ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசி மகம்

Go down

மாசி மகம் Empty மாசி மகம்

Post by சிவா Mon Mar 06, 2023 12:23 pm

மகத்துவம் மிக்க மாசி மகம்


தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இவற்றில் 11- ஆவது மாதமான #மாசி, பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மகா சிவராத்திரி, மாசி மகம், ஹோலி பண்டிகை, ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மாசி பூசம், மாசி பௌர்ணமி, மாசி அமாவாசை என அனைத்து நாள்களும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவை.

கார்காலமும் பனி காலமும் மறைந்து வசந்த காலத்தின் துவக்கமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இம்மாதத்தில் வரும் சிவராத்திரியோடு பனிக் காலத்தின் கடும் குளிர் நீங்கிவிடும் என்பார்கள்.

இறைவழிபாடு மட்டுமல்லாமல், மந்திர உபதேசம் பெறவும், புனித நீராடலுக்கும், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கவும் என்று பலவற்றுக்கும் ஏற்ற மாதமாக இது கருதப்படுகிறது.

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி "மகா சங்கடஹர சதுர்த்தி' என குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபட்டால் எந்தப் பிறவியிலும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் உன்னதமான நாள்.

தகப்பன் சுவாமி என அன்போடு அழைக்கப்படும் முருகன், சிவனுக்கு பிரணவ மந்திரத்தை இந்த மாத பூசம் நட்சத்திர நாளில் தான் உபதேசம் செய்தார். அதனால் தான் இம்மாதத்தில் வேத கல்வி துவங்குவதற்காக உபநயனம் செய்ய உகந்த மாதமாக இது விளங்குகிறது. சிவன் தனது 63 திருவிளையாடல்களை இம்மாதத்தில் தான் நிகழ்த்தியதாகப் புராணங்களை கூறுகின்றன.

திருமாலும் பிரம்மாவாலும் அடி முடியைக் காண முடியாதபடி, விண்ணையும் மண்ணையும் இணைத்து மாபெரும் ஜோதி வடிவாக சிவன் காட்சி தந்த சிறப்புக்குரியது இந்த மாதம். இவ்வடிவையே லிங்கோத்பவராக வழிபடுகிறோம்.

வராக அவதாரம் எடுத்து பெருமாள் உலகைக் காத்ததும் இந்த மாசி மகத்தன்றுதான். இம்மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளிலும் (ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி) விரதமிருந்து திருமாலை வழிபட, மிகப் பெரிய பாவங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும். கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதன் நினைவாக வண்ணங்களின் திருவிழா என வர்ணிக்கப்படும் ஹோலி பண்டிகை இந்த மாதத்தில் பௌர்ணமியில் (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது.

#மாசி_மகம் (மார்ச் 6) என்பது மாசி மாத பெளர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது #மகாமகம் என கொண்டாடப்படுகிறது. சங்க கால இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கூட, மாசி மக விழா சிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி போன்ற 12 நதிகள் மக்கள் தங்களிடம் கழுவிய பாவச் சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும் குரு சிம்ம ராசிக்கு வரும் இந்த நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

மாசி மக நட்சத்திரத்தில் அம்பிகை அவதரித்ததால் மாசி மகம் மேலும் பெருமை பெறுகின்றது. அதுமட்டுமல்லாமல் இம்மாதத்தில்தான் அம்பிகையை சிவன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுவதால் மாசி மாதத்தில் திருமணமான பெண்கள் தாலிச் சரடு மாற்றும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது.

இம்மாதத்தில் செய்யப்படும் அம்பிகை வழிபாட்டால் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாசி மாதமும் பங்குனி மாதமும் சேரும் நாளன்று (மார்ச் 15) கொண்டாடப்படும் காரடையான் நோன்பு என்பது காமாட்சி அம்மனுக்கு வேண்டிக் கொண்டு வழிபடப்படுவதாகும்.

மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த விரதத்தை பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்வர். இதை "காரடையான் நோன்பு', "சாவித்திரி விரதம்', "கௌரி விரதம்', "காமாட்சி விரதம்', "மாங்கல்ய நோன்பு' என பல பெயர்களால் அழைக்கிறார்கள். இந்த விரதம் மேற்கொள்வதால் காமாட்சி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அறுபத்து மூவரில் காரி நாயனார், எறிபத்தநாயனார், கோசெங்கட்சோழ நாயனார் ஆகியோர்களின் குருபூஜை இந்த மாதத்தில் நடைபெறுகிறது.

12 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இம்மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாசி மகம் Empty Re: மாசி மகம்

Post by சிவா Mon Mar 06, 2023 12:29 pm

மாசி மகம் விரதம் இருந்தால் சகல தோஷங்களும் நீங்கும்


இன்று விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்' என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை 'மாசி மகம்' என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

அந்த அற்புதமான திருநாள் இன்று (6.3.23)

மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், #மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் #மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.

அந்த தெய்வக் குழந்தைக்கு 'தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைப்பார்கள். இன்று விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.

அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், 'இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்' என்று கேட்டார்.

சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum