ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா பெரியவா --தொடர்

2 posters

Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty காஞ்சி மகா பெரியவா --தொடர்

Post by T.N.Balasubramanian Fri Nov 17, 2023 5:03 pm

காஞ்சி மகா பெரியவா --தொடர்  402876430_7300368400008262_6884775464023089698_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6fKBXSnMxFEAX8YuT6w&_nc_ht=scontent.fmaa2-4


கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-ஸங்கீத சங்கரர் காஞ்சி மகான்.
ஆலத்தூர் சகோதரர்கள் மஹா பெரியவாவிடம் பக்தி கொண்ட வித்வான்கள். அவர்கள் எப்போது ஸ்ரீ மடத்தில் வந்து பெரியவாவிடத்தில் பாடினாலும் பெரியவா தூங்கி விடுவார் என்ற குறை மட்டும் அவர்களுக்கு உண்டு.


இதை ஒரு முறை மகானிடமே தெரிவித்து விட்டனர். "அவ்வளவு தானே! இன்று இரவு பூஜை முடித்துக் கொண்டு வந்தவுடன், விடிய விடிய உங்கள் கச்சேரி தான். நீ எப்போ தூங்கு என்று சொல்கிறாயோ அப்போது தான் தூக்கம்."


சகோதரர்கள் இதைக் கேட்டு மயங்கி விழாத குறை தான். வித்வான்கள் மிகு‌ந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பூஜை முடிந்து மகானும் வந்தார். "சரி! கச்சேரி ஆரம்பமாகட்டும்." என்றார்.


'வாதாபி கணபதிம் ' பாதி பாடல் நடந்து கொண்டிருக்கும் போது ' மேனா'வை எடுத்து வரும் படி உத்தரவு. முனிவர் ஏறி அதில் அமர்ந்தார். பாடல் முடிந்து வித்வான்கள் கேதார கௌளை ராகம் பாடினர். கந்தவர்வ கானமாக இருந்தது பாடல்.


ஆனால் ராகம் தொடங்கிய சில நொடிகளிலேயே முனிவர் மேனாவிலேயே படுத்து, கதவையும் மூடிக் கொண்டு விட்டார். மேனாவைச் சுற்றி படுதாவை இறுக்கமாகப் போர்த்தவும் ஆணையிட்டார்.


எப்படி இருக்கும் சகோதரர்களுக்கு? கற்பனைக் கோட்டை தூள் தூளானது. அதற்கு மேல் வித்வான்களுக்கு உத்வேகம் இல்லை. சகோதரர்களில் ஸ்ரீனிவாச ஐயர், "பெரியவா இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். எங்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்" என்று புலம்பினார். எடுத்த ராகத்தை சகோதரர்கள் அவசர அவசரமாக முடித்து விட்டு மீதிப் பாட்டையும் பேருக்குப் பாடிவிட்டு முடித்து விட்டனர். விடைபெற்றுக் கொள்ள காத்திருந்தனர்.


கதவு திறந்தால் அல்லவா விடைபெற முடியும். எப்போது 'விழித்துக் கொள்வார்?'

வித்வான்களுக்கு விடிய விடிய சிவராத்திரி தானா? என்ன சோதனை இது என்று அமர்ந்திருந்த போது உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. படுதா விலகி கதவு திறந்தது.


"நான் தூங்கி விட்டேன் என்று கேதார கௌளயை அவசர அவசரமாக முடித்து விட்டாயா? நிரவல், சுவரம் ஒண்ணும் வேண்டாம் என்று வைத்து விட்டாயாக்கும்? " என்றவுடன் வித்வான்கள் அழுதே விட்டனர்.


" தப்பு , தப்பு மன்னிக்க வேண்டும். "


" சீனு நீ ரொம்ப நல்லவன் தான்டா. ஆனா உனக்கு அஞ்ஞானம். நான் நேரா கண்ணைத் திறந்து கொண்டு கேட்டாத் தான் கேட்டதா உனக்கு நினைப்பு " என்றதும் இருவரும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தனர்.


" மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். "


" சரி, சரி எங்கே விட்டாயோ அங்கிருந்தே கேதாரகௌளயை ஆரம்பி " என்றார். சகோதரர்களும் ராகம், நிரவல், சுவரம் எல்லாவற்றையும் பாட, மஹா பெரியவா முழுவதும் கேட்டு மகிழ்ந்து வித்வான்களை இன்பக் கடலில் ஆழ்த்தி, வாழ்த்தி அனுப்பினார்.


நாதப் பிரம்மம் நம் பெரியவா

நன்றி முகநூல்


Last edited by T.N.Balasubramanian on Fri Nov 24, 2023 8:18 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty காஞ்சி மகா பெரியவா--பெற்றவர்கள் செய்த பாவம்

Post by T.N.Balasubramanian Fri Nov 24, 2023 8:16 pm

*பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா கொடுத்த தெளிவான விளக்கம் இதோ உங்களுக்காக.*
ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்துள்ளார்கள். யாரோ ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். உன்னுடைய கஷ்டம் தீர வேண்டும் என்றால் நீ மகா பெரியவா அவர்களை ஒரு முறை மடத்திற்கு சென்று பார் என்று. அந்த பெரியவரின் சொல்லை ஏற்று இந்த இரண்டு பேரும் அதாவது கணவனும் மனைவியும் மஹா பெரியவா மடத்திற்கு வந்து விட்டார்கள்.
இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் உள்ளே வந்து, சேர்த்துதான் அமர்ந்திருந்தார்கள். மடத்தின் வெளியே மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.
அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து இருக்கையில் அமரச் சொன்னார். *‘உன்னுடைய மகன் பித்து பிடித்தது போல இருப்பதற்கு  உன்னுடைய கணவன் வழி சொந்த பந்தங்கள் காரணம் கிடையாது. உன்னுடைய கணவரையோ உன் கணவரின் சொந்த பந்தங்களையும் நீ திட்டிக்கொண்டே சாபம் கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம், உன்னுடைய மகனுக்கு நிச்சயமாக உடல்நிலை சரியாகப் போவது கிடையாது. அடுத்தவர்களை எப்போதும் தூற்றிக் கொண்டே நிந்திப்பவர்களை அந்த அம்பாள் கூட நிச்சயம் மன்னிக்க மாட்டாள். உன் மகனுக்கு தானாக சரியாகிவிடும்’.* என்றபடி அந்தப் பெண்மணியை பார்த்தவாறு மகா பெரியவா சொன்னதும், அந்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம் நாம் எதுவுமே சொல்லவில்லையே, நம் மனதிற்குள் இருப்பதை இந்த மகா பெரியவா அப்படியே சொல்கிறாரே என்று நினைத்து பிரமித்து போய்விட்டாள்.
கஷ்டமும் நஷ்டமும் அடுத்தவர்களால் நமக்கு வருவது கிடையாது. நாம் செய்த கர்ம வினையின் மூலமாகத்தான் நமக்கு நன்மைகளும் தீமைகளும் வருகின்றது. சில பேருக்கு பிறந்ததிலிருந்தே நன்மை நடக்கும். சில பேருக்கு சில காலம் கழித்து நன்மை நடக்கும். சில பேருக்கு கடைசி வரை நன்மை நடக்காமலேயே போய்விடும். அது அவரவருடைய கர்ம வினையால் நிர்ணயிக்கப்படுகின்றது. நீ தினமும் ஸ்லோகங்கள் சொல்லுவதும், சுவாமிக்கு பூஜை செய்வதும் பெருமைக்காக அல்ல. அது உன்னுடைய கொடுப்பினை. தினமும் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்து வாசலில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி வைப்பது மங்களகரத்திற்காக மட்டும்தான். இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு மனதில் அழுக்கோடு இருந்தால் உன்னுடைய கஷ்டங்கள் தீரப் போவது கிடையாது, என்ற படியும் அந்த பெண்மணிக்கு புரியும் படி சில விஷயங்களை சொல்லி முடித்தார் மகா பெரியவா.
பிறகு இந்தப் பெண்மணியை வெளியில் அமரச் செய்துவிட்டு கணவரை மட்டும் உள்ளே வர சொன்னார். கணவர் வந்து மகா பெரியவா அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி க்கொண்டு, மஹாபெரியாவா முன்பு அமர்ந்து கொண்டார். 10 நிமிடங்கள் அமைதியாக நேரம் கழிந்தது. பிறகு வெளியில் அமர்ந்திருக்கும் மனைவியையும் உள்ளே அழைத்தார். கணவன் மனைவியும் சேர்ந்து மகா பெரியவாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். நீங்கள் இருவரும் இப்போது வீட்டிற்கு செல்லுங்கள். ஒரு மண்டலம் கழித்து, உங்களுடைய பிள்ளையோடு திரும்பவும் என்னை மகிழ்ச்சியோடு வந்து சந்திப்பீர்கள் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.
என்ன ஆச்சரியம் 48 நாட்கள் கழித்து கணவன் மனைவி மனநிலை சரியில்லாத அந்த பிள்ளை, மூவரும் வந்து மகா பெரியவாவிடம் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி விட்டது என்று சொல்லி ஆசீர்வாதம் பெற்றனர்.
கணவன் மனைவி தம்பதியர்கள் ஆக வந்தார்கள் அல்லவா. அவர்களுடைய பிள்ளை பிறக்கும்போது புத்திசாலியாகத்தான் பிறந்திருக்கின்றான். பிறகு படித்தான். பிறகு நல்ல வேலைக்கும் சென்றான். ஆனால் வேலைக்கு சென்ற சில நாட்களில் அவனை அறியாமலேயே சில மாற்றங்கள் அவனுடைய உடம்பில் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது அவனுக்கு பித்து பிடித்தது போல சுபாவம் வந்துவிட்டது. யாருடைய துணையும் இல்லாமல் அவனால் வாழ முடியவில்லை. சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லப் போனால் அவன் பைத்தியமாக மாறிவிட்டான். எவ்வளவோ மருத்துவரை போய் பார்த்தும் அவனை குணப்படுத்த முடியாமல் இறுதியாக பெற்றவர்கள், பிரச்சனைக்கு தீர்வு காண மகா பெரியவா அவர்களை தேடி வந்தார்கள்.
இப்போது தீர்வும் கிடைத்துவிட்டது. இறுதியாக மகா பெரியவா அந்த தம்பதியரை பார்த்து சொன்னது இதுதான். நமக்கு வரக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம் அடுத்தவர்கள் கிடையாது. நாம் செய்த கர்ம வினை தான் நம் பிள்ளைகளை போய் சேர்கிறது. ஆகவே, கஷ்டம் என்று வந்தவுடன் அந்த கஷ்டத்தை வைத்து அடுத்தவர்களை நாம் எப்போதும் நிந்திக்க கூடாது. (உங்களுக்கு புரிகிறதா. அந்த பெண்மணி தன்னுடைய மகனுக்கு வந்த மன நோய்க்கு காரணம், கணவன் வழி சொந்த பந்தங்கள் தான். கணவன் வழி சொந்த பந்தத்தில் இருப்பவர்கள் எல்லாம் பித்து பிடித்தவர்கள் என்பதும், அந்த சுபாவம் தான் தன் மகனுக்கு ஒட்டிக்கொண்டது என்பது மனைவியின் கற்பனை. அதனால் தான் கணவரின் மீதும் அவளுடைய கோபத்தை திருப்பினால். அது தவறு என்பதை மகா பெரியவா அந்த பெண்மணிக்கு சரியான நேரத்தில் புரிய வைத்ததன் காரணமாக அந்த பெண்மணி, தன்நிலை மறந்து செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொண்டால்).
ஆக *பெற்றவர்கள் செய்யக்கூடிய பாவமானது பிள்ளைகளை பாதிக்கும். பிரச்சனையே வந்தாலும் நீங்க அடுத்தவர்களை குறை சொல்லாதீங்க. உங்கள் பிரச்சனைக்கு நீங்கள் செய்த கர்ம வினை தான் காரணம் என்று, பிரச்சனைக்கு உண்டான தீர்வினை தேடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல வழி கிடைக்கும்.* #✡

நன்றி  சனாதனி ராஜலக்ஷ்மி சாய்ராம். /முகநூல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty Re: காஞ்சி மகா பெரியவா --தொடர்

Post by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

முற்றிலும் உண்மை தோழர் என் சிரிப்பிற்க்கும், அழுகைக்கும் நானே காரண‌ம் என்று நினைத்துவிட்டாலே பல அனர்த்தங்களை தவிரத்திடலாம்
ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்


பதிவுகள் : 129
இணைந்தது : 29/03/2023

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty வழக்கும் தீர்ப்பும் --மஹாபெரியவா

Post by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

நன்றி முகநூல்

காஞ்சி மகா பெரியவா --தொடர்  405201172_7346684168710018_2606263235415808356_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=c42490&_nc_ohc=wqutQ5MJMO0AX8lrk1j&_nc_ht=scontent.fmaa2-3


காஞ்சீபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன. வயல்வெளி, தோட்டம் – துரவு, மாதா கோயில், தர்கா, மயானம் போன்ற இடங்களில், மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன. வெய்யிலும் , மழையிலும் காய்ந்தும் நனைந்தும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்க்ளுக்கு வழிபாடுகளும் இல்லை.  பெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டலும், மழை – வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி, நித்தியப் படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீ மடத்தின் சிஷ்யர்கள் இருவர் நாள்தோறும்  ஸ்ரீ மடம் வண்டியில் சென்று அபிஷேகம், நைய்வேத்யம் செய்து வந்தார்கள். எல்லா பூஜைகளையும் முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியது பெரியவாளுக்குப் ப்ரசாதம் கொடுப்பார்கள். இந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லக்குள் இருக்கின்றன.
“மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடி சுத்தம் செய்து கொள்ளாமல் ஸ்ரீ-மடத்துக்குள் எப்படி நுழைவது? அது தவறு இல்லையோ?”  என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது.
சந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்: “நாம் மயானத்துக்கு – அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்ளப் போகவில்லை. சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்துவிட்டு,  உடனே ஸ்நானம் செய்து விட்டு, உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்லை. நமக்கு மடிக்குறைவும் கிடையாது…”  இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப் போய் கடைசியில், ஸ்ரீ மடத்தின் ”உச்ச நீதி மன்ற”த்துக்குப் போயிற்று வழக்கு!
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா. முடிவாக தீர்ப்பை கூறினார்கள்  பெரியவா.
”ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம். அதனால் தீட்டு வந்துவிட்டது – என்று எண்ணம். அந்த எண்ணம் தோன்றியவுடனேயே தீட்டும் உண்டாகீ விடுதிறட்து.  அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்…“ சந்திராவுக்கு ஸ்ம்சானம் என்ற எண்ணமே இல்லை. கோபுரம், கர்ப்ப க்ருஹம் என்றில்ல விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது – என்ற எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை. ஸ்நானமும் வேண்டாம்.
மண்டை உடைய சண்டை  போட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று. எவ்வளவு தெளிவா பெரியவா சொல்லிருக்கா.
ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை, பக்குவமா சொல்லிட்டாளே என்று வியந்தார்கள்.
பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும் பக்குவமாகத் தானே இருக்கமுடியும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty Re: காஞ்சி மகா பெரியவா --தொடர்

Post by T.N.Balasubramanian Mon Dec 18, 2023 6:47 pm



காஞ்சி மகா பெரியவா --தொடர்  410227744_7414119841966450_8400619751825532024_n.jpg?stp=dst-jpg_p843x403&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=c42490&_nc_ohc=ovi4Wp7luuYAX8psKRW&_nc_ht=scontent.fmaa2-1



தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” - பெரியவாளைப் பார்த்து ஒரு சிறுவன்
"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா" - பெரியவா.
என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?)

ஒரு மறுபதிவு.2013 போஸ்ட்.


கே.வி.கே.சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.
ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.
“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.
நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி.
பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.
உடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.
“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.
“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.
பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்துவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.
நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.
பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.
இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.
திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.
“ஆமாம்”
அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”
“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தரேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம்.
பெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்?”
“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”
“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.
“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”
“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.


என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதரிசி தானே?

நன்றி முகனூல்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா --தொடர்  Empty Re: காஞ்சி மகா பெரியவா --தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum