ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

2 posters

Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Mon Apr 24, 2023 10:16 am


சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு, திருச்சியில் டேப் காம்ப்ளக்ஸ், கர்நாடகா, தெலுங்கானா என 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதிய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.

ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய, அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.

முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதும், இந்த சோதனை சம்பவம் ஆளும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஜி ஸ்கொயர் தெரிவிக்கையில்; எங்களது சொத்து 38 ஆயிரம் கோடி என அண்ணாமலை வெளியிட்டு இருப்பது தவறானது. திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் ரியல் எஸ்டேட் துறையில் வியாபாரம் செய்து வருகிறோம் என்றும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Mon Apr 24, 2023 7:39 pm

ஜி ஸ்கொயர் ஐ.டி ரெய்டு: தி.மு.க எம்.எல்.ஏ வீட்டிலும் சோதனை



ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சி.எம்.டி.ஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இந்தநிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்பட்டு, திருச்சியில் டேப் காம்ப்ளக்ஸ், கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 50 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியோடு சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரது இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் ஜி ஸ்கொயர் நிறுவன நிர்வாகியாக உள்ளதால் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Mon Apr 24, 2023 7:39 pm

கோவையிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு



கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை பெங்களூர் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவை L&T புறவழிச் சாலையில் நில விற்பனை செய்து வருவதும் சிங்காநல்லூர் போன்ற இடங்களில் வீட்டுமனைகள் விற்பனை செய்ய பணிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Mon Apr 24, 2023 8:21 pm

செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை


தமிழகம் முழுவதிலும் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதும் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனங்களை அடுத்து செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செட்டிநாடு குழுமத்தத்துக்குச் சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Tue Apr 25, 2023 12:03 pm

ஜி-ஸ்கொயர் விவகாரம்: தி.மு.க எம்.எல்.ஏ. வீட்டில் இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.டி சோதனை



ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் 56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், தற்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆண்டு வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வரி ஏய்ப்புச் செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி-ஸ்கொயர் அலுவலகத்திலும், சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலா வீட்டிலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள பாலாவின் உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

இதேபோல், ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜூன், சுதிர், பிரவின், அண்ணா நகர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, ஹைதராபாத், மைசூரு, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by சிவா Tue Apr 25, 2023 12:33 pm

தி.மு.க.,வுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு ஏன்?


ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Tamil_News_large_3303526

கடந்த மார்ச் 1ம் தேதி, சென்னையில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில், தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 'ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது' என்ற கருத்தை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். பா.ஜ.,வை வீழ்த்த, எதிர்கட்சிகள் ஒன்றுசேர வேண்டிய அவசியம் குறித்தும், அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதனால், வரும் லோக்சபா தேர்தலில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய, ஸ்டாலின் முக்கிய பங்காற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்டாலினும் மேடைதோறும், 'லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பது முக்கியம் அல்ல; யார் வெற்றி பெறக் கூடாது என்பது தான் முக்கியம்' என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'தேசிய அளவில் வெற்றி பெற்றால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்' என்றார். தேசிய அரசியலில், தி.மு.க.,வை முன்னிலைப்படுத்த, சமூக நீதிக்கான கூட்டமைப்பையும், ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., மேலிடத்திற்கு வேண்டிய நிறுவனங்களிலும், அண்ணா நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் வீட்டிலும் நேற்று, வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து, தி.மு.க., - எம்.பி., ஒருவர் கூறுகையில், 'தேசிய அரசியலில் தி.மு.க., முக்கியத்துவம் பெறுவதை, மத்திய அரசு விரும்பவில்லை. அதனால் தான் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் வகையில், இதுபோன்று சோதனைகள் வாயிலாக அச்சுறுத்துகின்றனர்' என்றார்.

அடுத்த கட்டமாக, தி.முக., அமைச்சர்கள் நால்வரின் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடக்க உள்ளதாக, ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., மேலிடத்திற்கு வேண்டிய சினிமா நிறுவனம் மற்றும் தனியார் வங்கியின் உயரதிகாரிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் என, மொத்தம் 10 இடங்களில், சோதனை நடக்கும் என கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by T.N.Balasubramanian Tue Apr 25, 2023 9:38 pm

MGR --கருணா சாமர்த்தியம் இங்கு நினைவு படுத்துதல் அவசியம்.
தனிப்பெரும் பலம் இருந்தாலும் மத்திய அரசின் உதவிகள் தேவை என 
அவர்களுடன் இனைந்து ஒரு பாரத ரத்னாவும் பெற்றார்.MGR 

மத்திய அரசை சாடினாலும்  அவர்களுடன் இணைந்து லோக் சபா மந்திரி பதவியும் 
ராஜ்ய சபா MP வாங்கிய கருணாநிதி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை Empty Re: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» போலி மின்னஞ்சல்கள்: வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை
»  கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
» ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி
» பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில் பெரிய தொகை டெபாசிட் செய்தவர்கள் மார்ச் 31-க்குள் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum