ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணப் பொருத்தங்கள்

2 posters

Go down

திருமணப் பொருத்தங்கள் Empty திருமணப் பொருத்தங்கள்

Post by சிவா Mon Sep 29, 2008 12:04 am

திருமணப் பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் பார்க்க வேண்டும். அப்பொருத்தங்கள் உள்ளதா இல்லையா என அறிய கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

1 ) தினம் : பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2 ) கணம் : ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3 ) மாகேந்திரம் : பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4 ) ஸ்திரீ தீர்க்கம் : பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி : நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.
குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by சிவா Mon Sep 29, 2008 12:05 am

6 ) ராசி : பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி : பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8 ) வசியம் : பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9 ) ரஜ்ஜு (மாங்கல்யம்) : நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10 ) நாடி : 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6 க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.
இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by Guest Wed Jun 24, 2009 6:01 pm

அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by ராஜா Wed Jun 24, 2009 6:46 pm

நல்ல தகவல் தான் , ஆனா கொஞ்சம் லேட்டா போட்டுத்தீங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by Guest Wed Jun 24, 2009 6:47 pm

ஒ௫ கல்யாணந்தான ஆயி௫க்கு (Just joke)
avatar
Guest
Guest


Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by ராஜா Wed Jun 24, 2009 6:51 pm

மு௫கனடிமை wrote:ஒ௫ கல்யாணந்தான ஆயி௫க்கு (Just joke)

எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல , ஆத்துக்காரிய நினைச்சா தான் கொஞ்சம் உடம்பு உதறுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணப் பொருத்தங்கள் Empty Re: திருமணப் பொருத்தங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum