ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் விட்டுப் பேசுங்கள்

3 posters

Go down

மனம் விட்டுப் பேசுங்கள் Empty மனம் விட்டுப் பேசுங்கள்

Post by செந்தில் Wed Mar 10, 2010 2:56 pm

எனக்கு வந்த பார்வர்ட் மடல் இது. இதன் கருத்து பிடித்திருந்ததால் இங்கே இட்டிருக்கிறேன்

மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.. போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர். வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்" வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள்.. அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள்.. அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனம் விட்டுப் பேசுங்கள் Empty Re: மனம் விட்டுப் பேசுங்கள்

Post by இளமாறன் Wed Mar 10, 2010 3:33 pm

செந்தில் wrote:
எனக்கு வந்த பார்வர்ட் மடல் இது. இதன் கருத்து பிடித்திருந்ததால் இங்கே இட்டிருக்கிறேன்

மனம் விட்டுப் பேசுங்கள்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன.. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள்.. அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள்.. அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

நல்ல தகவல்.. மனம் சில வேளைகளில் தன்னிச்சையாக செயல்பட்டு புரியாமல் கோபபட்டு ஏதோ ஒரு கற்பனை செய்து கொண்டு .. மன அழுத்தம் - உளைச்சல் இப்படி அவதி படுவர்கள் அதிகம் உண்டு.. சிறந்த பயனுள்ள தகவல் நன்றி [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனம் விட்டுப் பேசுங்கள் Empty Re: மனம் விட்டுப் பேசுங்கள்

Post by செந்தில் Wed Mar 10, 2010 3:53 pm

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனம் விட்டுப் பேசுங்கள் Empty Re: மனம் விட்டுப் பேசுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Mar 10, 2010 4:48 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மனம் விட்டுப் பேசுங்கள் Empty Re: மனம் விட்டுப் பேசுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum