ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

2 posters

Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:35 pm

நம் சமுதாயத்தின் அவலத்தை அப்படியே கட்டுரையாக வரைந்துள்ளேன் சகோதர, சகோதரிகள் கட்டாயம் படித்து தங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!



பெற்றோரின் வருமானத்தில் நம் நிலை

பிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும் தந்தையின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டும் பற்களை இழித்துக் காட்டி பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டிருப்போம். இந்த பருவத்தில் நமக்கு பொருளாசையோ, பொன்னாசையோ, சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ளும் எண்ணமோ வருவதில்லை!



வளரும் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் பாடம் படிக்க வேண்டும் வீட்டுப்பாடம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தான் நமக்கு அதிகமாக வரும், ஏன்! ஒரு நோட்டு புத்தகம் வாங்குவதாக இருந்தாலும் தந்தையின் வருமானத்தை எதிர் நோக்கித்தான் இருப்போம், நம்முடைய பள்ளித் தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு கூட நமக்கு மாணவப் பருவத்தில் வழி இருக்காது இந்த பருவத்தில் குடும்ப சொத்தை அபகரிக்கும் எண்ணம் நம் மனதில் துளியளவும் வருவதில்லை!







குழந்தைபருவமும் குடும்ப பாசமும்

நாம் அனைவரும் குழந்தையாக இருக்கும்போது அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தை கொட்டி வாழ்ந்திருப்போம்!



குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:35 pm

· அப்பா 2 சாக்லெட் வாங்கிக்கொடுப்பார் ஆனால் நமக்கோ உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் வாயில் இருக்கும் சாக்லெட்டை பிடிங்கி சாப்பிடுவது சுகமாக இருக்கும்.



· சாக்லெட்டை பரிகொடுத்த சகோதரனோ அடிக்க ஓடி வருவான் நாமோ அன்புத் தாயிடம் சென்று ஒட்டிக் கொள்வோம் அருகே இருக்கும் குட்டிச் சகோதரிகளோ இவைகளைப் பார்த்து சிரித்துக்கொண்டு துள்ளிக்குதிக்கும்! குடும்பம் குதூகலமாக இருக்கும்!



· வீட்டில் தாய் மீன் சமைத்திருப்பாள், மீனை ருசித்துக் கொண்டிருக்கும் போது அதன் முள் நம் வாயில் சிக்கிக் கொள்ளும் உடனே தந்தை பற்களில் சிக்கி முள்ளை அழகாக வெளியே எடுத்துவிடுவார் அருகில் அமர்ந்திருக்கும் தாயோ முள் இல்லாத வண்ணம் மீனை வாயில் ஊட்டிவிடுவாள்.



· தாய் உணவு ஊட்டிவிடும்போது உங்கள் சகோதரனை பார்த்து ஹி! ஹி! என பழித்து சிரிப்பீர்கள், அவனோ உங்கள் முதுகை தட்டிவிட்டு தலையில் கொட்டு வைத்து ஓடி மகிழ்வான்.


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:36 pm

மேற்கண்ட குழந்தைப்பருவ அட்டகாசங்களின் போது பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்! இப்படிப்பட்ட சந்தோஷத்தை தேடிக்கொள்ளுங்கள்!







சுயமாக வருமானம் ஈட்டுமபோது நம் நிலை

வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் ஒரு சகோதரன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவான் அதே நேரத்தில் மற்ற சகோதரன் தந்தைக்கு உறுதுணையாக இருந்து சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவான் இந்த நிலையில் அண்ணன் தம்பி பாசத்தில் குறை தென்படாது! இதைக்கண்டு ரசித்த தந்தை உடனே தன் கால்மீது கால்வைத்து தன் மனைவியை நோக்கி நம் குடும்ப பாசத்தை போன்று வேறு எந்த குடும்பத்திலாவது இருக்குமா! என்று புதையல் கிடைத்துவிட்டது போன்று பேசிக்கொள்வார்கள்!


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:37 pm

சகோதர உறவில் விரிசல் ஆரம்பம்

சில குடும்பங்களில் மேல்படிப்பு படித்து கவுரவமான உத்தியோகத்தில் ஒரு சகோதரன் அமர்ந்துக்கொள்வான் உடனே தன்னலம் பார்க்க ஆரம்பிப்பான். குடும்பத்தை கவனிக்காமல் மாதசம்பளப் பணத்தை தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் சேமிக்க ஆரம்பிப்பான். தந்தையோ படிக்காத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் படித்தவனோ ஏன் அந்த அடிமுட்டாள் என்னைப் போன்று படிக்கவில்லை? என்று கேள்வி கேட்ட தந்தையை மடக்குவான் இதைக் கேள்விப்படும் படிக்காத சகோதரனோ அவன் படிக்க நான் கஷ்டப்பட்டேனே அவனிடம் இவ்வாறு ஏமாந்தது போனேனே! என கண்கலங்கி நிற்பான்!



சில குடும்பங்களில் மேல் படிப்பு படித்து வேலைகிடைக்காத நிலையில் படித்த சகோதரன் எதிர்காலத்தை எண்ணி கண்கலங்கி நிற்பான் ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தி சுயதொழிலில் இலாபம் கண்ட சகோதரனிடமோ வருமானம் தங்க காசுகளா கவும், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்களும் தன் பீரோ பெட்டியில் இருக்கும் குடும்பத்தில் யாரையும் நம்பமாட்டான் பீரோ சாவியும் தன்னிடமே வைத்துக்கொள்வான்! தந்தையோ படித்து வேலையில்லாத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் புது முதலாளியான சகோதரனோ பட்டம் படித்து வேலையில்லாத சகோதரன் நம் தொழிலுக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்று எண்ணி பட்டதாரிக்கு வேலை இல்லையாம்! எதற்காக படித்து கிழித்தானாம் என்று மற்றவர் முன் கிண்டல் அடித்து மனதை நோகடிப்பான். இதை பிறர் மூலம் கேள்விப்பட்ட வேலையில்லா பட்டதாரியோ என் சகோதரனே வேலை கொடுக்க மறுக்கிறான் என்று கண்கலங்கி நிற்பான்!



இரு குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரின் நிலையோ மிகவும் பரிதாபமாக காணப்படும் அவர்கள் வாயடைத்துப்போய் எந்த பிள்ளைக்கும் அறிவுரை கூற முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப் படுவார்கள்.


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:37 pm

திருமணமும் உறவில் விரிசலும்

சில குடும்பங்களில் அண்ணன் உழைக்கத் தெரியாத ஏழையாக இருப்பான் தம்பியோ தொழிலில் மாபெரும் திறமைசாலியாக இருப்பான் இப்படிப்பட்ட நிலையில் தம்பி தன் திருமணத்திற்கு முந்திக்கொள்வான் அண்ணனோ வருமையின் காரணமாக தன் திருமணத்தை தள்ளிப்போடுவான்! இறுதியாக தம்பியின் மகனை மார்பில் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு தன் நிலையை வெளியே வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் நீர் சொறிய சிரித்துக் கொண்டிருப்பான்!



சில குடும்பங்களில் தம்பி ஏழையாக இருப்பான் வசதியான அண்ணன் தன்னுடைய திருமணத்தை முடித்துக்கொண்டு தம்பியின் திருமணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்க மாட்டான். தம்பியோ தன் வருமைக்கு பயந்து ிருமணத்தை தள்ளிப்போடுவான்! இறுதியாக அண்ணனின் மகனை முதுகில் சுமந்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றித்திரிவான் தன் நிலை பற்றி பிறரிடம் வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீருடன் அலைவான்.



இரண்டு ஏழை சகோதரர்களின் நிலையும் அவர்களின் பெற்றோரின் நிலையும் மிகவும் பார்க்க பரிதாபமாக இருக்கும். இங்கு பெற்ற தாய் தன் ஏழை மகனின் நிலைகண்டு ஆறுதல் கூற வார்த்தையின்றி மனதிற்குள் அழுது துடித்துக் கொண்டிருப்பாள். அவளுக்க ஆறுதல் கூற நாதியிருக்காது நோய்தான் வரும்!


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:39 pm

சொத்து பிரிக்கும் போது நம் நிலை

பெற்றோர் வாயை கட்டி, வயிற்றை கட்டி தன் பிள்ளைகளுக்கு சொத்தாக நிலம் மற்றும் வீட்டை வைத்திருப்பார்கள். சொத்து பிரிக்கும் போது -



· சுயநலவாதியான சகோதரன் தனக்கு இலாபம் மிகுதியாக உள்ள சாலையின் முன்பக்க சொத்து வேண்டும் என்பான்



· பொதுநலவாதியான சகோதரனோ நான் தந்தையுடன் சேர்ந்து படிக்காமல் குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்தவன் எனக்குத்தான் அந்த நிலம் வேண்டும் என்பான்.





தந்தையும் தாயும் இதைக் காணத்தான் நாம் உயிர்வாழ்கிறோமா? என்று ஒரு மூலையில் அமர்ந்து அழுவார்கள் உடனே இளகிய மனம் கொண்டவன் எனக்கு அல்லாஹ் இருக்கிறான் என்று விட்டுக்கொடுப்பான் இறுதியாக வாதத் திறமை கொண்ட சுய நலவாதி இலாபம் தரும் பகுதியை தட்டிச் சென்றுவிடுவான்! இளகிய மனம் கொண்டவன் ஏமாந்து ஏழையாகிவிடுகிறான்.







வேடிக்கை நிரம்பிய சகோதர பாசம்

சில குடும்பங்களில் சகோதர பாசம் அளவுக்கதிகமாக இருக்கும் ஒருவன் தன்னைப் பற்றி சிந்திக்கவே மாட்டான் என் சகோதரன் சுகமாக வாழ்ந்தால் போதும்! எனக்கு அல்லாஹ் இருக்கான் ஆகையால் என்னைப் பற்றியோ, என் மனைவி, மக்கள் பற்றியோ எனக்கு சிறிதளவும் கவலை இல்லை என்பான்!



இவனது குடும்பம் உண்மையில் குறைந்த வருமானத்தில் அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் வருமையில் வாடும் ஆனாலும் கவுரவம் கருதி தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனிடம் சென்று தன் வருமை நிலையை பற்றி பேசக்கூட மாட்டான்! ஆனால் அந்த உடன்பிறந்த சகோதரனின் ஏழ்மை நிலையைக் கண்டும் ஒரு குருடனைப் போன்று பணக்கார சகோதரன் இருப்பான். யாராவது ஒரு நலம் விரும்பி பணக்கார சகோதரனிடம் முறையிட்டல் ஒருமுறை இவனுக்கு பணம் கொடுத்து உதவினால் அடிக்கடி தன்னை அணுகி தொல்லை கொடுப்பான் என்று வாய்கூசாமல் பதில் கூறுவான்!





பாசம் நிறைந்த ஏமாளி சகோதரனின் மனைவி மக்கள்

சொத்து பிரிக்கும் போது கூட பாசம் நிறைந்த சகோதரன் தன்னுடைய ஏழையான மனைவி மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வசதியான தன் சகோதரன் சுகமாக இருந்தால் போதும் என்று விட்டுக்கொடுப்பான். மனைவி இவனிடம் என் குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கின்றனர் உன் சகோதரனின் பிள்ளைகளோ சுகமாக இருக்கின்றனர் எனவே எவ்வாறு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் இலாபப் பகுதியை விட்டுக் கொடுப்பீர்கள் என்று வம்பு (அன்புச்) சண்டை பிடிப்பாள் ஆனால் இவனோ (பாசம் நிறைந்த சகோதரனோ) மனைவியை நோக்கி உன் வேலையைப் பார்! என் சகோதரன் தான் எனக்கு முக்கியம் அவனிடம சண்டையிட்டால் எனது சகோதர பாசம் போய்விடும் உன் வாயை மூடு உன் அப்பன் வீட்டிலிருந்து எதை கொண்டுவந்தாய் என்று கேள்வி கேட்டு தன் மனைவியை மடக்கிவிடுவான்!



உடன் பிறந்த சகோதரிகள் இருப்பார்கள் அவர்களில் நேர்மையானவர்களைத் தவிர மற்ற சகோதரிகள் ஏழை சகோதரனின் வீட்டை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் ஆனால் வசதிபடைத்த சகோதரன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்கள்! பாசம் நிறைந்த ஏழை சகோதரன் அப்போதுதான் தான் செய்த தவறை எண்ணிப் பார்ப்பன் தன்னால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதே யாரும் மதிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் காலம் அவனை முந்தியிருக்கும் வேதனையின் உச்ச கட்டத்திற்கு சென்று அவன் இதயம் வலிக்க ஆரம்பிக்கும் இறுதியாக பாசம் நிறைந்த ஏழை சகோதரன் தன் குழந்தைகளையும், அருமை மனைவியையும் ஒருநாள் அநாதையாக விட்டு மரணித்துவிடுவான்! உடன் பிறந்தவர்கள் உற்றார் உறவினர்கள் எலவு வீட்டிற்கு வந்து கத்தம்பாத்திஹா ஓதிவிட்டு சென்று விடுவார்கள்.

இறுதியாக மரணித்த சகோதரனின் குழந்தைகள் தலைதூக்க ஆரம்பிக்கும் வரை தினமும் சாப்பிட சிரமம் வாய்ந்த ரேஷன் கடை அரிசியைத்தான் நம்பி வாழ்வார்கள். மிதமிஞ்சிய சகோதர பாசம் காட்டி மரணித்த ஏழை சகோதரனின் ஏழைக் குழந்தைகள் தன் தகப்பனின் சகோதர சகோதரிகள் மீது வெறுப்பு கொண்டு அவர்களின் வாசல்படியைக்கூட மிதிக்கமாட்டார்கள் ஆனால் வசதிபடைத்தவர்களோ தங்கள் திருமண மற்றும் குடும்ப விஷேசங்களின் போது சமுதாயம் தவறாக எண்ணிவிடுமோ என்று பயந்து திருமண அல்லது விஷேசத்ததிற்கு முதல் நாள் பத்திரிக்கை வைத்து ஏழையின் வீட்டில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி விடுவார்கள்! (அல்லாஹ் காப்பற்றனும்)


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:39 pm

சிந்தித்துப்பாருங்கள்



· குழந்தைப் பருவத்தில் (பகுத்தரிவற்ற நிலையில்) சகோதரனின் வாயிலிருந்து சாக்லெட்- பறித்து சாப்பிட்ட போது இருந்த சுகம் வளர்ந்து பகுத்தரிவு பெற்ற பின் நீடிக்கிறதா? எங்கே போனது உங்கள் பாசம்!



· விளையாட்டுப் பருவத்தில் அண்ணனோ தம்பியோ அக்காளோ தங்கையோ சைக்கிள் ஓட்டும்போது பின்னால் அமர்ந்து கடைத்தெருக்களில் சுற்றினீர்களே அந்த சுகம் நீங்கள் தனியாக பைக் ஓட்டும்போதும், கார் ஓட்டும்போதும் கிடைத்ததா?



· கல்லூரியின் மர நிழலில் அமர்ந்து படிக்கும் போது உங்கள் படிப்புச் செலவுக்காக உங்கள் சகோதரன் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பட்டறைகளில் ஓடாக தேய்ந்தானே அந்த நன்றி மறந்துவிட்டீர்களா?



· உயர் அதிகாரியாக வர ஆசைப்பட்டு உங்கள் சகோதரன் மேல்படிப்பு படித்தும் வேலை கிடைக்காமல் வருமையில் வாடும்போது நீங்கள் அவனுக்கு உதவாமல் சுயதொழில் புரிந்து ஈட்டிய ரூபாய் நோட்டுக்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்களே அல்லாஹ் உங்கள் மீது அன்பு லுத்துவானா?



· உங்கள் வாதத்திறமையால் இலாபம் கொழிக்கும் சொத்தை தவறான வழியில் அடைந்தீர்களே இதுபோன்ற வாதத் திறமையால் அல்லாஹ்விடம் சுவர்கத்தை அடைய முடியுமா?



· அளவுக்கதிகமான சகோதர பாசத்தினால் தன் சொந்த மனைவி மக்களை மறந்து இறுதியாக அவர்களை நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் செல்கிறீர்களே ஒவ்வொருவனும் தன் குடும்ப நபர்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்ற நபிமொழி கூட நினைவுக்கு வருவதில்லையா?



· உடன் பிறந்த சகோதரிகளில் சிலர் தன் உடன் பிறந்த ஏழை சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விட தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விரும்பு கிறார்களே இது போன்ற சகோதரிகளை மஹ்சரில் அல்லாஹ் பார்ப்பானா?



· உங்கள் உடன் பிறந்த சகோதரனையோ, சகோதரியையோ இழந்த அவர்களின் அநாதையான பிள்ளைகளை நேசிக்க தவறுகிறீர்களே நீங்கள் பிறந்தவுடன் உங்கள் தாய் வீதியில் வீசியிருந்தால் உங்கள் வேதனை எப்படி இருந்திருக்கும் சற்று திரும்பிப் பாருங்களேன்!.


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:40 pm

குறிப்பு

· பெற்ற தாய் தந்தையரை நேசியுங்கள்!



· உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை நேசியுங்கள்!



· கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் நேசியுங்கள்



· ஆதரவற்றவர்களையும், அநாதைகளையும், மிஷ்கீன் களையும் நேசியுங்கள்!



· தாய்க்காக மனைவியை மறப்பதும், மனைவிக்காக தாயை மறப்பதும், சகோதரனுக்காக சகோதரியை மறப்பதும், சகோதரிக்காக சகோதரனை மறப்பதும் பாவமாகும்!



· பணத்தைக்கொண்டும், வாதத்திறமையைக் கொண்டும், பதவிகளைக் கொண்டும் இந்த உலகில் வெற்றி பெறலாம் ஆனால் மஹ்சரின் வெற்றிக்கு உண்மையும், உத்தமமும், நாணயமும், நம்பிக்கையும், ஈமானும் தேவை!



· பணத்திற்காக, சொத்து சுகத்திற்காக விலை போகாதீர்கள்



· அளவுக்கதிகமான சகோதர பாசத்திற்காக உங்கள் ஏழை மனைவி மற்றும் குழந்தைகளையும் மறந்துவிடாதீர்கள்! அதே நேரம் மனைவி மற்றும் குழந்தைகள் மீதஅளவுக்கதிகமான பாசம் காட்டி பெற்றோரையும், உடன்பிறப்புகளை உதரித்தள்ளிவிடாதீர்கள்!



· நபிகளார் (ஸல்) எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ கற்றுக்கொள்ளுங்கள்!



· குர்ஆன் ஹதீஸ்கள் மீது ஈமான் கொள்பவன் அறிந்தே யாரிடமும் ஏமாறக்கூடாது, அதே வேலையில் எக்காரணம் கொண்டும் யாரையும் எதற்காகவும் ஏமாற்றவும் கூடாது!


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by எஸ்.அஸ்லி Fri Mar 26, 2010 12:40 pm

நீங்கள் ஒருவரை ஏமாற்றினால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும்! ஆம் நீங்கள் பிறரை ஏமாற்றினால் மஹ்சரின் கேள்விக்கணக்கில் நீங்கள் தானே மாட்டிக் கொள்கிறீர்கள் எனவே பணத்திற்காக, சொத்து சுகத்திற்காக இப்லிஷிடம் நீங்கள் அறிந்தே ஏமாறுகிறீர்களே!



எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52


குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by சபீர் Sat Mar 27, 2010 10:54 am

எஸ்.அஸ்லி wrote:நீங்கள் ஒருவரை ஏமாற்றினால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும்! ஆம் நீங்கள் பிறரை ஏமாற்றினால் மஹ்சரின் கேள்விக்கணக்கில் நீங்கள் தானே மாட்டிக் கொள்கிறீர்கள் எனவே பணத்திற்காக, சொத்து சுகத்திற்காக இப்லிஷிடம் நீங்கள் அறிந்தே ஏமாறுகிறீர்களே!



எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் Empty Re: குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum