ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர்

Go down

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Empty அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர்

Post by சிவா Thu Apr 27, 2023 10:40 pm

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - சிந்தாமணிநாதர் Chinth10

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம் "திருச்செங்கோடு' என்பதை அனைவரும் அறிவர். இதேபோல், மூலவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் வழங்கும் மற்றொரு தலம் #வாசுதேவநல்லூர் ஆகும்.

சிவனை மட்டும் வணங்குவது என்ற தீவிர பக்தி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர். ஒரு சமயம் கயிலையில் சிவனும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும்போது, அங்கு வந்த முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வலம் வந்து பணிந்து நின்றார். கோபம் கொண்ட அம்பிகை, "சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதை முனிவர் மூலம் உலகறிய செய்ய திரு உள்ளம் கொண்டு பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்) நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவனை நோக்கி, கடும் தவம் புரிந்தாள். சிவனின் இடப்பாகம் பெற்று பாகம் பிரியாள் ஆயினாள்.

சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி) காட்சி அளிக்க, அதனை கண்ணுற்ற பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி போற்றி துதித்தார். அந்த திருக்கோலம் இந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணி நாதர், ஸ்ரீ இடப்பாவல்லி ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது.

வாசவன் (இந்திரன்) இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றதால், இதற்கு "#வாசவன்தேவநல்லூர்' என்று பெயர் வந்ததாக இத்தலபுராணம் பாடிய சொக்கம்பட்டி செந்தமிழ்ப் பெருங்கவி பொன்னம்பலம் பிள்ளை குறிப்பிடுகிறார். "வாசவன்தேவநல்லூர்' மருவி "வாசுதேவநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், வசவனூர், வாசி, என்ற பெயர்களும் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனையும் இத்தலத்துக்கு இருப்பதாக சொல்லப்படுவது உண்டு.

மூலமூர்த்தியின் சிறப்பு: மூலவர் #அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் சிவன் பாதியில் சூலம், பாலம் ஏந்தியுள்ளார். காலில் தோடும், வலது காலில் தண்டையும் அணிந்துள்ளார். அம்பிகையும் பாதத்தில் பாசம், பூச்செண்டு ஏந்தி காலில் கொலுசுடன் அருட் காட்சியளிக்கிறார். ஆண், பெண் வஸ்திரங்கள் தனித்தனியே முறையே அணிவித்ததில் அழகு கூட்டுகிறது. இங்கு அம்பிகையின் திருநாமம் இடப்பாவல்லி என்பதாகும். மூலவர் போன்றே உத்ஸவர் மூர்த்தி வடிவமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு விதமான சுவைகளுடன் புளியம்பழம் நல்கும் தல புளியமரம் இங்கு உண்டு. இந்திரனைத் தவிர, சேர நாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்கப் பெற்றான்.

திருவிழா சிறப்பு: ஆனி மாதத்தில் பிரம்மோத்ஸவத்தில் நடைபெறும் தல வரலாற்று ஐதீக விழா, திருவாதிரை, சிவராத்திரி உத்ஸவம் போன்றவை சிறப்பானதாகும். தை அமாவாசை நாளில் நடைபெறும் மூன்று விளக்கு பூஜை நிகழ்வும் முக்கியமானதாகும். இதில் கருவறையிலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு ஒரு விளக்கில் அர்த்தநாரீஸ்வரரை ஆவா னப்படுத்தப்படுகிறது. அமாவாசை நாளில் இப்பூஜையை கண்டு தரிசிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும். அமைதி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கருப்பையாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.

குறிச்சொற்கள் #சிந்தாமணிநாதர் #அர்த்தநாரீஸ்வரர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum