Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
3 posters
Page 1 of 1
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
![புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம் New-parliament](https://img.theweek.in/content/dam/week/news/india/images/2020/12/10/new-parliament.jpg)
சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.
2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலிருந்து காங்கிரசும் பல எதிர்க்கட்சிகளும் விலகி இருந்தன. அந்த நேரத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் தொற்றுநோய் பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பின.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கலாமா என்று எதிர்க்கட்சிகள் இப்போது யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மோடி திறந்து வைப்பது குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதில் கலந்து கொள்வதா அல்லது விலகி இருப்பதா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டு நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடக்கப் போகிறது என்று தெரிந்ததும் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியதுடன் அதே சமயம் அதை நுணுக்கமாகக் கையாள முயற்சி செய்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டாளியான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) சாவர்க்கர் மீதான எந்த தாக்குதலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை கட்சிக்கு தெளிவுபடுத்தியதன் மூலம் காங்கிரஸுக்கு சாவர்க்கர் சிக்கலான விஷயமாக மாறியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவாரும் கடந்த காலங்களில் சாவர்க்கரை தாக்குவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரசாங்கத்தை விமர்சித்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த வாரம் ட்வீட் செய்தார்: “நம்முடைய நாட்டை நிர்மாணித்த தந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஒரு முழுமையான அவமானம். காந்தி, நேரு, படேல், போஸ் போன்றோர் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் டாக்டர் அம்பேத்கர் அப்பட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் திறக்க வேண்டும் என்றும் பிரதமரால் திறக்கப்படக் கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு உரிமை குறித்த வாதத்தின் பக்கம் சாய்ந்து சர்ச்சையில் இருந்ததால் அன்றைய முக்கியத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை இந்த பிரச்சினையை தலித் மற்றும் பழங்குடியினருடன் தொடர்புபடுத்தினார். “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை மோடி அரசு உறுதி செய்தது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
நாடாளுமன்றம், இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாகவும், குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமாகவும் இருப்பதாகக் கார்கே கூறினார். மேலும், “அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும். மோடி அரசு பலமுறை உரிமையை மதிக்கவில்லை. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் அடையாள ரீதியான ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.” என்று கார்கே கூறினார்.
Re: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
" புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை"
....???........
....???........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
நாட்டின் குடியரசு தலைவரே கட்டிடத்தை திறந்து வைப்பது முறையாக இருக்கும்....
இருந்தும் அழைப்பு கூட விடுக்க படவில்லை என்பது சரியாக தோன்றவில்லை...
பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று .....![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இருந்தும் அழைப்பு கூட விடுக்க படவில்லை என்பது சரியாக தோன்றவில்லை...
பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று .....
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
ஒரு நினைவூட்டல்:
கருணாநிதி முதல்வராக இருந்தபொழுது சென்னையில் திறக்கப்பட்ட புதிய சட்டமன்ற கட்டடத்தை தமிழக ஆளுநர் திறக்கவில்லை, மாறாக அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலமையில் கலைஞரும் சோனியா அம்மையாரும் திறந்து வைத்தனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
» மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|