ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?

2 posters

Go down

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?  Empty கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?

Post by சிவா Mon Jul 17, 2023 7:28 pm

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?  What-is-a-good-credit-score-in-South-Africa-1200x720

நம் கிரெடிட் ஸ்கோர் 850 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், 6.80% வட்டியில் வீட்டுக்கடன், 10.5% வட்டியில் தனிநபர் கடன் கிடைக்க வாய்ப்புண்டு!

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்ன? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரிடம் முக்கியமாக, சீனியர் சிட்டிசன்களிடம் விடை இருக்காது. காரணம், இதன் முக்கியத்துவத்தை நாம் அறியாததுதான். ரத்த அழுத்த அளவும், சர்க்கரை அளவும் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம் பொருளாதார ஆரோக்கியத்துக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம்.

இன்று கடன்களும், கிரெடிட் கார்டும் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய மான அங்கம் வகிக்கின்றன. ஏனெனில், கடன் இல்லாமல் இன்று நாம் வீடு வாங்க முடியுமா அல்லது அம்பானி, அதானி போன்றவர்கள்தான் உலகளாவிய நிறுவனங்களை அமைக்க முடியுமா?

வீட்டுக் கடன், தனிநபர் கடன் என எந்தக் கடனாக இருந்தாலும், அது நமக்கு விரைவாகவும், குறைந்த வட்டி விகிதத்திலும், நல்ல நிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்க வேண்டும் எனில், நம் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?


கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண்; 300 முதல் 900 வரை இருக்கும்; சிபில், எக்ஸ்பீரியன் போன்ற நிறுவனங்கள் நமது கடன் வரலாறு களையும் நடத்தைகளையும் அலசி, ஆராய்ந்து இந்தப் புள்ளிகளை நமக்குத் தருகின்றன.

நாம் ஒரு கடனுக்கு விண்ணப் பிக்கும்போது கடன் நிறுவனங்கள் நமது கிரெடிட் ஸ்கோரை ஆதாரமாகக் கொண்டே கடன் வழங்குகின்றன. அதிகப் புள்ளிகள் இருந்தால், நமது கடன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று அர்த்தம். அதிகப் புள்ளி களைப் பெறுவோருக்கு கடன், கிரெடிட் கார்டு போன்றவை நல்ல நிறுவனங்களில் குறைந்த வட்டியில் எளிதாகக் கிடைக்க வாய்ப்புண்டு.

நம் கிரெடிட் ஸ்கோர் 850 புள்ளி களுக்கு மேலே இருக்கும்பட்சத்தில், 6.80% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன், 10.50% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்; வாழ்நாள் முழுதும் கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டு வசதிகள் எனப் பல விஷயங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு!

கிரெடிட் ஸ்கோர் குறைவது ஏன்?


சிலர், கிரெடிட் கார்டு பில்களையும், கடன் இ.எம்.ஐ-யையும் சரியான நேரத்தில் கட்டாமல் இருக்கலாம்; கிரெடிட் கார்டை அதிகப்படி யான லிமிட் வரை அடிக்கடி பயன்படுத்துபவராக இருக்கலாம்; ஒரே சமயத்தில், பாதுகாப்பு இல்லாத (Unsecured) கடன்கள் பலவற்றை வாங்கியிருக்கலாம். இது போன்ற செயல்கள் அவர்களது கிரெடிட் ஸ்கோரைப் பாதித்து பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் கடனுக்கோ, கிரெடிட் கார்டுக்கோ விண்ணப்பிக்கும்போது, அந்தக் கடன் நிறுவனம் நம் ஸ்கோரை சோதிக்கும் (check) செய்யும். அப்படி சோதிக்கும் ஒவ்வொரு முறையும் நம் கிரெடிட் ஸ்கோர் குறையும். (ஆனால், நமது கிரெடிட் ஸ்கோரை நாமே சோதிக்கும்போது கிரெடிட் ஸ்கோர் குறையாது. பல படித்த இளைஞர்கள்கூட இதை அறியாமல் தங்கள் கிரெடிட் ஸ்கோரை சோதித்தால் குறைந்துவிடுமோ என்று பயந்து சோதிக்காமலே இருக்கின்றனர்).

நாம் கடன் இ.எம்.ஐ-க்காக நிறுவனங்களில் முன்கூட்டியே கொடுத்த காசோலைகளை அந்த நிறுவனங்கள் சரியான தேதியில் சமர்ப்பிக்காவிட்டாலும் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். கடன் முழுவதையும் அடைத்து, எந்த பாக்கியும் இல்லை (No Due Certificate) வாங்கியிருந்தாலும்கூட சில சமயம் கடன் நிறுவனம் அந்தக் கடனை ‘முடிந்த கடன்’ (Closed) என்று குறிப்பிடத் தவறியிருந்தால் அது நம் கிரெடிட் ஸ்கோரை அதிகமாகப் பாதித்திருக்கும். அது பற்றி அறியாமல் நாம் அடுத்த கடனுக்கு விண்ணப்பிக்கும்போதுதான் கிரெடிட் ஸ்கோர் குறைந்திருக்கும் விவரம் தெரியவரும்.

இது போன்ற அதிர்ச்சிகளைத் தவிர்க்க அவ்வப்போது நம் கிரெடிட் ஸ்கோரின் ஆரோக்கியத்தை அறிந்திருப்பதும், குறைந்திருந் தால் ஏனென்று கவனித்து சரிசெய்வதும் அவசியம்.

கோவிட் நேரத்தில் அதிர்ச்சி...


கடனே வாங்காதவர்கள்கூட வருடம் இரு முறையாவது கிரெடிட் ஸ்கோரை சோதித்தறிவது அவசியம் என்றாகிவிட்டது. 2022-ல் கோவிட் பெருந்தொற்றானது மக்களை வீட்டுச் சிறையில் வைத்திருந்த நேரத்தில், ட்விட்டரில் அடிக்கடி வந்த செய்தி இது. “நான் கடனே வாங்கவில்லை; ஆனால், கடனை ஒழுங்காகக் கட்டவில்லை என்று என் கிரெடிட் ஸ்கோர் குறைந்துள்ளது ஏன்?” எனப் பலரும் புலம்பித் தீர்த்தனர். இந்தப் புலம்பல் ஒரு வழியாக ரிசர்வ் வங்கியை அடைந்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்புதான் அப்பாவி மக்கள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் கடன்கள் வாங்கப்பட்ட விவரம் வெளியானது. அதன் பின்னர், இந்தக் கடன்கள் அடைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கிரெடிட் ஸ்கோர்களும் சரிசெய்யப்பட்டன.

ஆகவே, கடன் வாங்கியவர்கள் மட்டுமல்ல, கடன் தேவைப்படாதவர்கள்கூட தங்கள் கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேங்க் பஜார் நிறுவனத்தின் தலைவர் அதில்ஷெட்டி கூறியுள்ளார். கடந்த ஜூன் 12 முதல் 18 வரை கிரெடிட் ஸ்கோர் விழிப்புணர்வு வாரம் ஒன்றை நடத்திய அவர், பல விஷயங்களை வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறைந்த கிரெடிட் ஸ்கோர்; அதிகரித்த நஷ்டம்...


நமது கிரெடிட் ஸ்கோரில் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் முக்கியமான பங்கு வகிக் கின்றன. மாதாந்தர பில் தொகையை மொத்த மாகக் கட்டாமல் இ.எம்.ஐ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்த மறுநிமிடம், நம் கிரெடிட் ஸ்கோர் குறையத் தொடங்குகிறது. ஒரு மாதம் பில் கட்டுவது தாமதமானதால், தான் சந்தித்த விளைவுகளை சையத் என்பவர் விவரித்து உள்ளார்.

சையத், கிரெடிட் கார்டை அதிகம் உபயோகப்படுத்தும் வழக்கம் இல்லாதவர். ஒரு முறை ரூ.250-க்கு ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டு, பர்ஸில் பணம் இல்லாததால், கிரெடிட் கார்டை உபயோகித்திருக்கிறார். பின்னர், அதை மறந்துவிட்டார்.

பில் வந்தபோது அவர் வெளிநாட்டில் இருந்ததால், உடனே பில்லைக் கட்ட இயல வில்லை. இந்தியா திரும்பியதும் முதல் வேலையாக வட்டி மற்றும் மற்ற கட்டணங்களுடன் ரூ.550 கட்டியுள்ளார். ஆனால், அதற்குமுன் 844-ஆக இருந்த சையத்தின் கிரெடிட் ஸ்கோர் (Excellent) இந்த நிகழ்வுக்குப்பின் 727-ஆகக் (Good) குறைந்தது.

கிரெடிட் ஸ்கோர் குறைந்தால் என்ன ஆகும்..?


கிரெடிட் ஸ்கோர் குறைவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜிமித் என்பவர் 45 லட்ச ரூபாய்க்கு 20 வருட வீட்டுக் கடன் வாங்க எண்ணியிருந்தார். வீடு தேடும் வேலைகளில் கிரெடிட் கார்டு பில்லை ஒரு மாதம் கட்ட மறந்துவிட்டார். இந்த ஒரு சிறு பிழையால் அவருக்கு நேர்ந்த நஷ்டம் ரூ. 12.29 லட்சம். ஆம், பில்லை குறித்த நேரத்தில் கட்டாததால், 813-ஆக இருந்த அவரது கிரெடிட் ஸ்கோர் 699-ஆகக் குறைந்ததில், 8.50 சதவிகிதத்துக்குக் கிடைக்கவிருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் 10.25 சதவிகிதமாக உயர்ந்தது. இதனால் அவர் திருப்பிக் கட்ட வேண்டிய தொகை ரூ. 48.72 லட்சத்தில் இருந்து ரூ.61.01 லட்சமாக உயர்ந்தது.

இது போன்ற நஷ்டங்களைத் தவிர்க்க நாம் அனைவருமே கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சோதித்தறிவது அவசியம். கிரெடிட் ஸ்கோரை சோதித்தறிவதற்காக பல இணையதளங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பான இணைய தளங்கள் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சோதித்தறிவது அவசியம்!

ரூ.6,000 அபராதம்..!


பான் - ஆதார் இணைப்பை கடந்த ஜுன் 30-ம் தேதிக்குள் செய்யாதவர்களின் பான் கார்டு தற்போது செயல் இழந்திருக்கும் (Inoperative). இதைச் சரிசெய்ய ஒரு மாத காலம் ஆகலாம். இதனால் ஜூலை 31-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டிய வரிக் கணக்கு தாக்கலை உரிய காலத்தில் செய்து முடிக்க முடியாமல் போக வாய்ப்புண்டு. ரூ.5,000 அபராதம் செலுத்தி வரிக் கணக்கு (வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில்) தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பான் - ஆதார் இணைக்க ரூ.1,000 அபராதம், காலம் தாழ்த்தி வரிக் கணக்கு தாக்கல் செய்ய ரூ.5,000 அபராதம் என ஒருவர் மொத்தம் ரூ.6,000 அபராதம் கட்ட வேண்டியிருக்கும்!

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?  Empty Re: கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?

Post by T.N.Balasubramanian Tue Jul 18, 2023 8:31 pm

மேற்கத்திய கலாச்சாரம் --எல்லாமே கிரேடிட்தான்

வேண்டுமா இன்றே அனுபவி !

நாளை நேரம் வரும்போது சமாளிக்கலாம்.

க்ரெடிட் ஸ்கொர் பற்றி கவலையில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum