ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பூதங்களும் அறிவியலும்

Go down

ஐம்பூதங்களும் அறிவியலும் Empty ஐம்பூதங்களும் அறிவியலும்

Post by சிவா Fri Feb 26, 2010 9:38 am

பருவமழைக் காலங்களில் "அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து இடியுடன்கூடிய மழை பெய்யும்" என்ற வானிலை அறிக்கை வெளியான மறுநாளே சூரியன் தலைதூக்கி தன் முழு உருவத்தை வெளிக்காட்ட, "ஆகா, வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்ட உடனே வெய்யில் அடிக்கும் என்று முன்னமே சொன்னேன் பார்த்தாயா?" என்று சிலர் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. ஆனால் வானிலை அறிக்கையில் உள்ளவாறு இரண்டு நாட்கள் அடைமழை பெய்தால் அடுத்த வானிலை அறிக்கை என்ன சொல்கிறது என்பதை வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாட்கள் மூலம் அறியத்துடிக்கும் மக்கள் ஏராளம். இந்த வானிலை அறிக்கை எவ்வாறு உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் இந்த அறிக்கைகளை எவ்வாறு உருவாக்குகிறது போன்ற விவரங்கள் வியப்பூட்டுபவை.


காற்றின் வேகம், வெய்யிலின் தாக்கம் போன்ற பல இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிக்கும் விந்தை இன்று மனிதர்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. காலை எழுந்தவுடன் கிராம மக்கள் முதல் நகரவாசிகள் வரை பலரும் அன்றைய வானிலைபற்றிய தகவல்களை அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மக்களிடையே வானிலை பற்றிய விழிப்புணர்வு இன்று அதிகமாகவே உள்ளது. இன்று மனித வாழ்வில் ஏற்பட்டுள்ள பல அறிவியல் முன்னேற்றங்களில் வானிலை ஆய்வும் ஒன்று,


இந்தியாவில் முதன்முதலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 1792-ம் ஆண்டு வானிலை ஆய்வு மையம் துவக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநராக இருந்த சர் சார்லஸ் ஒக்லே இதனைத்துவக்கி வைத்தார். அப்போதைய சென்னை மாநில அரசின் உறுப்பினராக இருந்த வில்லியம் பெற்றி தமது சொந்தச் செலவில் அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வானிலை ஆய்வுப்பணியைத் துவக்கியிருந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆய்வு மையத்தை மைக்கேல் டாப்பிங் வடிவமைத்தார்.


1796ல் கோல்டிங் ஹேம் என்ற வானவியல் நிபுணர் சென்னையில் வானிலை ஆராய்ச்சியைத் துவக்கினார். 1840ல் கேப்டன் லட்லோ என்பவர் மணிக்கொருமுறை வானிலைத் தகவல்களைக் கணித்தார். இவருக்குப்பின் 1861 முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு போக்சன் என்பவர் வானிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். 1899ல் சென்னை மாநிலக்கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த திரு ஆர்.எல்.ஜோன் பகுதிநேர அலுவலாக இப்பணியை மேற்கொண்டார். 1926 முதல் முழுநேரமாக உதவி வானிலை ஆய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 1931 வரை இந்நிலை தொடர்ந்தது. அதற்குப்பின்னர் பலூன் மூலம் வானிலையை ஆய்வு செய்யும் பணிமட்டும் நடந்து வந்தது. 1893 அக்டோபர் முதல் வானிலை அறிக்கை ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டது. இன்று நவீன அறிவியல் கருவிகள் பல வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.


புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை இயங்குகிறது. மும்பை, சென்னை, புதுதில்லி, கொல்கத்தா, நாக்பூர் மற்றும் குவஹாத்தியென ஆறு மண்டலங்களில் இதன் அலுவலகங்கள் செயல்படுகின்றன. வேளாண் ஆய்வு, விமானப்போக்குவரத்து, பருவமழை குறித்த கணிப்பு, நிலத்தடி நீர், வானிலை தொலைத்தொடர்பு, மண்டலம்தோறும் சிறப்பு வானிலை ஆராய்ச்சி, செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் ஆய்வு, நிலநடுக்கம் பற்றிய ஆய்வு ஆகிய பணிகளை வானிலை ஆராய்ச்சி மையங்கள் மேற்கொண்டு வருகின்றன.


துல்லியமான வானிலைத் தகவல்களைப்பெற கல்பனா செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோள் மற்றும் ராடார் தொழில்நுட்பத்தின் மூலம் மழை அளவு, பருவமழை குறித்த தகவல்களை கணக்கிடுதல், வறண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வேளாண் நடவடிக்கைகள், மாசுபற்றிய ஆய்வு, நகர்ப்புறங்களில் காணப்படும் மாசு, வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படும் கருவிகளை வடிவமைத்தல், இந்திய பெருங்கடல் பகுதியில் நில, வான், கடல் பகுதிகளில் தகவல் பரிமாற்றம், நிலநடுக்கம், அண்டார்டிகா பகுதியில் ஆய்வு, ஓசோன் பற்றிய ஆய்வுகள் போன்றவற்றை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருவதாக சென்னை மண்டல புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் திரு எஸ்.ஆர். ரமணன் கூறுகிறார்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. விமானப் போக்குவரத்துக்குத் தேவையான வானிலைத் தகவல்களான காற்றின் வேகம், காற்று வீசும் திசை, தரைக்காற்று, வான்வெளி மண்டலங்களில் காணப்படும் காற்றழுத்தம் போன்றவற்றை ஆய்வுசெய்து இம்மையம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, ராமநாதபுரம், வாகைகுளம், காரைக்கால் ஆகிய இடங்களில் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அரபிக்கடல் பகுதிகளில் நவீன எஸ். பாண்டு ராடார் மூலம் புயல் பற்றிய கணிப்பு செய்யப்படுகிறது.


சென்னையில் உள்ள நவீனவகை டாப்ளர் ராடார் மூலம் வானிலை துல்லியமாக கணிக்கப்படுகிறது. புயல் எச்சரிக்கை அறிவிப்புகளும் மிக சரியாக கணிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கும், மாலை ஐந்தரை மணிக்கும் ஹைட்ரஜன் வாயுவால் அடைக்கப்பட்ட பலூன் கணக்கிடும் கருவி இணைக்கப்பட்டு வானிலை ஆய்வு மையங்களில் இருந்து பறக்கவிடப்படுகிறது, இதேபோன்று காலை 11.30 மணிக்கு ஒருமுறையும் இரவு 11.30 மணிக்கு ஒரு முறையும் சிறிய அளவிலான பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன. இவை தவிர்த்து ராடார் உடன் இணைக்கப்பட்ட கணினிகள் மூலமாகப் பெறப்படும் தகவல்களும் செயற்கைக்கோளில் இருந்து கிடைக்கும் தகவல்களும் வானிலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்போக்குவரத்து தவிர மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை வானிலை ஆய்வுகளையும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. கோடைக்காலங்களில் காற்றிலுள்ள ஈரப்பதம், வறண்ட காற்று, அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை போன்ற தகவல்களும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தெரிவிக்கப்படுகின்றன.


சேலம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் பற்றிய ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1997ல் சென்னை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மையங்கள் செயல்படத்துவங்கின. கொடைக்கானலில் நிலநடுக்கம் பற்றிய ஆய்வுத் தொகுப்பு மண்டலம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வானிலை ஆராய்ச்சிக்கு பயன்படும் கருவிகளும் சாதனங்களும் புதுப்பிக்கப்படுகின்றன. 1978 முதல் வேளாண் நடவடிக்கைகள் தொடர்பான வானிலை ஆலோசனைத் தகவல்கள், இரு வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, தூத்துக்குடி, குளச்சல், பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலும் வானிலை ஆய்வு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 20 வானிலை ஆராய்ச்சி மையங்கள் வி-சேட் எனப்படும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் 51 நிலநடுக்க ஆய்வு மையங்கள் உள்ளன. 1996-99ல் 24 நிலநடுக்க ஆய்வு மண்டலங்களில் நவீன டிஜிட்டல் கருவிகள் பொருத்தப்பட்டு நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. 2000-02லிருந்து வி-சேட் உதவியுடன் நிலஅதிர்வுத் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இந்தியாவிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் ஏற்படும் நில அதிர்வுகள் பற்றிய தகவல்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. நில அதிர்வு ஏற்படக்கூடிய பகுதிகள் வரைபடங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன.

நில நடுக்கத்தை அளக்கும் ரிக்டர் அளவுகோலில் மூன்றுக்கும் குறைவாக நில அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அவை சிறிய நில நடுக்கங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகையில் ஏற்படும் நில நடுக்கங்கள் குறித்த வரைபடங்கள் அவ்வப்போது தயாரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. நிலநடுக்கங்கள் நிகழும் நேரத்தை துல்லியமாகக் கணிப்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சாதனமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித சமுதாயத்திற்கு இது ஒரு மாபெரும் சவாலாகவே இருந்து வருகிறது.


வருங்காலத்தில் தானியங்கி முறை மூலம் இயங்கும் வானிலை ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் தானியங்கி சாதனங்களே தகவல்களைத் திரட்டி மதிப்பிட்டு செயற்கைக்கோள் தகவல்களுடன் ஒப்பிட்டு துல்லியமாக வானிலை அறிவிப்புகளை வெளியிடும். "நாங்கள் வெளியிடும் வானிலை அறிக்கைகளின் முக்கிய நோக்கம் மக்களை எச்சரிப்பதற்குத்தான். மனித வாழ்வு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இயற்கையின் போக்கை கணிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்ற போதிலும் மனித வாழ்வைக் காப்பதுதான் எங்களது நோக்கமாகும்" என்று விளக்குகிறார் ரமணன்.


ஐம்பூதங்களும் அறிவியலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum