ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும்

Go down

கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும் Empty கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும்

Post by தாமு Mon Feb 08, 2010 5:47 am

கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும் Cmalarnews_47433108092

கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும் Cmalarnews_83877199889















google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);








google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);



கேள்வி: நான் இப்போதுதான் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் மற்றும் வேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். வேர்டில் டாகுமென்ட் ஒன்றை (சிறியதுதான்) உருவாக்கியபின் அதனை சேவ் செய்திட பைல் மெனு சென்று குச்திஞு அண் தேர்ந்தெடுத்து கொடுத்தால் சேவ் ஆகிறது. அதன்பின் அதனைத் திறந்து மேலும் சில வரிகளை டைப் செய்திட மை டாகுமென்ட்ஸ் சென்று பைலின் பெயருக்கு நேராக கிளிக் செய்தால் பைல் திறக்க மறுக்கிறது. கை மாதிரி வடிவமும் வருவதில்லை. இது எதனால்?


– ஆர். சகாயராஜ், திண்டுக்கல்பதில்: வேர்டில் டாகுமெண்ட்டை குச்திஞு கட்டளை கொடுத்தே சேவ் செய்யலாம். ஏற்கனவே சேவ் செய்த பைலை இன்னொரு பெயரில் சேவ் செய்திடத்தான் குச்திஞு அண் கட்டளை தர வேண்டும். மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் நீங்கள் திறக்க விரும்பும் பைலின் பெயர் மீதுதான் கிளிக் செய்திட வேண்டும். எதிராக அல்ல. பெயர் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். அல்லது ஒரு முறை கிளிக் செய்து பின் என்டர் தட்டுங்கள். இந்த செயல்பாடுகளின் போது மவுஸ் கர்சர் அம்புக்குறி போல்தான் தோற்றமளிக்கும். கை மாதிரியோ அல்லது கோப்பை மாதிரியோ தோற்றமளிக்காது.


கேள்வி: பலவகையான அட்ரஸ் புக்குகள் விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ளதாகவும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஒன்று உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து விளக்கவும்.

– சி.நாராயண மூர்த்தி, கண்டமனூர்பதில் : விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக ஒரு விண்டோஸ் அட்ரஸ் புக் உள்ளது. இதனை Start, All Programs, Accessories, Address Book என வரிசையாகச் சென்று பெறலாம். இதில் நமக்குத் தேவைப்படும் நபர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், இமெயில் முகவரிகள் எனப் பல வகையான தகவல் களைப் போட்டு வைக்கலாம். இதில் குரூப், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வகை வகையாகப் பிரித்தும் போட்டு வைக்கலாம். இதுவும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள அட்ரஸ் புக்கும் வேறு வேறு.


கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா முதல் வரி இடைவெளியை (பாரா இன்டென்ட்) அப்படியே வைத்து கீ போர்டில் உள்ள கீகள் வழியாக டெக்ஸ்ட்டை அப்படியே தள்ளி அமைக்கலாமா?அதற்கான வழிகளைக் கூறவும்.

–சி. பவித்ரா, சின்னமனூர்பதில்: உங்கள் கேள்வி சரியே. கீ போர்டின் உதவியுடனும் இதனை அமைக்கலாம். டெக்ஸ்ட் அமைப்பதில் முதல் வெளி எனப்படும் இன்டென்ட் அமைக்கிறோம் அல்லவா? இதனை கீ போர்டு மூலமும் மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக பத்தி ஒன்றில் தொடக்க வரி அரை அங்குலம் தள்ளியும் மற்ற வரிகள் முதல் இடத்திலும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்தியில் கர்சரை வைத்து கண்ட்ரோல் + எம் கீகளை அழுத்துங்கள். இப்போது அந்த பத்தி அப்படியே வலது புறமாக அரை அங்குலம் நகர்த்தப்படும். பாரா தொடக்க இன்டெண்ட் மாறாது. இதனை வேண்டாம் என்று கருதினால் கண்ட்ரோல்+ ஷிப்ட் + எம் கீகளை அழுத்தினால் பழைய நிலைக்கு வந்துவிடும். இனி கண்ட்ரோல் + ட்டி (Ctrl + T) அழுத்துங்கள் . பாராவின் முதல்வரி எங்கு தொடங்குகிறதோ அந்த இடத்திற்கு மீத வரிகள் அனைத்தும் வந்துவிடும். இதனை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற (Ctrl + T + Shift) என்ற கீகளை அழுத்துங்கள்.


கேள்வி: கூகுள் இணைய தளத்தில் உள்ள காலண்டர் வசதியை எப்படி பெற்று பயன்படுத்தலாம்?

–என். சதீஷ் குமார், கோயம்புத்தூர்பதில்: கூகுல் தரும் பல வசதிகளில் இது ஓர் அருமையான வசதி ஆகும். இதனை இலவசமாகவே அமைத்துக் கொள்ளலாம். இதனை www.google.com/calendar என்ற தளத்தில் பெறலாம். இதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை டைப் செய்தால் அது தானாகவே அந்த தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்து கொண்டு நமக்கு நினைவூட்டும். எடுத்துக்காட்டாக office meeting edding at 13.30 Hrs என டைப் செய்தால் குறிப்பிட்ட நாளிற்கானதாக அது எடுத்துக் கொள்ளப்படும். பின் இதனைப் பார்க்கும் உரிமை உங்களுக்கு மட்டுமா அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் குழுவிற்காக அல்லது அனைத்து நபர்களுக்குமா என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம். இது யாஹூ காலண்டர் சேவையைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு காலண்டர்களுக்கிடையே நிகழ்வுகளை மாற்றிக் கொள்ளும் வசதியினைடு கூகுள் தந்துள்ளது.


கேள்வி: சில வேளைகளில் ஐந்துக்கும் மேற்பட்ட புரோகிராம்களைத் திறந்து வேலை பார்க்கிறேன். அப்போது ஒரு சில புரோகிராம்களை மட்டும் மூட வேண்டியுள்ளது. ஒரே முயற்சியில் அவற்றை மூட முடியுமா? அல்லது ஒவ்வொன்றாகத்தான் மூட வேண்டுமா?


– எஸ். பவன்தாஸ், விழுப்புரம்
பதில்: ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. கண்ட்ரோல் கீ அழுத்திக் கொள்ளுங்கள். பின் மூட வேண்டிய புரோகிராம்களை, டாஸ்க்பாரில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே மவுஸால் ரைட் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் மெனுவில் குளோஸ் (Close) பட்டனை அழுத்தவும். இதே முறையைப் பயன்படுத்தி இந்த புரோகிராம்களை மினிமைஸ், மேக்ஸிமைஸ், ரெஸ்டோர், காஸ்கேட் ஆகிய வேலைகளையும் மேற்கொள்ளலாம்.


கேள்வி: நான் முதலில் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பல்வேறு (ஸ்கைப், கூகுள் டாக், யாஹூ ஐ.எம்.) புரோகிராம்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் என் நண்பர்களுடன் ஹெட் செட் பயன்படுத்தி பேசி வந்தேன். ஆனால் புதிய கம்ப்யூட்டரில் எந்த புரோகிராமிலும் பேச முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

–சீ. ஸ்ரீனிவாஸ் தங்கதுரை, திண்டிவனம்பதில்: மிகப் பெரிய கடிதம் எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதியதிலிருந்து உங்கள் மைக் அல்லது ஹெட்செட்டிலிருந்து செல்லும் வயர் சரியாகப் பொருத்தப்படவில்லை என்று தெரிகிறது. மைக் சரியாக உங்கள் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும். பொதுவாக இது இளஞ்சிகப்பு வண்ணத்தில் இருக்கும். அடுத்து உங்கள் மைக்ரோபோன் மியூட் (Mute) செய்யப் படாமல் உள்ளதா என்று டெஸ்ட் செய்திடவும். இதற்கு உங்கள் டாஸ்க் பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திடவும். அப்போது வால்யூம் கண்ட்ரோல் என்ற கண்ட்ரோல் பாக்ஸ் கிடைக்கும். இதில் இறுதியாக லைன் இன் (Line In) என்று இருப்பதன் கீழாக Mute என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறு கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்து விடவும். அநேகமாக இனி உங்கள் மைக் செயல்படத் தொடங்கும் என எண்ணுகிறேன்.


கேள்வி: பைல்களை எப்படி ட்ராக் அண்ட் ட்ராப் மூலம் ஒரு டைரக்டரியிலிருந்து இன்னொரு டைரக்டரிக்கு மாற்ற முடியும்?

–ஆர்.கே. செல்வராஜ் பிள்ளை, இராஜபாளையம்
பதில்: முதலில் எந்த பைலை மாற்ற வேண்டுமோ அந்த டைரக்டரி அல்லது போல்டரை விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் திறந்து கொள்ளுங்கள். பின் அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். இனி மீண்டும் இன்னொரு முறை விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து கொள்ளவும். இப்போது அந்த பைலை எந்த போல்டர் அல்லது டைரக்டரிக்கு மாற்ற வேண்டுமோ அதனைத் திறக்கவும். இப்போது இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் ரெஸ்டோர் டவுண் (Restore Down ) செய்திடவும். இதனை விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கட்டங்களில், நடுவில் உள்ள இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள கட்டத்தின் மேல் கிளிக் செய்து மேற்கொள்ளலாம். இப்போது உங்கள் மானிட்டர் திரையில் பைல் இருக்கும் இடமும், அது செல்ல வேண்டிய இடமும் தெரியும். இனி தேர்ந்தெடுத்த பைலின் மீது மவுஸின் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்துச் சென்று, அது இருக்க வேண்டிய இன்னொரு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள டைரக்டரி அல்லது போல்டரில் விடவும். சிறிய மெனு ஒன்று தெரியும். காப்பி/மூவ் செய்திடவா என்று கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து விடுங்கள். பைல் இடம் மாறிவிடும்.


கேள்வி: என் அலுவலகத்தில் அக்கவுண்ட் மெய்ன்டெய்ன் செய்திட எக்ஸெல் ஒர்க் புக் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு முறை ரூபாய் மற்றும் இரண்டு தசம ஸ்தானத்தில் பைசா டைப் செய்கையில் புள்ளி அடிக்க வேண்டியுள்ளது. இதனைக் கம்ப்யூட்டரே டைப் செய்திடும் வகையில் மாற்ற முடியுமா?

–என். கன்னையா, திண்டுக்கல்பதில்: தாராளமாக செட் செய்திடலாம். ஆனால் செட் செய்த பின் நீங்கள் வெறும் ரூபாய் மட்டும் டைப் செய்திடக் கூடாது. ஏனென்றால் நீங்கள் 123 ரூபாய் என்பதை 123 என டைப் செய்தால், நீங்கள் செட் செய்தபடி, எக்ஸெல் 1.23 (ஒரு ரூபாய் இருபத்து மூன்று பைசா) என எடுத்துக்கொள்ளும். எனவே 123 ரூபாய் என்றால் 12300 என டைப் செய்திட வேண்டும். சரியா! இனி இதற்கான செட்டிங்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். டூல்ஸ் (Tools) கிளிக் செய்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் ஆப்ஷன்ஸ் (Options) தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கிடைக்கும் விண்டோவில் எடிட் (Edit) டேப் கிளிக் செய்திடவும். இதில் செட்டிங்ஸ் (Settings) என்று இருப்பதில் நான்காவதாக உள்ள பிக்ஸெட் டெசிமல் பிளேசஸ் (Fixe Decimal Places) என்று இருப்பதைக் காணவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அருகில் உள்ள சிறிய கட்டம் இப்போது உயிர் பெற்று அதில் 2 எனத் தெரியும். இதனை அப்படியே விட்டுவிடலாம். வேறு எண் இருந்தால் அதனை 2 என மாற்றவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இதனை மாற்றாதவரை நீங்கள் எந்த எண் டைப் செய்தாலும் அதன் கடைசி இரண்டு இலக்கங்கள் இரண்டு தசம ஸ்தானங்களாக எடுத்துக் கொள்ளப்படும்.


கேள்வி: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்ப்பது எப்படி? இதில் அந்த பைலின் பெயர் மற்றும் வகை தவிர வேறு என்ன என்ன தகவல் கிடைக்கும்?

–கே. கமலேஷ் குமார், செக்கானூரணிபதில்: ஒரு பைலின் ப்ராபர்ட்டீஸ் பார்க்க இரு வழிகள் உள்ளன. பைலை அதன் டைரக்டரி சென்று அதன் பெயரில் அல்லது டெஸ்க்டாப்பில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் கீழாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் பைலின் பெயர், அதன் வகை, அது எந்த புரோகிராமில் திறக்கும்படி செட் செய்யப்பட்டுள்ளது, அருகேயே அந்த புரோகிராமினை மாற்றுவதற்கு வசதி தரப்பட்டிருக்கும். இதனை அடுத்துள்ள பிரிவில் அந்த பைல் கம்ப்யூட்டரில் உள்ள டைரக்டரி, அந்த பைலின் அளவு, அது டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இட அளவு தரப்பட்டிருக்கும்.


மூன்றாவது பிரிவில் அது என்று உருவாக்கப்பட்டது, என்று திருத்தப்பட்டது, என்று காணப்பட்டது என்று காட்டப்படும். இறுதியான பிரிவில் அந்த பைல் எந்த வகையில் பதியப்பட்டுள்ளது என்று காட்டப்படும். அதைப் பார்க்க மட்டும் தான், திருத்தப்படக்கூடாது என்றால் Read only என்றும், திருத்தப்படலாம் என்றால் Hidden என்றும் தரப்பட்டிருக்கும். இந்த இடங்களில் பைலின் தன்மையை மாற்றலாம். இதனுடன் மேலும் சில மாற்றங்களை பைலின் பண்புகளில் மேற்கொள்ள வேண்டும் என்றால் Advanced என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
ப்ராப்பர்ட்டீஸ் விண்டோவினைப் பெற இன்னொரு வழியும் உள்ளது. பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஆல்ட்+என்டர் கீகளை அழுத்தவும்.


கேள்வி: நான் என் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்தவுடன் அது தானாக ஆப் ஆகிவிடுகிறது. முதலில் ஆன் செய்தபோதுஅழுத்திய ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால் மானிட்டரில் அதுவரை இளம் பச்சையாக எரிந்து கொண்டிருந்த சிறிய இன்டிகேட்டர் விளக்கு தீ சிகப்பாக மாறிவிடுகிறது. இது எதனைக் குறிக்கிறது? மானிட்டர் ஆப் ஆகிறதா? அல்லது ஆப் செய்திட வேண்டுமா?

–கா. அழகிய மணவாளன், திருவண்ணாமலைபதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கும் பல வாசகர்கள் இது குறித்து அவ்வப்போது கேட்கும் கேள்வி இது. இப்போதைய கம்ப்யூட்டர்களில் ஷட் டவுண் செய்தாலே போதும். சிபியுவிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்படும். முன்பெல்லாம் சிபியுவின் ஸ்விட்சை ஆப் செய்திட வேண்டும். ஆனால் மானிட்டரின் விளக்கு நிறம் மாறுவது எதனைக் காட்டுகிறது? பச்சையிலிருந்து இளஞ்சிகப்பு நிறத்திற்கு மாறினால், மானிட்டருக்கு வந்து கொண்டிருக்கிற தகவல்கள் நின்றுவிட்டன என்று பொருள். சிபியு ஆப் செய்யப்பட்டுவிட்டதால் தகவல் வராது அல்லவா? ஆனால் பவர் மானிட்டருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருள். திரை ஒளியூட்டப் படவில்லை. இதற்கு செல்லும் மின்சக்தியை நிறுத்த வேண்டும் என்றால், மானிட்டரின் ஸ்விட்சை (பெரும்பாலும் அழுத்தும் வகையில் இருக்கும்) அழுத்தினால் போதும். சில பழைய வகை மானிட்டர்களில் திரை நீல நிறத்தில் அல்லது பல வண்ணங்களில் கோடுகள் உள்ள தொகுதி தெரியும். மற்ற சாதனங்களையும் பாருங்கள். சில ஆப்டிகல் மவுஸ்களில் மின்சக்தி வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் சிறிய அளவில் விளக்கு எரியும். இதே போல் சில ஸ்கேனர்கள், பிரிண்டர்கள் மற்றும் கீ போர்டுகளில் கூட இதே போல் சிறிய எல்.இ.டி. விளக்கு எரியலாம். இவை எரிவதால் பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக இவை அனைத்திற்கும் ஒரு ஸ்விட்ச் வைத்துக் கொண்டு, இவற்றிற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிடலாம்.


-நன்றி-தினமலர் கம்ப்யூட்டர் மலர் கம்யூட்டர்-சார்ந்த பிரச்சனைகளும்..தீர்வுகளும் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum