ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

5 posters

Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by ரிபாஸ் Wed 10 Mar 2010 - 12:01

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Breast_cancerபாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான
காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப்
புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை
நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது
கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு
கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு
அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட்
லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.

“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப்
பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க்
கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது,
`ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும்
`ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது
என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற
மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற
பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப்
புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும்
ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து
எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும்
பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த
ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக
அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய்
உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக
நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும்
முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல்
துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை
உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று
என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால்
மேலும் கூறுகையில்,

பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள்,
இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய
ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.

அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை
வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது
என்றும் கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு
எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன்
திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட
வேண்டும்” என்கிறார் அகர்வால்.

அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு
புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின்
மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன்
விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.


ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய்
செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை
உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத்
தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு
செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய
கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது
மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’,
`பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by சிவா Wed 10 Mar 2010 - 12:11

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 800px-Bitter_gourd


பாகற்காய் பற்றிய சிறந்த தகவல்!


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by ரிபாஸ் Wed 10 Mar 2010 - 12:13

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 678642 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 678642 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 154550 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by சிவா Wed 10 Mar 2010 - 12:13

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 800px-Momordica_charantia_%28jetalone%29


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by Manik Wed 10 Mar 2010 - 12:16

ரொம்ப நல்ல தகவல்டா ரிபாஸ் ரொம்ப தேங்க்ஸ்டா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by jahubar Wed 10 Mar 2010 - 13:25

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 678642 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 678642 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 677196
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by தாமு Wed 10 Mar 2010 - 20:00

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 677196 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 677196 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 677196 மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்' Empty Re: மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum