்றால் உருவாக்கப்படலாம். இந்த நோய்த்தொற்றானது குனங்குறிகள் தோன்றுவதற்கு பல வருடங்களுகு முன்னரே ஏற்படலாம். இவற்றுள் சின்னமுத்து போன்ற சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் வைரஸ்கள் குறிப்பிடப்படுகின்றன.



இந்நோயானது 3 கட்டங்களாக இடம்பெறும். இவற்றுள் அதிக என்பு அகத்துறிஞ்சல், என்பின் உருவாக்கமும் சிதைவும் ஒரேயடியாக நடத்தல், மற்றும் என்பு இழக்கப்படும் கட்டம் என்பனவாகும்.



இந்நோயானது பராமிக்ஸோ வைரஸ் எனப்படும் வைரஸின் தொற்றைத்தொடர்ந்து இடம்பெறுகிறது என நம்பபடுகிறது. அத்துடன் சிலவேளை விற்றமின் D க்கு எதிரான அதிக உடல் மாற்றத்தினாலும் இது ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Tue May 11, 2010 6:32 pm

பஜெட் நோயின் அறிகுறிகள்



பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்கு இந்நோயானது உள்ளது என்பதை அறிவதில்லை. ஏனெனில் இது மிகவும் சாதாரணமான குணங்குறிகளையே கொண்டுள்ளது. அத்துடன் பலரில் நோய்ச்சிக்கல்கள் உருவான பின்னரே நொயானது கண்டறியப்படுகிறது.



என்பு வலியே மிகவும் பொதுவான அறிகுறியாகும். இது நோயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்படும். இந்நோயானது மண்டையோட்டைப் பாதித்தால் தலைவலி, கேள்விப்புலன் குறைவு ஆகியன ஏற்படலாம். இதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி, நரம்புச்செயலிழப்பு, ஆகியனவும் ஏற்படலாம். அத்துடன் அதிக குருதியானது மண்டையோட்டுக்கு செல்வதனால் அதிக தூக்கம் போன்றனவும் ஏற்படலாம். இதன் காரணமாக சில வேளைகளில் பாரிசவாதமும் நேரலாம்.



நோய் முற்றிய நிலையில் கை கால்கள் வளைதல், முதுகு வளைதல் ஆகியன ஏற்படும். இடுப்பு அல்லது தொடை என்பானது பாதிக்கப்படும் போது இடுப்புவலியானது ஏற்படும். மூட்டுவாதமும் கசியிழைய சிதைவும் ஏற்படும். பற்கள் வாயினுள் விஸ்தரிப்பதுடன் பற்களின் மிளிரியின் தடிப்பானது அதிகரிக்கலாம்.



இந்நோயானது எக்ஸ் கதிர்ப்படங்களில் விசேடமான அறிகுறிகளைக் காட்டும். இதனால் உடலின் அனைத்து என்பினதும் எக்ஸ்கதிர்ப்படங்கள் தேவைப்படும்.



குருதியில் அல்கலைன் பொஸ்பேற் நொதியத்தின் அளவானது அதிகரிப்பதுடன் கல்சியம், பொஸ்பேற் ஆகியவற்றின் அளவுகள் சாதாரணமாக காணப்படும். இந்நோயின் தீவிரத்தை கண்டறிய என்பின் ஸ்கான் பரிசோதனைகள் தேவைப்படும். இந்த ஸ்கான் ஆனது இந்நோய் காணப்படுகிறது என்ர எண்ணத்தை தருமாயின் பாதிக்கப்பட்ட என்புகள் எக்ஸ்கதிர்ப்படம் எடுப்பதன் மூலம் கண்டறியப்பட வேண்டும்.



இந்நோயானது பாரியளவு என்புச்சிதைவு ஏற்படும் முன்னர் சிகிச்சை வழங்கப்படின் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. பொதுவாக இந்நோயானது மெதுவாகவே பரவுவதுடன் இந்நோய் சாதாரண என்புகளுக்குப் பரவாது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்பு நோய் பற்றிய முழுவிளக்கம் Empty Re: என்பு நோய் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum