ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

3 posters

Go down

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? Empty நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

Post by சிவா Sat Aug 05, 2023 8:26 pm

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? RyhWmHF

நம்மில் பலரும் வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம்.

இவ்வாறு நமது தூங்கும் பழக்கத்தில் ஏற்படும் சிறிய வேறுபாடுகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமற்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்கி எழுவதை சோசியல் ஜெட்லாக் என்று அழைக்கின்றனர்.

இவ்வாறு சோசியல் ஜெட்லாக் உள்ளவர்களின் உணவுப் பழக்கமும் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்பதால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஷிப்ட் வேலை செய்பவர்களால் தினமும் சீராக குறிப்பிட்ட நேரத்தில் தூங்க முடியாது. இதனால் தூக்கம் பெரியளவில் சீர்குலைகிறது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தினமும் தூங்கும், விழிக்கும் நேரங்களை சீராக வைப்பது, சீரான உணவை உட்கொள்வது நமது நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகளால் ஏறக்குறைய 1,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இரவு தூக்கத்தின் நடுப்பகுதியில் 90 நிமிட வித்தியாசம் காணப்பட்டால்கூட மனித குடலில் காணப்படும் பாக்டீரியா வகைகளை அது பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது.

நமது செரிமான அமைப்பில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் இருப்பது மிகவும் முக்கியம். இதில் ஒரு சில பாக்டீரியாக்கள் மற்றவைகளைவிட சிறந்தவையாக இருக்கும். ஆனால் சரியான அளவில் இவை இருப்பது பல நோய்களைத் தடுப்பதற்கு அவசியம்.

சோசியல் ஜெட்லாக் உள்ளவர்கள் நன்றாக அதிக நேரம் தூங்குபவர்களைவிட குறைவான அளவே நார்ச்சத்துக்களை சாப்பிடுவதாக முந்தைய ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்தது. இதேபோல், எடை அதிகரிப்பு, நோய், மனச் சோர்வு ஆகியவற்றுடன் சோசியல் ஜெட்லாக்கிற்கு தொடர்பு இருப்பதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது.

“குறைந்த அளவே தூங்குவது மக்களின் தேர்ந்தெடுக்கும் திறனை பாதிப்பதாகவும், மேலும் அவர்கள் அதிக கார்போஹைட்ரேட், சர்க்கரை உணவுகளை விரும்புகிறார்கள்” என்றும் கூற்ஹகிறார் இந்த ஆய்வின் ஆசிரியரும் சுகாதார அறிவியல் நிறுவனமான ஸோவின் மூத்த ஊட்டச்சத்து விஞ்ஞானியுமான டாக்டர் கேத் பெர்மிங்காம்.

ஆரோக்கியமற்ற உணவு, குடலில் உள்ள குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் அளவை பாதிக்கும்.

குடலில் அதிகம் உள்ள ஆறு மைக்ரோபயோட்டா இனங்களில் மூன்று, மோசமான உணவுத் தரம், உடல் பருமன், அதிக அளவு வீக்கம், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவை சோசியல் ஜெட்லாக்கின்போது அதிகமாகவே இருக்கும்.

தூக்கம், உணவு மற்றும் குடல் பாக்டீரியாவுக்கு இடையிலான உறவு சிக்கலானது என்றும் இதில் கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது என்றும் ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.

அதுவரை நாம் தூங்கும் நேரத்தை சீராக வைத்திருப்பது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தூக்க ஒழுக்கம் அவசியம்


நாம் தூங்கும் நேரத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் அதிகம் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ். ஜெயராமன்.

“தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் கண் விழிப்பது என்பதை நாம் பின்பற்ற வேண்டும். இதை தூக்க ஒழுக்கம் என்று அழைப்போம்.

இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு விழிப்பது சிறப்பானது. வாரத்தில் 5 நாட்கள் ஒரு நேரத்தில் தூங்கி எழுந்து, வார விடுமுறையில் அதைவிட நேரம் கடந்து தூங்கி எழுவதால் மூளையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

குடலில் உள்ள பாக்டீரியாக்களில் மாற்றம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்றவை ஏற்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

ஷிப்ட்களில் வேலை செய்பவர்கள் எப்படி சீரான தூக்கத்தைப் பேணுவது?


சீரான தூக்கத்தைப் பேணுவதில் ஒரு சிலருக்கு அவர்களின் பணிச் சூழல் தடையாக இருக்கிறது. ஒரு சிலர் இரவு வேலைகளுக்குச் செல்வதால் பகலில் தூங்கும் நிலைமை ஏற்படுகிறது.

இதேபோல் ஒரு சிலர் ஒரு வாரத்துக்கு ஒரு ஷிப்டில் வேலைக்குச் செல்வதால் அவர்களின் தூக்க சூழலும் பாதிக்கப்படுகிறது. இவர்கள் சீரான தூக்கத்தை எப்படிப் பேணுவது என்று மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “ தூங்கும் இடத்தைப் பொறுத்துவரை CCD (Cool, Calm, Dark) என்பதை நாம் கடைபிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தூங்கினால்தான் நம்மால் நீண்ட நேரம் தூங்க முடியும்.

வேறு வழியே இல்லை பகலில்தான் தூங்க முடிகிறது என்றால், நீங்கள் தூங்கும் அறையை குளிர்ச்சியாகவும், சத்தம் இல்லாமலும், இருட்டாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு நீண்ட தூக்கத்தைப் பெற முடியும்,” என்று ஆலோசனை வழங்கினார்.

இரவில் தூங்குவதற்கு முன்பு என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?


இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு சிலவற்றை நாம் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்,

இரவில் 10 மணிக்குத் தூங்கி காலை 6 மணிக்கு எழுவதைப் பின்பற்ற வேண்டும்.

இரவு 10 மணிக்கு தூங்கப் போகிறோம் என்றால் இரவு 8 மணிக்குள்ளாகவே உணவை உண்டுவிட வேண்டும்

இரவு நேரத்தில் காரம் அதிகமான, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளுக்குப் பதிலாக எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாலில் தூக்கத்துக்கு உதவும் ப்ரோட்டீன் இருப்பதால் தூங்குவதற்கு முன்பு அதை அருந்தலாம்.

சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் வாழைப் பழம் போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

தூங்குவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தியானம் செய்வது, பாட்டு கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.

இரவு உணவை எப்படி தூங்குவதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக முடித்து விடுகிறோமோ, அதேபோல், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? Empty Re: நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

Post by T.N.Balasubramanian Sat Aug 05, 2023 9:09 pm

பொதுவாக 10 மணிக்கு தூங்கப் போகிறேன்.

பாட்டெல்லாம் கேட்பதில்லை. ஈகரை பார்ப்பேன்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? Empty Re: நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

Post by Dr.S.Soundarapandian Sun Aug 06, 2023 11:04 am

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து? Empty Re: நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum