ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

Go down

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன? Empty பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

Post by சிவா Tue Apr 04, 2023 7:54 pm

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன? Snakebite

பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்பு கடிக்கான சிகிச்சை முறைகள் என்ன?

இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்கும். #பாம்புகள் என்றதும் நமக்குள் கலவையான உணர்வுகள் எழுவதுண்டு. இருப்பினும் பாம்புக்கடியை நாம் இன்னும் எச்சரிக்கையின்மையுடனே அணுகுகிறோம். இது எந்த அளவுக்குச் சரி?

பாம்புக் கடியால் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.

2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதற்குச் சில முக்கியமான காரணங்கள் உண்டு. #பாம்புக்கடி உயிரிழப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, நஞ்சுமுறி மருந்துகளின் பற்றாக்குறை என பாம்புக்கடி விவகாரத்தில் இதுபோன்று பல சவால்கள் உண்டு.

இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்?


ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நச்சுப்பாம்புகளின் கடியால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாகப் பல்வேறு அறிக்கைகள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையைத் தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 58,000 உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகின்றன.

பாம்புகள் பழிவாங்குமா?


பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களைத் தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டது உண்டு. இதுவொரு மோசமான கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக ஒருவர் ஒரு நாகப்பாம்பை அடித்துக் கொன்றுவிட்டால் அந்தப் பாம்பின் துணை அடித்துக் கொன்றவரைத் தேடி வந்து பழிவாங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது மோசமான கட்டுக்கதை என்கிறார் கஜ்பி. இதுபோன்ற சில மூட நம்பிக்கைகளும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.

கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல்


இந்தியாவின் சில இடங்களில் #பாம்பு கடித்தால் மருத்துவர்களைப் பார்க்காமல் மந்திரவாதிகளைப் பார்ப்பதுண்டு.

அது மட்டுமின்றி முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது, நிறுவப்படாத மூலிகைகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களும் பரவலாக உண்டு.

பாம்பு கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுப்பதைப் போல் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக்கூடாது.

பாம்புக்கடிக்கு உள்ளானவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்குப் போகக்கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்திலோ பாதுகாப்பாகப் போகவேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள், இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

காயங்களைக் கழுவுதல், கீறி விடுதல், துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுதல், ஏதேனும் மூலிகைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகம்.

குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் போதுமான நஞ்சுமுறி மருந்துகள் உள்ளனவா?


முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் பாம்பின் நஞ்சை முறிப்பதற்கும் அதன் நஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சை வைத்துதான் நஞ்சுமுறி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

1895ஆம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பின் நஞ்சுக்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் நஞ்சுமுறி மருந்தை உருவாக்கினார்.

ஆனால், இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளைப் பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார்.

மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், நஞ்சுமுறி மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார்.

இதுமட்டும் அல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமான நான்கு பாம்புகள்


நீங்கள் பார்க்கும் அனைத்துப் பாம்புகளுக்கும் மனிதர்களைக் காவு வாங்கும் அளவுக்கு வீரியமிக்க நஞ்சு இருக்காது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 வகையான பாம்புகள் தான் நஞ்சுள்ளவை. அதில் குறிப்பாக நான்கு பாம்புகள்தான் பெரும்பாலான பாதிப்புகளுக்குக் காரணம்.

கண்ணாடி விரியன்


இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

கட்டு விரியன்


அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்தப் பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

இந்திய நாகம்


#நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.

சுருட்டை விரியன்


இறுதியாக சுருட்டை விரியன். இதன் அளவு சிறியதாக இருந்தாலும் தாக்கும் திறன் மிகவும் அபாயகரமானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனால், இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாம்பு கடித்த உடனேயே பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்தில் பாம்புகளின் அழிவைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.

பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
»  குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?
» விஷப் பாம்பு கடித்தால் அறிகுறிகள் என்ன?
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum