ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம்

2 posters

Go down

துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம் Empty துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம்

Post by சிவா Tue Jun 13, 2023 1:10 am


துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம் Vikatan%2F2023-06%2Fe6555b42-d517-438c-8f01-86ab05e65748%2FUntitled_22.jpg?rect=0%2C0%2C1566%2C881&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

துறவி ஒருவர் பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு கிராமம். மக்கள் எல்லோரும் துறவியை வரவேற்று வணங்கினர். ஒருநாள் துறவி அங்கே தங்கினார். கிராமத்தின் பிரபலம் துறவியைப் பார்க்க வந்தார். அவருக்கு வழிபாடுகள், கடவுள் நம்பிக்கை இவற்றிலெல்லாம் நம்பிக்கை கிடையாது.

ஒரு சம்பிரதாயத்துக்காகத் துறவியைச் சந்திக்கச் சென்றவர் துறவியிடம் கேட்டார்: ``சாமி! நீங்கள் கடவுளுக்காக உங்கள் வாழ்க்கையையே துறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேனே... அப்படியா?’’ எனக் கேட்டார்.

உடனே ஒரு புன்னகையை உதிர்த்த துறவி, ``நான் ஒரு சாதாரணத் துறவி. என்னைவிடவும் நீங்கள்தான் பெரிய துறவி’’ என்றார். பிரபலத்துக்குத் திகைப்பு. ``என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார். துறவி அமைதியாக பதில் சொன்னார், ``ஐயா! நான் கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்வுக்காகக் கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே, என்னைவிட நீங்கள்தான் பெரிய துறவி!’’

இதைக் கேட்டதும் பிரபலம் வெட்கித் தலைகுனிந்தார். நம்மில் பலரும் இப்படித்தான்... குறிக்கோள், வெற்றி என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதன் பொருட்டு கடவுளை மட்டுமல்ல கடவுள்தன்மை கொண்ட பல நற்பண்புகளையும் துறந்துவிடுகிறோம்.

வாழ்க்கையில் வெற்றி, முன்னேற்றம், பணம், வசதி, பதவி, அதிகாரம் என எல்லாமும் அவசியம்தான். ஆனால், இவை அனைத்தையும்விட முக்கியமானவை மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும். ஆனால், நாம் என்ன செய்கிறோம்; வெற்றிக்கான ஓட்டத்தில் நிம்மதியையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துவிடுகிறோம்.

சரி... தொலைத்ததை மீட்டெடுக்க என்ன வழி? இதற்கு பதில் அறிய வேண்டுமெனில், உங்களுக்கு வேறொரு துறவியின் கதையையும் சொல்லியாக வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகையே கவனிக்கவைத்த பெரும் செல்வந்தர் அவர். அமெரிக்காவைச் சேர்ந்தவர். எப்போதும் தொழில் குறித்த சிந்தனை

தான் அவருக்கு. ஒருமுறை பல்லாயிரம் டாலர் மதிப்புள்ள தானியங்களைக் கப்பலில் ஏற்றி அனுப்பினார். ஆனால், வெறும் 150 டாலர் கொடுத்து அதை இன்ஷூரன்ஸ் செய்ய மறுத்துவிட்டார்.

அன்று இரவு பெரும்புயல்! ‘பொருள்கள் என்ன ஆகுமோ?’ என்ற பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த செல்வந்தர், அதிகாலையில் இன்ஷூரன்ஸ் செய்யுமாறு உதவியாளரை அனுப்பி வைத்தார். ஆனால், இன்ஷூரன்ஸ் தாள்கள் வருமுன்பே, அவரது சரக்குகள் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டதாகச் செய்தி வந்தது.

‘அடடா... அவசரப்பட்டு 150 டாலரை வீணடித்துவிட்டோமே!’ என்று கவலைப்பட்டாராம் அந்தச் செல்வந்தர். ஆம், பொருள் சேர்ப்பதில் மட்டுமே அவருக்குக் குறி; வெறி! வேடிக்கை, விளையாட்டு எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நெருக்கமானவர்கள் எவரும் இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் தொழில், போட்டி, வெற்றி, பணம் ஆகியவை மட்டுமே!

விளைவு... மன அழுத்தம், கவலை, பயம் யாவும் ஒன்றுசேர்ந்ன, அவரின் உடல் நிலையைக் கடுமையாக பாதித்தன. தீர்வு சொல்ல ஆள் இல்லை. இந்த நிலையில்தான் தமக்குத் தெரிந்தவர் வீட்டில் துறவி ஒருவர் தங்கியிருப்பதாக அறிந்தார். அவரைப் பார்க்கச் சென்றார். அந்த நேரத்திலும் அலட்சியம், செல்வச் செழிப்பு தந்த அகங்காரம் எதுவும் அவரிடம் குறைந்தபாடில்லை.

இவரைக் கண்டதுமே அந்தத் துறவி புன்னகையோடு இவரின் பிரச்னைகளை எல்லாம் பட்டியலிட்டார். செல்வந்தருக்குத் திகைப்பு. `எனது விஷயங்களை பிரச்னைகளை எல்லாம் நேரில் கண்டது போல் சொல்கிறாரே’ என்று வியந்தார்.

துறவியோ ``போனதெல்லாம் போகட்டும்... உங்கள் கவலைகளையும் பயத்தையும் விட்டுத் தொலையுங்கள். உங்களுக்குக் கடவுள் அளித்துள்ள பெரும் செல்வத்தை மற்றவர்களுக்கு அளிக்கப் பழகுங்கள்... எல்லாம் சரியாகும்’’ என்று அறிவுறுத்தினார்.

அப்போதும் செல்வந்தரின் அகங்காரம் குறையவில்லை. `எனக்குப் புத்திமதி சொல்ல இவர் யார்?’ என்றே அவருள் எண்ணம் எழுந்தது. எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார்.

சில நாள்களில் மீண்டும் வந்தார். பொது நலத் தொண்டுக்காக பெருந்தொகை வழங்கியது குறித்த சான்றுக் காகிதத்தைத் துறவியிடம் காட்டினார். மட்டுமன்றி `என்ன, திருப்திதானே... இப்போது எனக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்’’ என்றார்.

உடனே துறவி, ‘`நீங்கள்தான் எனக்கு நன்றி சொல்லவேண்டும்’’ என்றார் அமைதியாக. ஆனால், ‘துறவி ஏன் அவ்வாறு கூறினார்?’ என்பது அந்தப் பெரிய மனிதருக்குப் புரியவில்லை. எனினும் துறவியின் வார்த்தைகள், அவரைச் சிந்திக்க வைத்தன. அன்றிலிருந்து மாறினார் அவர். தனது திரண்ட செல்வத்தை வறியவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வாரி வாரி வழங்கத் தொடங்கினார்.

பணம் இல்லாமல் தவித்த சிறு கல்லூரி ஒன்றை, தனது கொடையால் உலகப் புகழ்பெற்ற ‘சிகாகோ பல்கலைக்கழகம்’ ஆக்கும் அளவுக்கு அவரின் பணி நீண்டது. கல்விப் பணி, ஆய்வுப் பணி, மோசமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் அனைத்துக்கும் கொடை அளித்தார். மிகப் பெரிதாகப் புகழ் அடைந்தார்.

மத்திம வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல இயலாத நிலையில், கவலைக்கு ஆளாகியிருந்த செல்வந்தர், அதன் பிறகு நீண்டநெடுநாள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார். இங்ஙனம் கொடைகளால் புகழ்பெற்ற அந்தச் செல்வந்தர் - ஜான் டி ராக்பெல்லர் என்ற அமெரிக்கத் தொழிலதிபர். அவருக்குள் மாறுதலை விதைத்த துறவி, சுவாமி விவேகானந்தர்!

கடற்கரையில் நண்பர்கள் இருவர் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் பணக்காரர். அவரின் முகம் மிகவும் வாடியிருந்தது. காரணம் கேட்டார் நண்பர்.

``ஒரு பக்கம் வருமான வரிக்காரர்கள்; இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் பிரச்னை. இதுல ‘சொத்தைப் பிரிச்சுக் கொடு’ன்னு பிள்ளைகள் செய்யும் தகராறு வேற! இப்படி, நாலா பக்கமும் உதைபட்டுக்கிட்டு இருக்கேன்!’’ என்று புலம்பினார் செல்வந்தர்.

உடனே நண்பர் ``அருகில் ஓரிடத்தில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. அங்கே போவோம். மனதுக்கு ஆறுதலாக இருக்கும்’’ என்று பணக்காரரை அழைத்துச் சென்றார். அங்கே புல்லாங்குழல் இசை மனதுக்கு இதமாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் காரில் திரும்பினர். ஓரிடத்தில் தேநீர் குடிப்பதற்காகக் காரை நிறுத்தினர்.

தேநீர்க் கடைக்கு எதிரே ஒரு விளையாட்டுத் திடல். அங்கே சிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார் பணக்காரர். தேநீர்க் கோப்பைகளுடன் வந்த நண்பர் ``என்ன ஆச்சு?’’ எனக் கேட்டார்.

பணக்காரர், சிறுவர்களின் காலில் உதைபடும் பந்தைச் சுட்டிக்காட்டி, ``ஏறக்குறைய என் நிலைமையும் அப்படித்தானே?’’ என்று கேட்டார் விரக்தியுடன். அவரின் அருகில் உட்கார்ந்து ஆதரவுடன் முதுகைத் தட்டிக்கொடுத்த நண்பர் கேட்டார்,

``கொஞ்சநேரத்துக்கு முன்னாடி புல்லாங்குழல் இசையை ரசித்தோம். இப்போது பந்து... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?’’

‘`அது பந்து... இது புல்லாங்குழல்... அவ்வளவுதான்!’’ என்றார் பணக்காரர்.

இப்போது நண்பர் சொன்னார்: ‘`இரண்டுக்கும் தேவை காற்றுதான். பந்து, தான் வாங்கிய காற்றைத் தானே வைத்துக் கொள்கிறது; வெளியே விடுவதில்லை. அதனாலதான் அது இப்படி உதைபடுகிறது! புல்லாங்குழல் அப்படி இல்லை. ஒரு பக்கத்தில் வாங்கும் காற்றை இன்னொரு பக்கமாக வெளியே விட்டுவிடுகிறது. அதனாலேயே அது, மனிதனின் உதடுகளுடன் உறவாடுது!’’ என்றார்.

பணக்காரர் புன்னகைத்தார். ‘தனது செல்வமும் பந்துக்குள் இருக்கும் காற்று மாதிரியே! அது, புல்லாங்குழலைத் தேடிப் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது!’ என்பது அவருக்குப் புரிந்தது.

நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால் போதும் மகிழ்ச்சி தேடி வரும். ஆமாம், சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அது இரட்டிப்பாகும். துக்கத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகக் குறையும். அன்பைப் பகிர்ந்தால் அது ஆண்டவனை அடைய வழிகோலும்!

தி.தெய்வநாயகம்
விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம் Empty Re: துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம்

Post by Dr.S.Soundarapandian Thu Jun 22, 2023 12:13 pm

துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம் 3838410834 துறவியின் கதை - புல்லாங்குழல் ரகசியம் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum