ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_m10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10 
VENKUSADAS
ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_m10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_m10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10 
VENKUSADAS
ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_m10ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

3 posters

Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by சிவா Sun Jun 25, 2023 9:32 pm

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Wagner-eegarai-net

ரஷ்ய இராணுவத்திற்கும் கூலிப்படையான வாக்னர் குழுவிற்கும் இடையே பல மாதங்களாக அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில், அந்த அமைப்பின் உரிமையாளரும் தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின், சனிக்கிழமையன்று ரஷ்ய நகரமான Rostov-on-Don (ரோஸ்டோவ்-ஆன்-டான்) ஐ பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறினார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய திரும்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டு ராணுவ குழு திசை திரும்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் #வாக்னர் ஆயுதக் குழு புதின் அரசுக்கு எதிராக திரும்பி தாக்குதல் நடத்தியது. வாக்னர் ஆயுதக் குழு என்பது தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும், கிட்டதிட்ட கூலிப்படை என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பு ரஷ்யா தலைநகர் மாஸ்கோ நோக்கி படையெடுத்த நிலையில் அங்கு நேற்று (சனிக்கிழமை) உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது.

நாட்டு மக்களிடையே பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிகோஜினின் நடவடிக்கைகளை “ஆயுதமேந்திய கலகம்” என்று விவரித்தார். கிளர்ச்சியாளர்களின் “துரோகத்திற்காக” “தவிர்க்க முடியாத தண்டனையை” அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு முதல், ப்ரிகோஜின் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டார், ரஷ்ய இராணுவம் வாக்னர் முகாம்களைத் தாக்கி, “பெரும்பாலான போராளிகளை” கொன்றதாக குற்றம் சாட்டினார். உக்ரைனுக்கு எதிரான போருக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து ரஷ்ய ஜெனரல்கள் புடினிடம் பொய் சொன்னார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாக்னர் குழுவின் எழுச்சி


அதிகாரப்பூர்வமாக பி.எம்.சி வாக்னர் என்று அழைக்கப்படும் இந்த கூலிப்படை அமைப்பு முதன்முதலில் 2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்தபோது அடையாளம் காணப்பட்டது. இது அடிப்படையில் சிப்பாய்களை வாடகைக்கு வழங்கும் ஒப்பந்ததாரர்களின் வலையமைப்பாகும். மேலும் குழு 2022 இல் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு புதிய தலைமையகத்தைத் திறந்தது என்று பி.பி.சி தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், வாக்னர் குழு மிகவும் இரகசியமாக இருந்தது மற்றும் 5,000 போராளிகளைக் கொண்டிருந்தது, குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் செயலில் இருந்தது. இருப்பினும், அடுத்த ஆண்டுகளில், அது உக்ரைனில் மட்டும் “50,000 போர்வீரர்களை” உள்ளடக்கியதாக விரிவடைந்தது என ஜனவரி மாதம் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனில் உள்ள அதன் துருப்புக்களில் 80 சதவீதம் பேர் சிறையில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் டாக்டர் சாமுவேல் ரமணி பிபிசியிடம் கூறுகையில், “இது ரஷ்ய நகரங்களில், விளம்பர பலகைகளில் வெளிப்படையாக ஆட்சேர்ப்பு செய்து வருகிறது, மேலும் ரஷ்ய ஊடகங்களில் ஒரு தேசபக்தி அமைப்பு என்று பெயரிடப்படுகிறது” என்றார்.

அமைப்பின் உரிமையாளர் மற்றும் தலைவர் பிரிகோஜின் ஆவார். 1961-ம் ஆண்டு பிறந்த அவர் தனது 20 வயதை சோவியத் சிறையில் கழித்தார், கொள்ளை மற்றும் மோசடிக்காக ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் விடுவிக்கப்பட்டதும், சோவியத் யூனியன் சரிந்ததும், பிரிகோஜின் ஒரு “தொழில் முனைவோர் பாதையில்” இறங்கினார். ஹாட் டாக் உணவு விற்பனையைத் தொடங்கினார். இதையடுத்து விரைவில் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு ஆடம்பரமான உணவகத்தை நிறுவினார். இது அப்போதைய துணை மேயர் விளாடிமிர் புடின் உட்பட அனைத்து ரஷ்ய தலைவர்கள், உயர் பதவில் இருப்பவர்கள் செல்லக் கூடிய இடமாக மாறியது.

முக்கிய நபர்களுடன் நெருங்கிய இணைப்புகள் பிரிகோஜின் தனது வணிகத்தை விரிவுபடுத்த உதவியது. மேலும் புதின் அதிபராக பதவியேற்ற பிறகு, அவருக்கு ஏராளமான அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ப்ரிகோஜின், “புடினின் செஃப்” என்ற புனைப்பெயரைப் பெற்றார். உணவுத் துறையில் லாபகரமான வருவாய் வணிகருக்குப் போதுமானதாக இல்லை, இறுதியில் அவர் தனியார் இராணுவ சேவையை வழங்கும் துறையில் இறங்கினார்.

வாக்னர் குழுமம் செயல்படும் நாடுகள்


உக்ரைன் தவிர, பல ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் வாக்னர் குழுமம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, தங்கம் மற்றும் வைரச் சுரங்கங்களுக்கான அணுகலுக்கு ஈடாக பல்வேறு நாட்டு அரசாங்கங்களுக்கு அதன் சேவைகளை வழங்குகிறது.

சிரியா



கிரிமியாவை இணைத்த பிறகு, அமைப்பின் போராளிகள் 2015 இல் சிரியாவில் தோன்றினர், அங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரத்தக்களரி உள்நாட்டுப் போர் வெடித்தது, புடின் தலையிட முடிவு செய்தார். ரஷ்ய மற்றும் சிரியப் படைகளுடன் இணைந்து போரிட்டு, வாக்னர் குழு, பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்த போதிலும், ஜனாதிபதி பஷர் அசாத் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற உதவியது.

பதிலுக்கு, மாஸ்கோ, 2017 இல், சிரியாவில் ஒரு கொள்கையை நிறுவியது, அங்கு இஸ்லாமிய அரசு (IS) படைகளிடமிருந்து எண்ணெய், எரிவாயு கிணறுகள் மற்றும் சுரங்கங்களை கைப்பற்றும் நிறுவனங்கள், அதே தளங்களை அணுகுவதற்கான உரிமைகளைப் பெறும். அந்த நேரத்தில் இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் இந்தக் கொள்கையின் கீழ் ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, போராளிகளிடமிருந்து அந்த தளங்களைப் பாதுகாப்பதற்காக வாக்னர் குழுமம் ஒன்றைப் பயன்படுத்தியது.

சூடான்



இந்த அமைப்பு முதன்முதலில் 2017 இல் முன்னாள் சர்வாதிகார ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் ஆட்சியின் போது நாட்டிற்குள் நுழைந்தது, அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார்.

வாக்னர் குழுமம் அல்-பஷீருக்கு பாதுகாப்பு மற்றும் தளவாட ஆதரவை வழங்கியது மற்றும் அதற்கு ஈடாக “பிரிகோஜின் சூடானில் தங்கச் சுரங்கத்திற்கான பிரத்யேக உரிமைகளைப் பெற்றார். இது அவரது எம்-இன்வெஸ்ட் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது” என்று அமெரிக்க ஆராய்ச்சி குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானின் பரந்த தங்கம் மற்றும் யுரேனியம் இருப்புக்கள், வைர சுரங்கங்கள் மற்றும் டார்ஃபரின் அமைதியற்ற பகுதிக்கு வாடகைக்கு போர் விமானங்களை வழங்குதல் ஆகியவற்றில் தற்போது பங்குகள் இருப்பதாக அறியப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரலில் சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே கடுமையான போர் வெடித்த சில நாட்களுக்குப் பிறகு, பிரிகோஜின் ஒரு அறிக்கையை வெளியிட்டார், மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக முன்வந்தார்.

லிபியா



போர்வீரன் கலீஃபா ஹிஃப்டருக்கு ஆதரவாக வாக்னர் போராளிகள் 2019 முதல் லிபியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் துருப்புக்களுக்கு ஆலோசனைகள், உதவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஈடாக, இந்த அமைப்பு பொதுமக்கள் பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

ப்ரூக்கிங்ஸ் நிறுவனம் மேலும் குறிப்பிட்டது, “நாட்டில் செயல்படும் மற்ற வெளிநாட்டு கூலிப்படைகள் மற்றும் போராளிக் குழுக்களைப் போலவே, வாக்னர் குழுவும் அவர்கள் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.-ஆதரவு பெற்ற பெர்லின் மாநாட்டின் கோரிக்கையை புறக்கணித்துள்ளது.”
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by சிவா Sun Jun 25, 2023 10:38 pm

வாக்னர் படையின் ஆயுத கிளர்ச்சிக்கு முன் இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பை சந்தித்த ரஷியா



எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

இதற்குமுன் இரண்டு முறை ரஷியா ஆட்சி கவிழ்ப்பு சதியை எதிர்கொண்டுள்ளது. அப்போது சோவியத் ரஷியாவாக இருந்தது.

1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவியத் ரஷியா உடைவதற்கு முன், கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமைவாதிகள், சோவியத் ரஷியா உருவாவதற்கு முக்கிய பங்கு வகித்த 15 குடியரசுகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் அதிகார ஒப்பந்தத்தை தடுத்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சதி முறியடிக்கப்பட்டது.

அப்போது அதிபராக இருந்த மிக்கைல் கோர்பசேவ் ஆகஸ்ட் 19-ந்தேதி கிரிமியாவில் உள்ள டச்சாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றார். சோவியத் ரஷியாவின் ரகசிய போலீசார் அவரை வீட்டுச்சிறையில் அடைத்தனர். மாஸ்கோ நகரில் ராணுவ வீரர்கள், ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டனர்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ரஷிய மக்கள் ஜனநாயகத்தை வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட தொடங்கினர். மாஸ்கோவின் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடத் தொடங்கினர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் போரிஸ் யெல்ட்சின் மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சதி முறியடிக்கப்பட்டது. கோர்பசேவ் நாடு திரும்பிய போதிலும் அவரது செல்வாக்கு குறைந்தும், யெல்ட்சின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கருதப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் சோவியத் ரஷியாவில் இருந்த நாடுகள் பிரிந்து சுதந்திரத்தை அறிவிக்க தொடங்கின.

இரண்டு வருடங்கள் கழித்து 1993-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை பாராளுமன்ற கிளர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பாராளுமன்றம் டாங்கிகள் கொண்டு தாக்கப்பட்டன.

யெல்ட்சின் சோவித் ரஷியா உடைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், அரசியில் நெருக்கடிக்குப்பின் பாராளுமன்ற மன்றத்தில் கம்யூனிஸ்ட் கடுமைவாதிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து யெல்ட்சினை நீக்கி, துணை அதிபர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோயை அதிபராக்க முயன்றனர். அப்போது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவர்களை தடுத்தனர்.

அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே மாஸ்கோ மேயர் அலுவலகம் மற்றும் டெலிவிசன் மையத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் யெல்ட்சின் ராணுவ உதவியுடன் கிளர்ச்சியாளர்களை துவம்சம செய்தார். அக்டோபர் 4-ந்தேதி ராணுவ ஒயிட் ஹவுஸை தாக்கியது. 18 மாடி கட்டிடம் தகர்க்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர்கள், போராளிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் 148 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் பொது வாக்கெடுப்பு மூலம் அதிபருக்கு அதிக அதிகாரம் என்ற அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும், யெல்ட்சின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by சிவா Sun Jun 25, 2023 11:54 pm

புதினுக்கு எதிராக தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த 'வாக்னர்' கிளர்ச்சி - 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?



நீண்ட காலமாக நடைபெற்று வரும் யுக்ரேன் - ரஷ்யா போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ’வாக்னர் கூலிப்படை’ திடீரென அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது, உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்த இவர்கள், தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்கப் போவதாக அறிவித்தனர்.

வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், ”இது ஆட்சிக்கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று அறிவித்தார்.

சனியன்று காலை மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வாக்னர் படையினர், அன்று இரவே தங்களது அணிவகுப்பை நிறுத்தியுள்ளனர். ப்ரிகோஜின் தனது படையினரைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டார்.

அதிபர் புதினுடன், வாக்னர் படைத்தலைவர் ப்ரிகோஜின் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுடைய அணிவகுப்பைக் கிளர்ச்சி என்று அறிவித்து, மாஸ்கோவை நோக்கி முன்னேறி வந்த வாக்னர் படையினர், திடீரென பின் வாங்கியது ஏன்? கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் நடந்தது என்ன?

வாக்னர் கூலிப்படை என்றால் என்ன? அது எப்போது உருவானது?



வாக்னர் கூலிப்படை, தன்னை ஒரு ‘தனியார் ராணுவ நிறுவனம்’ என விவரிக்கிறது.

இந்த படையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள்.

வாக்னர் குழு அதிகாரப்பூர்வமாக பிஎம்சி வாக்னர் (PMC WAGNER) என்று அழைக்கப்படுகிறது.

வாக்னர் குழு குறித்து பிபிசி மேற்கொண்ட விசாரணையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு, வாக்னர் குழு உருவாகியதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

செச்சினியாவில் நடைபெற்ற ரஷ்யப் போரில், வாக்னர் குழுவும் பங்காற்றியது. இதில் ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டிமிட்ரி உட்கின்தான் ’வாக்னர் படையின் முதல் களத் தளபதியாக’ நின்று செயலாற்றினார் எனக் கூறப்படுகிறது.

தற்போது வாக்னர் குழுவின் தலைவராக யெவ்கெனி ப்ரிகோஜின் இருக்கிறார். இவர் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் வாக்னர் குழுமம் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்துகொண்டது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் புதிய தலைமையகத்தையும் திறந்தது.

வாக்னர் - ரஷ்ய ராணுவம் மோதலுக்கு காரணம் என்ன?



தங்களை தனியார் ராணுவ நிறுவனம் என்று கூறி வரும் வாக்னர் படையினரை, ரஷ்ய அரசாங்கம் சமீபகாலமாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் உள்ள அனைத்து தனியார் படைகளும் வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வர ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதிபர் புதின் கூறியிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் இந்த நடவடிக்கைக்கு அதிபர் புதின் ஆதரவளித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், தன்னுடைய வாக்னர் குழு இந்த ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கும் என்று ஆவேசமாக அறிவித்தார் யெவ்கெனி ப்ரிகோஜின்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மீது, வாக்னர் கூலிப்படையின் தலைவர் ப்ரிகோஜின் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் யுக்ரேனில் உள்ள இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் பிரிகோஜின், அவர்கள் யுக்ரேனில் சண்டையிடும் வாக்னர் பிரிவுகளை வேண்டுமென்றே குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அதேபோல் சமீப காலங்களில் ரஷ்யாவின் பிற ராணுவ தலைமைகளுடனும் ப்ரிகோஜினுக்கு மோதல் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு யுக்ரேனில் பாக்முத் பகுதியை கைப்பற்றும் முயற்சியின்போது, வாக்னர் படையைச் சேர்ந்த போராளிகள் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இந்த மோசமான நிகழ்வுக்கு ரஷ்ய ராணுவத்தின் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என்று யெவ்கெனி ப்ரிகோஜின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அப்போது அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அப்போதிலிருந்து அவருக்கும், ரஷ்ய ராணுவ தலைமைக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று அது கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் நீண்டகால கூட்டாளியாகக் கருதப்படும் ப்ரிகோஜின், அவரது ஆதரவின் கீழ்தான் வாக்னர் கூலிப்படையின் தலைவராக வளர்ந்தார். தற்போது அவரே ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது.

கிளர்ச்சி எப்போது துவங்கியது?



கடந்த ஜூன் 23ஆம் தேதி, கிழக்கு யுக்ரேனிலிருந்து ரஷ்யாவிற்குள் வாக்னர் படையினர் நுழைய துவங்கினர்.

அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட ப்ரிகோஜின், “யுக்ரேன் மீது நடத்தப்படும் போர்களுக்கு, அதிபர் புதின் கூறும் காரணங்கள் நியாயமற்றது” என்று கூறினார்.

அதனை தொடர்ந்து டெலிகிராமில், அவர் தொடர்ச்சியாக பல ஆடியோ பதிவுகளை வெளியிட்டார்.

அதில், “ரஷ்ய ராணுவ படையினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தீமைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும், “இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்றும் யெவ்கெனி ப்ரிகோஜின் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?



தொடர்ந்து முன்னேறிய வாக்னர் படையினர், சனிக்கிழமையன்று ரஷ்யாவின் முக்கிய நகரான ரோஸ்டோவ்-ஆன் - டானுக்குள் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும் அந்நகரின் மொத்த கட்டுப்பாட்டையும் தங்களுக்கு கீழ் எடுத்துக்கொண்டனர்.

இதற்கிடையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாஸ்கோ நகரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

வாக்னர் படையினரின் இந்த செயலை ரஷ்ய அதிபர் கடுமையாக விமர்சித்தார்.

வாக்னர் படையினரின் இந்த நடவடிக்கையை, ‘முதுகில் குத்தும் செயல்’ என்று புதின் சாடியிருந்தார்.

மேலும் ”துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தங்களது இந்த நடவடிக்கையை, ராணுவத்துக்கு எதிரான சதி அல்லது புரட்சி என்று கூறுவது அபத்தமானது என்று மறுப்பு தெரிவித்திருந்தார் ப்ரிகோஜின்.

“யுக்ரேன் போரில் தங்களின் கூலிப்படைக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க ராணுவம் தவறியதால் தான் தற்போது தலைநகரை நோக்கி அணிவகுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்களை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி ஷோய்கு, ஆயுதப் படைகளின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் எங்களின் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்று ப்ரிகோஜின் கூறியிருந்தார்.

‘யுக்ரேனுடன் போரில் ஈடுபடுவதற்கு ரஷ்யா கூறும் காரணங்கள் நியாயமற்றது’ என்று ப்ரிகோஜின் குறிப்பிட்டு பேசியதும் இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவர்களது நடவடிக்கையை ‘கிளர்ச்சி’ எனப் பிரகடனப்படுத்தி, வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறினர்.

வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது.இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தூரத்தில் தெற்கே அமைந்திருக்கிறது.

வாக்னர் படையினரின் இந்த திடீர் செயலால் ரஷ்யா முழுவதும் பதற்றம் அதிகரித்தது.

வாக்னர் படை பின்வாங்கியது ஏன்?



மாஸ்கோவை நோக்கி முன்னேறி கொண்டிருந்த வாக்னர் படையினர், சனியன்று இரவு தங்களது அணிவகுப்பை நிறுத்தினர்.

அணிவகுப்பை நிறுத்துமாறு யெவ்கெனி ப்ரிகோஜின் தனது படையினருக்கு உத்தரவிட்டார். மேலும் வாக்னர் படையினருடன் அவர் தங்களுடைய தளத்திற்கு திரும்பினார்.

”பெலாரூஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் யெக்வெனி ப்ரிகோஜினுடன் பேசினார். அதற்குப் பிறகு ப்ரிகோஜின் தனது தளத்திற்கு திரும்பியுள்ளார்” என ரஷ்யா 24 செய்திச் சேனலின் தகவல்கள் கூறுகின்றன.

அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே ப்ரிகோஜின் அணிவகுப்பை நிறுத்தினார் எனவும், ரஷ்யாவின் நிலைமை மேலும் மோசமடையாமல் தடுப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார் எனவும் ரஷ்யா 24 செய்தி சேனலின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி சேனலின் தகவலின்படி, புதினும் இந்தத் தீர்வுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிய வருகிறது.

புதினின் நெருங்கிய கூட்டாளியாக பெலாரூஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கருதப்படுகிறார். புதினின் சம்மதத்துடன் இந்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல் வாக்னர் குழுவின் தலைவருக்கு எதிரான வழக்கை கைவிட கிரெம்ளின் ஒப்புக்கொண்டது. மேலும் வாக்னர் படையின் வீரர்களுடைய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்ட மற்ற ஒப்பந்தங்கள் குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஆனால் தற்போது ரஷ்யாவில் கிளம்பிய இந்த கிளர்ச்சி, அதிபர் புதினுக்கு அபாயகரமான சமிஞ்கைளையே காட்டுகிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுக்ரேன் - ரஷ்யா போரில் வாக்னர் படையின் பங்கு என்ன?



யுக்ரேன் - ரஷ்யா இடையிலான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நீண்ட காலமாக களத்தில் நின்று ‘வாக்னர் படை’ துணைபுரிகிறது.

குறிப்பாக யுக்ரேனின் ’பாக்முத்’ என்ற நகரை கைபற்றுவதற்கு நடைபெற்ற போரில், வாக்னர் படையினர் பெரும் பங்கு வகித்தனர்.

2014ஆம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில், இந்த குழு ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தபோதுதான், வாக்னர் குழு குறித்த தகவல்கள் முதன்முதலாக வெளியுலகிற்கு தெரியவந்தன.

அதற்கு முன்பு வரை, இந்த குழு ஒரு ரகசிய அமைப்பாக இயங்கி வந்தது. பெரும்பாலும் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில்தான் இந்த குழுவின் இயக்கம் இருந்துள்ளது. அப்போது இந்த குழுவில் வெறும் 5,000 வீரர்கள் மட்டுமே இருந்ததாக கருதப்பட்டது.

ஆனால் அதன்பின் இந்த குழுவினரின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியது.

அதேபோல் வாக்னர் ராணுவ துருப்புகளில் உள்ள 80% வீரர்கள், சிறையிலிருந்து வந்தவர்கள் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தாண்டு துவக்கத்தில் கூறியிருந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by Dr.S.Soundarapandian Mon Jun 26, 2023 12:50 pm

நன்றி நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by T.N.Balasubramanian Mon Jun 26, 2023 5:28 pm

விரிவான செய்தி.

திடீரென முளைத்த வாக்னெர் பற்றி ஆதிமுதல் அந்தம் வரை செய்திகள் தெளிவுபட
தெரிவித்தமைக்கு நன்றி.

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by சிவா Tue Jun 27, 2023 12:03 am

வாக்னர் குழு கிளர்ச்சியின் வீழ்ச்சி; புதின் மீதான தாக்கம்


பிரிகோஜினின் கீழ் உள்ள வாக்னர் குழு, நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் புதினுக்கு பெரும் சொத்தாக விளங்கியது. பிரிகோஜினின் கிளர்ச்சி எப்படி விஷயங்களை மாற்றுகிறது? அது போரை, புதினின் இமேஜை எப்படி பாதிக்கும்?

ரஷ்யா சனிக்கிழமை வியத்தகு நிகழ்வுகளைக் கண்டது. கூலிப்படை வாக்னர் குழு ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரைக் கைப்பற்றி மாஸ்கோ நோக்கி அணிவகுத்தது. விளாடிமிர் புதினின் கூட்டாளியான பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அவர்களின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே துருப்புக்கள் பின்வாங்கின. வேகமாக மாறிவரும் சூழ்நிலைக்கு மத்தியில், புது டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் சிறப்புமிக்க கூட்டாளியான நந்தன் உன்னிகிருஷ்ணன், ஜூன் 24-ல் நிகழ்வுகளின் முன்னேற்றங்களை விளக்குகிறார்.

வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், புதினுக்கு தனது வெற்றிக்கு கடன்பட்டிருக்கிறார். அவர் இப்போது ஏன் தனது பினாமிக்கு எதிராக திரும்பினார்?

ப்ரிகோஜினின் கீழ் உள்ள வாக்னர் குழு உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளித்துள்ளது. இந்தக் கூலிப்படைதான் ரஷ்யாவிற்கான சோலேடார் மற்றும் பாக்முட்டின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது. வாக்னர்களின் ராணுவ பங்களிப்புகளின் காரணமாக, பிரிகோஜின் சிறிது புகழையும் செல்வாக்கையும் பெறுகிறார்.

பிரிகோஜின் அனைத்து தனியார் ராணுவ நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சகத்தின் நகர்வுகளை எதிர்க்க முயன்றார். அவர் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருடன் நீண்டகாலமாக கோபம் கொண்டிருந்தார். உக்ரைனில், அவர்கள் போரை சரியாக நடத்தவில்லை என்று அவர் உணர்ந்ததும் அவர்களின் சில தந்திரோபாயங்களை அவர் வெளிப்படையாக விமர்சித்தார்.

அனைத்து தனியார் ராணுவ நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சகம் முயற்சி செய்வதை அவர் கண்டறிந்தபோது, ​​அவர் ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது என்று முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 24-ம் தேதி ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள தெற்கு தலைமையகத்தை அவர் எடுத்துக் கொண்டபோது, ​​ஷோய்கு மற்றும் ஜெனரல் ஜெரசிமோவ் ஆகியோர் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே அவரது முதல் கோரிக்கையாக இருந்தது.

லுகாஷென்கோ நுழைந்த பிறகு நேற்று இரவு ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் என்ன, நேற்று இரவு சரியாக என்ன நடந்தது?

மாஸ்கோ நேரப்படி மாலை 7 மணிக்கு, ரோஸ்டோவ்-ஆன்-டானின் கட்டுப்பாட்டை வாக்னர் குழு கைப்பற்றியதை உலகம் அறிந்தது அல்லது குறைந்தபட்சம் வாக்னர் குழு கூறியது. பிரிகோஜின் விமான நிலையத்தையும் தலைமையகத்தின் செயல்பாட்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக வீடியோவில் கூறினார். இரவு 10 மணி அளவில், தெற்கு தலைமையகத்தில் சில ரஷ்ய தளபதிகளுடன் சில பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறினார். அதில் ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, இது நடக்கவில்லை என்றால், மாஸ்கோவிற்கு நீதிக்கான அணிவகுப்பு செல்வேன் என்று அவர் கூறினார்.

இந்த அணிவகுப்பை அவர் அறிவித்தபோது, ​​​​புதின் ரஷ்ய தொலைக்காட்சியில் தோன்றினார். பிரிகோஜின் செய்வது தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டினார். அவர் இது முதுகில் குத்தும் செயல் என்று கூறினார். மேலும், கிளர்ச்சி செய்யும் எவருக்கும் எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பிரிகோஜின் இதைப் புறக்கணித்தார். வாக்னரின் துருப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நெடுவரிசைகளில் மாஸ்கோவை நோக்கி நகரத் தொடங்கின. வழியில், அவர்கள் மாஸ்கோவிற்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள வோரோனேஜ் நகரத்தையும் கைப்பற்றினர். அவர்கள் மாஸ்கோவிலிருந்து 200 கிலோமீட்டருக்குள் பயணிக்க முடிந்தது. அந்த நேரத்தில் லுகாஷென்கோவுடன் பேச்சுவார்த்தைகள் வந்தன.

கணிசமான எதிர்ப்பின்றி அவர் அந்த நிலையை அடைந்ததற்குக் காரணம், மாஸ்கோவில் உள்ள தலைமை ரத்தம் சிந்தாமல் நிலைமையைத் தீர்க்கும் நம்பிக்கையில் இருந்ததுதான். பிரிகோஜின் பெலாரஸ் அதிபருடன் நீண்டகால நட்பைக் கொண்டுள்ளார். பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள். ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளிப்படையாக இல்லை. ஆனால், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் பிரிகோஜின் கூறியது பொதுவில் உள்ளது.

ஒன்று, பிரிகோஜினின் படைகள் மீண்டும் படைமுகாமிற்குச் செல்கின்றன. பிரிகோஜினே பெலாரஸுக்குச் செல்வார். கிளர்ச்சியில் பங்கேற்காத வாக்னர் குழுவில் உள்ளவர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தங்கள் வழங்கப்படும். மற்ற அனைவரும், அவர்களின் போரில் வீரச் செயல்களை மனதில் கொண்டு, எந்த வழக்கும் இல்லாமல் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், கிளர்ச்சியைத் தூண்டியதற்காக பிரிகோஜின் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும்.

பிரிகோஜினின் முக்கிய கோரிக்கைகளான பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமை அதிகாரியை மாற்றுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், செய்தித் தொடர்பாளர் பணியாளர் மாற்றங்கள் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.

வாக்னர் குழு இனி உக்ரைனில் நடக்கும் போரின் ஒரு பகுதியாக இருக்காது? இது போரின் போக்கை எவ்வாறு பாதிக்கும்?

வாக்னர் குழுவைச் சேர்ந்தவர்களில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் பெறுபவர்கள் மட்டுமே போராட முடியும். எனவே ஆம், வாக்னர் குழுவே இனி போரின் ஒரு பகுதியாக இருக்காது.

பணியாளர்களைப் பொறுத்தவரை, இது ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பின்னடைவைக் குறிக்காது. ரஷ்யர்கள் அதிகாரப்பூர்வமாக உக்ரைனில் சுமார் 3,00,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர், 20,000 அல்லது 25,000 வாக்னர் ஆட்கள் இல்லாதது எளிதில் நிரப்பக்கூடியது. இருப்பினும், சண்டையின் தீவிரத்தில் வேறுபாடு இருக்கலாம். வாக்னர்கள் உக்ரைனுக்கு ஒரு முக்கிய கவலையாக இருந்தனர். ஏனென்றால், அவர்கள் குறிப்பாக இரக்கமற்றவர்களாகவும், கடினமானவர்களாகவும், துணிச்சலானவர்களாகவும் இருந்தனர். அந்த பகுதி காணாமல் போகும்.

இந்த கிளர்ச்சி புதினின் பிம்பத்தை எந்தளவுக்கு சிதைக்கும்?



மாறாக, ஒரு வித்தியாசமான கோட்பாடு உள்ளது. உண்மையில் அவரது பிம்பம் வலுப்பெற்றுள்ளது. ஏனெனில், ரஷ்யாவின் தலைவராக புதின் ரத்தம் சிந்தாமல் இத்தகைய சிக்கலான சூழ்நிலையை தீர்க்க முடிந்தது என்பதை ரஷ்ய மக்கள் மதிக்கிறார்கள். நிலைமை தீர்க்கப்பட்டபோது, ​​​​பொதுவான மகிழ்ச்சி ஏற்பட்டது என்று ரஷ்ய சமூக ஊடகங்கள் காட்டின.

இருப்பினும், இது குறுகிய காலமாக இருக்கலாம். ஒரு சில மாதங்களுக்கு கீழே, கட்டுப்பாட்டில் உள்ள தலைவர் என்று கூறப்படும் புதின், அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு உருவாக்க அனுமதித்தார் என்று மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கலாம்.

கிளர்ச்சி குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. பிரிகோஜின் சிறிது நேரம் மகிழ்ச்சியற்றவராக இருந்தபோது, ​​அத்தகைய கிளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதா?

ரஷ்ய சமூக ஊடகங்களில், இந்த கிளர்ச்சி எப்படி வந்தது என்பது பற்றி இரண்டு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று, இவை அனைத்தும் புதினால் வடிவமைக்கப்பட்டது. ஏனென்றால், அவர் உண்மையில் பாதுகாப்பு அமைச்சகத்தில் சில மாற்றங்களை விரும்பினார். ஒருவேளை ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் ஆகியோரை நீக்கவும் கூட விரும்பியிருக்கலாம். பிரிகோஜின் அணிவகுப்பை நிறுத்துவதாக அறிவித்தபோது, ​​ “திட்டத்தின்படி நாங்கள் முகாம்களுக்கு திரும்புகிறோம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியதே இந்தக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இது புதின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று மக்கள் தலைகீழாக வெளிப்படுத்தினர்.

ஆனால், இதற்கு எதிரான வாதங்கள் உள்ளன. முதலாவதாக, ஷோய்குவிலிருந்து விடுபட புதின் இதையெல்லாம் வடிவமைத்திருந்தால், அவர் பலவீனமானவர் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார். ஏனெனில், அவர் அச்சுறுத்தலின் கீழ் சில செயல்களைச் செய்கிறார். ஷோய்கு இப்போது நீக்கப்பட்டால், புதின் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறார் என்ற எண்ணத்தை அது கொடுக்கும். இரண்டாவது, ஒரு உத்தரவிடும் அதிகாரம் உள்ள தலைவர் என்ற முறையில், தனது பாதுகாப்பு அமைச்சரை நீக்குவதற்கு அவருக்கு ஏன் ஒரு சாக்குப்போக்கு அல்லது சாக்குப்போக்கு தேவை? மேலும், செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், ஷோய்கு மீதான புதினின் அணுகுமுறை மாறவில்லை என்று கூறியுள்ளார்.

இரண்டாவது, மிகவும் சாத்தியமான சூழ்நிலை, ரஷ்ய ஸ்தாபனம் பிரிகோஜின் மற்றும் அவரது அதிருப்தியைப் பற்றி அறிந்திருந்தது. ஆனால், பிரிகோஜினின் தொல்லை மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டது. அத்தகைய நடவடிக்கையை நிறுத்துவதற்கு அவர்கள் மிகவும் முன்னதாகவே நகர்ந்திருக்கலாம்.

இந்த வியத்தகு முன்னேற்றங்களை புது டெல்லி எவ்வாறு பார்த்தது?



புதுடெல்லி இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும். மாஸ்கோவில் உள்ள தூதரகத்தின் மூலம், அது களத்தில் உள்ள நிலைமை பற்றிய அறிக்கைகளைப் பெற்றிருக்கும். மாஸ்கோவில், நிலைமை அமைதியாக இருப்பதாகத் தெரிகிறது, வேலை வழக்கம் போல் நடந்து வருகிறது. எனவே புதுடெல்லி எதற்கும் பீதி அடைய எந்த காரணமும் இல்லை. இது காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் இருந்தது.

வாக்னர் குழுவிற்கு என்ன சொல்லப்படுகிறது?



தற்போது, ​​வாக்னர் குழு கலைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அது அநேகமாக வேறொரு போர்வையில் உயிர்த்தெழுப்பப்படும். சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாக்னர் குழுவின் செயல்பாடுகளுக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவின் நலன்களுக்காக இருந்தன. எனவே, இந்த குழு ஒருவேளை ஒரு புதிய பெயரில் அல்லது ஒரு புதிய தலைவரின் கீழ், ஏதேனும் ஒரு வடிவத்தில் புத்துயிர் பெறலாம்.

ஆனால் இப்போதைக்கு, ரஷ்யாவுக்கு தலைவலி உள்ளது. ஏனென்றால், வாக்னர் குழு வெளியேறியதால், ஆயுதம் ஏந்திய மற்றும் பயிற்சி பெற்ற ரஷ்யர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில், முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அமர்ந்துள்ளனர். ரஷ்ய அரசாங்கம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.

ஆனால், வாக்னர் இந்த நாடுகளின் அரசாங்கங்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்தார் என்பதும் உண்மை. ஆயுதமேந்தியவர்கள் உள்ளூர் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் அங்கு இருந்தனர், உள்ளூர் அரசாங்கம் அவர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புகளை வழங்கியது. எனவே, இப்போது, ​​அவற்றை வெளியே இழுப்பது எல்லா வகையான பிரச்சனைகளையும் உருவாக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது? Empty Re: ரஷ்யாவில் கிளர்ச்சி: வாக்னர் குழு என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum