ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி

Go down

விநாயகர் சதுர்த்தி Empty விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:14 pm

களிமண் பிள்ளையார் வைத்து படைப்தற்கான காரணம்
-
விநாயகர் சதுர்த்தி Main-qimg-5fb8bdba5ee300ae262dcddc9349ae52
-


மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ!
அப்படிப்பட்ட மனித பிறவிதனில் நாம் அகங்காரம்
ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு
நல்லொழுக்கம் , இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை
பயனை அடைந்து முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து
என்னோடு ஐக்கியமாகுங்கள்.
உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து
செல்கின்றேன்.

எனும் தத்துவத்தை களிமண் பிள்ளையாரை வணங்குவதன்
மூலமாக விநாயகப் பெருமான் நமக்கெல்லாம்
உணர்த்துகின்றார்.

இப் பிறவி நிலைபெற்று நீங்காத செல்வம் பெற்று 16 பேறும்
பெற்று, அமைதியான வாழ்வு பெற்று, மன மகிழ்வான
நிறைவு பெற்று வாழ்வதற்கான சுகபோகங்களை
கொடுக்கக்கூடிய விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று
வரவேற்று அவன் புகழ் பாடி அவன் அருளை பெறுவோம்.
--
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:21 pm

பிள்ளையார் சதுர்த்தி- ஸ்லோகங்கள்
-
-விநாயகர் சதுர்த்தி RPC34q7
-

நினைத்த காரியங்கள் அனைத்தும் நலமாக நடப்பதற்கு
முதலில் நாம் கணபதியை வணங்க வேண்டும் என்பது
அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட முழு முதற் கடவுளான பிள்ளையாரின்
பிறந்த நாளின் பொழுது அவருடைய ஸ்லோகங்களை
சொல்லி இருபத்தொரு புஷ்பங்களை சாற்றும் போது
கடவுளின் முழுமையான அருள் நமக்கு கிடைத்து
நம்முடைய குடும்பம் சுபிட்சமாக வளரும் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட எளிய ஸ்லோகங்களை பற்றி நாம் தெரிந்து
கொள்வோம்.
-
1- சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,
சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
-
2- ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
-
3- ஐந்து கரத்தனை யானை முகத்தன இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில்
வைத்து அடி போற்றுகின்றேனே.
-
4- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது –
பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-
5- கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

6- மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

7- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்துனக்கு நான்தருவேன் –
கோலம் செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

8- அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந் தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

இவற்றில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை
பிள்ளையார் சதுர்த்தி அன்று வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம்
படிக்கலாம். அப்படியே சொல்வதற்கு நேரம் இல்லை என்றாலும்

9- ஓம் கம் கணபதி நமஹ

எனும் ஒரு வரி ஒரு வரி ஸ்லோகத்தை 108 முறை சொல்லி ம
லர்களால் அர்ச்சனை செய்தாலும் நினைத்த காரியத்தை
வெற்றியோடு நடத்தி வைப்பார் விநாயக பெருமான்.
-
-நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:28 pm

பிள்ளையாரின் ஐந்து கரங்கள்
-
விநாயகர் சதுர்த்தி Main-qimg-b673c53c2703f1d96fc86f930146be57
--

ஐந்து கரத்தனை உடையவனே!
ஆனைமுகத்தனை கொண்டவனே!
முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற
அழகான வயிற்றினை கொண்டவனே -
-
நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே!
ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -
உமையே எம் மனதில் என்றென்றும்
நினைத்து போற்றுகின்றேனே!
எம்பெருமானே உமை வணங்குகின்றேன்.
-
பிள்ளையாரின் ஐந்து கரங்களும் எவற்றைக் குறிக்கின்றது?
-
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று.
பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கைகள் இரண்டு .
தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கைகளோ மூன்று .
தமக்கு பிடித்தமான மோதகத்தையுடைய கைகளோ நான்கு -
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு
அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து-
என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக
விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
-
விநாயகர் சதுர்த்தி அன்று ஆத்மார்த்தமாக ஒரு கணம் விநாயகரை
நினைத்தாலே போதும்.
தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க
செய்வான் கணபதியே.
-
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum