ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய குடியரசு தினம்....

Go down

இந்திய குடியரசு தினம்.... Empty இந்திய குடியரசு தினம்....

Post by யுவா Wed Jan 27, 2010 11:17 am

அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது.
உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும் ... சுதந்திர தினம் என்றும், குடியரசு தினம் என்றும் இரு நாட்களாகக் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம்.

ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்?

எதற்காக?எப்போதிருந்து என்பதற்கான விடை காண இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா?

அவர்களுக்கு அதற்கு நேரமோ, அவகாசமோ இதற்கெல்லாம் இல்லைதான்!

அரசியல் கட்சிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சேவைச் சங்கங்கள்...... என்று குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியில் வண்ணப் பூக்களைக் கொட்டி கெட்டியாக கயிற்றால் கட்டி முடிச்சுப் போட்டு கொடிக் கம்பத்தோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டி வைத்திருப்பார்கள். அதை அவிழ்த்து அந்தக் கொடிக் கம்பத்தின் உச்சி முகர வைத்து ஒரே ஒரு உதறலில் முடிச்சு அவிழ்க்கப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பூக்களுக்கு விடுதலை அளித்து கொடி....கயிறை விட்டுப் போய் விடாமல் காற்றில் படபடவென பறக்க வைக்க ஒரு வி.ஐ.பி.! முப்படை அணி வகுப்பு! மாநிலங்கள் கண்ட சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணி வகுப்பு!

மாநிலங்களில், மாவட்டங்கள் சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு, சிறந்த சேவை புரிந்தோர்க்கு பதக்கங்கள், விருதுகள் கெளரவிப்புகள் என்று இந்தியத் துணைக் கண்டமே விழாக் கோலமாயிருக்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் மணிக்கொடி! வண்ணமயமாய் மூவர்ணக்கொடி காற்றில் படபடக்கிறது.

பள்ளிச் சிறுவர்களுக்கு குதூகலம். வாயில் இனிக்கும் மிட்டாய். அதைவிட இனிப்பு....

இன்று பள்ளி விடுமுறையல்லவா?

கூடல்நகரில்.....!

நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத சில இளைஞர்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்.....இவர்களின் கண்களும் காதுகளும் விழித்துக் கொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள் உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள் பேசிக் கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை! பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு; ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது.

அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான்.

எல்லோரும் பெற்றுக் கொண்ட அடுத்த வினாடி....

அரைகால் டிரவுசர் அணிந்த இளைஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப் பிடித்துக் கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடி வருகின்றனர்!

அவர்கள் ஓடி வந்து நின்ற இடம் மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மதில்சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள அவன் முதுகில் மற்றவன், அவன் முதுகில் இன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர்.

அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும் தாங்கள் கையோடு கொண்டு வந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர்.

கட்டி முடித்து விட்டு கீழே பார்க்கின்றனர்; தலை சுற்றிப் போகிறார்கள்; ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம், என்று எண்ணுகிறார்கள்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது; தூரத்தில் வருகிறவர் முகம் தெரியாத இருட்டு!

கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தை பெருக்கி சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிற காலை வேளை!

பால், தயிர், மோர் விற்கும் பெண்கள்! வீட்டுக்கு தண்ணீர் சுமக்கும் பெண்கள்! காலைக் கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள்! அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது!

ஆஹா! அடைந்து விட்டோமா!?

நாம் அந்தச் சுதந்திரத்தை என்று வியப்பு மேலோங்கப் பார்த்து பரவசப்படுகின்றனர். அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்கு காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது! அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரிய வேண்டுமென்று கட்டிப் பறக்க விட்டிருந்தார்கள்!

அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது!

குடியரசு தினம் மலர்ந்த காரணம்...

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ''பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்'' என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகி விட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930,ஜனவரி 26ம் தேதி- முதல் குடியரசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

''நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.'' ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்...சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1948ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக் கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum