ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

+3
ஹாசிம்
கலைவேந்தன்
சிவா
7 posters

Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by சிவா Thu Apr 22, 2010 10:24 am

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை'
(12)

என்ற வான்சிறப்புக் குறளில், துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. உணவு என்பது இதன் பொருள். துப்பார்க்கு - உண்பவருக்கு, துப்பாய - உண்பதற்குரியனவாகிய, துப்பு ஆக்கி - உணவுகளை உளவாக்கி. அது மட்டுமல்லாமல், அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவானதும் மழையேயாகும். அ·தாவது தண்ணீர்தான் பிற உணவுகளையும் விளைவித்துத் தருகிறது. தானும் உணவாகிறது. நீரின் இன்றியமையாமையை இங்ஙனம் விளக்குகிறது திருக்குறள். தமிழில் 'து' என்றாலே உண் என்று பொருள். நொ - நொந்து போ , கா - காப்பாற்று. இங்ஙனம் வரும் ஓரெழுத்தொரு மொழிகளில் 'து' வும் ஒன்று.

'துப்புக் கெட்டவன்' என்று ஒருவனைத் திட்டும் பொழுது, ஒருவேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியற்றவன் என அவனுடைய ஏழ்மையைக் குறிப்பிடுகிறோம். அதிலிருந்து, அவன் திமிராகப் பேசுவதைக் கண்டிப்பதற்காக 'மானங்கெட்டவன்' , 'சொரணை அற்றவன்' என்றெல்லாம் பொருள்படுமாறு, அச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

ஒருத்தியைப் பார்த்துத் 'தப்பிலி' எனத் திட்டுவதைப் பார்த்திருக்கலாம். 'துப்பிலி' என்பதுதான் அங்ஙனம் மருவி விட்டது. போக்கற்றவன், வக்கற்றவன் என்பன போல, 'துப்புக் கெட்டவன்', 'துப்பிலி' என்ற சொற்களும் எவ்வித வசதியும் வாய்ப்புமின்றி - உண்ண உணவு கூட இல்லாமல், மானமின்றி அலைபவரை - முயற்சியற்றவரைக் குறிக்கின்றன.

துப்பு - பொருள் வளர்ச்சி

*துப்பு - துணை, ஊன்றுகோல், வலிமை என்றெல்லாம் பொருள் வளர்ச்சி கண்டது. 'துன்பத்துள் துப்பாயார் நட்பு' (106) என்றால், துணையாக ஊன்றுகோல் போல உதவுபவர்களைக் குறிக்கிறது.

'து' என்ற அடிச்சொல்லிலிருந்துதான் இவ்வாறு பல சொற்கள் உருவாகியுள்ளன. துவ்வாதவர் - நுகர்வதற்கு எதுவும் இல்லாதவர்கள். துவ்வாமை - வறுமை, துவ்வான் - வலிமை இல்லாதவன், நுகர மாட்டாதவன் (சாப்பாட்டிற்கில்லாதவன்) . துய்ப்பு - நுகர்தல், அனுபவித்தல். து -உண். து - உணவு. அதிலிருந்தே துய், துய்ப்பு வந்தன. உண்ணல், நுகர்தல், அனுபவித்தல் எனப் பொருள் நீண்டது.

'துப்புத் துலக்குதல்' என்றால், ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் எனத் தொடங்கி, ஒரு கொலை அல்லது குற்றச்செயல் நடந்துவிட்டால் அது பற்றிய சூழலை, நடந்த விதத்தைச் சோதித்தறிதல் - ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்றாகியிருக்கிறது. 'துப்பறிதல்' உளவறிதலாகும்.

துப்பு, 'பவளம்' என்றும் பொருள்படுமிடம் உண்டு. துவர் - செந்நிறம், பவளம்.

எச்சிலைத் துப்புவதையும் கவனிக்கலாம். ஒன்றைக் கடித்துத் துப்புவது, எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புவது நமக்குக் கைவந்த பழக்கம். இவை அச் சொல்லுக்கமைந்த வேறு பொருள்கள்.

--------------------------------------------------------------------------------

*கோலார் தங்கவயல் மு. இராமராசு தம் தாயார் தம்மை 'ஒரு கணக்கு வகையாகப் போடத் துப்பில்லை' என்று திட்டியதை நினைவு கூர்ந்து துப்பு - அறிவு என்கிறார். 'வகை இல்லை, வலிமை - ஆற்றல் - திறமை இல்லை' என்றாகிறது இது.

துப்பு என்றால் அவர் 'குற்றம் எனவும் பொருளுண்டு என்பது, ஒரு குற்றச் செயலுக்கான சூழலை ஆராய்வதால் ஏற்படும் தொனிப் பொருளாகும்.

தமிழறிஞர் தமிழண்ணல்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by கலைவேந்தன் Thu Apr 22, 2010 11:09 am

அருமையான துப்பு துலக்கல் சிவா,,, [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by ஹாசிம் Thu Apr 22, 2010 12:40 pm

கலை wrote:அருமையான துப்பு துலக்கல் சிவா,,, [You must be registered and logged in to see this image.]
நன்றி தல


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by subsekar Mon May 17, 2010 9:58 pm

ஓ! துப்பு என்ற வார்த்தையில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா!

மிக்க நன்றி
subsekar
subsekar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by Aathira Mon May 31, 2010 5:59 pm

தமிழ்ப்பசி உள்ளவர்களுக்கு அருமையான துப்பு இக்கட்டுரை.. நன்றிகள் ஐயா தமிழன்னல் அவர்களுக்கு தம்பி சிவாவுக்கும்.... நன்றி


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by srinihasan Mon May 31, 2010 6:23 pm

எங்கள் துப்பறியும் சிங்கம் சிவா... அண்ணன் வாழ்க... [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by kalaimoon70 Mon May 31, 2010 6:35 pm

துப்புக்கு இவ்வளவு அர்த்தமா ?
துப்பு துலக்காமலே விடை சொன்னமைக்கு நன்றி ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by ஹாசிம் Mon May 31, 2010 6:36 pm

kalaimoon70 wrote:துப்புக்கு இவ்வளவு அர்த்தமா ?
துப்பு துலக்காமலே விடை சொன்னமைக்கு நன்றி ...

தோழரே தாங்கள் வர்ரதும் தெரிவதில்லை செல்வதும் தெரிவதில்லை நலமாயிருக்கிறீர்களா


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது Empty Re: தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum