ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாச செயலிழப்பு அறிமுகம்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:18 pm

சுவாச செயலிழப்பு அறிமுகம் (Respiratory failure)

சுவாசத் தொகுதியினால் ஒட்சிசனை உள்ளெடுத்தல் மற்றும் காபநீரொட்சைட்டினை வெளியேற்றல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது / சிரமப்படும் போது சுவாச செயலிழப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பானது இருவகைப்படும்


குருதி ஒட்சிசன் தாழ்வடைகின்ற சுவாச செயலிழப்பு (வகை 1 சுவாச செயலிழப்பு) :
இங்கு குருதியில் ஒட்சிசனின் சார்பழுத்தம் <60மிமி இரசமாகவும் (<8 கிலோ பஸ்கால்) காபநீரொட்சைட்டின் சார்பழுத்தம் சாதாரணமாகவோ, தாழ்வாகவோ இருக்கும்.

இது நுரையீரல் காற்றோட்ட – குருதிப் பாய்ச்சல் என்பவற்றுக்கிடையே பொருந்துகை இன்மையால் ஏற்படுகிறது:நுரையீரல் சிற்றறை காற்றோட்டம் தடைப்படல். (உ-ம்: நுரையீரல் இழையங்களுக்கிடையே திரவக்கசிவு (பல்மனறி இடிமா), நியூமோநியா, ஆஸ்துமா போன்றவை)
நாளக் குருதி நுரையீரலை அடையாது குறுஞ் சுற்றினூடாக பாய்தல். (உ-ம் இதயத்தில் அசாதாரணமாக காணப்படும் வலமிருந்து இடமான குருதிப் பாய்ச்சல்

சுவாச வீதம் மிக அதிகரித்தல். காபநீரொட்சைட் வெளியேற்றம் அதிகரித்தல் ஆனால் உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனின் அதிகரிக்கப்படுவதில்லை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:20 pm

குருதி காபநீரொட்சைட் அதிகரிக்கின்ற சுவாச செயலிழப்பு. (வகை 2 சுவாச செயலிழப்பு) :

இங்கு குருதியில் காபநீரொட்சைட்டின் சார்பழுத்தம் >50மிமி இரசம் (6.5கிலோ பஸ்கல்)ஆகும். இது போதிய சுவாச சிற்றறை காற்றோட்டம் இன்மையை எடுத்துக் காட்டுகிறது. எந்தவொரு நுரையீரல் காற்றோட்ட – குருதிப்பாய்ச்சல் பொருந்துகை இன்மையும் குருதியில் ஒட்சிசனின் சார்பழுத்தத்தை பாதிப்பதால் இங்கு குருதி ஒட்சிசன் மட்டம் குறைவடைதல் பொதுவானது.

சுவாச செயலிழப்பானது சடுதியாகவோ அல்லது நீண்ட நாட்பட்டோ எற்படக்கூடும். குறைவான குருதி ஒட்சிசன் மட்டம் நீண்ட நாட்பட்டதாக காணப்படும் போது செங்குழியங்களின் உற்பத்தி அதிகரிக்கின்றது, குருதி செங்குழிய எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வலது புற இதய செயலிழப்பு ஏற்படுகிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:20 pm

சுவாசசெயலிழப்பிற்கான காரணங்கள்

வகை 1 சுவாச செயலிழப்புக்குரிய பொதுவான காரணங்கள்.
நீண்டகால சுவாசக்குழாய் அடைப்பு நோய்
நியூமோநியா/ நுரையீரல் அழற்சி
நுரையீரல் இழையங்களுக்கிடையில் திரவக்கசிவு
நுரையீரல் அழற்சிக்குட்பட்டு நார்த்தன்மையடைதல்.
ஆஸ்துமா நோய்
நுரையீரலைச்சூழ வளி தேக்கமடைதல்/ நியூமோதொரக்ஸ்
நுரையீரல் சுற்றோட்டத்தில் இரத்த அழுத்தம் உயர்தல்.

பிறவியிலேயே ஏற்படும் வலமிருந்து இடமாக குருதி பாய்கின்ற இதய கட்டமைப்புக் குறைபாட்டு நோய்கள்.
புரொங்கெக்டேசிஸ் எனப்படும் சுவாசக் குழாய்கள் அசாதாரணமாக அதிகளவில் விரிவடையும் நோய்.
வளர்ந்தவர்களில் ஏற்படும் சுவாச சிரம நோய் (Adult respiratory distress syndrome)
முள்ளந்தண்டு அசாதாரணமாக வளைந்திருத்தல்
உடல் எடை அதிகரிப்பு.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:20 pm

வகை 2 சுவாச செயலிழப்பிற்குரிய காரணங்கள்


நீண்டகால சுவாசக் குழாய் அடைப்பு நோய்
தீவிர ஆஸ்துமா நோய்
மருந்துகளின் மிதமிஞ்சிய பாவனை, நஞ்சூட்டல்
மயஸ்தீனியா கிராவிஸ் எனும் நரம்பியல் நோய்
சுற்றயல் நரம்புகள் பாதிப்படைதல்
போலியோ நோய்த் தொற்று
தசை தொடர்பான நோய்கள்
தலை மற்றும் கழுத்து காயங்கள்
உடல் எடை அதிகரிப்பு
நுரையீரலினுள் திரவக்கசிவு
வளர்ந்தவர்களில் சுவாச சிரம நோய் (Adult respiratory distress syndrome)
மிக்ஸ்இடீமா எனும் தைரொயிட் சுரப்புக் குறைபாட்டு நோய்

சுவாச செயலிழப்பிற்குரிய காரணம் பொதுவாக நோய்ச் சரிதை மூலமும் நோயாளியை உடற் பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியப்படலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:21 pm

சுவாச செயலிழப்பின் நோய்க் குணங்குறிகள்

நோய்ச் சரிதையிலே இதற்குரிய அடிப்படைக் காரணம் தெரிவிக்கப்படலாம். உ-ம் இரவில் / படுக்கை நிலையில் ஏற்படும் சுவாச சிரமம் நுரையீரல்களினுள் திரவக்கசிவு ஏற்பட்டுள்ளமைக்கான சான்றாகும்.


சிந்தனைக் குழப்பம் மற்றும் சுயநினைவு குன்றுதல் என்பனவும் ஏற்படலாம்.
அடிப்படைக் காரணத்திற்கமைய குணங்குறிகள் அவதானில்க்கப்படலாம்.
நரம்பியல் குணங்குறிகளான அருட்டப்பட்ட தன்மை, மனப் பதற்ற நிலை, சிந்தனைக் குழப்பம், வலிப்பு, மற்றும் ஆழ்ந்த மயக்கம்/கோமா நிலை என்பன.


குருதி ஒட்சிசன் குறைவடைதல் மற்றும் அமிலத்தன்மை அதிகரிப்பு காரணமாக இதயத்துடிப்பு வீதம் உயர்தல், இதயத்துடிப்பு சந்தக் குழப்பங்கள் என்பன ஏற்படலாம்.
குருதி ஒட்சிசன் மட்டம் மிகக் குறைவடைவதனால் தோலில் நீல நிற மாற்றம் ஏற்படலாம்.
நீண்ட காலமாக குருதி ஒட்சிசன் மட்டம் தாழ்வாக காணப்படுவதன் காரணமாக செங்குழிய உருவாக்கம் அதிகரித்து குருதி செங்குழிய எண்ணிக்கை உயர்வடையும்.


கோபல்மனாலே : நுரையீரல் குருதிச்சுற்றோட்ட இரத்த அழுத்த உயர்வு ஏற்பட்டு, அதன் காரணமாக வலதுபுற இதய செயலிழப்பு தூண்டப்பட்டு ஈரல் வீக்கமடைவதுடன் உடலின் சுற்றயல் பகுதிகள் வீக்கமடைகின்றன (உ-ம் கணுக்கால் பகுதி).




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:23 pm

பரிசோதனைகள்


நாடிக் குருதி வாயுப் பரிசோதனை – சுவாச செயலிழப்பினை உறுதிப்படுத்துகிறது.
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்படம்
குருதிக்கலங்களின் எண்ணிக்கைப் பரிசோதனை – குருதிச்சோகை மேலும் உடலிற்கு ஒட்சிசன் வழங்கப்படுவதை பாதிக்கும், செங்குழிய எண்ணிக்கை உயர்வு நாட்பட்ட சுவாச செயலிழப்பினை குறிக்கும்.


சிறுநீரக மற்றும் ஈரல் தொழிற்பாடு
: இது சுவாச செயலிழப்பிற்குரிய காரணங்கள் பற்றியோ அல்லது அதன் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களை பற்றியோ அறிய உதவும். இவற்றின் செயலிழப்பு சுவாச செயலிழப்பை மேலும் தீவிரப்படுத்துவதுடன் ஏனைய உடல்ங்கங்களின் செயலிழப்பையும் ஏற்படுத்தலாம்.


தையிரொயிட் சுரப்பியின் செயற்பாட்டுப் பரிசொதனை
எகோகாடியோகிராம் எனும் இதயத்துகுரிய ஸ்கான் பரிசோதனை. இதய நோய் காரணமான சுவாச் செயலிழப்பாக இருகலாமென சந்தேகிக்கும் போது மேற்கொள்ளடும்.
சுவாச தொழிற்பாட்டுப் பரிசோதனை – இது நாட்பட்ட சுவாச செயலிழப்பினை பரிசோதிக்கப் பயன்படுகிறது.
ஈ.சீ.ஜீ எனும் இதயத்தின் மின்னியக்க செயற்பாட்டை பிரிசோதிக்கும் சோதனை – இது இதய நோய் காரணமான சுவாச செயலிழப்பினை கண்டறிவதுடன் தீவிர குருதி குளுக்கோஸ் மட்டம் குறைவடைவதன் காரணமான / அமிலத்தன்மை காரணமான இதய துடிப்பு சந்தக்குழப்பங்களையும் கண்டறிகிறது.


மேலும் இதயம் மற்றும் நுரையீரல் குருதிச்சுற்றோட்ட இரத்த அழுத்தங்களை நுண்ணிய குழாய்களை செலுத்தி நேரடியாக அளவிடும் பரிசோதனைகள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:25 pm

சுவாசசெயலிழப்பு சிகிச்சை முறைகள்


சடிதியான சுவாச செயலிழப்பு ஏற்படும் போது உடனடியான வைத்தியசாலை அனுமதியும் சிகிச்சையும் அவசியமாகும். அநேக நாட்பட்ட சுவாச செயலிழப்பினை உடைய நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும். இவர்களுக்கு ஒட்சிசன் மற்றும் சுவாச செயலிழப்பிற்குரிய அடிப்படைக் காரணிக்கான சிகிச்சை என்பன வழங்கப்படும்.

உடனடியான அவசர உயிர்காப்புச் சிகிச்சை அவசியப்படலாம்.
குருதி ஒட்சிசன் மட்டத்தினை சரிசெய்தல்: இழையங்களுக்கு போதுமான ஒட்சிசன் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பொதுவாக குருதி ஒட்சிசன் சார்பழுத்தம் 60மிமி இரசமாக அல்லது நாடிக் குருதியில் ஒட்சிசனின் நிரம்பல் >90% ஆகவும் பேணப்படும்.


நாட்பட்ட சுவாச செயலிழப்பை கொண்டுள்ளவர்களில் நீண்ட காலங்களுக்கு உயர் செறிவான ஒட்சிசனினை பயன்படுத்தும் போது அவதானமாக இருத்தல் அவசியம். காரணம் அவர்களின் சுவாசப்பைக் காற்றோட்ட செயற்பாடானது தாழ்வான குருதி ஒட்சிசனின் தூண்டலிலேயே தங்கியுள்ளது. குருதி ஒட்சிசன் மட்டம் மிக உயர்வடையும் போது சுவாச வீதம் மிகக் குறைவடைந்து குருதி காபநீரொட்சைட் ஆபத்தன அள்வுகளில் உயர்வடையும்.


குருதி காபநீரொட்சைட் உயர்தல் மற்றும் அமிலத்தன்மை உயர்தல். அடிப்படை காரணி திருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.

இயந்திரம் மூலமான செயற்கைச் சுவாசம் மூலம் குருதி ஒட்சிசன் உயர்த்தப்பட்டு காபநீரொட்சைட் குறைக்கப்படும். அத்துடன் இது சுவாசத் தசைகளுக்கு ஓய்வினை வழங்குகிறது. ஆயின் நாட்பட்ட சுவாச செயலிழப்பினை உடையவர்களை சுவாச இயந்திரத்திலிருந்து கழற்றுவது சிரமமகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:29 pm

சுவாச செயலிழப்பின் சிக்கல்கள்

நுரையீரல்: நுரையீரல் குருதிக் கலன்களில் குருதி உறைதல், நுரையீரல் நார்த்தன்மையடைதல்,மற்றும் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதன் காரணமான சிக்கல்கள்.
குருதிச்சுற்றோட்ட சிக்கல்கள் : வலது புற இதய செயலிழப்பு, இரத்த அழுத்தம் குறைதல், இதய சந்தக்குழப்பங்கள், இதய சுற்றுவிரி அழற்சி மற்றும் சடுதியான மாரடைப்பு.

உணவுக்கால்வாய் : குருதிப் பெருக்கு, இரைப்பை விரிவடைதல், குடல் அசைவுகல் குறைவடைதல், வயிற்றோட்டம், மற்றும் வயிற்றுக் குழியினுள் வளி தேக்கமடைதல். வயிற்ற்ப் புண்கள் இவர்களில் பொதுவானது.
குருதி செங்குழியங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
வைத்தியசாலைக் கிருமித்தொற்றுக்கள்.

உ-ம் நியூமோநியா, சிறுநீர்த்தொகுதி கிருமித் தொற்று, மற்றும் குழாய்களுடன் தொடர்புடைய கிருமித்தொற்று என்பன பொதுவானவை.
சிருநீரக: சடுதியான சிறுநீரக செயலிழப்பு, மற்றும் குருதி அயன்கள், அமில கார சமநிலை பாதிப்படைதல் என்பன தீவிர சுவாச செயலிழப்புட உடையவர்களில் பொதுவானது.


போசணை : போசணைக் குறைபாடு, மற்றும் உணவுக்கால்வாயூடாக அல்லது குருதியினூடாக போசணை வழங்குவதன் காரணமான சிக்கல்கள். மூக்கினூடாக இரைப்பையினுள் இடப்படும் குழாய் காரணமான சிக்கல்கள். உ-ம் வயிறு வீக்கமடைதல், வயிற்ரோட்டம் என்பன




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சபீர் Thu May 06, 2010 1:31 pm

நீண்டகால விளைவுகள்
சுவாசசெயலிழப்பு காரணமான இறப்பு வீதமானது அதன் அடிப்படை காரணத்திற்கேற்ப வேறுபடுகின்றது.
வளர்ந்தவர்களில் சுவாச சிரம நோய் (adult respiratory distress syndrome) காரணமான இறப்பு வீதமானது ஏறத்தாள 40% ஆகும்.
நீண்டகால சுவாசக்குழாய் அடைப்பு நோய் உடையவர்கள் மற்றும் சடுதியான சுவாச செயலிழப்பு உடையவர்களில் இறப்பு வீதமானது ஏறத்தாள 10% ஆகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by சிவா Thu May 06, 2010 1:55 pm

பயனுள்ள கட்டுரை சபீர்!

சுவாசத் தொகுதி பற்றி மேலும் அறிய:
http://www.eegarai.net/-f14/--t26848-10.htm


சுவாச செயலிழப்பு அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுவாச செயலிழப்பு அறிமுகம் Empty Re: சுவாச செயலிழப்பு அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum