ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளியோபாட்ரா

3 posters

Go down

கிளியோபாட்ரா Empty கிளியோபாட்ரா

Post by சிவா Sat Apr 18, 2009 11:17 pm

கிளியோபாட்ரா Cleopatra
கிளியோபாட்ரா

உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை. கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார் கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப் பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழை யும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என் கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள்.

வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக் கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலை களைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். இதெல்லாம் போதா தென்று ஒன்பது மொழி களில் எழுத, பேச, படிக்கவும் தெரியும்.

ஆச்சா? கிளியோ பாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக் கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவை யும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!

இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம்.

ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது. ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன் கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கை யெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது?என்று தூண்டி விட்டார்கள்.

ஆகவே, அந்த ஜூனியர் டால மியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோ பாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான்.

இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ. அப்பேற்பட்ட சீசர். தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்ப தாகக் கேள்விப் பட்டாள் கிளியோபாட்ரா.

அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப் பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள்.

மாபெரும் வீரரே! இதோ உங்களுக் கான பரிசு! அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு! கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப் பதிலேயோ, கல்யாணம் செய்து கொள் வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. அவளது நோக்கமெல் லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியு மானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை!

கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பூ! இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார். யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணி யானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள். இதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற் கடிக்கப்பட்டதும் உண்மையே.

மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்த தன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற் றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது!

திருமணத்துக்குப் பிறகு கிளியோ பாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டு வதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னா லேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச் சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவருக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.


Last edited by சிவா on Sat Apr 18, 2009 11:29 pm; edited 2 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிளியோபாட்ரா Empty Re: கிளியோபாட்ரா

Post by சிவா Sat Apr 18, 2009 11:18 pm

சீசரின் மரணத்துக்குப் பின் ரோமானிய சாம் ராஜ்ஜியத்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, தேசம் இரண்டாகப் பிளந்தது. கிழக்குப் பகுதியை அப்போது மார்க் ஆண்டனி என்பவன் பிடித்துக் கொண்டான். ஷேக்ஸ்பியர் காவியம் ஞாபகத்துக்கு வருகிறதா? இப்போது தான் கிளியோபாட்ரா- மார்க் ஆண்டனி காதல் அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது!

அதிகாரத்துக்கு வந்த ஆண்டனி, முதல் வேளையாக எகிப்து ராணி யான கிளியோ பாட்ரா வுக்கு ஒரு சம்மன் அனுப்பினான். தன் எதிரி களுக்கு அவள் அடைக் கலம் கொடுத்திருக்கிறாள் என்று தான் கேள்விப் படுவதாகவும் அது பற்றிய விசாரணைக்கு அவள் வரவேண்டுமென்றும்! இப்போதுதான் கிளியோபாட்ரா ஒரு முடிவு செய்தாள். எகிப்தின் சுதந்திரத் தைக் காப்பாற்றவும், மாபெரும் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் தன்னையே அர்ப்பணிக்கலாம் என்பதே அம் முடிவு!

அழகாக டிரெஸ் பண்ணிக் கொண்டாள். பெரியதொரு அமைதிப் படையுடனும் நிறைய பரிசுப் பொருட் களுடனும் சேடிப் பெண்களுடனும் ஆடல்-பாடல் மங்கையருடனும் புறப் பட்டவள், ஒரு அழகான நதிக்கரையில் ஆண்டனியைச் சந்தித்து வணக்கம் சொன்னாள். அடடா, அந்த மோகனப் புன்னகை! சீசரையே வீழ்த்திய அப் புன்னகையின் முன்னால், ஆண்டனி எம்மாத்திரம்? அவ்வளவு தான் ஆள் காலி! அடுத்தக் கணமே ஒரு வளர்ப்பு நாய்க்குட்டி மாதிரி கிளியோபாட்ராவின் பின்னால் நடந்துபோக ஆரம்பித்து விட்டான் ஆண்டனி. அப்புறம் அவன் ரோம் திரும்பி வேறொரு விதவைப் பெண்ணை மணந்ததும் மீண்டும் எகிப்து வந்து கிளியோபாட்ராதான் தன் நிஜமான மனைவி என்று பப்ளிக்காக அறிவித்ததும் அதன் சாட்சியாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்று, தானே அவர்களுக்குத் தந்தை என்று சொன்னதுமெல்லாம் சரித்திரம்.

என்ன பிரச்சினையாகி விட்டது என்றால், இந்த தன்னறிவிப்புப் பிரகடனம் கண்டு பொறுக்காத ஆண்டனியின் அந்த விதவை மனைவியான ஆக்டோவியா என் பவளின் தந்தை ஆக்டோவியன், கிளியோ பாட்ராவை ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து எகிப்து மீது படை யெடுத்து விட்டான். இந்த ஆக்டோவியன் யார் என்றால் நமது கதாநாயகி யான கிளியோபாட்ராவின் முன்னாள் கணவன் சீசரின் அத்தைப் பையனோ, மாமா பையனோ! சுத்திச் சுத்தி பங்காளிப் பகைதான்!

ஆச்சா? எகிப்து மீது ஆக்டோவியன் படையெடுத்து விட்டான். கிளியோ பாட்ராவையும் அவளது ராஜ்ஜியத்தை யும் காப்பாற்ற வேண்டியது இப்போது ஆண்டனியின் பொறுப்பாகி விட்டது. ஓராண்டு சண்டைகளில் ஆண்டனி தப்பித்தாலும் இறுதியில் அவன் சரணடைய வேண்டியதாகி விட்டது.

கிளியோபாட்ரா மட்டும் எப்படியோ தப்பித்து ஒரு ரகசிய இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துவிட்டாள் என்றும் உயிருடன்தான் ஒளிந்திருக் கிறாள் என்றும் பல பேர் பலவிதமாகச் சொல்லி ஆண்டனியைக் கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆக்கி விட்டார்கள். உண்மையில், அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், பயங்கர விஷமுள்ள மலைப்பாம்பைக் கடிக்க விட்டு, கிளியோபாட்ரா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

கிளியோபாட்ராவின் சாகசங்கள் மிக்க வாழ்க்கை இன்றைக்கு சந்தேக மில்லாமல் ஒரு தேவதைக் கதையாகி விட்டது. அவளது அழகும், காதல் களும் மட்டுமே அதிகம் பேசப்படும் விஷயங்களாகி விட்டன. உண்மையில் அவள் தன் தாய் மண்ணான எகிப்தை மிகவும் நேசித்தவள். அவளது போராட்டமெல்லாம் மண்ணை காப்பதற்காகவே நடத்தப்பட்டன. காதலெல்லாம் அதற்கான கருவியாகவே அவளுக்குப் பயன்பட்டிருக்கிறது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிளியோபாட்ரா Empty Re: கிளியோபாட்ரா

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:54 pm

கிளியோபாட்ராவின் கதை படிக்க சுவாரஸ்யமாகவும் திருப்பங்கள் மிகுதியாகவும் இறுதி வரியில் தன் தாய்மண்ணை நேசித்தவள் என்பதாகவும் படித்தபோது கிளியோபாட்ராவின் மேல் தனி மதிப்பே வந்துவிட்டது எனக்கு....

நாட்டை காக்க தம்பியை திருமணம் செய்து வைத்தாலும் சேர்க்கை சரியில்லாத காரணத்தால் தம்பியே அக்காவை நாட்டை விட்டு விரட்டியது சோகம்....

அதன்பின் மாவீரர் சீசரின் துணையோடு வந்து தம்பியை வெற்றிக்கொண்டு மீண்டும் முடி சூடிக்கொண்டு சீசரை மணந்துக்கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்டு அதென்னப்பா சிசேரியனுக்கு அர்த்தம் சீசரினால் வயிற்றை கீறி பிள்ளை எடுத்ததாலா? ஆச்சர்யமான தகவல் இதுநாள் வரை நான் அறிந்திருக்கவில்லை... இப்போது இதை படித்ததின் மூலம் அறியப்பெற்றேன்...

சீசரின் மறைவுக்குப்பின் ஆண்டனி அவன் அத்தனை வீரனில்லையோ சீசரை போல நெப்போலியன் போல? கிளியோபாட்ராவையும் மணந்து பின் விதவையையும் மணந்ததால் வந்த பிரச்சனை கிளியோபாட்ராவின் உயிரையே பறித்துவிட்டதே...

ஒரு பெண் கொஞ்சம் அழகா இருந்தாலே போதுமே கழுகுகள் வட்டமிடுமே... கிளியோபாட்ரா உலகமே போற்றும் அழகின்னா விட்டு வைப்பாங்களா ஒரேடியா சாகடிக்க துடிச்சதும் ஆனால் யார் கையாலும் சாக விரும்பாத கிளியோபாட்ரா கொடிய விஷப்பாம்பை கடிக்கவிட்டு இறந்தது அதுவும் 39 வயசு என்பது சின்ன வயசு தான்... கொடுமை சோகம்

அருமையான பகிர்வு சிவா....

அன்பு நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிளியோபாட்ரா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிளியோபாட்ரா Empty Re: கிளியோபாட்ரா

Post by ஹாசிம் Mon Jun 14, 2010 8:08 pm

இவள் சரிதையில் மெய்மறந்தேன்அண்ணா அதனால்தான் நீங்கள் விட்டதை நான் தொடர்கிறேன் உங்கள் பகிர்வில் ஆனந்தம் அண்ணா நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
கிளியோபாட்ரா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கிளியோபாட்ரா Empty Re: கிளியோபாட்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum