ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

3 posters

Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by rajuselvam Mon Jan 01, 2024 3:55 am

காணப்படும் காட்சிகள் நம்மை ஆட் கொள்கின்றன. இதனை நம் புலன்களால் அறிகிறோம் .

இப்படி இயற்கை நியதிகள்  இருக்கும் போது எப்படி நம்மால் நிகழ்கால நிகழ்வுகளை  ஆட் கொள்வது .

அப்படி செய்வதால் நாம் நம் இயல்பு நிலையை விட்டு ஏதேதோ ஒரு மாற்றத்திற்கான வழியை நமக்கு நாமே தேடிக் கொள்வது போல் ஆகி விடாதா ?


Boyhood என்கிற படத்தை Richard linklater என்கிற Director 2012 ல் தொடங்கி 2023 ல் முடித்தார்.

இதில் நடித்த  நடிகர்கள் எல்லோரும் 12 வருடங்களாக இந்த படத்தின் ஊடாக பயணித்தனர்.

இதன் மூலம் "டைரக்டர் " கூறுவது என்ன என்றால் : நமக்கு ஏற்படும் நிகழ்வுகள்- சோதனைகள்; வேதனைகள்; இழப்புகள்; பிரிவுகள் - எல்லாம் தான் நம்மை வழி நடத்துகின்றன.

ஆக, நடப்பவை ஒவ்வொன்றும் நம்மை  "இருத்தல் " செய்கிறது.

நாம் இங்கே "இருத்தலியல்" காரணிகளால் செயல் ஆற்றுகிறோம்.

இப்படி இயற்கை நியதிகள் இருக்க , எப்படி நம்மால் செயற்கையாக யோசித்து, கவனித்து, ஒரு நிகழ்வை பார்த்து , அனுபவித்து, உட்கொண்டு செயல்பட முடியும்.


இதுவும் ஒரு சில நொடி பொழுதில்  மாறக் கூடியவை ஆகும்.


ஆக , இயல்பாக இருப்பதே வாழ்வின் அர்த்தம் என்கிற நோக்கில் படம் எடுக்கப்பட்டு இருப்பதாக விமர்சிக்கின்றனர்.

அவரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ஆனால் தத்துவ ஞானிகள்  இந்த போக்கை மறுக்கின்றனர்.


மார்க்ஸியம் மற்றும் இருத்தலியல் கோட்பாடு ஆகிய இரண்டும் வாழ்கையின் இரண்டு கண்களாக போற்றப்பட வேண்டி இருக்கிறது.

அகம், புறம் இரண்டையும்  சம நிலையில் கொண்டு பார்த்து வாழ்வதே ஆகச் சிறந்தது என்பது தத்துவார்த்த சிந்தனையாக இருக்கிறது.

எது சரி, எது மிகச் சரியானது என்பதை காலம் பதில் சொல்லட்டும்.

Experts from boyhood by Richard linklater:-

எங்களுக்கு ஓர் ஆங்கிலத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதன் பெயர் ‘பாய்ஹுட்.’ ரிச்சர்டு லிங்க்லேட்டர் என்ற இயக்குநர் அதை இயக்கியிருந்தார்.

அத்திரைப்படத்தை அவர் அதே நடிகர்களை வைத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் படமாக்கியிருந்தார்.

அதனால் அத்திரைப்படத்தைப் பார்ப்பவர்களால், வாழ்க்கையின் ஓட்டத்தைத் தங்கள் கண்களின் முன்னால் எளிதாக தரிசிக்க முடிந்தது.

165 நிமிடங்கள் ஓடுகின்ற அத்திரைப்படத்தின் தொடக்கத்தில் அதன் கதாநாயகனான மேசன் ஓர் ஆறு வயதுச் சிறுவனாக இருப்பான். அவனுடைய பெற்றோர் விவாகரத்துப் பெற்றிருப்பர். அவன் வளர வளர, அவன் பலதரப்பட்ட அனுபவங்களைப் பெறுவான்.

அவன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது அத்திரைப்படம் நிறைவு பெற்றிருக்கும். தன் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கும் மேசன் ஒரு புத்திசாலியான, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற இளைஞனாக உருவெடுத்திருப்பான். மிகச் சிறந்த அத்திரைப்படத்தில் எங்களை மிகவும் கவர்ந்த காட்சி அதன் இறுதிக் காட்சிதான்.

அந்த இறுதிக் காட்சியில் மேசன் தன் கல்லூரி நண்பர்கள் சிலருடன் ஒரு மலைப்பகுதியில் நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்வான்.

அவர்களோடு ஓர் இளம்பெண்ணும் வந்திருப்பாள் (அவள் அவனுடைய வாழ்வில் ஒரு முக்கியமான பாத்திரமாக மாறுவாள் என்ற எண்ணம் நமக்கு தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது!).


மேசன் அப்பெண்ணுடன் சேர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான். அதைப் பார்த்துப் பரவசமடையும் அவள், மேசனிடம், “நிகழ்கணத்தைக் கைப்பற்றிக் கொள் என்று இப்போது எல்லோரும் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை என்னால் இப்படித்தான் பார்க்க முடிகிறது: நிகழ்கணங்கள்தாம் நம்மைக் கைப்பற்றிக் கொள்கின்றன!” என்று கூறுவாள்.


அத்திரைப்படத்தின் இக்காட்சி பெருமளவுக்கு விவாதிக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை இச்சிகோ இச்சியேவுடன் தொடர்புடையவை.

கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்படி அவர்கள் நோக்குமிடமெல்லாம் பிற கர்ப்பிணிப் பெண்கள் தெரிகிறார்களோ, அதுபோலவே, நாம் நிகழ்கண வேட்டையாடிகளாக ஆகும்போது, இக்கணத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது மீண்டும் ஒருபோதும் நிகழாது என்ற முன்னறிதல் நமக்கு இருப்பதால், நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு கணமும் அலாதியான அனுபவங்களாக மலரும்.


Last edited by rajuselvam on Mon Jan 01, 2024 1:19 pm; edited 2 times in total
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020

https://selvasil.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by Dr.S.Soundarapandian Mon Jan 01, 2024 8:46 am

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by Anthony raj Mon Jan 01, 2024 1:58 pm

நல்ல கேள்வி :அருமை

என்னை poruthavarai
காணப்படுவது ஒரு நிலை உயிர் ஓட்டம் consciousness முதல் நிலை
கண்டு உணர்வு விழிப்புணர்வு 2 நிலை
புரிந்துணர்வு 3 நிலை
அறிவு பகிர்ந்து உணர்வு
நிலையான உணமையான வற்றை தேடி இறுக பிடித்து கொள்வது அடுத்த நிலை

நாம் எதை தேடிய பயணிகள் என்பது முக்கியம் ஆகிறது அதை அந்த நிலை கொண்டு வாழ்வை ரசிக்க முயற்சி செய்கிறது மனது

இந்த கணம் என்பது ரசிக்க முடிவதும்
உண்டு. ஆனால் சில வேளைகளில் இதற்கு மேலான ஒன்றை மனம் தேடும் போது ரசிக்க முடியவில்லை.

இயல்பு நிலை ஒரு கொள்கை இறுக பிடித்து இருத்தல் மனம் சிந்தனை ஓட்டம்
அறிவுத்திறன் புரிந்துணர்வு திறன் இப்படி பல நிலைகளில் மனித மனம் உலா வருகிறது என்று நினைக்கிறேன்.
வருவதை ஏற்றுக் கொண்டு அடுத்த நிலை நாடி தேடி உண்மையான நிலையான வாழ்வு எங்கு உ‌ள்ளது எ‌ன்று வாழ வேண்டும் என நினைக்கிறேன்.

உணர்வு (புலன்) மட்டுமே கொண்டு வாழ முடியும் ஆனால் அது போதும் என்றால் ரசிப்பது தடை இல்லை

தவறு இருந்தால் மன்னிக்கவும்
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 09/09/2023

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by rajuselvam Tue Jan 02, 2024 2:43 am

ஐயா ,

வணக்கம்.

ஆதி சங்கர் அருளிய அத்வைத தத்துவப் படி "அகம் பிரமாஸ்மி" - அகமே பிரம்மம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள்.

கண்டு உணர்த்தல்,

விழித்து உணர்தல்,

பகுத்து உணர்தல்,

ஆகிய மூன்றும் மனதின் செயல்பாடுகளே!!

கண்டுணர்வின் போது மனம் செயல் படுகிறது; விழித்துணர்வின் போது புலன்கள் செயல் படுகின்றன; பகுத்துணர்வின் போது அறிவு செயல் படுகிறது.

செயல்கள் அறம் சார்ந்து இயங்கும் போது மனித நேயம் பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு.

"பிரபஞ்ச சக்தி " தான் நம் எல்லா உணர்வுக்கும்" ஜீவ சக்தி"யாக இருக்கிறது.

ஆக நம் கண்டுணர்வும்,விழிப்புணர்வும், பகுத்துணர்வும் பிரபஞ்ச இயக்கத்தில் இணைய நம்மை இயல்பாக மாற்றிக் கொள்ள முயல்வோம்.

இயல்பு நிலை என்பது இயற்கையோடு வாழ்வியலை இணைப்பது; எல்லா உயிர்களுக்கும் மதிப்பு அளிப்பது; "அண்டமே  பிண்டம், பிண்டமே
அண்டம்" என்று கருதி அமைவது.


Last edited by rajuselvam on Wed Jan 03, 2024 12:01 am; edited 1 time in total
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020

https://selvasil.blogspot.com

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by Anthony raj Tue Jan 02, 2024 9:04 pm

உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூப்பருங்க
என் கருத்துகள் மட்டுமே. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அகம் தேடுதல் என்பது ஒரு வேட்டை போல அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.

புறம் இன்றி அகமும் இல்லை. ஐம்புலன் என்கின்ற உணர்வுகள் மனிதனை தனியாக இயக்க எளிதில் முடிவதில்லை. 6 வது அறிவு இல்லை என்றால் நிறைவு பெறுவதும் இல்லை. ஏதோ ஒன்று எப்போதும் மனிதனிடம் குறைகிறது.

அகம் பிரம்மா என்றால் இறப்பு இல்லை என்று ஆகி விடும் அகம் மட்டுமே வாழ்க்கை என்றால் முயற்சி நம்பிக்கை வரம் அருள் ஈசன் என்பது இல்லை என்று ஆகி விடும்.

முயற்சி திருவினையாக்கும் என்று சொன்னால் எத்தனை சதவீதம் வாழ்க்கை இனிமை என்று சொல்வது கடினம் தான்.

அறிவு இன்றி மனித நேயம் மட்டுமே சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

சித்தர்கள் வாழ்ந்த முறை.. பரம் பொருள் அணுகி..
பக்தி இன்றி ஒன்றும் இல்லை. அவனின்றி ஒன்றும் இல்லை.
வாழ்க்கை என்பது பார்க்கும் நபரை கொண்டு
மாறுகிறது.

வள்ளலார்... அருட் பெரும் Jothi. மனத்தில் நிறைய தடைகள் தாண்டி ( 5 அல்லது 6 கதவை தாண்டி..

கண்டு உணர்வை விட காணாமல் தேடுவது இ‌ன்னு‌ம் இனிமை
காணப்படுவதை விட காண முடியாதவை மீது ஆர்வம் தருகிறது

We are dust. Temprovary.. சொல்லி கொள்ளும் வகையில் நம்மிடம் ஒன்றும் இல்லை.

இருள் தீய சிந்தனைகள் செயல்கள் தவிர்த்து
ஒளியின் நன்மை பயக்கும் செயல்கள் செய்து இனிமையாய் வாழ வாழ்த்துக்கள்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 09/09/2023

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by rajuselvam Wed Jan 03, 2024 12:18 am

அருமை.

பல தேடல்களை எனக்கு நானே தேடித் கொள்ள வழி வகுத்துள்ளீர்கள் !!

உண்மை. கண்டு உணர்வதை விட காணாமல் தேடுவது இன்னும் இனிமை...

தேடுகிறேன்......


ஒரு ஐயம் அல்லது சந்தேகம்.

அதாவது கற்று உணர்ந்த ஞானிகள் பலர் தன் எல்லா ஞான செருக்கையும் கைவிட்டு பிறகு அந்த ஒளியை ( மாபெரும் சக்தியை) கண்டதாக , உணர்ந்த தாக கூறுகின்றனர்.

நான் எப்படி எடுத்துக் கொள்கிறேன் என்றால் , வாழ்க்கை என்பது இயற்க்கை சார்ந்து , மனித இனம் சார்ந்து, சமூகம் சார்ந்து இயங்கும் ஒரு நிலை.

இதை உணர்ந்தவர்கள் சுயத்தை இழக்க முற்படுகின்றனர்.

ஆக , குழந்தை போல் இரு என்பது எல்லா உயர்களிடமும் அன்பு பாராட்டி இருப்பது அன்றி வேறு என்ன சொல்ல முடியும்.

முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா என்கிற கேள்வி எழுகிறது?

இப்படியே கேட்டு கொண்டே போக வேண்டி இருக்கிறது.

வாழ நினைத்தால் வாழலாம்,

பாதை தெரிந்தால் பயணம் புரியும்,


புரிதலை நோக்கிய பயணத்திற்கு வித்திட்ட உங்களுக்கு நன்றிகள்.

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020

https://selvasil.blogspot.com

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by Anthony raj Sat Jan 06, 2024 5:23 pm

வாழ்த்துக்கள் சூப்பருங்க

முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா என்கிற கேள்வி எழுகிறது? நல்ல கேள்வி நம்மை மட்டும் அல்ல பிறரையும், எதிர் பார்ப்பு இன்றி unconditional love

ஒன்றை இழக்கும் போது innondru கிடைக்கும். இது இயற்கை விதி. மனம் empty இருந்தால் தான் நிரப்ப முடியும்,
ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி விடுவது கடினம்.இதனால் தான் கடவுளை ரசிப்பது ரொம்ப கடினம் ஆகிறது..

நான் என்ற வார்த்தை அழிய வேண்டும் அதற்கு பெருமை ego பாரம்பரிய முறை caste செல்வம் அறிவு எனக்கு என்னோட எனக்குள் இருக்கும், இவைகள் குறைய குறைய, நீங்கள் சொல்வது போல் வரலாம் என்று நினைக்கிறேன், அப்போது குழந்தை ஆகலாம்.

பகிர்ந்து kondatharku மிகுந்த நன்றி. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் படிக்க வேண்டும். புரிய வேண்டும் அதை வாழ்வில் செயல் படுதல் வேண்டும்



Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 09/09/2023

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ... Empty Re: காணப்படுவதா !! கண்டு உணர்வதா ? - எது வாழ்வியல் எதார்த்தம் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum