ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:17 am

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே, மலேசிய தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்


சிறிலங்காவில் தொடரும் கொடூரத் தமிழ் இனப்படுகொலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுமார் 500 க்கு மேற்பட்ட தமிழ் மலேசியர்கள் இன்று சிறிலங்கா தூதரகத்தின்முன் உணர்ச்சிமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அமைதியாகத் தொடங்கிய எதிர்ப்பு கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் கொடும்பாவி அடங்கிய சவப் பெட்டி கொண்டுவரப்பட்டதும் எதிர்ப்பு உணர்வு பொங்கி எழுந்தது.

காலை மணி 11.00 முதல் மக்கள் கூடத்தொடங்கினர். அவர்களுக்குமுன் போலீசாரும் கலகத்தடுப்பு படையினரும் அங்கு இருந்தனர்.

நண்பகல் மணி 12 க்குள் ஆர்ப்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும் சுலோகங்களும் முழங்கத் தொடங்கின.

“தமிழனைக் கொல்லாதே”, “ராஜபக்சே ஒழிக”, “மன்மோகன் சிங் ஒழிக”, “சோனியா காந்தி ஒழிக” என்ற முழக்கங்கள் மிக ஆக்ரோசமாக முழங்கப்பட்டன. இக்கண்டன முழக்கங்களுக்கு வலுவூட்டி முன்நின்று வழிநடத்தியதில் முக்கியப் பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்.
சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo2சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo1
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:18 am

ஒபாமா தலையிட வேண்டும்

கண்டனச் சுலோகங்களுக்குடையில் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் ஒபாமா உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இந்தியாவும் சீனாவும் சிறிலங்காவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டனர் கூட்டத்தினர்.

மலேசியாவையும் அவர்கள் மறந்து விடவில்லை. மலேசிய அரசாங்கம் அதன் நீண்ட மௌனத்தைக் கலைத்து போரை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மலேசியர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ராஜபக்சே, மன்மோகன் சிங், சோனியா காந்தி, போரின் கோரத்தால் கொல்லப்பட்டு உருக்குலைந்துபோன தமிழர்களின் உடல்களைக் காட்டும் படங்கள் அடங்கிய அட்டைகள் மற்றும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களும் புலிக்கொடிகளும் இருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர்.

சிங்கள இன வெறியர்களின் இனவாதக் கொள்கையின் காரணமாக சிறிலங்காவில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையான தமிழர்களுக்குமிடையில் நடந்த அமைதிப் போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழின போராட்டவாதிகளான விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டமாக 1983 ஆம் ஆண்டில் வெடித்தது.

முடிவின்றி ஆனால் கொடூரமான தமிழ் இனப்படுக்கொலையாக மாறியிருக்கும் இப்போரில் இதுவரையில் 100,000 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 10,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்கா ஆயுதப் படையினால் கொல்லப்பட்டனர்.
சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo5


Last edited by சிவா on Sat May 16, 2009 7:26 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:23 am

உலகளவிலான எதிர்ப்பு

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo6


உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் சிறிலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலையை மிகக் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இதுவரையில் அலட்சியமாக இருந்து வந்த உலக நாடுகள் மக்கள் நடத்திய, தொடர்ந்து நடத்தி வரும், ஆர்ப்பாட்டங்களால் உந்தப்பட்டு போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பல விசயங்களில் தீவிர நடவடிக்கையில் உடனடியாக இறங்கும் ஐநா, சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதில் அவ்வளவு அக்கறை கொள்ளாமல் இருந்து வந்தது. ஆனால், அதன் நிலையில் மாற்றம் காணத்தொடங்கியுள்ளது. ஐநாவின் தலைமை அதிகாரி இன்று சிறிலங்கா சென்றடைவார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து கோலாலம்பூர் சிறிலங்கா தூதரகத்தின்முன் இன்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாவதாகும்.

இன்று நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வித்திட்டு வழிநடத்தியவர்கள் பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

என். கோபாலகிருஷ்ணன் (பிகேஆர்-பாடாங் செராய்), ஆர்.சிவராசா (பிகேஆர்-சுபாங்), எஸ். மாணிக்கவாசகம் (பிகேஆர்-காப்பார்), எம். மனோகரன் (ஜசெக-தெலுக் இந்தான்) மற்றும் சார்ல்ஸ் சந்தியாகு (ஜசெக-கிள்ளான்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் ரவி, குளோபல் பீஸ் இனிசியேட்டீவ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். பசுபதி, மனித உரிமை வழக்குரைஞர் கே.எ.ராமு மற்றும் பல வழக்குரைஞர்களும் இதர இயக்கங்களின் தலைவர்களும் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேற்கூறியவர்களுடன் 50 க்கு மேற்பட்ட போலீஸ் படையினர் பல்வேறு உடைகளில் காணப்பட்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:30 am

நீங்கள் இலங்கைத் தமிழரா?

எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் பத்து பிரதிநிதிகள் - கோபாலகிருஷ்ணன், மாணிக்கவாசகம், மனோகரன், பசுபதி, ரவி உட்பட - சிறிலங்காவின் தூதர் டாக்டர் டி.டி. ரணசிங்கேயை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து சிறிலங்காவில் போரை உடனடியாக நிறுத்தக்கோரும் தமிழ் மலேசியர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரைக் கொடுத்தனர்.

சிறிலங்காவின் தூதர் ரணசிங்கே வந்தவர்களை வரவேற்று அவர்கள் இலங்கைத் தமிழர்களா என்று வினவினாராம். “அது இப்போது முக்கியமான பிரச்னை அல்ல”, அவரிடம் கூறப்பட்டது.

சிறிலங்கா தூதர் ரணசிங்கேயிடம் மகஜரை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிநிதிகள், சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை பற்றி தூதர் ரணசிங்கே கொடுத்த விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்று கூறினர்.

முதலில் பேசிய என். கோபாலகிருஷ்ணன்: “அமெரிக்கா கனகர ஆயுதங்கள் பாவிக்கக்கூடாது என்றும் பலத்த குண்டுவீச்சுகள் நடத்தக்கூடாது என்றும் சிறிலங்கா அரசிற்கு ஆலோசனை கூறியிருந்ததையும் சண்டை நடக்கும் இடங்களுக்கு அனைத்துலகச் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் தூதரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, அவர் அப்படி ஒன்றும் இல்லை என்று சர்வசாதாரணமாகப் பதில் கூறினார்”, என்று கோபாலகிருஷ்ணன் கூறினார்.

“வெளிநாட்டு செய்தியாளர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதெல்லாம் முட்டாள்தனமானது…என்று தூதர் கூறினார்.”

“நான் இச்சந்திப்பில் மகிழ்ச்சியடையவில்லை. அவருடைய பதில்கள் வெறும் பேச்சுதான். அந்த அக்ரம அரசாங்கத்தால் அழிக்கப்படும் உயிர்கள் பற்றி அவருக்கு எவ்விதக் கவலையும் இல்லை.”

இப்போராட்டம் இத்துடன் முடியப்போவதில்லை. “பக்கத்தான் அடுத்த நடவடிக்கையில் இறங்கி எதிர்ப்பை புத்ராஜெயா வரையில் கொண்டு செல்லும். அடுத்த வெள்ளிக்கிழமை அது நடக்கலாம்”, என்று கோபாலகிருஷ்ணன் மேலும் கூறினார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் தூதரின் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.
சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo4
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:51 am

கொலையை நியாயப்படுத்தினார்

“அவர் (தூதர்) உண்மையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தினார். விடுதலைப் புலிகள் குண்டுகள் போடுவது பற்றி எல்லாம் பேசினார். அன்றாடம் கொல்லப்படும் அப்பாவி மக்களையும் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டது என்று நான் கருதுகிறேன்”, என்றார் மனோகரன்.

காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம், சிறிலாங்காவில் போரை நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கையை மலேசிய மக்களும் மலேசிய அரசாங்கமும் எடுக்க வேண்டும் என்றார்.

“மலேசிய அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது. ஆனால் நாம் நடவடிக்கை எடுப்போம். புத்ராஜெயாவிற்குச் சென்று சிறிலங்காவில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்கத்தான் கோரும்”, என்று அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:52 am

ராஜபக்சே போர்க் குற்றவாளி

“ராஜபக்சே போர்க் குற்றங்களுக்காக அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்”, என்றார் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா.

“பாதுகாப்பு வளையங்கள் என்று பெயரளவில் கூறப்படும் இடங்கள் பாதுகாப்பான இடங்களே அல்ல, ஏனென்றால் அவ்விடங்களில் பயங்கரமான குண்டுவீச்சுகள் நடத்தப்படுகின்றன. உலகம் அதைக்கண்டுள்ளது. அதனால்தான் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கூறப்பட்டது.”

“இது ஒரு சட்டப்பூர்வமான போர் அல்ல. கனரக ஆயுதங்களை உபயோகிக்க முடியாது. அப்பாவி பொது மக்களை கொன்றுவிட்டு, இது போர் என்று கூறுகிறார்கள்.”

“இது கொலை, இது போர் குற்றம். ராஜபக்சேயை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றம் சாட்ட வேண்டும். போர்க் குற்றங்கள் புரிந்ததில் அவர்களுக்கு பங்குண்டு என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் உண்டு”, என்று சிவராசா மேலும் கூறினார்.

இப்போராட்டங்களால் கிடைக்கப்போகும் பலன் என்ன என்று வினவையபோது, “இது நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பும் அறிவிப்பாகும். மலேசிய அரசாங்கம் மௌனமாக இருந்தபோதிலும், பக்கத்தான் மௌனமாக இருக்காது”, என்றார்.

“இந்த அக்கிரமங்களை, கொலைகளை நிறுத்துமாறு நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.

“ஒவ்வொரு எதிர்ப்பின் அளவை அது ஏற்படுத்தும் தாக்கத்தைக்கொண்டு அளவிட முடியாது. நாம் என்ன செய்ய முடியுமோ, நாம் எதைச் செய்வதற்கு கடப்பாடு கொண்டுள்ளோமோ, அதனை நாம் இன்று செய்கிறோம்: அதுதான் எதிர்ப்பு. அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது, நாம் அமைதியாக இருக்க முடியாது.”

“இது எங்களுடைய எதிர்ப்பு, அவர்கள் எங்களுடைய எதிர்ப்பை கேட்க வேண்டும். அவர்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். நாங்கள் நிறுத்தப்போவதில்லை. கொலைகள் நிறுத்தப்படும் வரையில் நாங்கள் நிறுத்தப்போவதில்லை”, என்று சிவராசா வலியுறுத்தினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:52 am

உரிமை நமக்கு உண்டு

“சிறிலங்கா அரசாங்கம் உலக மக்களின் ஆட்சேபங்களையும் உலக நாடுகளின் வேண்டுகோள்களையும் அடியோடு புறக்கணித்துவிட்டு தமிழ் இன மக்களை, அந்நாட்டின் குடிமக்களை, கொடூரமாக கனரக ஆயுதங்களைக்கொண்டு அன்றாடம் கொன்றுகுவித்து வருகிறது. இக்கொடுமையைக் கண்டிக்கும் போரை நிறுத்தக் கோரும் உரிமை நமக்கு உண்டு”, என்று எஸ். பசுபதி கூறினார்.

“குண்டுவீச்சால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கானவர்களைப்போல் பட்டினியாலும் வியாதியாலும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தமிழ் இனத்தை வேரோடு அழிப்பதற்காக சிங்கள இனவெறி அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் இன ஒழிப்பு போர். இப்போரை முடிவிற்கு கொண்டுவர நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். பல நாடுகளில் சிறிலங்காவில் நடக்கும் போருக்கு எதிராக பலமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன் விளைவாக உலக நாடுகளில் பல சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கத் துவங்கி விட்டன. நாம் நமது போராட்டத்தைத் தொடர வேண்டும்”, என்று பசுபதி மேலும் கூறினார்.

வழக்குரைஞர் கே.எ. ராமு தாம் மனித உரிமையில் ஈடுபடுடைய ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் இலங்கையில் தொடர்ந்து நடக்கும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by சிவா Sat May 16, 2009 7:54 am


சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Demo7
ராஜபக்சே தகனம் செய்யப்பட்டார்

செய்தியாளர்களுடனான கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று எழும்பிய சத்தத்தால் கவனம் கூட்டத்தினரின் பக்கம் திரும்பிய போது, பலர் தங்களுடைய தலைகளுக்குமேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சவப் பெட்டியுடன் முழக்கமிட்டவாறு தூதரகத்தின் வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

ஒரு கணம் அசந்துபோன போலீசார் விழித்துக்கொண்டு கலகத்தடுப்பு படையினரை அழைத்து சவப் பெட்டி கொண்டுவரப்படுவதைத் தடுக்க முயற்சித்தனர்.

அப்போது போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரகளும் கைகலக்கும் சூழ்நிலை ஏற்படவிருந்தது. போலீசார் அவர்களின் தடிகளைக்கொண்டு கூட்டத்தினரை திருப்பித்தள்ள முயன்றனர். அப்போது சவப் பெட்டி கீழே விழுந்து உடைந்தது.

அச்சவப் பெட்டியில் ராஜபக்சேயின் கொடும்பாவி வைக்கப்பட்டிருந்தது. கீழே விழுந்த பெட்டிக்கும் ராஜபக்சே கொடும்பாவிக்கும் தீ மூட்டுவதில் ஆர்பாட்டக்காரர்கள் வெற்றி பெற்றனர். சாலையின் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட எரிந்து கொண்டிருக்கும் சவப் பெட்டியும் ராஜபக்சேயும் முற்றாக எரிந்து சாம்பலாயின.

இக்கட்டத்தில், போலீஸ் அதிகாரி கூட்டத்தினரை உடனே கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

அசம்பாவம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்சே தகனம் செய்யப்பட்ட மகிழ்சியோடு கலைந்து சென்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே Empty Re: சவப் பெட்டியில் மகிந்தா ராஜபக்சே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum