ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”

Go down

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Empty “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”

Post by சிவா Wed Feb 03, 2010 8:59 pm

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Nasi


பிரதமரின் சிறப்பு உதவியாளர்: “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”


இன்று காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்களால் சீற்றமடைந்த மஇகா, மசீச உறுப்பினர்களும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளிநடப்புச் செய்தனர்.

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.

“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.

“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.

“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”

“அவர்களின் குடியிரிமையைப் பறிக்க இவர் யார்? என்று சினமுற்ற அந்த வட்டாரம் கேட்டது.

இதன் பின்னர், மஇகா மசீச உறுப்பினர்களும் அங்கிருந்த இதர அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அறையைவிட்டு வெளிநடப்புச் செய்ய தீர்மானித்தனர்.

“ஏற்பாட்டாளர்கள் எங்களை வெளியேறாமல் தடுப்பதற்காக தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நாங்கள் மிகுந்த வேதனையில் இருந்தோம். இது ஜாசா என்ற தகவல் அமைச்சின் சிறப்பு விவகார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.”

இதனிடையே, மஇகா இளைஞர் பிரிவு இச்சம்பவம் மீது செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று மாலை இரு புகார் செய்ய திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், பெப்ரவரி 4 ஆம் தேதி மலாக்காவிற்கு வருகை புரியும் நஜிப்பிடம் ஒரு மனு அளிக்கப்படும்.

சாமிவேலு: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்

இச்சம்பவத்தால் கடும் சினமடைந்துள்ள மஇகா தலைவர் ச. சாமிவேலு இச்சம்பவத்திற்குப் பொறுப்பான நசிர் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலிவான கோரிக்கை விடுத்தார்.

நசிரின் கூற்று “இனவாதத்தின் உச்சக்கட்டம்” என்று வர்ணித்த அவர் பிரதமர் அவருடைய உதவியாளருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போலீஸ் புகார் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்திய அவர், “இந்திய மலேசியர்களை இழிவுபடுத்திய இம்மனிதரின் காலனித்துவ மனப்பான்மையை மஇகா வன்மையாக கண்டிக்கிறது”, என்றார்.

“இம்மனிதரின் போக்கு ஒரே மலேசியா கோட்பாட்டின் கீழ் அரசாங்கமும் பிரதமரும் பேணிவரும் நல்லிணக்கத்திற்கு எதிர்மாறானதாக இருக்கிறது’, என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டிலுள்ள தற்போதைய இந்தியத் தலைமுறையினர் மலேசியாவில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்கள் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்பதை நசிர் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நிலைமை அவ்வாறிருக்க, தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று கூற இவர் யார்”, என்று சாமிவேலு வினவினார்.

“நான் எனது 29 ஆண்டுகால அமைச்சர் பணியில் இந்திய மலேசியர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு தகுதியுடையவராக கருதிய ஒரு மனிதரைக் கண்டதில்லை. அவமானத்துக்குரியவறே!”, என்று சாடிய அவர் பிரதமர் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பத்துமலைக்குப் போவதின் அர்த்தம் என்ன?

மஇகா இளைஞர் பிரிவின் ஆலோசகர் எஸ். வேலுபாரியும் இவ்விவகாரம் குறித்து தமது ஆதங்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

“மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக பிரதமர் மேற்கொண்ட கடும் உழைப்பு இச்செயலால் பாழாக்கப்பட்டு விட்டது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“இங்கு அவருடைய சொந்த சிறப்பு அதிகாரி ஒரே மலேசியாவின் கோட்பாட்டை புரிந்துகொள்ளாதிருக்கையில், நஜிப் தைப்பூசத்திற்குப் பத்துமலைக்குச் செல்வது, தமிழ் நாட்டிற்குச் சென்று தமிழர்களுடனான நெருங்கிய உறவு குறித்து பேசுவது போன்றவற்றால் என்ன பலன்?”, என்று வேள்பாரி வினவினார்.

போலீசார் இந்த அதிகாரியை தேசநிந்தனைக்காக விசாரிக்க வேண்டும். இந்திய மற்றும் சீன மக்களிடையே எழும்பக்கூடிய எந்த ஒரு புதிய கவலையையும் அகற்றுவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரம் சம்பந்தமாக, மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் எ. ராஜரெத்னம், நசிர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரினார்.

எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், மலேசிய இந்திய இளைஞர் மன்றம் ஒரு பெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் என்றார்.

மலேசியா இன்று:


“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சைதாப்பேட்டையில் குழந்தையை கடத்திய 3 பெண்கள் கைது: ஆட்டோ டிரைவரும் பிடிபட்டார்; ரூ.2 1/2 லட்சத்துக்கு விற்க திட்டம்
» பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!
» கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
» வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !
» பட்டாபிராமில் மாநாட்டுக்கு வந்தவர்கள் ரெயிலில் சமையல் செய்தபோது தீ விபத்து; ஒரு பெட்டி எரிந்து நாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum