ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

3 posters

Go down

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Empty ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

Post by தாமு Wed Mar 17, 2010 5:13 am

யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.

அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.

"கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப்பிலும் இருக்கின்றன.

சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Empty Re: ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

Post by nandhtiha Wed Mar 17, 2010 8:23 am

வணக்கம்
//இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி
வழிபாட்டைக் குறிப்பது)//
ஒரு சிறு திருத்தம் (இது என்னுடைய கருத்து). யோனி பீடம் என்பது தவறான விளக்கம். யோனி என்ற சொல் கொச்சைப் படுத்தப் பட்டு வருகிறது, பிற்காலத்தில் வந்த வடமொழியாளரின் மொழியறிவு இன்மையால் ஏற்பட்டது, வேத மந்திரங்களை அகர முதலி வைத்துப் பார்த்ததினால் வந்த வினை. வேத மந்திரங்களை நிருக்தம் மூலமாகப் பார்க்க வேண்டும்,(எ-கா) புருஷ ஸூக்தத்தில் " தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம்" என்று வருகிறது,( பிறவா யாக்கைப் பெரியோனாகிய இறைவனுக்குப் பிறப்பிடம் யாது? ) அதன் பொருள் அவருடைய பிறப்பிடத்தை வீரமுள்ள அறிவுள்ளவர்கள் அறிவார்கள் என்பது ஆம். இறைவனுடைய பிறப்பிடம் என்பது இவர்கள் நினைக்கின்ற பகுதியல்ல, அது அறிவுள்ளவனின் மனம், இறைவன் வீரமுள்ள அறிஞர்களின் மனத்தில் பிறக்கிறான் என்று பொருள், அதாவது முதல் உயிர் உலகுக்குக் காரணியான இறைவன். இரண்டாவது உயிர்கள் தான் கடற்பாசி முதல் மனிதன் வரையிலும், நம் மொழியான செம்மொழி தமிழ் வடமொழியாளர்கள் யோனி பீடம் என்பதை ஆவுடையார் என்றே அழைத்தது, ஆ+ உடையார். ( ஆ என்றால் பசு , மற்றும் இரண்டாவது உயிரெழுத்து) வாசக்னு என்ற முனிவரின் மகளான கார்க்கி என்பாளுக்கும் யாக்ஞ வால்கியருக்கும் இடையில் நடந்த வாதத்தில் வேதத்தாலும் உபநிடதங்களாலும் விளக்கப் படும் பரம்பொருள் யாது என்ற கேள்விக்கு யாக்ஞ வால்கியர் அளித்த பதில் " அக்ஷர: ) இதன் பொருள் ( எழுத்து மற்றும் குறைவில்லாதது) யோனி பீடம் என்பது கொச்சைப் பொருளாகக் கொள்ளப் படுகின்றது. ஆவுடையார் என்பது சிறந்த பொருளைத் தருகின்றது, மொழி மாற்றம் செய்யப் படும்போது மூல மொழியின் கருத்துக்களை அப்படியே மொழி பெயர்க்க முடியாது என்பதை மொழி பெயர்ப்புச் செய்வோர் அனைவரும் உணர்வர். பாவம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் SIN என்ற சொல் உண்டு. புண்ணியத்துக்கு???? அதே போன்று தர்மம் என்ற சொல்லுக்குத் தமிழில் அறம், ஆங்கிலத்தில் ??????. எனவே ஆவுடையார் என்ற சொல் வலிவும் வனப்பும் பொருளாழமும் உடையது,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Empty Re: ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

Post by சிவா Wed Mar 17, 2010 12:25 pm

nandhtiha wrote:வணக்கம்

அழகான விளக்கத்தை தன் திறமைக்கு உரித்தான வித்ததில் எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ள விதம் அருமை நந்திதா!
இதுபோன்ற விளக்கங்கள் இணையத் தமிழ் உலகிற்குப் புதிது, அரிது!

தங்களின் இதுபோன்ற சிறப்பான விளக்கங்கள் வரவேற்கப் படுகிறது!

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது 677196 ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது 677196 ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது 677196

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Empty Re: ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

Post by தாமு Tue Mar 23, 2010 7:19 am

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது Empty Re: ஆயிரத்தில் ஒருவன் கதை நிஜமாகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum