ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

2 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Mon Jun 12, 2023 12:14 am

"திமுக ஆட்சியில் ராணுவ வீரரைக் கொல்வதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சாதாரணமாக நடக்கிறது!"



திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி பலர் தாக்கினர். உடனடியாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்' என்று தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர்மீது, 120-க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், தீர விசாரிக்காமல், பூசி மெழுகப் பார்க்கிறது காவல்துறையின் விளக்கம். இந்தத் திறனற்ற தி.மு.க அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரண பொதுமக்களுக்கான அரசாக இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ வீரரை அடித்துக்கொல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், கடுமையான நடவடிக்கை இன்றி, மிகச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்கிறது.

தங்கள் சுக துக்கங்களைத் தொலைத்து, தேசத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, நன்றி கொன்ற அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. காஷ்மீர் எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் அவர்களின் மனைவிமீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, இந்தக் கையாலாகாத தி.மு.க அரசு உணர வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:22 am

``அண்ணாமலை எப்போதும் உண்மையைத்தான் பேசுவார்!" - அதிமுக விவகாரத்தில் குஷ்பு



பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது ஊழல் தொடர்பாகக் கருத்து தெரிவித்த அண்ணாமலை, `தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.' என்று குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பதாக அ.தி.மு.க தரப்பிலிருந்து அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``தன்னை முன்னிலைப்படுத்தும் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு வரலாறு, பாரம்பர்யம் என எதுவும் தெரியாது. ஜெயலலிதா குறித்த விமர்சனம் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது. கூட்டணி தர்மத்தை மீறியிருக்கிறார். அமித் ஷாவும், நட்டாவும் உரியவகையில் அண்ணாமலையைக் கண்டிக்க வேண்டும். மாநில தலைமைக்குத் தகுதி இல்லாதவர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரக் கூடாது என்பதாகத்தான் அவரின் பயணம் இருக்கிறது. அண்ணாமலையின் இந்தப் போக்கு தொடர்ந்தால், கூட்டணி குறித்து அ.தி.மு.க உரிய நேரத்தில் முடிவுசெய்யும்" எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமாரின் பேச்சுக்கு பா.ஜ.க முகாமிலிருந்து அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் எதிர்வினையாற்றியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜ.க பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ``முதலவர் ஸ்டாலின் எதையும் படிப்பதில்லை. அரைகுறையாக பிறர் சொல்வதைக் கேட்டு அதை நம்புகிறார். அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் பேசியதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அவர் நேரடியாக அண்ணாமலையைப் பார்த்து கேள்வி கேட்கிறார். ஜெயக்குமாரின் கேள்விக்கு அண்ணாமலைதான் பதில் சொல்ல முடியும். அ.தி.மு.க உடனான பா.ஜ.க கூட்டணி தொடரும் என அமித் ஷா சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வுக்கு மோதல் போக்கெல்லாம் ஒன்றுமில்லை. ஜெயலலிதா ஊழல்வாதி என்ற அண்ணாமலை எப்போதும், அரசியல் தெரிந்து உண்மையைத்தான் பேசுவார். சட்டம் தெரிந்தவர். மாநிலத் தலைவராக இருப்பதால் அவருக்கு எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் எனத் தெரியும். நாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சிறைக்குச் சென்றார். எவ்வளவு குற்றச்சாட்டுகள் வந்தது என்று நமக்கு தெரியும். அவர் சிறைக்குச் சென்ற பின்பு இ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தார். அவருடனான எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கிறது.

அதில் மாற்றமில்லை. கூட்டணி என்று இருந்தால் சில வார்த்தைகள் வரத்தான் செய்யும். ஜெயலலிதா ஊழல்வாதி என்றால் ஊழல் கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்... கூட்டணி எங்களுக்கு இருக்கிறது, ஏன் வைக்கிறீர்கள் என்பதற்கு பதில் கிடையாது.

அண்ணாமலை எந்த ரீதியில் அவ்வாறு சொன்னார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நான் இல்லை. அண்ணாமலையின் பேச்சுக்கு அவர்கள் பதில் கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் தேசிய தலைவர்களை ஏன் யாரும் உருவாக்கவில்லை என்ற வருத்தத்தைத்தான் `தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும்' என அமித் ஷா பேசியிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.


Last edited by சிவா on Tue Jun 13, 2023 1:23 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:22 am

``எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு, ஜெயக்குமாருக்கு எந்தத் தகுதியும் கிடையாது!"- கரு.நாகராஜன்



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு, அதிமுக தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்த நிலையில், ஜெயக்குமாரைக் கண்டித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க-வின் துணை தலைவர் கரு.நாகராஜன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``பாரதிய ஜனதா கட்சியின்‌ மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை அவர்களைப் பற்றி முன்னாள்‌ அமைச்சர்‌ ஜெயக்குமார்‌ இப்படிப் பேசுவது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது. ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியைக்கூட ஒழுங்காகப் படிக்காமல்‌, பிதற்றிக்‌கொண்டிருக்கிறார்‌. தினந்தோறும்‌ பேட்டி கொடுப்பது அவருக்குப் பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள்‌ மாநிலத் தலைவர்‌ அவர்களைப்‌ பற்றிப் பேசுவதற்கு, அவருக்கு எந்தத் தகுதியும்‌ கிடையாது. எங்கள்‌ தலைவர்‌ ஊழலுக்கு எதிராக குரல்‌ கொடுப்பதில்‌ தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறார்‌. தமிழ்நாட்டில்‌ சிஸ்டம்‌ சரியில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்‌. தமிழக மக்களின்‌ நலனுக்காக, மாநிலத்தின்‌ வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும்‌ என்பதிலும்‌ உறுதியாக இருக்கிறார்‌.

அவர்‌ என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர்‌ என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்‌. பதவிக்கும்‌ பவிசுக்கும்‌ ஆசைப்பட்டு அண்ணாமலை அவர்கள்‌ அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு, மக்கள்‌ வாழ்வு வளம்‌ பெறும்‌ கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும்‌ அவர்‌ என்றும்‌ மாறப்‌போவதில்லை. ஜெயக்குமார்‌ போன்ற அரசியல்வாதிகள்‌தான்‌ தங்களை நேர்வழிக்கு மாற்றிக்‌கொள்ள வேண்டும்‌.

ஜெயக்குமார்‌ அவர்கள்‌ நுனி மரக்கிளையில்‌ அமர்ந்துகொண்டு கிளையின்‌ அடிப்பகுதியை வெட்டிக்‌ கொண்டிருக்கிறார்‌. இது போன்ற பேட்டிகளால்‌ பாதிப்பு உங்களுக்குத்‌தான்‌. உலகின்‌ பெரிய அரசியல்‌ இயக்கத்தை, 79 கோடி உறுப்பினர்களைக்கொண்ட இயக்கத்தை செடி என்கிறார்‌. என்ன நிலையிலிருந்து பேசுகிறார்‌ என்று புரியவில்லை. தென்சென்னை நாடாளுமன்ற நிர்வாகிகள்‌ கூட்டத்தில்‌ நேற்று அமித் ஷா அவர்கள்‌ கலந்துகொண்டதுகூட ஜெயக்குமார்‌ அவர்களுக்கு விரக்தியைத் தந்திருக்கும்‌ என்று கருதுகின்றேன்‌. எங்கே தன்‌ மகன்‌ ஜெயவர்தன்‌ போட்டியிட விரும்பும்‌ தொகுதி பறிபோய்‌விடுமோ என்று கலங்கிப்‌போயிருப்பார்‌. கூட்டணி என்பது எல்லோரும்‌ இணைந்ததுதான்‌, இதில்‌ பெரியண்ணன்‌ வேலை யாருக்கும்‌ கிடையாது. எனவே, எங்கள்‌ மாநிலத்‌ தலைவர்‌ அண்ணாமலை அவர்களின்‌ ஆங்கிலப்‌ பத்திரிகைப் பேட்டியை திசைதிருப்பி குழப்பம்‌ செய்திட வேண்டாம்‌" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:29 am

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? அண்ணாமலை பேச்சுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்



அ.தி.மு.க ஆட்சி குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அண்ணாமலை அ.தி.மு.க ஆட்சி குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு அ.தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸூம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளனர். இந்தப் பேச்சு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் போது தன்னிடம் இருந்த தங்க நகைகளை அப்போதைய பாரதப் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு அளித்த பெருமைக்குரியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இது மாண்புமிகு அம்மா அவர்களின் தேசப் பற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டு. மாண்புமிகு அம்மா அவர்களின் தெய்வீகப் பற்று என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

இசை, நடிப்பு, நாட்டியம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சிப் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளைக் கற்றறிந்தவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பல்திறன் படைத்தவர், பன்மொழிப் புலவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எந்த அரசியல் பின்பலமின்றி, தன்னுடைய தனித் திறமையால், மதி நுட்பத்தால், சாணக்யத்தனத்தால், ராஜதந்திரத்தால், சோதனைகளை சாதனைகளாக்கி, கற்களைப் படிக்கத் தடையாக, தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தலைமையேற்று நடத்திய பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு. சமூக நீதியைக் காத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்பதற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, அந்த மக்களுக்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்கள், குறிப்பாக சுனாமி ஏற்பட்டபோது, ​​உலக நாடுகள் வியக்கும் வகையில், அவற்றை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

அன்னை இந்திராகாந்தி, திரு. ராஜிவ்காந்தி, திரு. பி.வி. நரசிம்மராவ், திரு. தேவகவுடா, திரு. அடல் பிஹாரி வாஜ்பாய், திரு. எல்.கே. அத்வானி, டாக்டர் மன்மோகன் சிங், திரு. சந்திரசேகர், திரு. ஹர்கிஷன் சிங் சுர்ஜித், திரு. ஜோதி பாசு, திரு. ஏ.பி. பரதன், திரு. என். சந்திரபாபு நாயுடு, திரு. முலாயம்சிங் யாதவ், திரு. லாலு பிரசாத் யாதவ், செல்வி மம்தா பானர்ஜி, திரு. நவீன் பட்நாயக், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி என அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். மாண்புமிகு அம்மா அவர்களும் அனைவரின்மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். பல அரசியல் கட்சித் தலைவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காதிருந்தால், மாண்புமிகு அம்மா அவர்கள் இந்தியத் திருநாட்டின் பிரதமராகவே பொறுப்பேற்றிருப்பார். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் இருந்த ஆளுமைத் திறன், பன்மொழித் திறன், முடிவெடுக்கும் திறன், கட்சி வித்தியாசமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பு ஆகியவைதான் இதற்கான காரணங்கள்.

இப்படிப்பட்ட உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்தியத் திருநாடே வியந்து பார்த்த வீரம் மிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக திரு. அண்ணாமலை அவர்கள் விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின் 1991-1996 ஆண்டு ஆட்சி முடிவடைந்தவுடன், மாண்புமிகு அம்மா அவர்களை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீயநோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டுச் சென்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்.

உண்மையை உணராமல், மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:29 am

ஜெயலலிதாவை விமர்சிப்பதா? அண்ணாமலை இனி எங்களிடம் வாங்கிக் கட்டுவார்: ஜெயக்குமார் ஆவேசம்



அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை வரலாறு தெரியாமல் கத்துக்குட்டி போல் பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
ஜெயலலிதா குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்னர் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் இருந்த காலத்தில் தோழமை உணர்வு இருந்தது.

ஆனால் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். அவரை அமித் ஷா- ஜெ. பி நட்டா கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர்.
பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல் முருகனுக்கு மாநில தலைவருக்கான தகுதி இருந்தது. ஆனால் அண்ணாமலைக்கு அது இல்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயல்படுவது போல் உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “அண்ணாமலை இவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் வாங்கிக்கட்டி கொள்வார்” எனத் தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:44 am

அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: பிள்ளையார் சுழி போட்ட புதுவை



அண்ணாமலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசியது தி.மு.க கட்சிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என புதுச்சேரி அ.தி.மு.க கண்டித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய .தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்.

அப்போது, அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தனது கருத்தை அண்ணாமலை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எங்களது புரட்சி தலைவி அம்மா அவர்களை பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.,வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது. அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. ஆனால் அண்ணாமலைக்கு ஒரு தலைமை பண்பு என்ன என்பது கூட தெரியாமல் கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக இன்று தவறான தகவல்களை கூறி வருவதை புதுச்சேரி மாநில அ.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஸ்டாலினின் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்தில் எங்களுடைய கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை எங்களை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அரைவேக்காட்டுத்தனமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து பா.ஜ.க தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலங்களில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். இவரது பேச்சு திமுகவின் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும். இதைக் கூட தெரியாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அவதூறாக பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், Dr.கணேஷ், சிவா, தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், துரை, ராஜா, கமல்தாஸ், குணசேகர், கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், ச.செந்தில்முருகன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்கள் ராசு, யோகனந்தசாமி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், தொகுதி கழக தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார் உட்பட அ.தி.மு.க.,வினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:48 am

அதிமுகவை சீண்டுவது அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா?

“அண்ணாமலையின் நடவடிக்கைகள் எதுவும் தன் இஷ்டத்தில் செய்வதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அமித் ஷா சென்னை வந்துவிட்டுச் சென்றுள்ள இந்தச் சூழ்நிலையில் இப்படி நடப்பது, மத்திய தலைமைக்குத் தெரிந்தே நடப்பதாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இப்போது அண்ணாமலையின் மூலமாக அதிமுகவுக்கு ஏற்படும் அழுத்தம், பாஜகவின் ஒரு வகை வியூகமாக இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன்,” என்கிறார் அவர்.

ஆங்கிலத்தில் ‘குட் காப், பேட் காப்’ என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது, ஒருவர் கடுமையாக நடந்துகொள்வதைப் போலச் செயல்படுவார். மற்றொருவர் மிகவும் இனிமையான, நட்புறவு மிக்க நபரைப் போல் காட்டிக்கொள்வார்.

ஒருவர் கடுமையாகப் பேசும்போது, மற்றொருவர் எதிரில் இருப்பவரைத் தேற்றி, அவருடன் நெருக்கமாகி தன் வழிக்குக் கொண்டு வருவார். இந்த அணுகுமுறை, தொழில்ரீதியிலான ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் எனப் பல விஷயங்களில் கையாளப்படும்.

இத்தகைய குட் காப்-பேட் காப் அணுகுமுறையைக்கூட பாஜக கையில் எடுத்திருக்கக்கூடும் என்று யூகிக்கும் பத்ரி சேஷாத்ரி. “ஒருபுறம் மாநிலத்தில் அண்ணாமலை கடுமையாக நடந்துகொள்வதைப் போல் காட்டிக்கொள்ள, இன்னொருபுறம் அதன் எதிர்வினையாக அதிமுக மத்திய தலைமையிடம் செல்லும்போது அவர்கள் ஆறுதல் வார்த்தைகளைப் பேசி தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம்” என்ற நினைப்பில் இத்தகைய அணுகுமுறையைக் கையில் எடுத்திருக்கலாம் எனக் கருதுகிறார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 1:53 am

எங்கள் கட்சியில் பூத் தலைவர் கூட உயர் பதவிக்கு வருவார்.. உங்கள் கட்சியில்...? முதல்வருக்கு அண்ணாமலை சவால்

பாஜகவின் சித்தாந்தம் தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் ஏன் அவசரப்படுகிறார்? என தெரியவில்லை. காரணம், அவருக்கே பயம் வந்துள்ளது. அவரைத் தாண்டி அடுத்த திமுக தலைவராக சகோதரி கனிமொழி வருவதற்கு தயாராகிவிட்டார்.

நான் முதலமைச்சருக்கு ஒரே ஒரு சவால் விடுக்கின்றேன். எங்கள் கட்சியில், அமித் ஷா சொன்னதுபோல், ஒரு பூத் தலைவரை கூட உயர்த்தி எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர வைப்போம். ஆனால், கோபாலபுரம் குடும்பத்தில் பிறந்தால் மட்டும்தான் உங்கள் கட்சியில் பொறுப்பு.

தமிழகத்தில் ஜனநாயகத்தை ஒரு கட்சி குழிதோண்டி புதைத்தது என்றால், அது தி.மு.க.தான். இதற்கு முதலமைச்சர் வெட்கப்படவேண்டும்.

எங்கள் கட்சியின் சித்தாந்தம் பூத் மட்டத்தில் இருந்து மேலே வந்துகொண்டிருப்பார்கள். எனவே, முதலமைச்சர் பாஜக-வின் சித்தாந்தம் தெரியாமல் பேசுவது என்பது, அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை மட்டும்தான் காட்டுகிறது.

மத்தியில் 9 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அமைச்சர்கள் குண்டூசி திருடியது உண்டா? அந்த அளவுக்கு சரியாக இருந்தால், வயிறு எரியத்தானே செய்யும்? இரண்டரை ஆண்டு தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி ஊழலுக்கு பெயர் வாங்கியிருக்கிறது. அதனால்தான் பால்வளத்துறை அமைச்சரை மாற்றினீர்கள். ஏன் மாற்றினீர்கள்? 9 ஆண்டுகளில் எங்களின் சாதனை மக்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 4:01 pm

தமிழக மக்களின் இதயக்கனி அண்ணாமலை: பா.ஜ., துணை தலைவர்




சென்னை: 'தமிழக மக்களின் இதயக்கனியாக இருக்கும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவதூறாக பேசுவதாக' மாநில பா.ஜ., துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய அண்ணாமலைக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இன்று (ஜூன் 13) நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கூறியதாவது: தமிழக மக்களின் இதயக்கனியாக விளங்குகிறத அண்ணாமலை குறித்து அவதூறாக பேசுகின்றனர். ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

அண்ணாமலையின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். அண்ணாமலையின் வளர்ச்சியை அதிமுக தலைவர்கள் விரும்பவில்லை. அவர் மீது பொறாமையாக இருக்கின்றனர். அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. பொம்மை தலைவர் அல்ல; தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் அண்ணாமலை. அவரை பொம்மை என செல்லூர் ராஜூ கூறுவது தான் கோமாளித்தனமாக இருக்கிறது.

ஜெயலலிதா மீது மரியாதை



அண்ணாமலையை பா.ஜ.,வில் இருந்து தனிமைப்படுத்தி குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. கண்டிக்கப்பட வேண்டியவர்களை கண்டிக்காமல் எங்கள் மாநில தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். அதிமுக.,வின் தீர்மானங்களை எதிர்க்கிறோம். ஜெயலலிதா மீது பிரதமர் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மரியாதை வைத்துள்ளோம்.

சி.வி.சண்முகம்



பா.ஜ., 4 இடங்களில் வெற்றிப்பெற்றதற்கு அதிமுக தான் காரணம் என சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூறுகின்றனர். அப்படியெனில், அதிமுக வென்ற 66 இடங்களில் பா.ஜ.,வும் உதவி செய்துள்ளதே!. ஆனால் அப்படியிருந்தும் சி.வி.சண்முகத்தால் வெற்றிப்பெற முடியவில்லை. அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. தான் பேசிய பின், என்ன பேசினோம் என்பது தெரியாதவர் சி.வி.சண்முகம்.

திமுக.,வுக்கு வாய்ப்பு



அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மரியாதை உள்ளது. கூட்டணி என்பது பொதுவான ஒன்று; கூட்டணியில் பெரியண்ணன் என்பது கிடையாது. கூட்டணியை பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும்;

அதன்பின்னர் மாநில தலைவரிடம் பேசுவர். கூட்டணியில் பெரியண்ணன் வேலையை யாரும் செய்யக் கூடாது. திமுக.,வுக்கு வாய்ப்பளிக்கும் சூழ்நிலையை அதிமுக.,வினர் உருவாக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Tue Jun 13, 2023 4:06 pm

அண்ணாமலை செயல்பாடு: அமித்ஷா பாராட்டு



பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Tamil_News_large_3346620

சென்னை : 'மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது; கட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என தமிழக பா.ஜ. நிர்வாகிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை வழங்கியுள்ளார்.

சென்னை கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் தென் சென்னை லோக்சபா தொகுதி பா.ஜ. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின் அமித்ஷா 20 தொண்டர்களுடன் மண்டபத்திலேயே மதிய உணவு சாப்பிட்டார். இதற்காக எழும்பூரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்ற தொண்டர் தன் வீட்டில் சமைத்த சப்பாத்தி ரொட்டி பருப்பு கொண்டைக் கடலை மசாலா சாதம் தயிர் பழ வகைகள் எடுத்து வந்திருந்தார்.

பின் மூத்த நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் அமித்ஷா கட்சி வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது அமித்ஷா கூறியுள்ளதாவது: தமிழக மக்கள் பா.ஜ.வை பார்த்து உற்சாகம் அடைகின்றனர். தி.மு.க.வின் குடும்ப ஆட்சியை அகற்ற பா.ஜ. தான் மாற்று என்பதை உணர்கின்றனர்.

தேர்தல் அரசியலுக்கு 'பூத்' கமிட்டி அவசியம். அந்த கமிட்டி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். பூத் கமிட்டி அளவில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி அதில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.

மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் என்னென்ன பதவிகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவு எடுக்கும்.

தமிழகத்தில் பா.ஜ. வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைப்பது தொடர்பாக எங்களுக்கு தகவல் வருகின்றன. இதே வேகத்தில் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து கட்சி வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்  Empty Re: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum