ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_m10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10 
Dr.S.Soundarapandian
பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_m10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10 
heezulia
பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_m10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10 
i6appar
பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_m10பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சோறு... இது உணவல்ல, மருந்து

Go down

பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Empty பழைய சோறு... இது உணவல்ல, மருந்து

Post by சிவா Thu Mar 30, 2023 10:03 pm

பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Palaiya-soru
60 வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங்களிதான்' என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு.

சில வருடங்களுக்கு முன், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, அவை உறுதிசெய்யப்பட்டன. விளைவாக, இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர்... அந்த நீராகாரம் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் #நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது.

ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர #பழைய_சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணம் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம்.

உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு.

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்ட பழைய சோற்றின் நன்மைகள்...
* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.

* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம், பழைய சோற்றின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைய சோறு... இது உணவல்ல, மருந்து Empty Re: பழைய சோறு... இது உணவல்ல, மருந்து

Post by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

`இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (IBS - Irritable bowel syndrome)' என்பது நமக்கு ஏற்படும் ஒருவித `ஃபங்ஷனல் டிஸ்ஆர்டர் (Functional disorder)'. அதாவது ஏதேனும் ஒரு நோய்க் கிருமியாலோ, சத்துக் குறைவாலோ ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இது நோயே அல்ல. நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும். இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதையே `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடுவார்கள்.

#பழைய_சாதம் சாப்பிடுவதன் மூலம் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமை குணப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து அவரிடம் பேசினோம்.

``நம் குடலில் லாக்டோபேசிலஸ் (Lactobacillus), ஈ.கோலை (E.coli) போன்ற நன்மை விளைவிக்கும் சில பாக்டீரியா உயிர்வாழ்கின்றன. இவை உணவு செரித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளை ஊக்கப் படுத்துகின்றன. மேலும், நம் மூளையில் ஏற்படும் உணர்வு மாற்றங்களால் குடலில் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைத்து `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' வராமலும் தடுக்கின்றன. நம் குடலில் வாழும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் குறையும்போது செரிமான பிரச்னை, மலச்சிக்கல், வயிறு உப்புசம், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நன்மை விளைவிக்கும் பாக்டீரியா `பழைய சாதத்தில்' அதிகம் இருக்கின்றன. இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சாதத்தைச் சாப்பிட்டுவரும் பட்சத்தில் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும். இதனை ஆய்வு பூர்வமாக நிரூபிக்கும் பொருட்டே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன். தற்போது இந்த சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோர்க்குத் தினமும் பழைய சாதத்தைச் சாப்பிடச் சொல்லி அவர்களைத் தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம். அடுத்தகட்டமாக, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட 600 நபர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆய்வுக்குத் தேவைப்படும் நுண்ணோக்கி மற்றும் சில மருத்துவ உபகரணங்களைத் தற்போது தயார் செய்து வருகிறோம்" என்றார்.

பழைய சாதம் சாப்பிடுவது `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' வராமல் தடுக்குமா... பழைய சாதத்தின் பயன்கள் என்னென்ன...

``நம்மிடையே பல தலைமுறைகளாக வழக்கத்தில் இருக்கும் உணவுதான் பழைய சாதம். எளிய உணவுதான். ஆனால், இதிலுள்ள சத்துகள் ஏராளம். பழைய சாதம் எடுத்துக்கொள்கிறேன் என்ற பெயரில் சிலர், காலையில் வடிக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மதியம் சாப்பிடுவார்கள். இதுபோல் எடுத்துக்கொள்வதால் அதிக பயன் எதுவும் கிடைக்காது.

நாம் தண்ணீர் ஊற்றிவைக்கும் சாதம் நொதித்தலுக்கு (Fermentation) உட்பட வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். வடித்த சாதத்தை மண் பானையில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைக்க வேண்டும். பானையை முழுவதுமாக மூடிவிடாமல் சிறிது காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சாதம் நொதிக்க வெயில் காலத்தில் 8-10 மணிநேரமும், மழைக்காலத்தில் 10-12 மணிநேரமும் எடுத்துக்கொள்ளும். சிலர் பழைய சாதத்தை எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மண்பாண்டமே சிறந்தது.

மண் பானையில் நொதிக்க வைத்த பழைய சாதத்தைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது. மேலும் நொதித்தலுக்கு உட்பட்ட சோற்றில் லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளது. தவிர இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.

இத்துணை சத்துகள் நிறைந்த பழைய சாதம் நமக்கு மட்டுமல்லாமல், நம் குடலில் வாழும் நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கும் சிறந்த உணவாக (Culture medium) உள்ளது. உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் நம் குடலில் வாழ்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் உடல் ஆரோக்கியத்தோடு சேர்த்து மனதின் செயல்திறனையும் நிர்ணயிக்கக் கூடியவையாக உள்ளன. அதனால் உடலில் இவற்றின் எண்ணிக்கை குறையும்போது இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், செரிமான பிரச்னை உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நம் வயிற்றில் வாழும் நல்ல நுண்ணுயிரிகள் குறைவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் துரித உணவுகள். அதிக உப்பு, காரம், எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

ஆனால், பழைய சாதம் நம் வயிற்றில் வாழும் நுண்ணுயிரிகளுக்குச் சிறந்த உணவாக இருந்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குகிறது. தினமும் காலையில் 7 - 8.30 மணிக்குள் காலை உணவாகப் பழைய சாதத்தை எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்".

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum