ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

+3
BPL
Manik
அன்பு தளபதி
7 posters

Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by அன்பு தளபதி Mon Feb 15, 2010 1:43 pm


தோல்வி,
தோல்வியல்ல தம்பி! (1)

- எம்.எஸ். உதயமூர்த்தி
தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerஉங்கள் கருத்துகள்தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerநண்பருக்கு அனுப்பதோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerபிரதி எடுக்க

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Quoteblackநாம் தோல்வியாளர்களா?
இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ
இந்தமுறை தோல்வியுற்றோம்.தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Unquoteblack(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன்
‘வெற்றிக்கு முதல் படி’ நூலிலிருந்து)


வாழ்வில் தோல்வி
என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த
காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள்
தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக்
கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன்.
அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான்.
நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம்
செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை
குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை
இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.
அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது
கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும்
மோசமாகிவிடும்!

666 மருந்து

ஒரு
மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை
அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான்
அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல,
எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம்
பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத்
தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக்
கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார்.. மனம் சளைக்காமல் முயன்றார்.
கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை
சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது?
விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது
கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு
இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி
கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

இரவும் பகலும்

நாம் வாழும் உலகை -
இந்த பிரபஞ்சத்தைப் பாருங்கள். இதிலிருந்து சில உண்மைகளை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும். அந்த உண்மைகள் நமக்கு மன ஆறுதலையும், நம்பிக்கையையும்
தருகின்றன.

என்ன அந்த உண்மைகள்?

உலகில் பகலுக்குப் பின் இரவு
வருகிறது. அதே போல இறப்பு பிறப்பு, இன்பம் துன்பம், வெற்றி தோல்வி என்பவை
உலகில் மாறி மாறி வருகின்றன. இவற்றை மாற்ற முடியாது. இதுதான் உலக உண்மை.

துன்பம்
இல்லாத உலகம் உண்டா?
இருள் இல்லாத வெளிச்சம் உண்டா?
பள்ளம் இல்லாத
மேடு உண்டா?

துன்பம், தோல்வி இவையெல்லாம் வாழ்க்கையின் பகுதிகள்;
ஒரு காசின் இரண்டு பக்கங்கள்.

"என் குழந்தை செத்து விட்டான். அவனைப்
பிழைக்க வையுங்கள்" என்று அழுத தாயிடம் புத்தர் சொன்னார். "எந்த வீட்டில்
சாக்காடு இல்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் எள் வாங்கி வா".

அந்த
பெண்மணி வீடு வீடாக ஏறி இறங்கினாள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஏதாவது ஒரு
சாவு நிகழ்ந்துதான் இருக்கிறது என்பதைக் கண்டாள். பிறப்பும், இறப்பும்,
துன்பமும் தோல்வியும், வெயிலும் மழையும், மின்னலும் இடியும் வாழ்க்கையின்
ஓர் அங்கம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

சோதனை மேல் சோதனை

தோல்வி வந்தபோது நாம் என்ன
செய்யலாம்? அதைக் கண்டு அழுது 'ஐயோ இப்படி நேர்ந்து விட்டதே' என்று
புலம்பலாம். அல்லது, "தோல்வி தானே! எனக்குத் தெரியும், அதை எப்படி
சமாளிப்பது என்று" எனச் சொல்லிக் கொண்டு, தைரியத்துடன் அதைச் சமாளிக்கலாம்.
இப்படிப்பட்ட அணுகுமுறை ஒன்றுதான் நம் கையிலிருக்கிறது.

சில
காலகட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதில்லை. என் நண்பர் டாம்,
குடும்பத்துடன் இரவு விருந்துண்ணப் போனார். கடைகள் எல்லாம்
மூடிவிட்டார்கள். சாமான் வாங்க கடைத்தெருப்பக்கம் போனார். சிலை திறப்பு
விழாவில் பாதைகளெல்லாம் திசை திருப்பி விடப்பட்டன. ரெயிலேறினார். இவர் ஏறிய
ரெயிலுக்கு முன் சென்ற ரெயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால், ரெயில்
பாதி வழியில் நின்று போயிற்று! சில நேரம் தொடர்ந்து இப்படி நடக்கிறது. பட்ட
காலிலேயே படும் அல்லவா?

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக - ஆண்டவனே
நமக்கெதிராக இருக்கிறார்களா? அதெல்லாமில்லை!

மனவியல் அறிஞர் யங்
சொல்கிறார்: "இவையெல்லாம் அடையாளங்கள்! இவை எல்லாம் முன்னோடிகள் - வரும்
நிகழ்ச்சிகளின் போக்கைத் தெரிவிக்கும் சூட்சுமங்கள். 'மேலே செல்லுங்கள்
அல்லது செல்லாதீர்கள் என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள்" என்கிறார்.

"இதை
நாம் புரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

அதேபோல
சிலநேரங்களில் எடுத்ததெல்லாம் வெற்றியடைவதைப் பார்த்திருப்பீர்கள்.
தொட்டதெல்லாம் பொன்னாவதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு முறை எனக்கு
டெல்லியிலிருந்து கடிதம், பத்திரிக்கையிலிருந்து பாராட்டு, சர்வதேச விருது
என்று அதிசயப்படும்படி ஒன்று மாற்றி ஒன்று நடந்து என்னை திகைப்பில்
ஆழ்த்தின.


தோல்வி,
தோல்வியல்ல தம்பி! (2)

- எம்.எஸ். உதயமூர்த்தி
தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerஉங்கள் கருத்துகள்தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerநண்பருக்கு அனுப்பதோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Green_flowerபிரதி எடுக்க

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Quoteblackதடைகள் ஏற்படும்;
ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக்
கல்லைத் தாண்ட முடியுமா?தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Unquoteblack(நிலாச்சாரலுக்காக
விசேஷ அனுமதியுடன் 'வெற்றிக்கு முதல் படி' நூலிலிருந்து)

ஆடிப்பட்டம் தேடி விதை

மலை, ஆறு,
கடல், வீடு வாசல், மாடு, மனை என்பன நாம் கண்ணால் பார்க்கின்ற உலகம்;
மற்றொன்று நாம் புரிந்து கொள்ள முடியாத - புலனுக்கு அப்பாற்பட்ட சக்திகள்
இயங்கும் உலகம்.

இந்த புலனுக்கு அப்பாற்பட்ட உலகம், சிலநேரம் நமக்கு
சில செய்திகளை சொல்கிறது; சில காலகட்டம் ஏற்றது; சில காலகட்டம் ஏற்றதில்லை
என்று. இன்று மனவியல் அறிஞர் யங் அப்படிச் சொல்வதைத்தான் அன்றே வள்ளுவர்
"காலமறிதல்" - காலமறிந்து செயல்படுதல் என்று எழுதி வைத்து விட்டுப்
போயிருக்கிறார்.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதுபோல நமது
நல்வாழ்வின் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது
நல்லது. காற்றுள்ள பொழுதே தூற்றிக்கொள்ள வேண்டும். தவற விட்டு விடக்கூடாது.
ஏனென்றால், எப்பொழுதாவது ஒரு முறைதான் அதிர்ஷ்டம் நம் வீட்டுக் கதவைத்
தட்டும்!

"தோல்வியின் அடையாளங்கள் தென்படும்போது கொஞ்சம்
பின்வாங்கி, நிதானித்து, மறு பரிசீலனை செய்யுங்கள்; அவகாசம் எடுத்துக்
கொள்ளுங்கள்; வேறு பாதையில் முயலுங்கள்" என்று சொல்கிறார் யங். தோல்வியின்
அடையாளம் 'காலம் கனிந்து வரவில்லை' என்பதைக் காட்டுகிறது. காலச் சக்கரம்
மறுபடியும் திரும்பும்.

தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை
என்பதை சூசகமாக தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள
வேண்டும். உடனே வேறு பாதையை ஆராய வேண்டும்.

தடைகள் ஏற்படும்;
ஏற்பட்டால் நின்று நிதானிக்க வேண்டும். தடைக்கல் மீது ஏற முடியுமா? தடைக்
கல்லைத் தாண்ட முடியுமா? அல்லது, கல்லைக் குடைந்து உள்ளே புக முடியுமா? என
யோசிக்க வேண்டும்.

வீடு கட்டிய இடத்தில் ஒரு பெரிய பாறை இருந்தது.
வீடு கட்டிக் கொண்டிருந்தவன் முதலில் அதை அப்புறப்படுத்த விரும்பினான்;
முயன்றான்; முடியவில்லை. அந்த பாறை மீது ஒரு காவல் மாடம் (வாட்ச் டவர்)
ஒன்றைக் கட்டினான்! "யார் வருகிறார்கள் இந்தப்பக்கம்?" என்று
உயரத்திலிருந்து பார்க்க முடிந்தது இப்போது!

மீந்த இட்லி

எங்கள் கிராமத்தில்
கிருஷ்ண அய்யர் காப்பிக் கடை என்றால் பிரசித்தம். ஊரில் மூன்று நாள்
திருவிழா. இட்லிக்கு மாவு நிறைய அரைத்து வைத்திருந்தார். மாவை அப்படியே
வைத்திருந்தால் புளித்துப் போய்விடும்.

ஆனால், எதிர்பார்த்த கூட்டம்
வரவில்லை. சுட்ட இட்லி பாதிக்கு மேல் அப்படியே இருந்தது. நேற்று சுட்ட
இட்லியை என்ன செய்ய முடியும் என்று கவலைப்படலாம்; அல்லது குப்பையில்
கொட்டலாம். தடைக்கல்தான்! ஆனால், அதைத் தடைக்கல்லாக எடுத்துக் கொண்டாரா
அவர்? இல்லை. படிக்கல்லாக மாற்றினார்! அதை இன்னும் சிறப்பான பொருளாக செய்து
விற்றார்.

என்ன செய்தார் கிருஷ்ணய்யர்? இட்லியை எல்லாம்
உதிர்த்தார். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு வதக்கினார். கடுகு
தாளித்து, இட்லியை உதிர்த்துப்போட்டுப் புரட்டினார். சாப்பிட்டால்
தேவாமிருதமாய் இருந்தது. 'இட்லி உசிலி' பறந்து போய்விட்டது. அதிக விலையில்!

சில
ஓட்டல்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? 'இட்லி உசிலி' மிஞ்சினால்,
மாலையில் அத்துடன் மாவு சேர்த்துப் பிசைந்து பகோடா ஆக்கிவிடுவார்கள்! பகோடா
மிஞ்சினால் இரவு பகோடா குழம்பு வைத்துவிடுகிறார்கள்.

வெற்றிக்கும்
இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன!. 'தோல்வி ஏற்பட்டுவிட்டதே' என்று
துவண்டு போய் கன்னத்தில் கை வைத்துவிட்டால், ஒரு வழியும் தோன்றாது.
அதனால்தான் நம் ஊரில் "கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே"
என்பார்கள்.

புல் வெட்டும்
எந்திரம்


அமெரிக்க நாட்டில் ஒரு கம்பெனி புல் வெட்டும்
எந்திரம் செய்து விற்றது. அங்கே எல்லார் வீட்டிலும், வீட்டிற்கு முன் புல்
வளர்த்திருப்பார்கள். கோடையில் மூன்று மாதம் வாரா வாரம் புல் வெட்ட
வேண்டும். கோடைகாலம் முடிந்ததென்றால் பனிக்காலம் தொடங்கிடும்; புல் வளராது.
புல் வெட்டத் தேவை இல்லை. எனவே வியாபாரம் பனிக் காலத்தில் படுத்துவிடும்.

இந்த
நேரத்தில் ஒரு மனிதர் வந்தார். இந்த புல் வெட்டுகிற எந்திரத்தின் அடியில்
பனியில் சறுக்க, சறுக்குப் பலகைகளை வைத்துத் தரமுடியுமா? என்று கேட்டார்.
புதிய முயற்சி. அதிக வேலை. எனினும் அவர்கள் சளைக்கவில்லை. செய்து
கொடுத்தார்கள்.

எந்திரத்தின் மீது சவாரி செய்துகொண்டு புல்
வெட்டுவது போல, இப்போது பனியின் மீது சறுக்கிக் கொண்டு வேகமாக செல்ல
முடிந்தது! புதிய பனி வண்டி ("ஸ்நோ மொபைல்") பிறந்தது! விற்பனை
இலட்சக்கணக்கில் போயிற்று.

பனிக்காலம் என்று கம்பிளியைப் போர்த்திக்
கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை அவர்கள்! பனிக் காலத்திலும் வியாபாரம்
நடக்கும் ஒரு புதிய கருவியைத் தயாரித்தார்கள்.

மனம் இருக்கிறதே, அது
ஒரு அபார சாதனம். அதைத் தட்டிக் கொடுத்து, உற்சாகமாக பேசினோமானால்
தோல்வியைக் கூட வெற்றியாக அது மாற்றிவிடும்.

தோல்வி என்பது
தோல்வியல்ல! நாமே மேலே ஏறும் வெற்றிப் படி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by Manik Mon Feb 15, 2010 1:46 pm

தோல்வியைக் கண்டு கலங்காதே வெற்றி மிக அருகில்


அருமையான கட்டுரை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by BPL Mon Feb 15, 2010 2:10 pm

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 139731 நோ நோ நோ நோ குவாட்டர் அடிச்சுட்டு குப்புறல்லாம் படுத்துக்கக் கூடாது.

தோல்வி என்பது
தோல்வியல்ல! நாமே மேலே ஏறும் வெற்றிப் படி
....
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by BPL Mon Feb 15, 2010 2:11 pm

Manik wrote:தோல்வியைக் கண்டு கலங்காதே வெற்றி மிக அருகில்


அருமையான கட்டுரை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by mohan-தாஸ் Mon Feb 15, 2010 2:12 pm

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by VIJAY Mon Feb 15, 2010 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by சபீர் Mon Feb 15, 2010 2:18 pm

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 440806 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by anbutannaan Mon Feb 15, 2010 2:19 pm

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by அன்பு தளபதி Wed Feb 17, 2010 8:51 pm

நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by Manik Wed Feb 17, 2010 8:52 pm

BPL wrote:
Manik wrote:தோல்வியைக் கண்டு கலங்காதே வெற்றி மிக அருகில்


அருமையான கட்டுரை நண்பா தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 677196

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 678642 தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? 154550 பங்க்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்? Empty Re: தோல்வி வந்தபோது நாம் என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாம் என்ன செய்யலாம்?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
» வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum