ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை)

Go down

பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை) Empty பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை)

Post by இளமாறன் Wed Mar 17, 2010 1:54 am

பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை)

பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை) Vmalarnews_34067934752






- படுதலம் சுகுமாரன்
தலையை
பிய்த்துக் கொள்ளாத குறையாய், திணறிப் போய் உட்கார்ந்திருந்தார்
தருமலிங்கம்.
""நானும், எத்தனையோ பஞ்சாயத்துகளைப் பார்த்திருக்கேன்... எவ்வளவோ
வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கேன்... எத்தனையோ வீட்டு சண்டைகளை தீர்த்து
வச்சிருக்கேன்... இப்படி யொரு அண்ணன் தம்பிகளைப் பார்த்தது மில்லை; இப்படியொரு
பிரச்னையை கேட்டது மில்லை...'' என்று புலம்பினார்.
தலைவர் தர்மலிங்கம் எதிரில்
உட்கார்ந் திருந்தான் அண்ணன் வாசு. படித்து, வங்கியில் மானேஜராக சென்னையில்
வசிக்கிறான்.
சற்றுத்தள்ளி, முகத்தை திருப்பிக் கொண்டு, சுவற்றில் கை வைத்து
தாங்கிக் கொண்டு நின்றிருந்தான் வெங்கடேசு தம்பி; படிப்பு இல்லை.
சிறுவயதிலேயே,
ஆடு மேய்ப்பில் ஆர்வத் தோடு இறங்கிவிட்டவன். அதற்கென்றே பிறந்த வன் போல, அதில்
ஈடுபட்டு விட்டவன். எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஆடுகளைக் கை விடாதவன்.
அறை
வாசலில், கதவு மறைப் பில் பாதியாக தெரிந்தாள் வெங்கடேசு வின் மனைவி
செல்லம்மாள்.
அவள் கால்களைக் கட்டிக் கொண்டு, இரண்டு பிள்ளைகள், "திருதிரு'வென
விழித்துச் கொண்டிந்தன.
வெங்கடேசுவின் குழந்தைகள்...
நேரமாகியும்,
மேய்ச்சலுக்கு போக முடி யாமல், கொட்டகையில் அடைபட்டிருந்த ஆடுகள், "மே... மே...'
என்று உதறலாக குரல் கொடுத்தன.
ஆட்டுப்புழுக்கையும், மூத்திர வாடையும், கூடம் வரை
எட்டிப் பார்த்தது.
""முடிவா என்ன தான் சொல்றீங்க... எனக்கு அடுத்த வேலை
இருக்கு. இங்கே உட்கார்ந்து பொழுது போக்கிக்கிட்டு இருக்க முடியாது...'' என்று
கேட்டார் தர்மலிங்கம்.
அவர்கள், முன்பு சொன்னதையே திரும்பவும் கூறினர்.
கடுப்பாகிப் போன தர்மலிங்கம், ""உங்க பிடிவாதத்தால, பாழாகிப் போகப் போறது நீங்க
தான்; எனக்கொன்றுமில்லை,'' என்று சத்தம் போட்டார்.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட
ஊர் அது.
மாணிக்கத்துக்கு, ஊர் எல்லையில் இரண்டு ஏக்கர் பூமி இருந்தது. ஆனால்,
பாறையோடிய மேட்டுப்பாங்கான இடம்; பாசன வசதி கிடை யாது.
பருவ மழை காலத்தில்,
மண்ணைக் கீறி, ஏதேனும் தானியத்தை விதைத்தால், அதிர்ஷ்ட வசமாக பயிராகி,
கைகொடுத்தாலும் கொடுக்கும்; பாதி விளைச்சலில் கருகி, மண்ணுக்கு உரமானாலும்
ஆகும்.
சிரம வாழ்க்கை என்றாலும், மாணிக்கத்துக்கு பெரிய ஆறுதல், பிறந்தது
இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பது தான். ஒருத்தன் படித்தவன்; இன்னொருவன் படிக் காதவன்
என்ற ஒரு வேறுபாட்டைத் தவிர, தந்தையை நேசிப்பதிலோ, அண்ணன் தம்பிகள் ஒருவருக்
கொருவர் பாசத்துடன் பழகு வதிலோ ஒரு குறைவும் இருக்காது.
காலாகாலத்தில்
இருவருக்கும் கல்யாணத்தை முடித்து, பேரப் பிள்ளைகளையும் பார்த்துவிட்ட பூரிப்புடன்,
சென்ற வருடம் தான், "நல்ல சாவு' நடந்தது அவருக்கு.
ஊர், உறவு, நட்பு என்று
எல்லாரும் கூடி, நல்லடக்கம் பண்ணினர்.
பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்து, சாப்
பிட்டு திண்ணையில் உட்கார்ந்து சாவகாசமாக வெற்றிலை மெல்லும் போது, இதே தர்மலிங்கம்
தான் பேச்செடுத்தார்...
""பெரியவர் போய்ட்டார். இருக்கும் போது, என்கிட்ட
ஒண்ணும் சொல்லலை; உங்ககிட்ட ஏதும் சொன்னாரா?''
""எதைப் பற்றி
மாமா...''
""வேறதைப் பற்றி? சொத்து பத்து விவகாரம் தான்... அப்படி ஏதும்
இருந்தால், இப்பவே கையோடு பேசி முடிச்சிடலாம். நீ மெட்ராஸ் போய்ட்ட பிறகு எப்ப
வருவியோ, என்னமோ...''
""பேச ஒண்ணுமில்லை மாமா. வீடும், நிலமும் தம்பிக்கு தான்.
நான் நல்ல வேலையில இருக்கேன். கை நிறைய சம்பாதிக்கிறேன். தம்பிக்கு பெருசா ஒண்ணும்
வருமானமில்லை. நிலத்தை அவனே வச்சுக்கட்டும்,'' என்றான் வாசு. அவன் மனைவி புஷ்பாவும்
அதையே சொன்னாள்.
வெங்கடேசுவுக்கு, சுருக்கென்று கோபம்
வந்துவிட்டது.
தர்மலிங்கத்திடம் எழுந்தோடி வந்தான்.
""இதென்ன ஓரவஞ்சனை...''
என்று கேட்டான்.
""இதிலென்ன வஞ்சனையைக் கண்டுட்டே...''
""எங்கப்பனுக்கு, நான்
ஒருத்தன் தான் பிள்ளையா?'' என்று சத்தம் போட்டான்.
""என்னடா சொல்ற... புரியறாப்ல
சொல்லுடா?''
""எங்கப்பா, எங்க ரெண்டு பேரையும் சமமா தான்
நடத்தினார்...''
""யார் இல்லைன்னாங்க...''
""அப்ப அவர் சம்பா தனையும், ரெண்டு
பேருக்கும் சமமாதானே பிரிக்கணும். மொத்தமே எனக்கு கொடுத்துட் டால், அது ஓரவஞ்சனை
யில்லாம, வேற என்னவாம். வீட்லயும் பாதி, நிலத்துலயும் பாதி, அண்ணனுக்கு கொடுக்கறது
தானே சரி...''
""அதைச் சொல்றியா! வெங் கடேசு... அவன் வேலையில இருக்கான். கைநிறைய
சம்பா திக்கறான். நீ அப்படியா?''
""அவர் படிச்சாரு... வேலைல சேர்ந்தாரு...
சம்பாதிக்கறாரு... எல்லாம் அவர் திறம... நாளைக்கு நானும் வேற மாதிரி தொழில் செஞ்சோ,
வியாபாரம் பண்ணியோ பெரியாளா கலாம். அவங்கவங்க தனி சாமர்த்தியம். அப்பன் சொத்து
பொது. ரெண்டு பேருக்கும் சரிசமமாகத் தான் பிரிக்கணும்... இல்லன்னா நான் ஒப்புக்க
மாட்டேன்...'' என்று கறாராக சொன்னான்.
வியந்து போனார் தர்மலிங் கம்.
"ஆடு
மேய்த்தாலும், குணத் துல சோடை போகாம இருக்குறானே சின்னவன்!' என்று.
பெரியவனும்,
அவனுக்கு நான் சளைத் தவனில்லை என்பது போல்,
""அப்பா கொடுத்தால் தான்
வாங்குவியா... அண்ணன் கொடுத்தால் வாங்கிக்க மாட்டியா? சொத்து பிரிஞ்சா, சொந்தம்
பிரிஞ்சுடும்டா... மொத்தமா உன்கிட்டயே இருக்கட்டும், உன் ஒருத்தனுக்கே
இருக்கட்டும்,'' என்று சொல்லி விட்டுப் போனான். எதிர்பாராத ஒன்று நடந்தது.
அந்த
ஊர் மார்க்கமாக, ரயில்வே டிராக் வந்தது.
நீண்ட நாள் கிடப்பில் கிடந்த திட்டம்.
தூசு தட்டி எடுத்து வேகமாக பணிகள் தொடங்கியது.
சரியாக அந்த ஊர் எல்லையில் ரயில்
நிறுத்தம்.
மத்திய அமைச்சர் வந்து அடிக்கல் நாட்டியதும், ஒரே நாளில் அந்த ஊர்
பிரபலமாகி விட்டது.
ஊரார் பார்வை, வெங்கடேசுவின் பக்கம்
திரும்பியது.
""அடிச்சுதுடா உனக்கு லக்கி பிரைஸ்!'' என்றனர்.
புரியாமல்
விழித் தான்.
""என்ன பார்க்குற... உன் நிலம், ஸ்டேஷனுக்கு பக்கமா வருது. நேத்து
வரைக்கும் அதுக்கு மதிப்பு இல்லை. இன்னைக்கு, பல லட்சம் பெறும். நீ லட்சாதிபதி
டோய்...'' என்றனர்.
""என்னென்னவோ சொல் றாங்களே மாமா...'' என்று தர்மலிங்கத்திடம்
விசாரித்தான். அவரும் ஆமோ தித்தார்.
""ரயில் டிராக் வந்துட்டு துல்ல... நிறைய
பேர் இந்தப் பகுதியில வீடு கட்டி குடியேற வருவாங்க. கடைகள் கட்டு வாங்க. ஊர்
பெருவளமா கும். ஸ்டேஷனையொட்டி இருக்குற நிலங்களுக்கு மவுசு கூடி போச்சு. ரியல்
எஸ்டேட்காரங்க படையெடுப் பாங்க. யாராவது உன் நிலத்தை விலை கேட்டு வந்தால், கொடுத்தத
வாங்கி கிட்டு, கைநாட்டு வச்சித் தொலைச் சிறாதடா... என்கிட்ட கூட்டி வா... நான்
பேசறேன்...''
""இந்த தகவலை உடனே அண்ணனுக்குச் சொல்லணும்...''
""எல்லாம் பேப்
பர்ல பார்த்திருப் பான். "டிவி' நியூஸ் பார்த்து தெரிஞ்சுக் கிட்டிருப்
பான்...''
""அண்ணனைக் கேட்கணும் மாமா. அவர் பங்கை விற்க அவர் விரும்பினால்,
என்னுதையும் சேர்த்து விக்கலாம். இல்லைனா, அப்படியே இருக் கட்டும்...''
"அவன்
தான் அன்னைக்கே எல்லா சொத்தும் உனக்குன்னு சொல்லிட்டானே...''
""அதுக்கு நான்
ஒப்புக்க மாட்டேன்னு அன்னைக்கே சொல்லிட்டேனே...'' என்றான் அவன்.
தர்மலிங்கத்தை
சிலர் அணுகினர்.
அந்த இடத்தை பேசி முடிங்க... நல்ல விலை தர்றோம்' என்று அவர்கள்
சொன்ன விலை, உண்மையிலே யே பெரிய தொகை தான்.
வெங்கடேசுவின் பிடிவாதம், அவருக்கு
தெரிந்தது தான். வாசுவை ஒரு வார்த்தை கேட்க நினைத்தார்.
சென்னைக்கு போன் செய்து,
வாசுவிடம் பேசினார்.
""மகிழ்ச்சியான விஷயம் மாமா. நீங்க, கிட்டேயிருந்து வித்து,
பணத்தை பத்திரமா பேங்க்ல போட்டு, தம்பிக்கு மாசாமாசம் வட்டி கிடைக்கறாப்ல
பண்ணிடுங்க...'' என்றான்.
""நீ சொல்லிட்டே... அவன் என்ன சொல்றான்
தெரியுமா?''
""விக்கமாட்டேங்கறானா?''
""உன் பாகத்தை நீ விற்கறதா இருந்தால்,
அவன் பாகத்தை விற்பானாம். இல்லாவிட்டால் வேண்டாமாம்...''
""எனக்கேது பாகம்? நான்
தான் அப்பவே எல்லாம் தம்பிக்குன்னு சொல்லிட்டனே...''
""அப்ப கேட்பாரில்லாம
கிடந்தது...''
""நிறுத்துங்க... பணத்தைக் கண்டு மனசு மார்ற ஆள் இல்லை நான்.
கடவுள் புண்ணியத்துல நல்லா இருக்கேன். தம்பிக்கு எடுத்துச் சொல்லி, ஆக வேண்டியத
பாருங்க... பதிவு பண்ணும் போது, நான் வந்து கையெழுத்துப் போட றேன்...''
""சரி
தான்... உன் தம்பிகிட்ட நான் பேசி புரிய வைக்கறதாவது... நீ வந்தால் தான் சரிவரும்.
இன்னொரு முக்கியமான விஷயம்...'' என்று ஒரு சங்கதியையும் தெரிவித்தார்.
மறுநாளே
வந்து இறங்கிவிட்டான் வாசு.
""கொஞ்சமாவது அறிவிருக்காடா உனக்கு. வெண்ணெய்
திரளும்போது தாழி உடைக்கலாமா? தர்மலிங்கம் மாமா எவ்வளவு மெனக்கெடறார். அவர்
சொல்றதக் கேட்காமல், பிடிவாதம் பண்றியே...'' என்று தம்பியைக் கண்டித்தான்,
வாசு.
""அவன் நியாயமா பேசினால் கேட்டுக்கலாம்...''
""அன்னைக்கு போலவே,
இன்னைக்கும் அசடா இருக்கியே... பண விஷயமாச்சே... அண்ணனோ, அண்ணியோ மனசு
மாறியிருப்பாங்க... பங்கு கேட்பாங்கன்னு பயந்துட்டியா... எதிர்காலத்துல, அண்ணன்
பசங்க கேள்வி கேட்பாங்கன்னு யோசிக்கிறயா அல்லது ஊர்ல யாராவது எதாவது
சொல்லுவாங்கன்னு தயங் கறியா?''
""படிச்சிருக்கேல்ல... அதனால தான் இப்
படியெல்லாம் யோசிக்கற. நான் எம்மனசுல என்ன தோணுதோ அதை தான் சொல்வேன். பாதி பங்கு நீ
எடுத்துக்கறதானால், நான் விற்க சம்மதிப்பேன்...''
நீண்ட இழுபறியில், மண்டை
காய்ந்து போன தர்மலிங்கம்...
""இதே பார் வெங்கடேசு... ஒரு விஷயம் சொல்றேன்...
புரியுதா பார்... உங்க அப்பன் சொத்துன்னாலும், அதுக்கு பத்திரம், பட்டான்னு ஆதாரம்
எதுவுமில்லை. சொத்து வரி கூட சரியா கட்டலை. அது, இதுன்னு ஓட்டைகள் இருக்கு. இந்த
மாதிரி நிலங்களை குறிவச்சு ஒரு கும்பல் கிளம்பியிருக்கு. அவங்க அத்துமீறி நுழைஞ்சு
ஆக்ரமிப்பு பண்ணிட்டால், மீட்கறது ரொம்ப சிரமம். இப்ப நீங்க ஆதாரங்களை தேட
ஆரம்பிச்சாலும், நேரச் செலவு, பணச்செலவு, வி.ஏ.ஓ., கிட்டருந்து தாசில்தார்
வரைக்கும் அலையணும். அது உன்னாலும் முடியாது... உன் அண்ணனாலும் முடியாது. இப்பவே
தள்ளிவிடலன்னா, வில்லங்கமான இடம்ன்னு யாரும் வாங்க வர மாட்டாங்க... சொல்லிட்
டேன்...''
""அப்படின்னா... வாங்கறவனுக்கும் சிக்கல் தானே மாமா...''
""ரியல்
எஸ்டேட்காரங்க ஜகஜ்ஜால கில்லாடிங்க. அதெல்லாம் பார்த்துக்குவாங்க. நீங்க
சந்தர்ப்பத்தை நழுவ விடாதீங்க... ஆமாம்...''
அவ்வளவு சொல்லியும், வெங்கடேசு பிடி
வாதம் செய்ய, வாசு சொன்னான்,
""நீங்க ஏற்பாடு செய்யுங்க மாமா. பாதி பணத்தை நான்
வாங்கிக்கறேன்,'' என்றான்.
அடுத்த பத்து நாளில் விற்பனை முடிந்தது.
தன் பங்கு
பணத்தை வங்கியில் போட ஒப்புக் கொண்டான் வெங்கடேசு! அவனுக்கு தெரியாமல்
தர்மலிங்கத்தைச் சந்தித்த வாசு, தன் பங்குப் பணத்தையும் அவரிடம் கொடுத்து,
""இதையும் அவன் பேர்ல டெபாசிட் பண்ணிடுங்க. அவனுக்கு தெரிய வேண்டாம்,'' என்று
கேட்டுக் கொண்டான்.
""பாதி பணத்தை வாங்கிக்கறேன்னு நீ சொன்ன போது, நான் கூட
உன்னை தவறா நினைச் சுட்டேன் வாசு... மன்னிச்சுடு,'' என்றார்.
வாசு
புன்னகைத்தான்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரிது பெரிது... பாசம் பெரிது! (சிறுகதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum