ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவும் உடல் நலமும்...

2 posters

Go down

 உணவும் உடல் நலமும்... Empty உணவும் உடல் நலமும்...

Post by சிவா Sat Jun 10, 2023 11:42 pm

 உணவும் உடல் நலமும்... Food-and-health

சரியான நேரத்தில் உண்ணவில்லை என்றால் என்ன நடக்கும்?


ஆரோக்கியமான உணவு என்று வரும்போது, நம் தட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமா?

காலை உணவைப் பெரியளவில் உட்கொள்வது அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கு உதவும். அதேநேரத்தில் நாளின் கடைசி உணவை சீக்கிரமே சாப்பிடுவது உடல் எடையை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

உணவு உண்ணும் நேரம், உடல் எடை, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

உணவு நேரம் மற்றும் எடை குறைப்பு


உடல் பருமன் என்பது பரவலாக அதிகரிக்கும் நிலையில், நம்முடைய உணவு நேரத்தை மாற்றுவது உடல் எடையைப் பராமரிக்கச் சிறந்த வழியாக இருக்க முடியுமா?

ஆம், என்கிறது அறிவியல். உணவு உண்ணும் நேரம் ஒரு நபரின் எடையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயும் பல ஆய்வுகள் உள்ளன. உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும்போது உடல் எடை பராமரிக்கப்படுவதாகத் தெரியவந்திருக்கிறது.

இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டோன் இந்த இரண்டுக்குமான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவருடைய இதுவரையிலான ஆய்வு, விரைவாகச் சாப்பிடும்போது நம் உடல் ஊட்டச்சத்துகளை வேகமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்துள்ளது.

அதுகுறித்து ஜான்ஸ்டோன், "சமீபத்திய ஆய்வுகள் மாலை நேரத்தில் சாப்பிடும் உணவைவிட, காலையில் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரிகள் மிகவும் திறம்படப் பயன்படுத்தப்படுவதோடு, இது உடல் எடையைப் பரமாரிப்பதிலும் பங்கு வகிப்பதாகக் கூறுகின்றன," என்கிறார்.

மேலும், "க்ரோனோநியூட்ரிஷன் என்பது அறிவியல் துறையில் வளர்ந்து வரக்கூடிய ஒரு பிரிவு. நம்முடைய பழங்கால உயிரியல் அமைப்புக்கும் நவீன வாழ்க்கை முறைக்குமான முரண்பாட்டைக் காட்டுகிறது. நாம் சாப்பிடும் நேரம் ஏன் நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால், நாம் ஒன்றிரண்டு வேளை உணவுக்காக மட்டுமின்றி மொத்த உணவுப் பழகத்திலுமே கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேளை உணவில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது பெரிய சிக்கலை உண்டாக்காது. ஆனால், அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்தால், நிச்சயம் பாதிக்கும்," என்கிறார்.

அதுமட்டுமின்றி, நாளின் முதல் உணவை நேரமாகச் சாப்பிடுவதற்கும் குறைவான இறப்பு விகிதத்திற்கும் தொடர்பு இருப்பதாக நியூ யார்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் (CUNY) ஓர் ஆய்வு கூறுகிறது.

அந்த ஆய்வில் 34,000 அமெரிக்கர்களின் கடந்த 30 ஆண்டுக்கால உணவு நேர விவரங்களைப் பகுப்பாய்வு செய்தார்கள். அவர்கள் உணவு உண்ணும் நேரத்திற்கும் இறப்பு விகிதத்திற்குமான இணைப்பு குறித்து இதில் ஆராயப்பட்டது. அந்த இணைப்பிற்கு ஏதேனும் காரணங்களைக் கண்டறியவும் அவர்கள் முயன்றனர்.

அதுகுறித்துப் பேசிய குயின்ஸ் கல்லூரியிலுள்ள குடும்பம், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி அறிவியல் துறையின் தலைவர், பேரா.அஷிமா கேன்ட், "நாம் உணவு உண்ணும் நேரத்திற்கும் அதில் கிடைக்கும் ஆற்றலின் சேகரிப்பு மற்றும் பயன்பாட்டிற்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்று, ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் உடலின் செயல்பாடுகள் எப்போது அதில் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தும் நேரத்திற்கும் இடையிலான முரண்பாடு.

உடல் எடை கூடுதல், கொழுப்பு, ரத்தத்திலுள்ள இன்சுலின் அளவு என்று பலவும் இதனால் மாறுபடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதாக அவருடைய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் அவர், "இந்த ஆய்வின் படி, ஆண்கள் காலை 7 மணிக்கும் பெண்கள் 7:15 மணிக்கும் நாளின் முதல் உணவை எடுத்துக் கொள்வது, குறைந்த வயதில் இறப்பதற்கான வாய்ப்பு விகிதத்தைக் குறைக்கிறது,".

இருப்பினும், இதற்கான காரணத்தை அவர் இன்னும் முடிவாக உறுதிபடுத்தவில்லை. உணவிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பிரித்து எடுக்கும் ஹார்மோன்கள் வெளியேறும் நேரத்தோடு இதற்குத் தொடர்பு இருக்கலாம். அதை இன்னும் விரிவான ஆய்வில் உறுதி செய்ய வேண்டியுள்ளது,".

நாளின் கடைசி உணவை எப்போது உட்கொள்வது?


"இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், மாலை நேர உணவை விரைவாக எடுத்துக்கொள்வது சிறந்தது. நாளின் கடைசி ஆற்றல் சேகரிப்பை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ எடுத்துக்கொள்ள வேண்டும்," என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் க்ரோனோபயாலஜி மற்றும் இன்டக்ரேடிவ் ஃபிசியாலஜி துறை பேராசிரியர் ஜோனாதன் ஜான்ஸ்டன்.

மேலும், "அதற்குக் காரணம், நாள் முடிய முடிய நம் இன்சுலினுடைய திறன் குறையத் தொடங்கும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர் மக்கள் 'மதிய நீரிழிவு' என்ற பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஏனெனில், மதியத்திற்கு மேல், சர்க்கரைக்கான தாங்குதிறன் காலையில் இருந்ததைவிடக் குறையும். ஆகவே, இரவு உணவைத் தாமதாகச் சாப்பிட்டால் சர்க்கரை, கொழுப்பு போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும். அப்படி, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்றவை அதிகரித்தால் அது இதயக் கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பது நமக்குத் தெரியும்,".

இறுதியாக, "நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மற்றும் அவற்றின் அளவு நம் ஆரோக்கியத்தில் நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரமும் இதில் பங்கு வகிக்கிறது என்பது உறுதியானால், நாம் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கும்போது, என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் சேர்த்து துல்லியமான ஆலோசனைகளை வழங்க முடியும்.

"அடிப்படையில் இரவு 10 முதல் 6 மணிக்குள் தூங்கி எழ வேண்டும். காலை உணவை 8 மணி முதல் 8.30-க்குள் சாப்பிட வேண்டும். மதிய உணவை ஒரு மணி முதல் 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவைப் பொறுத்தவரை, வீட்டில் இருப்போர் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. யாராக இருந்தாலும் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுவது சிறந்தது".
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உணவும் உடல் நலமும்... Empty Re: உணவும் உடல் நலமும்...

Post by சிவா Sat Jun 10, 2023 11:44 pm

இனிப்பு உண்பதை நிறுத்திவிட்டால் உடலில் என்ன ஆகும்?


மனிதர்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வதால் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அளவை விட குறைவாக சர்க்கரை சாப்பிடும் போது தலைவலி, சோர்வு, எண்ண மாற்றங்கள் போன்ற சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

இதற்கான காரணங்கள் இதுவரை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடும் போது, மனித மூளை எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதோடு அந்த அறிகுறிகள் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரை (Table sugar) என்பது சுக்ரோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கரும்பு, சர்க்கரை, கிழங்கு, போன்ற பொருட்களில் இருக்கிறது.

இன்று அபரிவிதமாக உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவின் சுவையைக் கூட்ட, உணவில் சுக்ரோஸ் மற்றும் பல வகையான சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. உணவில் சர்க்கரை சேர்ப்பதால் சுவை கிடைப்பது போக, மனித மூளையிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

நம் வாய்க்குள் சுக்ரோஸ் சென்ற உடன் இனிப்பு சுவை ரெசப்டார்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. அது மூளையில் டோபாமைன் என்கிற ரசாயனத்தை வெளிப்படுத்துகிறது.

டோபாமைன் என்கிற ரசாயனம் ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர். அதாவது மூளையில் இருக்கும் நரம்புகளுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு ரசாயனம்.

மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், வெகுமதிகள் கிடைக்கும் போதும் இந்த ரசாயனம் வெளிப்படுகிறது. இந்த டோபாமைன் விளைவு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. டோபாமைன் விளைவு, நம்மை அதிக உணவை உட்கொள்ளத் தூண்டும்.

மனிதர்கள் மற்றும் விலங்குகள், அதிகம் சுக்ரோஸ் உட்கொள்வதால் ஏற்படும் டோபாமைன் விளைவுகளால் மூளையின் அமைப்பே மாறும், உணர்வு ரீதியிலான விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதத்தை மாற்றும், நடத்தையை மாற்றும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

சர்க்கரை மனிதர்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது எதார்த்தமானதுதான். ஆகையால் சர்க்கரை உட்கொள்வதை குறைக்கும் போதோ அல்லது சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தும் போதோ ஏற்படும் எதிர்மறை விளைவுகள் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை.

சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தும் ஆரம்ப நாட்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்னைகள் எழுவதாகக் கூறுபடுகிறது..

உடல் ரீதியாக தலைவலி, சோர்வு, தலை சுற்றல் போன்ற பிரச்னைகளும், மன ரீதியாக மன அழுத்தம், மனச் சோர்வு, உணவு சாப்பிட வேண்டும் என்கிற ஏக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

அதாவது சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தும் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே, தொடக்கத்தில் உணவு கட்டுப்பாடு திட்டங்களைத் தொடங்கும் போது மிகவும் சிரமமாக இருக்கிறது.

சர்க்கரை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும் அல்லது சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தும் மனிதர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்குப் பின்னால், பெரும்பாலும் மூளையின் ரசாயன சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இருக்கின்றன.

ஒருவரின் உணவில் இருந்து சர்க்கரை நீக்கப்படும் போது, மூளையில் டோபாமைன் விளைவுகள் திடீரென குறைகின்றன, எனவே அது மூளையின் மற்ற செயல்பாடுகளை பாதிக்கலாம்.

எனவே எந்த ஓர் உணவுக் கட்டுப்பாட்டின் முதல் சில வாரங்கள் மிகவும் கடினமாவைகளாக இருக்கின்றன. சர்க்கரை கெடுதல் அல்ல, ஆனால் அதை அளவோடும், ஆரோக்கியமான உணவோடும், உடற்பயிற்சிகளோடும் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உணவும் உடல் நலமும்... Empty Re: உணவும் உடல் நலமும்...

Post by சிவா Sat Jun 10, 2023 11:47 pm

அதிகமாக சாப்பிட தோன்றுவது மனநல பிரச்னையா?


சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு இத்தகைய சிக்கல் ஏராளமானோருக்கு வந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

"உண்ணுதல் கோளாறு அல்லது Eating Disorder என்பது வெறும் உடல் ரீதியான பிரச்னையில்லை. இது முற்றிலும் மன நலம் சார்ந்த பிரச்னை என்கிறார்" மனநல மருத்துவர் வந்தனா.

மிக மகிழ்ச்சியாக இருக்கும்போதோ அல்லது கவலையாக இருக்கும்போதுதான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. பெரும்பாலும் பதின்ம வயதில்தான் இந்தப் பிரச்னைக்கு அடித்தளமிடப்படுகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உண்ணுதல் கோளாறு அதிகமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) நடத்திய ஆய்வின்படி, உயர் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளில் 15 சதவிகிதம் பேருக்கும் மாணவர்களில் 4 சதவிகிதம் பேருக்கும் உண்ணுதல் குறைபாடு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் இது அனைத்து வயதினர் மத்தியிலும் பரவலாக இருக்கிறது.

"வீட்டில் எப்போதும் சலிப்பாக இருப்பது, உடல் உழைப்பு ஏதுமில்லாத சோம்பலான நிலை போன்றவையே இதற்குக் காரணம். அடுத்ததாக இந்தக் காலத்தில் உணவைப் பார்த்து உணர்ந்து, முழு உணர்வு நிலையுடன் சாப்பிடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதுவும் உண்ணுதல் கோளாறுக்கு காரணமாகிறது" என்கிறார் வந்தனா.

பெரும்பாலானவர்களுக்கு பிறக்கும்போதே உண்ணுதல் கோளாறுக்கான காரணிகள் இருக்கலாம். சுற்றியிருக்கும் சூழல்தான் பெரும்பாலும் இதற்குக் காரணமாகிறது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து ஏற்படும் பழக்கங்களும், இந்தக் கோளாறுக்கு அடிப்படையாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உண்ணுதல் கோளாறின் வகைகள்


உண்ணுதல் கோளாறு பெரும்பாலும் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. இதல் முதலாவது வகை அனோரெக்சியா. அடுத்தது புலிமியா. மற்றொன்று அதிகமாக உண்ணும் Binge Eating. அனோரெக்சியாவை இதைப் பசியின்மை என்று கூறலாம்.

"அனோரெக்சியா கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் தங்களது உடல் எடையைப் பற்றியே கவலை கொண்டிருப்பார்கள். எதையாவது சாப்பிட்டால் உடை எடை கூடிவிடும் என்று அஞ்சுவதால், எதையுமே சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக கொழுப்பு உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். இப்படி உணவைத் தவிர்ப்பதாலேயே இவர்கள் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். எடுத்துக் கொண்ட கலோரியைக் குறைப்பதற்காக தீவிரமான முறைகளைக் கடைப்பிடிப்பார்கள்"

உண்ணுதல் குறைபாட்டில் மற்றொரு வகை புலிமியா. இவர்களுக்கு உண்ணுவதில் கட்டுப்பாடு கிடையாது. அதனால் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வார்கள்.

"புலிமியாவா கோளாறு இருப்பவர்கள், சாப்பிட்ட பிறகு செயற்கையாக வாந்தியெடுப்பது, மலமிளக்கி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது போன்ற வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். உண்ணாவிரதம் இருந்து சாப்பிட்ட உணவைச் சமப்படுத்தவும் முயற்சிப்பார்கள். எனினும் அனோரெக்சியா போல் அல்லாமல் இவர்கள் ஓரளவு சரியான அல்லது சற்று அதிகமான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள்" என்கிறார் வந்தனா.

மூன்றாவது வகை அளவுக்கு அதிகமாக உண்ணுவது. இதை Binge Eating என்கிறார்கள்.

"இனிமேல் சாப்பிடவே முடியாது என்ற அளவுக்கு மூச்சு முட்ட சாப்பிடுவது இவர்களது வழக்கம். பசியே இல்லாவிட்டாலும் உண்பதை இவர்களால் நிறுத்த முடியாது. மற்றவர்கள் ஏதும் நினைத்துக் கொள்வார்கள் என்பதால், பெரும்பாலும் தனியே உண்பது இவர்களது வழக்கம். அதன் பிறகு அதை ஈடுகட்டுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். அதிகமா உண்ட பிறகு அதை நினைத்து இவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. இதுவே மனநலக் கோளாறாகிவிடுகிறது. இந்தவகைக் கோளாறு பெரும்பாலும் இளம்பெண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பொதுமனநிலையில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதுதான் காரணம்" என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.

உண்ணுதல் கோளாறுக்கு சிகிச்சை என்ன?


இது பொதுவாக மேலை நாடுகளில்தான் இதுதான் அதிகம் என்ற தவறான கருத்து உள்ளது. அது இந்தியாவிலும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இப்போது மேலை நாடு கீழை நாடு என்ற வேறுபாடு ஏதும் இல்லை. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்ணுதல் கோளாறு இருக்கிறது. இந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.

உண்ணுதல் கோளாறு மனச் சோர்வு காரணமாகவே வருகிறது. இவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது உடலைப் பற்றி யாராவது விமர்சனம் செய்திருப்பார்கள். விளைவுகளைப் பற்றிய முன்சிந்தனையில்லாமல் சட்டென செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்.

"இத்தகைய கோளாறுகளுக்கு மூளையில் உள்ள ஒரு பகுதியே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மனநல மருத்துவர்களை நாட வேண்டும். இதற்கான மருந்துகளைக் கொடுத்த அவர்கள் குணப்படுத்துவார்கள். கூடவே மனநல ஆலோசகர்கள், தன்னம்பிக்கைக் குறைபாட்டை சரிசெய்யும் பயிற்சியளிக்கிறார்கள்." என்கிறார் வந்தனா.

உண்ணுதல் கோளாறு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகவும் குறைவு என்று கூறும் வந்தனா, "மருத்துவம் படிக்கும் ஒரு மாணவியேகூட இதுபற்றிய புரிதல் இல்லாமல் மிகுந்த தயக்கத்துடன் என்னிடம் ஆலோசனை கேட்பதற்காக வந்தார்" என்று கூறுகிறார்.

"உணவுடன் தொடர்புடையது என்பதால் பெரும்பாலும் வயிறுக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் வயிறு தொடர்பான மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை என்று தெரிந்த பிறகுதான் மனநல மருத்துவரையோ, ஆலோசகரையோ அணுகுகிறார்கள்"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உணவும் உடல் நலமும்... Empty Re: உணவும் உடல் நலமும்...

Post by சிவா Sat Jun 10, 2023 11:50 pm

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி? 4 எளிய வழிமுறைகள்


நீங்கள் உங்கள் உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுக்க இதோ நான்கு எளிய வழிமுறைகள்

1. ஆரோக்கியமில்லாத உணவு குறித்து எதிர்மறையாக சிந்தியுங்கள்


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தொடர்ந்து ஆறு நொடிகள் உணவை உற்றுப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர் ஆனால் அந்த சமயத்தில் அந்த உணவில் உள்ள எதிர்மறையான விஷயங்கள் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

இது அந்த உணவு ஆரோக்கியமற்றது என்பது மட்டுமல்ல, சுவை அல்லது அதன் தோற்றம் போன்று, அந்த உணவு குறித்து அவர்கள் வெறுக்கும் விஷயம் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு, அந்த குறிப்பிட்ட உணவை உண்பதற்கான தங்கள் ஏக்கம் 20 சதவீதம் அளவு குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

ஆரோக்கியமற்ற உணவின் மீது நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும் அது நம் உடல் எடையை பாதுகாக்க உதவும்.

2. உணவு தேர்வின்போது ஆரோக்கியமான உணவு குறித்த நேர்மறையாக சிந்தியுங்கள்


அடுத்தகட்டமாக, எதிர்மறையான எண்ணங்கள் குறித்து யோசிக்கும் நேரத்தின் அளவுக்கு ஆரோக்கியமான உணவின் நேர்மறையான எண்ணங்கள் குறித்தும் யோசிக்க கோரப்பட்டனர்.

இது ஆரோக்கியமான உணவின் மீது அவர்களுக்கு உள்ள விருப்பம் 14 சதவீத அளவு அதிகரிக்க உதவியது.

எனவே உணவு தேர்வின்போது அது குறித்து சிறிது நேரம் நீங்கள் யோசித்தால் நீங்கள் சிறந்த உணவை தேர்ந்தெடுக்க அது வழிவகை செய்யும்.

3. ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்குங்கள்


யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உங்கள் உணவு தேர்வு குறித்து நீங்கள் முன்னரே உங்களை தயார்படுத்திக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், ஆரோக்கியமற்ற நொருக்கு தீனிகள் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்து படிக்குமாறு கோரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு 15 நிமிடங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் ஆரோக்கியமற்ற உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவர்கள் யோசித்து பார்க்குமாறு கோரப்பட்டனர்.

அந்த பயிற்சியின் ஒரு பகுதியாக அரோக்கியமான உணவுகளின் படங்கள் காட்டப்பட்டன அப்போது அவர்கள் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டும்.

அதன்பின் அவர்கள் கண் முன்னே, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் இரண்டும் காண்பிக்கப்பட்டன. அதில் 7.6 சதவீத அளவு ஆரோக்கியமான உணவுகளை அவர்கள் தேர்வு செய்தனர்.

4. ஆரோக்கியமான உணவு தேர்வு செய்ய உங்கள் மூளையை முன்னரே பழக்குங்கள்


இது குறித்த சோதனையில், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை தெரிவித்தனர் பின் அதுகுறித்து அவர்கள் நேர்மறையாக சிந்திக்கும்போது அதன் புகைப்படங்களை அவர்கள் காண்பித்தனர்.

இந்த முயற்சி 5.4 சதவீத அளவு அவர்கள் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுக்க உதவியது.

ஆய்வின் முடிவில்…


இது சிறு சிறு மாற்றங்களாக தோன்றலாம் ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நாள் ஒன்றைக்கு சராசரியாக 107 கலோரிகள் குறைவாக உட்கொண்டனர்.

ஒரு மனிதர் இத்தனை கலோரிகளை குறைக்க குறைந்தது 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

அதிக உடல் எடைக்கான சிகிச்சைக்கு சரிசமமாக இந்த சிறியதொரு பயிற்சி உதவியதாக யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெடி கோபர் தெரிவிக்கிறார்.

நீங்கள், நாள் ஒன்றிற்கு ஒரு ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்தாலும் ஆது காலப்போக்கில் பெரும் பயனை தரும் என்கிறார் கோபர்.

வேறு சில உணவுப் பழக்கங்களில் உடல் எடையை குறைக்க முயற்சித்தாலும், மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு அவர்கள் உடல் எடையை மீண்டும் திரும்ப பெறக்கூடும்.

ஆனால் இந்த புதிய வழிமுறை ஒவ்வொரு நாளும் மிதமாக கலோரிகளை குறைத்தாலும் காலப்போக்கில் அது நல்ல பயனை அளிக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உணவும் உடல் நலமும்... Empty Re: உணவும் உடல் நலமும்...

Post by Dr.S.Soundarapandian Sun Jun 11, 2023 12:49 pm

 உணவும் உடல் நலமும்... 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 உணவும் உடல் நலமும்... Empty Re: உணவும் உடல் நலமும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum