ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை

2 posters

Go down

அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை Empty அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை

Post by சிவா Mon Feb 22, 2010 10:06 pm

அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை; 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது !
அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை 64a1bc87-e1f8-4173-bb33-64c9e502c679_S_secvpf

அண்ணா நகர் கிழக்கு கே-4 போலீஸ் நிலையம் அருகில் உள்ள ராயல் என்கிளவ் என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வன்னிய சம்பத் (வயது 40). இவர் எழும்பூர் மெட் ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினரான இவர் பா.ம.க. வக்கீல் அணியில் முக்கிய அங்கம் வகித்தார். வன்னியர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும் இவர் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளராகவும் பணி புரிந்து வந்தார்.

இவரது முதல் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் நளினி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

அவருக்கு செந்தில், சஞ்சய்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் பள்ளி படிப்பை படித்து வருகிறார்கள். இளைய மகன் சஞ்சய்குமார் அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உள்ள பாரத் வித்யாபவன் பள்ளியில்
8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

அவனை தினமும் வன்னிய சம்பத்தான் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.

வழக்கம் போல இன்று காலை அவர் சஞ்சய் குமாரை தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அயனாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நியூ ஆவடி 100 அடி சாலைக்கு வந்த அவர் கல்லறைத் தோட்டத்துக்கு எதிரில் அயனாவரம் செல்லும் பாதையில் திரும்ப முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அவர் மீது மோதினார்கள்.

இதனால் நிலை தடுமாறி வன்னிய சம்பத்தும், சஞ்சய் குமாரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். மறு நிமிடம் அங்கே பதுங்கி இருந்த சுமார் 8 பேர் கும்பல் வன்னிய சம்பத்தை சுற்றி வளைத்தது. பட்டா கத்திகளால் அவர்கள் வன்னிய சம்பத்தை சரமாரியாக வெட்டினார்கள்.

வன்னிய சம்பத் கை, கால், முதுகில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் அய்யோ அம்மா என்று அலறியபடி ஓட முயன்றார். இதைப்பார்த்து சஞ்சய்குமார் அப்பா... அப்பா என்று அலறினான். உடனே மர்ம நபர்களில் ஒருவன் சஞ்சய் குமார் கண்ணைப் பொத்திக் கொண்டான்.

மற்ற 7 பேரும் வன்னிய சம்பத்தை சூழ்ந்து கொண்டு வெட்டினார்கள். இதில் ஒரு வெட்டு வன்னிய சம்பத் கழுத்தில் விழுந்தது. இதனால் கழுத்து 80 சதவீதம் துண்டாகித் தொங்கியது. அதன் பிறகு சஞ்சய்குமாரிடம் வீட்டுக்கு ஓடுடா என்று சொல்லி விட்டு அந்த மர்மக் கும்பல் தப்பி ஓடி விட்டது.

உடல் உறுப்புகள் துண்டு, துண்டாகும் வகையில் வெட்டி குதறப்பட்ட வன்னிய சம்பத் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தப்படி கிடந்தார். அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் வன்னிய சம்பத்தின் மூச்சு அடங்கிப் போனது.

ஆவடி 100 அடி ரோடு எப்போதும் ஆட்கள் நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இன்று காலை பள்ளிக்கு, அலுவலகத்துக்கு நூற்றுக் கணக்கானவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மிகத் துணிச்சலாக இந்த படுகொலை நடந்ததால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலை பற்றி தகவல் அறிந்ததும் உதவிக்கமிஷனர் கண்ணப்பன் மற்றும் அய னாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வன்னிய சம்பத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வன்னிய சம்பத்தை ரவுடி கும்பல் ஒன்று பழிக்கு பழி வாங்க கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொலையாளிகளைப் பிடிக்க இணைக் கமிஷனர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீசார் வன்னிய சம்பத்துடன் சமீப காலங்களில் தகராறு செய்தவர்கள் யார்-யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடிகளை ஜாமீனில் வெளியில் கொண்டு வந்ததில் இவருக்கும் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அந்த முன் விரோதத்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வன்னிய சம்பத் மீது சென்னையில் உள்ள பல் வேறு போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் இருந் தன. ஒரு தடவை அவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 2006-ம் ஆண்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அதன் பிறகு பல ரவுடி கும்பல்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் திரு.வி.க. நகரில் விஜயகுமார் என்பவரை ஒரு கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொன்றது. அந்த கும்பலைச் சேர்ந்த சங்கர் என்பவனை வன்னிய சம்பத் கோர்ட்டில் ஆஜராக வைத்தார்.

இதனால் விஜயகுமாரை கொன்ற கும்பலுக்கும், வன்னிய சம்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு கும்பல் கருதியது. அவர்கள் திட்டமிட்டு வன்னிய சம்பத்தை தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புழல் ஜெயிலில் தண் டனை அனுபவித்து வந்த ஒரு ரவுடியை வன்னிய சம்பத் சமீபத்தில் ஜாமீனில் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் வன்னிய சம்பத்தை வெட்டி சாய்த்திருக்கலாம் என்று ஒரு தகவல் கூறப்படுகிறது. ரவுடிகளுக்கு துணை போனதால் ஏற்பட்ட முன் விரோதமே கொலைக்கு காரணம் என்று போலீசார் நம்புகிறார்கள்.

நளினியுடன் சில ஆண்டுகள் வாழ்ந்த வன்னிய சம்பத் அவரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள வில்லை. கொலை செய்யப்பட்ட ஒருவரின் மனைவியான நளினியை அவர் தன் வீட்டில் திருமணம் செய்யாமலே வைத்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நளினி, அவரைப் பிரிந்து சென்று விட்டார்.

அவருக்கும் வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் வன்னிய சம்பத் கொலைக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வன்னிய சம்பத் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பா.ம.க. வக்கீல்கள் அரசு பொது மருத்துவ மனையில் திரண்டனர். பா.ம.க. சட்டப் பாதுகாப்புக்குழுத் தலைவர் கே.பாலு, வெளியிட்ட அறிக்கையில் வன்னிய சம்பத்படு கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், வழக்கறிஞர் என்ற முறையில் சட்ட ரீதியாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்னிய சம்பத் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தமிழ் நாட்டில் வழக்கறி ஞர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. வழக் கறிஞர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாதபடி ரவுடிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்னிய சம்பத் கொலை குறித்து வக்கீல்கள் சங்க கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக பாலு கூறினார்.

வன்னிய சம்பத் கொலை குறித்து அவருடன் சில ஆண்டு குடும்பம் நடத்திய நளினி போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. சம்பத்தின் தங்கை கலைச்செல்வி புகார் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், என் அண்ணனை ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டிக் கொண்டே இருந்தது. அடிக்கடி என் அண்ணன் என்னிடம் உயிருக்கு ஆபத்துள்ளது என்றார். அவர் சொன்ன படியே நடந்து விட்டது என்றார்.


அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை Empty Re: அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை

Post by வழிப்போக்கன் Mon Feb 22, 2010 11:17 pm

கொடுமை அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை 440806
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
» திருவண்ணாமலையில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பேராசிரியை வெட்டிக்கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
»  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை
» வத்திராயிருப்பு கலவரம்-நேற்று வியாபாரி வெட்டிக்கொலை-இன்று வாலிபர் குண்டு வீசி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum