ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... Poll_c10புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... Poll_m10புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ...

Go down

புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... Empty புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ...

Post by ayyasamy ram Wed Sep 13, 2023 9:18 pm

புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ... Main-qimg-7ee78b8028b960ca5e7a319fa3c04e35
-
சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப்
பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று
சிவாஜி கணேசனின் ‘புதிய பறவை’.

‘சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ’ (Chase a Crooked Shadow) என்ற
பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க
மொழியில் உருவான படம், ‘சேஷ் அங்கா’. இதன் மூலத்தை
மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையை முற்றிலும் மாற்றி
ரீமேக்செய்யப்பட்டதுதான், ‘புதிய பறவை’.

தாதா மிராசி இயக்கிய இந்தப்படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக
வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும்,
லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும்.
சிவாஜி கணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி
புரொடக்‌ஷன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது.

தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார்.
அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜாதேவியும் வி.கே.ராமசாமியும்.
அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது
பங்களாவில் தங்கச்சொல்வார் சிவாஜி.

ரயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார்,
சரோஜாதேவி. காரணம் கேட்கும் போது தனது மனைவி ரயிலில்
அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி.
அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க
இருக்கும்.

இப்போது, சவுகார் ஜானகி திடீரென வந்து நின்று,
‘முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதுநீங்கள் எப்படி திருமணம்
செய்யலாம்’ என்று கேட்கிறார் அதிர்ச்சி அடையும் சிவாஜி,
அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு
எதிராகவே இருக்கின்றன.

சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாஸும்
இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி.
பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானேகொன்றதாக,
உண்மையைச் சொல்வார் சிவாஜி.

உடனே சரோஜாதேவி, ‘வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா?
அவரை கைது செய்யுங்கள்’ என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக்.
சரோஜாதேவி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா என அனைவரும் போலீஸ்
என்பது பிறகு தெரிய வரும். ‘இது கொலைதான் என்று எங்களுக்குத்
தெரியும். ஆனால், உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே
இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள்
நடத்திய நாடகம் இது’ என்பார்கள்.

ஈஸ்ட்மன் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் –
ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே
புதுமை செய்திருந்தனர். ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு மட்டும் ப்ளூட்,
ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட
வாத்தியங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

‘சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து...’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’,
‘ஆஹாமெல்ல நடமெல்ல நட’, ‘உன்னை ஒன்றுகேட்பேன்’ உட்பட
பாடல்கள் அனைத்தும்வரவேற்பைப் பெற்றன.
கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன்,
சுசீலா பாடியிருந்தனர்.

இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப்
பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக்கொண்ட இயக்குநர்
மிராசி, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் அவர் நடிப்பைப்
பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார்.

இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின்
பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை, ‘கோப்... பால்’ என்று இழுத்து
உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது.

1964-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தை சிவாஜி
ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்
-
நன்றி-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum